திங்கள், நவம்பர் 23, 2015

பெற்ற தாய் உசத்தியா?! இல்ல வளர்ப்பு தாய் உசத்தியா?! -ஐஞ்சுவை அவியல்

ஏய் புள்ள! என்ன மூஞ்சிய தூக்கி வச்சிருக்கே!! தீபாவளிக்குதான் நீ கேட்ட புடவையும், நகையும் வாங்கி  கொடுத்துட்டேனே! அப்புறம் என்ன?!

அது ஒண்ணுமில்லீங்க மாமா! காலைல பேப்பர் பார்த்தேனா?! அதான் மனசு கஷ்டமா போச்சு.

ஏன்?! என்ன ஆச்சு?! 

இப்போ குறைஞ்ச தங்கம் விலை முன்னமே குறைஞ்சிருந்தா இன்னும் ரெண்டு கிராம் கூட எடுத்திருக்கலாம்ன்னு நினைப்போ!?

அதுலாம் இல்ல மாமா! எப்போ பாரு என்னை தப்பாவே நினைங்க. நம்ம ஊருல இருக்கும் கான்வெண்ட் ஸ்கூல்கிட்டக்க நேத்து சாயங்காலம் 4 மணிக்கு குழந்தையோட அழுகுரல் கேட்டுச்சுன்னு அக்கம் பக்கத்திலிருக்குறவங்க போய் பார்த்திருக்காங்க. அங்க பொறந்து கொஞ்ச நேரமே ஆன ஆம்புள குழந்தை ஒண்ணு மழைல நனைஞ்சுக்கிட்டு ரோட்டோரம் கிடந்துச்சாம். 

ஐயோ! அப்புறம்?!

அதோட காலும் கையும் வளைஞ்சு போய் ஊனமுற்று கிடந்துச்சாம் மாமா! அதான் அதைக் கொண்டாந்து ரோட்டோரம் வீசிட்டு போய்ட்டாங்க போல!!

அடச்சே! குழந்தை ஊனத்தோடு பொறந்தா ரோட்டோரம் வீசி எறியலாமா?! டாக்டர்கிட்ட காட்டி குணப்படுத்த பார்க்கலாம் இல்லன்னா உதவி  செய்யுறவங்கக்கிட்ட கொடுத்திருக்கலாம். பாவம் அந்த குழந்தை!!!

ம்ம்ம் பெத்தவங்களே கவனிக்க தயங்கும்போது வேற யாரு மாமா இப்படிப்பட்ட குழந்தையை பார்த்துக்குவாங்க?!

நல்ல உள்ளங்கள் இன்னமும் இருக்காங்க புள்ள. கோவைல இருக்கும் சுரேஷ்சந்திர பட், விஜயலட்சுமின்ற தம்பதிகள்தான் அதுக்கு உதாரணம். 

அப்படி என்ன பண்ணிட்டாங்க அவங்க ரெண்டு பேரும்?!

அவங்களுக்கு கல்யாணம் ஆகி 15 வருசமாகியும் குழந்தை இல்ல. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் குழந்தை இல்ல. அதனால எங்கெல்லாமோ தேடி கேரளாவுல இருக்கும் ஒரு ஆசிஓரமத்திலிருந்து ஒரு குழந்தையை எல்லா மெடிக்கல் செக்கப்பும் செஞ்சு நார்மல்ன்னு ரிசல்ட் வந்தப்பின் தத்தெடுத்து அஜய்ன்னு பேர் வச்சி வளர்த்திருக்காங்க. தவழ ஆரம்பிச்ச குழந்தை அப்புறம் நடக்கவே இல்ல. என்ன ஏதுன்னு டாக்டர்கிட்ட கூட்டிப் போனப்பின் “செரிப்ரல் பால்சி”ன்ற நோய் இருக்குறது கண்டுப்பிடிச்சிருக்காங்க.

