இந்த வாரம் நமது தெரிந்த கதை, தெரியாத உண்மையில், பிரம்மச்சரிய கடவுளான ஆஞ்சநேயருக்கு மகன் உண்டா? இல்லையா எனத் தெரிந்து கொள்வதற்கு முன் ஆஞ்சயநேயரின் பிறப்பு ரகசியம் பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம். “அஞ்சனாதேவி” என்ற பெண் குரங்கிற்கும், ”கேசரி” என்ற ஆண் குரங்கிற்கும் மகனாய் பிறந்தவர்தான் இந்த அனுமன்.
ஆஞ்சநேயரின் தாயார் ”அஞ்சனாதேவி” முற்பிறவியில், பிரம்மாவின் சபையில் ஒரு ஆடல் அழகியாய் இருந்தார். தவம் இயற்றிக் கொண்டிருந்த ஒரு முனிவரின் தவத்தை கலைத்தற்காக, சாபம் பெற்று குரங்காக மாறினார். மரபு வழி கதைல சொல்லப்பட்ட கதை என்னன்னா, ஒரு முறை ஒரு குரங்கு ஆசனம் இட்டு தவம் செய்து கொண்டிருந்தததை பார்த்தாள் ”அஞ்சனாதேவி”. அதைப்பார்த்து, சும்மா இராமல் அந்த குரங்கின் மீது பழங்களை எறிந்து விளையாடினார். உடனே, அந்த குரங்கு தவம் கலைந்து எழுந்து ஒரு முனிவராக மாறியது. கடுங்கோபம் கொண்ட அந்த முனிவர், ”அஞ்சனாதேவி” யார் மீதாவது காதல் கொண்டால், அந்த தருணமே குரங்காக மாறிவிடுவாள் என சாபமிட்டார். தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு மன்றாடினாள் ”அஞ்சனாதேவி”. தனக்கு குரங்கு முகம் இருந்தாலும், தன் காதலன் தன்னை நேசிக்க வேண்டும் என்றும், சிவப்பெருமானின் அம்சமே தனக்கு மகனாக பிறக்கவேண்டும் என்றும் வரம் வேண்டினாள். மனமிரங்கிய முனிவரும் அப்படியே ஆகட்டும். சிவபெருமானின் அம்சமாக மகன் பிறந்தவுடன் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என அருள்பாலித்தார் .
முனிவரின் சாபத்தின் பலனால், பூமியில் பிறந்து, ஒரு காட்டில் வசித்து வந்தாள். ஒருநாள் காட்டில் ஒரு ஆடவனைக் கண்டு, அவன் அழகில் மயங்கி, அவன் மேல் காதல் கொண்டாள். காதல் கொண்ட அந்த தருணமே அவள் குரங்காக மாறிவிட்டாள். அவள் அருகில் வந்த அந்த ஆண், தன்னை ”கேசரி” என்றும், தான் ”குரங்குகளின் அரசன்” என்றும் கூறினான். குரங்கு தலையை கொண்ட மனிதனான அவனால் நினைத்த நேரத்தில் மனிதனாகவும், குரங்காகவும் உருமாற முடியும். இதைக் கண்டு ஆச்சரியமடைந்தாள் ”அஞ்சனாதேவி”. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அஞ்சனாதேவியிடம் கேட்டான். அந்த காட்டிலேயே ”அஞ்சனாதேவி”யும் ”கேசரி”யும் கந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும், சிவப்பெருமானை நினைத்து எப்பொழுதும் தவத்தில் இருந்தாள் ”அஞ்சனாதேவி”. இதனால் மனம் குளிர்ந்த சிவபெருமான் என்ன வரம் வேண்டும் என கேட்டார். முனிவரால் தனக்கு கிடைத்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற, சிவபெருமானே தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என கோரினாள். அப்படியே ஆகட்டும் என வரம் கொடுத்தார் சிவபெருமான்.
அதேசமயம், அயோத்தியாவின் அரசனான ”தசரத சக்கரவர்த்தி”யும் பிள்ளை வரம் வேண்டி ”புத்திரகாமேஷ்டி” யாகத்தை நடத்திக் கொண்டு இருந்தார். இதனால், மனம் குளிர்ந்த ”அக்னிதேவன்”, ”தசரதனி”டம் புனிதமான பாயாசத்தை கொடுத்து இதனை சரி சமமாக உன்னுடைய தேவியருக்கு பங்கிட்டு கொடுன்னு எனக் கூறினார். ”தசரதனு”ம் தன்னுடைய பட்டத்து ராணியான, “கெளசல்யா” ( கோசலை)விற்கும், ”கைகேகி”க்கும் இரண்டாகப் பிரித்துக் கொடுத்தார். அவர்கள் இருவரும், தங்களுக்கு அளிக்கப்பட்ட பிரசாதத்தினை சரி பாதியாக பிரித்து, இரண்டு பங்காக சுமித்ராவுக்கு கொடுத்ததினால் அவளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது என மரபு வழி கதைகளில் சொல்வார்கள். தசரதன் அந்த பிரசாதத்தை தன் மனைவியருக்கு கொடுக்கும் போது, அதில் சிறிதளவு பிரசாதத்தை ஒரு பறவை எடுத்துச் சென்று ”அஞ்சனாதேவி” தவம் புரிந்த இடத்தருகே விட்டு சென்றது. காற்றின் கடவுளான ”வாயுபகவானி”டம் அந்த பிரசாதத்தை ”அஞ்சனாதேவி”யின் கைகளில் போடுமாறு ”சிவபெருமான்” கட்டளையிட்டார். பாயாசத்தை பார்த்த அஞ்சனா மிகுந்த சந்தோஷத்துடன் அதனை உண்டாள். அதனை உண்ணும் போது சிவபெருமானின் அருளை ”அஞ்சனாதேவி” உணர்ந்தாள்.
