Tuesday, February 19, 2013

நிழலாய் போன நிஜம்...,

   
எங்கோ நெடுந்தூரம் அழைத்து செல்கிறாய்....,
கால் வலிக்குது என்கிறேன் நான்..,
ஆழ்ந்தப் பார்வை பார்த்துவிட்டு
என் கைப் பிடித்துக் கொள் என்கிறாய்.
உற்சாகத்தோடு நடந்தேன் "உயிருள்ளக் கவிதையாய்!!??

யாரும் அறியாதபோது, சட்டென்று இழுத்து
உதட்டோடு உதடு பொருத்தி என் உயிர்த் தேடலை
முடித்து வைத்தது உ(எ)ன் முத்தம்....
திருப்தியாக நடந்தேன் "இனிய கவிதையாய்!!??

நீதான் முக்கியம் என்று நீ உரைத்தப் போது
கர்வத்தோடு நடந்தேன்....
"உற்சாகமான கவிதையாய்!!?? ....,

ஆனால்,
என் இத்தனை நிஜக்கவிதைகளும்
"அவளைப் போல் நீ வரமுடியுமா”??
என்று கேட்ட ஒரு கேள்வியில்
"நிழலாய்" போய்விட்டது!!

9 comments:

  1. கடைசி வரிகள் பளிச்! அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete
  2. உயிரற்ற கவிதையாய்த்தான் போனது அத்தனை கவிதைகளும் --- அருமை.

    ReplyDelete
  3. அடடா... மனதில் 'அவள்' அல்லவா இருந்திருக்கிறாள்...! இது தெரியாமல்... பாழாப் போச்சி...

    ReplyDelete
  4. சுச்சுச்சு...!என்ன மனக்கஷ்டம்!

    ReplyDelete
  5. கவிதையாகவே பயணிக்கிறீர்கள்....

    ReplyDelete
  6. அடடா! இப்படியா பண்ணுவாங்க!

    நல்ல கவிதை....

    ReplyDelete
  7. நிஜமும் நிழலாகலாம்.அருமை

    ReplyDelete