ஐயோ! அப்புறம் குழந்தைய என்ன செஞ்சாங்க. மீண்டும் ஆசிரமத்துக்கே குடுத்துட்டாங்களா!?

அதான் இல்ல. முறைப்படி ஆசிரத்துக்கு இந்த தகவலை தெரியப்படுத்தி இருக்காங்க. அவங்க குழந்தையை எங்கக்கிட்ட கொடுத்துடுங்கன்னு சொல்லி இருக்காங்க. அதுக்கு அந்த ஜோடி, இவன் எங்களுக்கு கிடைச்சு, இவனை பார்த்துக்கனும்ன்னுதான் எங்களுக்கு கடவுள் கட்டளைப் போல! அதான் இத்தனை வருசம் கழிச்சு இவன் எங்களுக்கு கிடைச்சிருக்கான். அதனால, நாங்களே இவனை வளர்த்துக்குறோம்ன்னு சொல்லி அவனை ஒரு இளவரசன் போல வளர்த்து வர்றங்களாம். அவள் விகடன் அவங்களைப் பத்தி ஒரு கட்டுரை வந்திருக்கு. 

அப்படியா! நிஜமாவே நல்ல மனுசங்கதான் மாமா! அப்புறம் நாம தினமும் போடுற பெட்ரோல்ல எப்படி கொள்ளை அடிக்குறங்கன்னு மூஞ்சிபுக்குல படிச்சேன். நீங்க படிச்சீங்களா?!

ம்ம் படிச்சேன் புள்ள. நாம 100ரூபாக்கு பெட்ரோல் போடச் சொன்னா, அவங்களும் மானிட்டர்ல 100ரூபான்னு அழுத்தி விட்டுடுவாங்க. ஆனா, 90 ரூபா வந்ததும், பெட்ரோல் போடுறவர் தன் கையில் இருக்கும் பம்ப்ல இருக்கும் ப்ரேக்கை ஒரு அழுத்து அழுத்தி ரிலீஸ் பண்ணுவார். அப்படி பண்ணா பெட்ரோல் மெதுவா இறங்கி நமக்கு 100ரூபாய்க்கு பெட்ரோல் போட்டதா காட்டும். ஆனா, அப்படி பண்ணும்போது மீட்டர்  recalibration  ஆகி நமக்கு குறைவான அளவு பெட்ரோல்தான் கிடைக்கும். இதுனால, 5 முதல் 10 ரூபா நமக்கு நஷ்டமாகுமாம். 

இனிமே பெட்ரோல் போடும்போது நீங்களும் கவனமா இருங்க மாமா!

சரி புள்ள. மூஞ்சி புத்தகத்துல இந்த படத்தை பார்த்ததும் என்னை வெட்கப்பட வைச்சுது. ஆஃபீஸ் உஎதிர்பார்த்துக்கிட்டு இருக்கோம். ஆனா, கால் இல்லாத பெரியவர் ஒருத்தர் விவசாயம் செய்யுறார். அவர் வணக்கத்துரியவர் இல்லியா?!


ம்ம்ம் நிஜம்தான் மாமா. நம்ம உறவுகள் எப்படி இருக்குன்னு மூஞ்சி புக்குல ஒருத்தர் போட்டிருக்கார். அதையும் பாருங்க...,  கார்த்திகை பண்டிகை வருது. எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் போறேன்.....,22 கருத்துகள்:

 1. சுரேஷ்சந்திர பட், விஜயலட்சுமி இப்படிப்பட்டவர்களால்தான் உலகம் இன்னும் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது பாராட்டப்பட வேண்டியவர்கள்
  விவசாயி பெரியவரை கண்டு வியந்தேன் தகவல் நன்று சகோ
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோ!

   நீக்கு
 2. விவசாயம் பார்க்கும் பெரியவர் போற்றுதலக்கு உரியவர்
  சுரேஷ் விஜயலட்சுமி தம்பதியினரைப் போற்றுவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த பெரியவரைப் போல நாமும் விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுக்கனும். நமக்குதான் விவசாயம்ன்னா கசக்குதே.