அதன்பிறகு, குரங்கின் முகத்தை கொண்ட ஒரு மகனை பெற்றெடுத்தார் ”அஞ்சனாதேவி”. அக்குழந்தை சிவனின் அம்சமேயாகும். அந்தக் குழந்தை பல பெயர்களில் அழைக்கப்பட்டது. ”ஆஞ்சநேயன்”, (அஞ்சனாவின் மகன் ), ”கேசரி நந்தனா” (கேசரியின் மகன்), ”வாயுபுத்திரா” அல்லது ”பவன் புத்திரா” (வாயுதேவனின் மகன்). அந்தக் குழந்தை தன்னுடைய குழந்தைப் பருவத்திலேயே மிகுந்த பலசாலியாக விளங்கி வந்தார் அனுமன். தன் தந்தை ”கேசரி” மற்றும் தாய் ”அஞ்சனாதேவி”யின் சக்திகளை அவர் பெற்றார். வாயுதேவனின் மகன் என்பதால் காற்றைப்போல் மிக வேகமாக செயல்பட்டார். ஆஞ்சநேயரின் பிறப்பால், ”அஞ்சனாதேவி” தன் சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றார். சாப விமோசனம் பெற்ற ”அஞ்சனாதேவி” வான் உலகுக்கு திரும்பினாள். பின்னர் ராமபிரானின் தீவிர பக்தனனார் ஆஞ்சநேயர்.
இராம இராவண யுத்தத்தில் பெரும்பங்கு வகித்து இராமர் கைகளினாலே சிரஞ்சீவி வரம் பெற்றார். இந்த கதைகள் எல்லாம் நாம் போன பதிவுகளிலே பார்த்து விட்டோம். இனி, பிரம்மச்சரிய விரதம் கடைபிடிப்பவர்கள் ஆஞ்சநேயரின் பெயரிலேயே அந்த உறுதிமொழி எடுப்பார்கள். அப்படி இருக்க பிரம்மச்சாரியான ஆஞ்சநேயருக்கு மகன் உண்டுன்னு சில கதைகள் சொல்லுது. அந்த கதைகளை இன்று பார்க்கலாம்....,
இராம இராவண யுத்தத்தின்போது இராவணனின் நம்பிக்கைக்குரிய பராக்கிரமம் மிக்க புதல்வன் ”மேகநாதன்” என்னும் ”இந்திரஜித்” கொல்லப்படுகிறான். அதனால் பயந்துபோன இராவணன் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனும், பாதாள இலங்கையின் அரசனுமாகிய ”மயில்ராவண”னை உதவிக்கு அழைக்கிறான். (மயில்ராவணன் அஹிராவணன் எனவும் அழைக்கப்படுகிறான்.). “மயில்ராவணன்” இராவணனுக்கு ஆறுதல் கூறுகின்றான். கவலைப்படாதே! நாளை இராமனும் லட்சுமணனும் இருக்க மாட்டார்கள் என்று சொல்கிறான். இதை விபீஷணன் அறிந்து கொண்டான். அவன் சுக்கிரீவனிடமும், இராமனிடமும் அனுமனிடமும் சொல்லிவிட்டான்.
அனுமன் உடனே தன் வாலால் ஒரு கோட்டைப் போன்று உருவாக்கி அதில் இராமனையும் லட்சுமணனையும் வைத்து பாதுகாக்கிறான். ”மயில்ராவணன்” தன்னுடைய மாயஜால வித்தைகளால் பலமுறை இராம லட்சுமனரை நெருங்க முயன்றும் ஒவ்வொரு முறையும் அனுமனால் அது முறியடிக்கப்படுகிறது. இறுதியாக மயில்ராவணன், விபீஷ்ணனது உருவம் எடுத்து அனுமனின் கவசக் கோட்டைக்குள் நுழைகின்றான், இராம லட்சுமணர்களை மயக்கத்தில் ஆழ்த்தி அவர்களை பாதாள உலகிற்கு கடத்தி செல்கிறான்.உண்மையான விபீஷணன் வர ஹனுமனுக்கும் அவனுக்கும் சண்டை வரும் நிலை வருகிறது. விபீஷணனோ மயில்ராவணனின் தந்திரத்தை தெளிவாக சொல்கிறான். அவர்கள் இருவரும் ஆபத்தில் இருகின்றனர்,அவர்களை உடனடியாக காப்பாற்ற வேண்டும் இல்லை எனில் மயில்ராவணன் அவர்களை சாண்டிதேவிக்கு பலி கொடுத்துவிடுவான் என எச்சரிக்கிறான்.
அனுமன் உடனே தன் வாலால் ஒரு கோட்டைப் போன்று உருவாக்கி அதில் இராமனையும் லட்சுமணனையும் வைத்து பாதுகாக்கிறான். ”மயில்ராவணன்” தன்னுடைய மாயஜால வித்தைகளால் பலமுறை இராம லட்சுமனரை நெருங்க முயன்றும் ஒவ்வொரு முறையும் அனுமனால் அது முறியடிக்கப்படுகிறது. இறுதியாக மயில்ராவணன், விபீஷ்ணனது உருவம் எடுத்து அனுமனின் கவசக் கோட்டைக்குள் நுழைகின்றான், இராம லட்சுமணர்களை மயக்கத்தில் ஆழ்த்தி அவர்களை பாதாள உலகிற்கு கடத்தி செல்கிறான்.உண்மையான விபீஷணன் வர ஹனுமனுக்கும் அவனுக்கும் சண்டை வரும் நிலை வருகிறது. விபீஷணனோ மயில்ராவணனின் தந்திரத்தை தெளிவாக சொல்கிறான். அவர்கள் இருவரும் ஆபத்தில் இருகின்றனர்,அவர்களை உடனடியாக காப்பாற்ற வேண்டும் இல்லை எனில் மயில்ராவணன் அவர்களை சாண்டிதேவிக்கு பலி கொடுத்துவிடுவான் என எச்சரிக்கிறான்.
இந்த நிலையில் மயில்ராவணன் இருவரையும் சண்டிதேவிக்கு பலி கொடுக்க தயாராகின்றான். அப்பொழுது பாதாள உலகிற்கு செல்ல முயற்சிக்கும்போது அந்த பாதாள உலகின் கதவை காவல் காக்கும் ஒரு உயிரினத்தால் கடும் சவாலை அனுமன் எதிர்கொண்டார். அந்த உயிரினம் பாதி குரங்காகவும், பாதி ஊர்வனவாகவும் இருந்தது. அவன் தன்னை மகர்ட்வாஜா (தமிழில் மச்சவல்லபன் என்று அழைக்கப்படுகிறார்)என்றும், தான் ஆஞ்சநேயரின் மகன் என்றும் ஆஞ்சநேயரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். ஆஞ்சநேயருக்கு ஒரு மகன் இருப்பது, யுத்த களத்தில் தன் எதிரியாக அவனை பார்க்கும் வரை அவருக்கே தெரியாது என்பதும் உண்மையில் சுவாரசியமான விசயமாகும்.
