Sunday, September 09, 2018

எங்கிருந்து வந்தாயோ?! - பாட்டு புத்தகம்


ரோஸ் பவுடர், லிப்ஸ்டிக் தீட்டி, உடல் தெரிய உடுத்தி,  ஹை ஹீல்ஸ் போட்டுக்கிட்டு, தப்பும் தவறுமான உச்சரிப்போடு ஹை ஹீல்ஸ் உலா வந்த திரையில்,  ஆண்கள் அணியும் சட்டை, பாவாடையோடு, எண்ணெய் தொட்டு தலைவாரி, பகுடர் பூசி, ஐ லைனர் இழுக்காம  பக்கத்து வீட்டு பெண்போல எதார்த்தமா வந்த கயலை சாரி ஆனந்தியை பிடிக்காம போயிடுமா?! அத்தோடு கேமரா அதிகம் பயணிக்காத ஆரல்வாய்மொழின்ற ஊரை சுத்திய கதைக்களம். இந்த பாட்டில் வரும் காடு, காட்டு மரங்களால் ஆன பாலத்துக்காகவே இந்த பாட்டு பிடிச்சு போச்சுது. உண்மையிலேயே இப்படி ஒரு இடம் இருந்தால் பார்க்கனும்ன்னு தீராத ஆவல். 


எங்கிருந்து வந்தாயோ?!
எதுக்காக வந்தாயோ?!
என்னமோ சொன்னாயே!
கத பேசி போனாயே!
அதை நானும் அறியும் முன்னே..

அட நீயும் மறைந்தாயே!
மெல்லக் காற்றில் கரைந்தாயே!

எங்கிருந்து வந்தாயோ?!
எதுக்காக வந்தாயோ?!
என்னமோ சொன்னாயே!!
கத பேசி போனாயே!
அதை நானும் அறியும் முன்னே
அட நீயும் மறைந்தாயே!
மெல்லக் காற்றில் கரைந்தாயே!

வாசத்தண்ணி தெளிக்கையில
வந்து நீயும் நனைக்கிறியே
துணிமணிய துவைக்கையிலே
என்ன நீயும் புளியுறயே
ஆஞ்சி வச்ச கீர போல
நினைப்புல தான் கரையுரியே
அம்மி வச்ச தேங்கா சில்லா
அடி மனச நசுக்குறியே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே
எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ

நடக்கையில தொடர்ந்து வர
வழி நடுவே மறஞ்சுடுவ
தலைமுடிய ஒதுக்கையில
வகிடுக்குள்ள ஒழிஞ்சுடுவ
கண்ணுக்குள்ள இருக்கும் உன்ன
கழுவிவிட மனமில்லையே
உள்ளுக்குள்ள அறுக்கும் உன்ன
ஒதர ஒரு வழி இல்லையே
அட நீயும் மறைந்தாயே!
மெல்லக் காற்றில் கரைந்தாயே!
எங்கிருந்து வந்தாயோ?!
எதுக்காக வந்தாயோ?!

உயிரோடு உறைந்தாயே.........

படம்: கயல்
இசையமைப்பாளர் : D.இமான்
எழுதியவர்: யுகபாரதி
பாடியது: ஸ்ரேயா கோஷல்
நடிகர்கள்; சந்திரன், ஆனந்தி

14 comments:

  1. மென்மையான பாடல்... இனிமை...

    ReplyDelete
    Replies
    1. என் ஃபேவரிட் பாட்டுண்ணே

      Delete
  2. பாடல் முதல் முறை கேட்கிறேன்.

    இந்த பாடலில் சில காட்சிகள் மேகாலயாவில் படம் பிடிக்கப்பட்டிருக்கலாம். மரத்தின் வேர்களை வைத்தே பாலம் அமைக்கப்படுவது மேகாலயாவின் சிரபுஞ்சி அருகே இருக்கும் ஒரு கிராமிய மக்களின் வழக்கம். அழகான இடங்கள். அந்த ஊரில் இப்படி நிறைய பாலங்கள் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. சொல்ல நினைத்து வந்தேன் வெங்கட்ஜி...நேரில் கண்டதில்லை ....படங்களில் பார்த்ததுதான்...வீடியோவும் பார்த்ததுண்டு..

      கீதா

      Delete
    2. அப்ப இது ஆரல்வாய்மொழி இல்லியா?! நாந்தான் ஏமாந்துட்டேன் போல!

      Delete
  3. நன்றாயிருக்கிறது பாடல். முதல்முறை கேட்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹிட் அடிச்ச பாட்டாச்சே! இதுவரை கேட்டதில்லையா?!

      Delete
  4. இனிமையான பாடல்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  5. இதுதான் முதல் முறை கேட்கிறேன் ராஜி பாடல் நன்றாக இருக்கு...இமான் சில நல்ல பாடல்கள் தந்துள்ளார்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இந்த படத்தில் இன்னும் சில பாட்டுகளும் நல்லா இருக்கும்.

      Delete
  6. ரசித்துள்ளேன். பகிர்வு அருமை.

    ReplyDelete
    Replies
    1. பாடலை என்னோடு சேர்ந்து ரசித்தமைக்கு நன்றிப்பா

      Delete