   நீக்கு
 3. நானும் படித்தேன் அக்கா... பாராட்ட வார்த்தைகள் இல்லை....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிஜம்தான் அபி! நம்ம பசங்களுக்கு உடல்நிலை சரியில்லைன்னா சில சமயம் சலிப்பு வந்திடுது. ஆனா, அந்த தம்பதியர் மனசு நிஜமாவே உயர்ந்ததுதான்

   நீக்கு
 4. ஆஹா நான் கருத்து சொல்லுறதுக்கு ஏற்றவாறு ஒரு பதிவு.

  பதிலளிநீக்கு
 5. கோயில் குளம் என பதிவு போடாமல் இருந்தற்கு முதலில் நன்றி

  பதிலளிநீக்கு

 6. //கான்வெண்ட் ஸ்கூல்கிட்டக்க நேத்து சாயங்காலம் 4 மணிக்கு குழந்தையோட அழுகுரல் கேட்டுச்சுன்னு அக்கம் பக்கத்திலிருக்குறவங்க போய் பார்த்திருக்காங்க. அங்க பொறந்து கொஞ்ச நேரமே ஆன ஆம்புள குழந்தை ஒண்ணு மழைல நனைஞ்சுக்கிட்டு ரோட்டோரம் கிடந்துச்சாம். ///

  குழந்தையின் பெற்றோர்கள் குழந்தையின் பள்ளிக்கூட அட்மிஷனுக்காக அங்க வைச்சிருந்ததை யாரோ இப்படிதப்பாக சொல்லி புரளியை கிளப்பி இருக்கிறார்கள் போல

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட்மிஷனுக்கு வச்சதுக்கும், வீசி எறிஞ்சதுக்கும் வித்தியாசமில்லையா சகோ!

   நீக்கு
 7. காயங்களை கொடுத்து சென்ற அன்புக்குரியவர்கள் காயங்கள் அறியதும் மீண்டும் வருவாங்க வெயிட் பண்ணுங்க.... ஆனால் அவர்கள் மீண்டும் அன்பை தருவார்களா அல்லது காயத்தை தருவார்களா என்பது மட்டும் தெரியவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எதுவா இருந்தாலும் அதை தாங்கும் பக்குவத்தை இறைவன் அருளினால் போதும்ங்க சகோ

   நீக்கு
 8. பாராட்டுக்குரியவர்கள்.
  பாஸிட்டிவ் செய்திகளுக்கு எடுத்துக் கொள்கிறேன்.
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிங்க சகோ! அவள் விகடன்ல வந்திருக்கு.

   நீக்கு
 9. வழக்கம் போல் வரும் புதிர் எங்கே...? காணாம்....?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசரமா போட்ட பதிவு. இனி வரும் வாரங்களில் புதிர் வரும்

   நீக்கு
 10. பாராட்டிற்குரியவர்கள்,

  விவசாயம் இன்னும் மிச்சமிருப்பது இவர்களால் தான்,

  அந்த கடைசி கவிதை அருமை, பல முறை படித்தேன்.

  பதிலளிநீக்கு
 11. அனைத்து தகவல்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 12. தம்பதிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  பதிலளிநீக்கு
 13. அந்த அம்மாவும் அப்பாவுக்கும் கோயில் கட்டிக் கும்பிடலாம். அதே நேரம் தெருவில் ஊனமுற்ற்க் குழந்தையை வீசி எறியும் பெற்றோர்களை/பெண்ணை என்ன செய்யலாம்...ச்சே..

  //5 முதல் 10 ரூபா நமக்கு நஷ்டமாகுமாம். //இப்பை ஒவ்வொருத்தர்கிட்டயும்...அந்நியன் கணக்குதான்.....

  பதிலளிநீக்கு