வியக்கத்தக்க கருத்துக்களை கொண்டது இந்து புராணங்கள். அவைகள் படிப்பதற்கு மிகவும் புதிராகவும், சுவாரசியமாகவும் இருக்கும். மாகாபாரதத்தில் தேவர்களின் அருளால் பாண்டவர்களை கருவில் சுமந்தார் குந்திதேவி. அதேப்போல, கந்தாரியோ 101 குழந்தைகளை கருவில் சுமந்தார். அதுப்போலதான், ஆஞ்சநேயரின் மகனான மகர்ட்வாஜாவும் வியக்கத்தக்க கருவின் மூலமாக தான் பிறந்தார். ஆஞ்சநேயரின் மகன் கருவானதை பற்றியும், ஆஞ்சநேயர் அவனை சந்தித்தது பற்றியும் இரண்டு விதமான கதைகள் கூறப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு கதைகளும் சொல்வது ஒன்றைத்தான். ஆஞ்சநேயருக்கு ஒரு மகன் இருந்தான் என்பதே. மகர்ட்வாஜா ஆஞ்சநேயருக்கு மகனாக மட்டும் இல்லாமல் மிகப்பெரிய போர் வீரனாகவும் இருந்தான்.
வால்மீகி ராமாயணத்தில் மகர்ட்வாஜா பற்றி சொல்லப்படும் போது, ஒருமுறை ஆஞ்சநேயேர் நதியில் குளித்து கொண்டிருந்தார். அவர் உடம்பில் ஏறியிருந்த சூட்டினால், அவருடைய விந்தணு ஆற்றில் கலந்துள்ளது. அது மகர் என்ற மீன் போன்ற உருவத்தில் இருந்த ஒர் உயிரினத்திடம் சென்றது. அதனால் ஒரு கருவையும் பெற்றது. பின்னர் ராவணனின் உறவினர்களான அஹிராவணாவும். மஹிராவணாவும் நதிக்கரையில் பாதி குரங்கு, பாதி மீன் வடிவில் ஒரு குழந்தையை பார்த்தனர். அதை எடுத்து, அதற்கு போர் பயிற்சி கொடுத்து சிறந்த வீரனாக்கினர். அதுவே மகர்ட்வாஜா என்று சொல்லப்படுகிறது .
கம்போடியா மற்றும் தாய் பதிப்புகளான ராமாயணத்தில், அனுமனின் மகன் ”மச்சானு” என அழைக்கப்பட்டான். ஆஞ்சநேயருக்கும் இராவணனின் கடற்கன்னி மகளான சுவன்னமச்சாவிற்கும் (சுவர்ண என்றால் தங்க மச்சா என்றால் கடற்கன்னி என்று அர்த்தம்) பிறந்தவன் தான் மச்சானு. சில பதிப்புகளில், விந்தணு தண்ணீரில் சென்ற அதே கதை தான் கூறப்பட்டுள்ளது. ஆனால், அது சென்றது மகாராவிற்கு பதில் இராவணனின் கடற்கன்னி மகளான சுவன்னமச்சாவிடம் என்று கூறப்படுகிறது.
இராமர் இலங்கைக்கு பாலம் கட்டிக்கொண்டு இருந்த சமயத்தில், அந்த பணிகளை செயல்படாமல் இடையுறு செய்ய இராவணன் தன்னுடைய கடல்கன்னி மகளான சுவன்னமச்சாவினையும் அவளது கூட்டாளிகளையும் பாலம் கட்டும் இடத்திற்கு அனுப்புகிறான். வானரப்படைகள் கடலில் இடும் பாறைகள் இரவில் காணாமல் போயின.இந்த மர்மத்தை கண்டுப்பிடிக்க அனுமன் கடலின் அடியில் பாய்ந்து செல்கிறார். அங்கே இராவணனின் அழகிய மகளான சுவன்னமச்சாதான் காரணம் எனத் தெரிந்துக் கொள்கிறார். மேலே இருக்கும் ஓவியமானது இராவணன் தன்னுடைய கடற்கன்னி மகளுக்கு பாலத்தை தகர்க்க உத்தரவிடுவதாகக் கூறப்படும் தாய்லாந்து இராமாயண ஓவியம் .
இராவணனின் மகள் சுவன்னமச்சாவினை பார்க்கிறார் அனுமன் அவள் உத்திரவுப்படி மற்ற கடல் கன்னியர் கடலில் வீசப்பட்ட பாறைகளை தூக்கி வேறு இடத்தில் சேர்த்துக்கொண்டு இருந்தனர். அதை, அனுமன் தடுக்கும்போது ஆரம்பத்தில் அனுமனுக்கு போக்குகாட்டிக் கொண்டு இருந்த சுவன்னமச்சா இறுதியில் அனுமனின் நல்ல உள்ளம் தெரிந்துக் கொண்டு அனுமன்மேல் காதல் கொண்டாள். அனுமனும் சுவன்னமச்சா அழகில் மயங்கி இருவரும் ஒன்றாக இணைந்தனர். அதில் பிறந்த மகன்தான் மச்சானு என்றும் சொல்லப்படுகிறது .
மேலும்,கம்போடியா மற்றும் தாய் பதிப்புகளான இராமாயணத்தில், இராவணனின் படையுடன் நடந்த ஒரு போரின் போது, இடுப்புக்கு மேல் குரங்கை போலவும் இடுப்புக்கு கீழ் மீனை போல் இருந்த, சக்தி வாய்ந்த ஒரு எதிரியை எதிர்கொண்டார் அனுமன். விளையாட்டாய் அதனை வென்றுவிடலாம் என்று நினைத்தார். ஆனால், அந்த உயிரினமோ கொஞ்சமும் சோர்வின்றி அவரோடு போரிட்டது. முடிவே இன்றி சண்டை நீண்டுக்கொண்டே போக, இவ்வளவு வீரத்தோடு சண்டையிடும் நீ யார்? உன் பெற்றோர் யார்? எனக் கேட்டார் அனுமன். அந்த உயிரினம் சொன்ன பதில், அனுமனையே அதிரச் செய்தது தன்னுடைய தாய் சுவன்னமச்சா எனவும் தந்தை வல்லமைமிக்க வானர வீரரான வாயுபுத்திரன் அனுமன் என்று கூறியதைக் கேட்டு வியந்த ஆஞ்சநேயர், தான் தான் ஆஞ்சநேயர் என்றும் தான் ஒரு பிரம்மச்சாரி என்றும் கூறினார்.
இருப்பினும், தியானத்தில் கண்களை மூடிக்கொண்ட ஆஞ்சநேயர் மகர்ட்வாஜா பிறப்பின் பின்னணியில் நடந்த நிகழ்வுகளை கண் முன் கொண்டு வந்தார். தன் மகனை அடையாளம் கண்டுக்கொண்ட ஆஞ்சநேயர் உடனே நடு வானில் பாதி வழியில் சென்று கொண்டிருந்த தன் ஆயுதத்தை நிறுத்தினார். தன் மகனான மகர்ட்வாஜாவை அணைத்துக் கொண்ட ஆஞ்சநேயர் தன் ஆசீர்வாதங்களையும் அளித்தார். எது எப்படி இருந்தாலும், தந்தையும் மகனும் ஒருவருக்கொருவர் யாரென தெரியாமல் போரில் மோதிக் கொண்ட போதுதான் தனக்கு ஒரு மகன் இருப்பதை ஆஞ்சநேயர் தெரிந்து கொண்டார்.
பின்னர் மகர்ட்வாஜாவின் ஒத்துழைப்புடன் பாதாள உலகிற்கு செல்கிறார் அனுமன் அங்கே மயில்ராவணன் மிக பலம் பொருந்திய படைகளுடன் போர் செய்கிறார். அஹிராவணன் முதல் அம்பிலேயே கொல்லப்படுகின்றான். மயில்ராவணன் பலம் கொண்ட மட்டும் போர் செய்யும் காரணம் பிரம்மன் கொடுத்தவரம் அப்போதுதான் அனுமனுக்கே தெரிய வருகிறது. அதாவது மயில்ராவணின் உயிர் ஏதோ ஒரு மலைக்கு அடியில் இருக்கும் ஒரு பெட்டியுள் அவனது உயிர்நிலைகள இருக்கிறது. அதுவும் ஐந்து வண்டுகளாக இருக்கிறது அந்த ஐந்து வண்டுக்களையும் ஒரே அடியில் அடித்தால் மட்டுமே அவனை கொல்ல முடியும். அப்படி செய்ய முடியவில்லை எனில் அவனை எதிர்த்து போரிடுபவன் இறந்து போவான் என, மயில் ராவணனுக்கு ஒரு வரம் உண்டு. இந்த நிலையில் என்ன செய்வது என தெரியாமல் அந்த பெட்டியை தூக்கி வருகிறார் அனுமன். போரின் போது அவன் முன்னே அதை திறக்கிறார். ஐந்து வண்டுக்கள் பறக்கும் போது ஹனுமன் ஐந்து முகங்களை தரித்து ஐந்து வண்டுகளையும் கடித்து தின்கிறார். அதனால் தான் அவருக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் என்னும் பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. இப்படியாக மயில் ராவணனும் கொல்லபடுகிறான்.
உஜ்ஜைனி நகரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் சான்வெர் என்ற இடத்திற்கு அருகில் ஒரு அனுமன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலின் சிறப்பே இங்கிருக்கும் அனுமன் சிலை தலை கீழாக இருப்பதுதான். இதனால் இந்த கோவில் உல்டா அனுமன் என்று சொல்லப்படுகிறது. எதுக்கு இந்த கோவிலைப் பற்றி பார்க்கிறோம்னா, மயில்ராவணன் இராமனையும் லட்சுமணையும் மயக்க நிலையில் பாதாள உலகத்திற்கு கடத்திச் சென்றபோது அனுமன் இந்த வழியாகத்தான், பாதாள உலகத்திற்குச் சென்று அவர்கள் இருவரையும் மீட்டு வந்தாராம். அப்படி அனுமன் தலைகீழாகப் பாதாள உலகத்திற்குப் புறப்பட்ட இடம் இதுதான் என சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் இருக்கும் இரண்டு பாரிஜாத மரங்கள் மிகவும் பழமையானவை. இந்த மரங்களில் அனுமன் குடியிருப்பதாக ஐதீகம் உண்டு. இங்கே அனுமனின் மகனாக கருதப்படும் மகரத்வஜனுக்கு ஒரு சந்நிதி இருக்கிறது. மேலும், இராமன், சீதை, லட்சுமணன், சிவன் மற்றும் பார்வதி ஆகியோரின் சிலைகளும் உள்ளன.
இந்த கதைகளின் மூலம் புகழேந்திப் புலவர் எழுதிய மயில்ராவணன் கதையிலிருந்துதான் மக்களுக்கு அறியப்படுகிறது. இதன் முதல் பதிப்பு 1868 ஆம் ஆண்டில்தான் சிறுகதை நூலாக அச்சில் வெளியிடப்பட்டது என்கிறார்கள். ஆனால், இந்த பதிப்பு வெளிவந்த ஆண்டு 1936. அதில் மயில்ராவணன் கதை விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை புராணங்களில் எங்கேயும் கூறப்படவில்லை. ஆதிக்காலத்தில் இருந்தே நாட்டுப்புறங்களில் வாய்மொழிக் கதையாகவும், தோல்பாவை,தெருக்கூத்து போன்றவைகளில் மட்டுமே அறியப்பட்ட கதை, பின்பு கலாச்சார மாற்றத்தினால், அழிந்து விட்ட இந்த கலைகளோடு மயில்ராவணன் கதையும் அழிந்து விட்டது .
இனி, வரும் வாரங்களில் நமது தெரிந்த கதை தெரியாத உண்மைகளில் மயில்ராவணன் பற்றியக் கதைகளை விரிவாக பார்க்கலாம்.
இவையெல்லாம் அறியாதவை சகோதரி... படங்கள் அனைத்தும் பிரமிக்க வைக்கிறது...
ReplyDelete01.கிட்கிந்தா காண்டம் 4.66
ReplyDeleteவளிக் கடவுள் (வாயு பகவான்) ’லீலையால்- - காம வெறியால் பிறந்தவனே அநுமன்.
அவனுடைய தாய் ‘அஞ்சனா’’ தேவருலக அப்சரசுகளில் மிகவும் அழகானவளாம். மூவுலகிலும் அவளுக்கு நிகரனவர் எவருமிலராம்(4.66.8,9). ஒரு முனிவனின் சாபத்தால் குரங்கினத்தின் தலைவன் (வானர இனம்) குஞ்சரன் என்பானின் மகளாகப் பிறந்து, ‘கேசரி’ என்னும் குரங்கிற்கு (வானரம்) மனைவியாகிறாள்(4.66.8). சாபமிட்ட முனிவன் ஒரு சலுகையாக அவள் விரும்பும் போதெல்லாம் அவளுடைய மூல உருவத்தை அடையலாம் என்று சலுகை அளித்திருந்தானாம். (4.66.9;
சாவச் சலுகையைப் பயன்படுத்தி ஒரு நாள் தன் சொந்த உருவத்துடன் அழகான உடையுடன் எழிலுற மலைப் பகுதியில் உலா வருகின்றாள் (4.66.10.11)
அவள் அழகில் மயங்கிய வாயு அவளுடைய ஆடைகளைக் காற்றில் மேலெழும்புபடி செய்து அவளுடைய அழகில், அவளுடைய உருண்டு திரண்ட தொடைகள், திரண்ட மார்பகங்கள் முகம் ஆகியவற்றில் மெய் மறக்கின்றான்.(4.66.12, 13).
கொடி இடையையும் திரண்ட புட்டத்தையும் சுற்றியுள்ள கச்சையையும் (ஆடை மேலேறியதால்) கண்ட அழகிய கை, கால்களையும் கண்ட வாயு சொக்கிப் போகிறான்.(4.66.14)
காம வெறியால் உந்தப்பட்ட வாயு அப்படியே அஞ்சனாவைக் கட்டி அணைத்துக் கொள்கிறான் (4.66.15)
வாயுவின் உருவம் தெரியாததால் அஞ்சனா, “ ஓர் ஆண் – ஒரு பெண் என்னும் கொள்கையை உடைய என்னுடைய உறுதியைக் குலைப்பவன் யாவன்?” என வினவுகிறாள்(4.66.16)
அதைக் கேட்ட வாயு, “கவலைப் படாதே! நான் வாயு பகவான். உன்னை நான் பெரிதும் மதிப்பவன் ஆதலாலால் நீ அஞ்சாதே! இந்தக் கூடலால் அறிவுத்திறனும் உடல் வலிமையும் கொண்ட மகனைப் பெறுவாய்” எனக் கூறுகிறான் அஞ்சனாவும் இதனால் மகிழ்ந்து மனம் ஒப்புகிறாள்;. வாயு தான் வந்த வேலையை முடித்துச் செல்லுகிறான். வாயுவின் கூடலால் பிறந்த அநுமனை அவள் ஒரு குகையில் வளர்த்து வந்தாள்..
செய்தி அறிந்து ஏதும் செய்ய இயலாத கேசரி அநுமனை மகனாக ஏற்றுக் கொண்டானாம். நடந்ததற்குத் தன் மனைவி பொறுப்பு அல்ல என்று தன் மனதைத் தேற்றிக் கொண்டு அவளை மன்னித்துவிட்டானாம்.
தன் பிறப்பைப் பற்றிக் கேட்ட அநுமனுக்கு ஜாம்பவான் என்னும் மற்றொரு குரங்கு கூறிய நிகழ்வுகள்தாம் இவை.. (4.66. 17,18,19,20)
மேலே கூறப்பட்டவை வால்மீகி இராமாயணத்தில், கிட்கிந்தாகாண்டத்தில் 66 ஆவது அத்தியாயத்தில் உள்ள செய்திகள்.
இனி,,,
அஞ்சனாவின் கணவன் கேசரி ஊரில் இல்லாதபோதுதான் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது.. அவன் எங்கே போயிருந்தான்? அதற்கான விளக்கம் சுந்தர காண்டத்தில் உள்ளது (சு.கா.35) கோகர்ணம் என்னும் இடத்தில் தன் இனத்தின் பகைவர்களுடன் நடந்த போரில் ஈடுபட்டிருந்தான். எனவே, வாயு தன் காம வேட்கையைத் தணித்துக் கொண்ட போது அவளுடைய கணவன், தன் இனத்துக்காகப் போரில் ஈடுப்பட்டிருந்தான். நேரம் பார்த்துதான் வாயு தன் வேலையை முடித்துள்ளான் என்பது தெளிவு. மேலும் வாயு தன்னைக் கட்டி அனைத்தபோது, தான் “ஓர் ஆணுக்கு ஒரு பெண் என்னும் கொள்கையுடையவள்” என்று கூறியிருக்கிறாள் அதையெல்லாம் வாயு ’பகவான் (?!)’ கண்டுகொள்ளவில்லை. தன்னைக் கூட நினைப்பவன் ஒரு கடவுள் என்பதை அறிந்தவுடன் அவளும் தன் கொள்கையை விட்டுவிட்டு இசைந்திருக்கிறாள்/
>>கோகர்ணம் என்று ஓர் இடம் இன்று கருநாடக மாநிலத்தில் உள்ளது
>> அஞ்சனாவின் அழகை வளியரசன் கண்டுணர்ந்தவாறு வால்மீகி கூறியுள்ளதத் தெரிந்து கொள்ளக் கீழ்க்காணும் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்க்க.
ReplyDeleteஇந்த மொழிபெயர்ப்பு http://www.valmikiramayan.net இலிருந்து பெறப்பட்டது
This Valmiki Ramayana in Sanskrit is being translated and presented by Sri Desiraju Hanumanta Rao (Bala, Aranya and Kishkindha Kanda ) and Sri K. M. K. Murthy (Ayodhya and Yuddha Kanda) with contributions from Durga Naaga Devi and Vaasudeva Kishore (Sundara Kanda); Smt. Desiraju Kumari; Smt. K. Rajeswari, with all enthusiasm and devotion to classical literature of India, with humble and due respect to elders, pundits and to all those who respect Srimad Valmiki Ramayana the epic poem.
This Valmiki Ramayana in Sanskrit is being translated and presented by Sri Desiraju Hanumanta Rao (Bala, Aranya and Kishkindha Kanda ) and Sri K. M. K. Murthy (Ayodhya and Yuddha Kanda) with contributions from Durga Naaga Devi and Vaasudeva Kishore (Sundara Kanda); Smt. Desiraju Kumari; Smt. K. Rajeswari, with all enthusiasm and devotion to classical literature of India, with humble and due respect to elders, pundits and to all those who respect Srimad Valmiki Ramayana the epic poem.
psara apsarasaam shreSThaa vikhyaataa pu.njikasthalaa |
a.njanaa iti parikhyaataa patnii kesariNo hareH || 4-66-8
8. punjikasthalaa= Punjikasthala; apsarasaam shreSThaa= among apsara-s, nicest one; vikhyaataa= renowned one; anjanaa iti pari khyaataa= [yclept] Anjana, thus, made, known - known as; apsara= such apsara; hareH kesariNaH patnii= of a monkey, of Kesari, wife of.
"Punjikasthala yclept Anjana is the nicest apsara among all apsara-s and she is the wife of Kesari, the monkey... [4-66-8]
vikhyaataa triSu lokeSu ruupeNaa apratimaa bhuvi |
abhishaapaat abhuut taata kapitve kaama ruupiNii || 4-66-9
9. taata= dear boy; ruupeNaa a+pratimaa= by mien, [she] not, paralleled - as an unparalleled apsara; triSu lokeSu vikhyaataa= in three, worlds, she is distinguished; such as she is; abhishaapaat= by a curse; bhuvi= on earth; kaama ruupiNii= by wish, form changer; kapitve= with monkey-hood; abhuut= she became [took rebirth.]
"She who is distinguished for her unparalleled mien in the three worlds, oh, dear boy Hanuma, had to take a rebirth on earth as a monkey who can change her form by her wish, owing to a curse... [4-66-9]
duhitaa vaanara indrasya ku.njarasya mahaatmanaH |
maanuSam vigraham kR^itvaa ruupa yauvana shaalinii || 4-66-10
vicitra maalya aabharaNaa kadaacit kshauma dhaariNii |
acarat parvatasya agre praavR^iD a.mbuda sannibhe || 4-66-11
10, 11. vaanara indrasya= of monkey, chief's; mahaatmanaH= great souled one; kunjarasya= of Kunjara; duhitaa [aabhuutaa]= daughter, [on taking birth]; ruupa yauvana shaalinii= form [rarity of beauty], nubility, when shining forth with them; kadaacit= at one time; maanuSam vigraham kR^itvaa= human, physique, on assuming; vicitra maalya aabharaNaa= amazing, garlands, decorations having; kshauma dhaariNii= silken-clothes, dressed in; praavR^iD ambuda sannibhe= rainy season's, black-cloud, similar in shine; [adhyadhaara / elliptic: vidyut iva= streak of lightning, like] parvatasya agre= mountain, on top; acarat= she ambled.
"She who took birth as the daughter of great souled monkey chief Kunjara, on assuming a human physique, putting on caparisons of amazing garlands, dressed in silken clothing, and shining forth with rarity of her beauty and nubility, at one time ambled on the top of a mountain like a streak of lightning athwart a black-cloud of rainy season. [4-66-10, 11]
tasyaa vastram vishaalaakSyaaH piitam rakta dasham shubham |
sthitaayaaH parvatasya agre maaruto apaharat shanaiH || 4-66-12
03.
ReplyDeletesa dadarsha tataH tasyaa vR^ittau uuruu susa.mhatau |
stanau ca piinau sahitau sujaatam caaru ca aananam || 4-66-13
13. tataH saH= then, he that Air-god; tasyaa= of her; vR^ittau= roundish; su sam hatau= well, twinned, thickset; uuruu= thighs; piinau sahitau stanau= plumpish, paired off, breasts; su jaatam= well, proportioned [becomingly build]; caaru aananam ca= beautiful, face, also; dadarsha= he beheld.
"Then the Air-god beheld her well-twinned, thickset, roundish thighs, and even the paired off plumpish breasts, and her beautiful face which is well proportioned in its build... [4-66-13]
taam balaat aayata shroNiim tanu madhyaam yashasviniim |
dR^iSTvaa eva shubha sarvaan.hgiim pavanaH kaama mohitaH || 4-66-14
14. balaat [vishaala] aayata shroNiim= one with - fatly [broad,] ample, pelvic girdle; tanu madhyaam= body, medium [slender-waisted]; yashasviniim= gorgeous one; shubha sarva angiim= pristine, by all, her limbs; taam= her; dR^iSTvaa eva= catching sight of, just on; pavanaH= Air-god; kaama mohitaH= by enamour, enamoured.
"Just on catching the sight of that gorgeous one, whose pelvic-girdle is fat and ample and who is slender-waisted, and who by all her limbs is pristine, the Air-god is enamoured... [4-66-14]
sa taam bhujaabhyaam diirghaabhyaam paryaSvajata maarutaH |
manmatha aaviSTa sarvaan.hgo gata aatmaa taam aninditaam || 4-66-15
15. a +ninditaam= not, blameable [immaculate lady; taam= towards her; gata aatmaa= he who - lost, his heart; saH maarutaH= he, that Air-god; manmatha aaviSTa sarva angaH= by Love-god, ensorcelled by, in all, limbs; diirghaabhyaam bhujaabhyaam= with long, arms; taam= her; paryaSvajata= embraced.
"He that Air-god who is ensorcelled by Love-god in all of his limbs, though he is limbless and existing in thin air, embraced that immaculate lady with both of his far-flung arms, as he lost his heart for her... [4-66-15]
saa tu tatra eva sa.mbhraa.ntaa suvR^ittaa vaakyam abraviit |
eka patnii vratam idam ko naashayitum icChati || 4-66-16
16. tatra= therein [the matter of invisible hugging]; eva sambhraantaa= just, perplexed; su vR^ittaa= of good, principles [conscientious lady]; saa tu= she, on her part; vaakyam abraviit= sentence, said; idam eka patnii vratam= this, single, wifehood, vow - one-man-one-wife principle of mine; kaH naashayitum icChati= who, to despoil, wishes to.
"But she that conscientious lady perplexedly said this sentence in that matter of invisible hugging, 'who wishes to despoil my vow of one-man-one-wife...' [4-66-16]
a.njanaayaa vacaH shrutvaa maarutaH pratyabhaaSata |
na tvaam hi.msaami sushroNi maa bhuut te manasoi bhayam || 4-66-17
04. 17. anjanaayaa vacaH shrutvaa= Anjana's, words, on listening; maarutaH prati abhaaSata= by Air-god, in reply, spoke; sushroNi= oh, high-hipped one; tvaam na himsaami= you, not, I assault [archaic= dishonour]; te manasaH bhayam maa bhuut= to your, heart, fear, let not, be there.
ReplyDelete"On listening the words of Anjana the Air-god spoke this in reply, 'oh, high-hipped one, I don't dishonour you, hence let there be no fear in your heart, for I am the all-permeating Air-god... [4-66-17]
manasaa asmi gato yat tvaam pariSvajya yashasvini |
viiryavaan buddhi sa.mpannaH putraH tava bhaviSyati || 4-66-18
18. yashasvini= oh, honourable lady; yat= by which reason; tvaam pariSvajya= you, on embracing; manasaa gataH= by sense [supersensorily,] entered [impregnate within you]; asmi= I am; by that reason; tava= to you; viiryavaan= valiant one; buddhi sampannaH= intellect, endowed with; putraH bhaviSyati= son, will be there [takes birth.]
" 'By which reason I embraced you and impregnate myself within you, by that reason you are impregnated in a supersensory manner, thereby you will beget a valiant son endowed with intellect... [4-66-18]
mahaasaattvo mahaateja mahaabala paraakramaH |
la.nghane plavane caiva bhaviSyati mayaa samaH || 4-66-19
19. mahaa saattvaH= admirably, brave; mahaa teja= bravely [formal: splendid, spectacular - make a brave show,] dazzling; mahaa bala= dazzlingly [intr. archaic; [of eyes] be dazzled,] forceful; paraakramaH= [elliptic: forcefully] overpowering; langhane plavane caiva= in fly off, jump off, also thus; [putraH= a son]; mayaa samaH= with me, a coequal; bhaviSyati= will be there.
" 'An admirably brave, and a bravely dazzling, and a dazzlingly forceful, and a forcefully overpowering son will be there, also thus, he will be a coequal of mine in flying off and jumping up...' Thus, the Air-god said to Anjana. [4-66-19]
evam uktaa tataH tuSTaa jananii te mahaakapeH |
guhaayaam tvaam mahaabaaho prajaj~ne plavagarSabha || 4-66-20
20. mahaabaahuH= oh, ambidextrous one; mahaakapeH= great [arcane,] monkey - Hanuma; evam uktaa= that way, when she is said [by Air-god]; te jananii tuSTaa =your, mother, is gratified; tataH= thereby; plavagarSabha= oh, fly-jumper, the best; tvaam guhaayaam= you, in a cave; pra ja j~ne= very, well, divined [tr. discover by guessing, intuition, inspiration, or magic - not a uterine birth.]
"Oh, arcane monkey Hanuma, when Air-god said so to her, oh, ambidextrous one, your mother is gratified, and then, oh, bullish fly-jumpers, your mother very well divined you in a cave... [4-66-20]
நன்றி ..உங்கள கமெண்ட் ,பதிவைவிட,மிகவும் நீளமாக இருக்கிறது ,நானும் நீங்கள் குறிப்பிட்ட ,பதிவை படித்தேன் .இங்கே நமது பதிவர் ,ராஜி அவர்கள் ,எழுதியதையும் படித்தேன் .இப்படியெல்லாம் இருந்திருகிறது ,உண்மையா ,பொய்யா என தெளிவாக சொல்லவில்லை ,இப்படி இருந்திருகிறது, இருந்திருக்கலாம் ,எனத்தான் குறிப்பிட பட்டுள்ளது . ஆனால் நீங்கள் குறிபிட்டபதிவில்,ஒரு குருப் சேர்ந்து ஆதாரமாக திரட்டப்பட்டு ,வெளியிட்டுள்ளனர்.நல்லவிஷயம்தான் ,ஆனால்,எல்லாவற்றிலும் நிறைய இடை சொருகல்கள் ,இருந்தே வந்திருக்கின்றன ,நிறைய மூலங்களை பார்த்தால் இவர்களுடைய இடைசொருகல்கள் யதனால் என தெளிவாக தெரியும் ,பிரிட்டிஷ் காலத்தில் ,நிறைய பதிவுகளை ,தவறாகவும் ,சில சுயனலங்ககுக்கவும் .மாற்றி எழுதியதை ,நான் கேள்வி பட்டுஇருகிரென் ,அதாவது ஒரு தனிப்பட்ட மத துவேஷதிர்க்காக பயன்படுதபட்டவைகள் பற்றிய நிறைய குறிப்புகள் ,இபொழுது ஒவ்வன்ரக வெளியே வருகிறது .ராமர் பாலம் ஒன்று இல்லவே இல்லை ,ஆனால் ஆதம் பாலம் இருந்தது ,ஏன்னா ,அங்கெ ஆதம் நடந்து வந்தார், எப்படின்னா இந்த நாடகத்தை 1885 வாக்கில் பிரிட்டிஷ் கார்கள் அரங்கேற்றினர் .அதையெலாம் பொய் என அதற்க்கு முந்தைய காலகட்டங்களில் உள்ள ,ஆராய்சிகளை பார்த்தால் தெரியும் ,சில அயல்நாட்டு பயணிகளின் பயண குறிப்புகள் மூலம் ,இதை பிற்காலத்தில் தெரிந்து கொண்டனர் ,அதுபோல வாயுபகவான் பற்றி கூறியவை ,வர்ணனையாக கூட இருக்கலாம்,,இருங்கள் அதன் மூலம் எதிலாவது இருக்கும் ...தேடிபார்த்தால் தான் தெரியும் ,நாம் இங்கே எதையும் ஆணித்தரமாக குறிப்பிட முடியாது ,4 குருடர்கள் யானையை தடவிபர்தா கதைதான் இங்கு ,கால்களை பிடித்து பார்த்த ,குருடன் யானியின் கால்கள் ,உலக்கையை போன்று ,இருந்தது என சொன்னான். அதனால் தான்
ReplyDelete,அதற்க்கு அடுத்துவந்த குடர்கள் ,யானையின் கால்கள் ,உலக்கையால் ஆனது என மாற்றியது போலதான் இருக்கும் ,அதனால் பொறு மையாக இதன் மூலத்தையும் ,இவர்கள் எடுத்துக்கொண்ட ஆதரங்களையும் ஆராய்ந்தாலே போதும் ,அதில் உண்மை உள்ளதா ,இல்லை புனையபட்டதா என தெரிந்து கொள்ளலாம் ...எது எப்படியோ பதிவு மிக அருமை ....
சுவாரஸ்யமான புராணத் தகவல்கள்! படங்கள் பிரமிக்க வைத்தன! சிறப்பான பகிர்வு! நன்றி!
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ
Deletehttp://www.valmikiramayan.net இல் உள்ள வால்மீகி இராமாயனத்தில் உள்ளதை அப்படியே பதிந்துள்ளேன். சமஸ்கிருத வர்களை மட்டுமே தவிர்த்துள்ளேன்.
ReplyDeleteபல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன்;நலந்தானே?
ReplyDeleteநலம்தான் ஐயா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா!
Deleteநானும் அதை படித்து பார்த்தேன் ,ஆனால்,அவர்கள் குறிப்பிட்ட ஆதாரம் ,வால்மீகி இராமயணத்தில் இருந்து எடுக்கப்பட்டவை என்றுதான் குறிப்பிட்டுள்ளனர் வால்மீகி இரண்டுராமாயணம் எழுதியதாக நினைவில்லை .ஆனால் ,ஏன் ஒட்டுமொத சமுதாயத்தில் ,அது பிரதிபலிப்பலிக்கவில்லை,இந்துமதத்தை பொறுத்தவரை ,தவறு என்றால் அதுகடவுள் என்றால் கூட சுட்டிக்காட்ட தவறுவதில்லை தேவர்களின் தலைவன் இந்திரனை பற்றி பலவாறு கதைகள உண்டு ,அதையாரும் மறைக்கவில்லை ,மறைக்கவும் மாட்டார்கள் ,அவனவன் செய்கிற செயல்களுக்கு ,அவனவன் தான் பொறுப்பு ஏற்கவேண்டும் ,நல்லதா இருந்தாலும் தீமையா இருந்தாலும் ,ஆனாலும் பரவா இல்லை வால்மீகி எழுதிய இந்தி மூலத்தை ,படித்து பார்க்க முயற்சிக்கிறேன் அவர்கள் சொல்வது சரியா என .இரண்டையும் ஒப்பீடு செய்யலாம் ,,ஏனெனில் ..இவையெல்லாம் ஒரு நல்லெண்ண நம்பிக்கையின் அடிப்படையில் ..மக்களிடையே உலவும் ,இதிகாசங்கள் ..,
ReplyDeleteதகவல்கள் நன்று. படங்களும் அருமை.
ReplyDeleteசமீபத்தில் தான் நானும் எனது பஞ்ச் துவாரகா பயணத் தொடரில் மகரத்வஜன் பற்றி எழுதி இருந்தேன்....
அப்படியா?! பார்க்கிறேன் அண்ணா!
Deleteபுதுக்கதையும் படிக்க சுவையாகத்தான் இருக்கறது.
ReplyDeleteபடங்களும் அருமை தோழி.
நம் புராண, இதிகாசங்களில் நிறைய கிளைக்கதைகள் இருக்கு. அவை படிக்கவும் , சிந்திக்கவும், சுவாரசியமாகவும் இருக்கு அருணா!
Deleteஅருமையான பதிவு..படங்கள் ஆர்வத்தை தூண்டுகின்றன..
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ!
Deleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ!
Deleteவருகைக்கும், வழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி சகோ!
ReplyDeleteஅழகிய படங்களுடன் சிறப்பான பதிவு. நிறைய விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது.
ReplyDeleteவருகைக்கும், பதிவினை ரசித்தமைக்கும் நன்றி சகோ!
Deleteஆஞ்சனேயர் குடும்ப சகிதமாக சென்னைக்கருகில் காட்டாங்குளத்தூர் அருகேயும் கோயில் கொண்டு இருக்கின்றார்..(தனியார் கோயில்)
ReplyDeleteசிலவை ஏற்கனவே தெரியும் என்றாலும் ...ஏனோ அனுமனைக் குடும்பத்துடன் நினைக்க முடியவில்லை...ஆனால் உங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை...
மிக்க நன்றி பகிர்வுக்கு
நிஜம்தான் ஐயா! அனுமனுக்கும், பிள்ளையாருக்கும் குடும்பம் இருப்பதை மனம் ஏற்றுக் கொள்ளவில்லைதான்.
Deleteபுராணங்களின் டுவிஸ்டுகள் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகின்றன. இராமாயணத்தில் இராமனின் கதைகள்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஹனுமனின் வரலாறு ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது. அதுவும் செய்திகளை ஒட்டி அதற்கான படங்களை இணைத்தது பலே.
ReplyDeleteஇன்னும் பல சுவாரசியங்களை இனிவரும் பதிவுகளில் பதிவிடப்போறேன் சகோ. தவறாம படிங்க சகோ!
Deleteஉங்களை ஒரு தொடர் பதிவில் இணைத்திருக்கிறேன். :)
ReplyDeletehttp://thaenmaduratamil.blogspot.com/2015/11/kadavulai-kanden-blogpost-chain.html
ஆஹா! வந்ததும் சிக்க வச்சாச்சா?! எழுதிடுறேன் கிரேஸ்.
Deleteபுதுமையான தகவல்கள் வரலாறு பலதை மறைத்துவிட்டது என்றும் சொல்ல முடியும் போல!
ReplyDelete”தனக்கு வசதியானதை”ன்னு சேர்த்துக்கோங்க சகோ!
Deleteமிகுந்த சுவாரஸ்யம்.
ReplyDelete