Sunday, February 02, 2020

வேறெதும் தேவையில்லை நீ மட்டும் போதும் - பாட்டு புத்தகம்

உனக்காக எதுவும் செய்வேன், எதுவும் விட்டுக்கொடுப்பேன்னு சொல்வானு/ளுங்க. ஆனா, அப்படி ஒன்னும் இருக்க தேவையில்ல. எதுக்காவும் விட்டுக்கொடுக்காம இருந்தாலே போதும்.  அதுமாதிரியான ஒரு உணர்வுதான் இந்த பாட்டு. இப்பத்திய பாட்டுங்க கேக்குற மாதிரி இல்லன்னாலும் இந்த பாட்டு கேக்குற மாதிரி இருக்கும். கேட்டதும் பிடிச்ச பாட்டு.. நீங்களும் கேட்டு பாருங்க..



வேறெதுவும் தேவை இல்லை
நீ மட்டும் போதும்!!
கண்ணில் வைத்து காத்திருப்பேன்..
என்னவானாலும்....
உன் எதிரில் நான் இருக்கும்
ஒவ்வொரு நாளும்..
உச்சி முதல் பாதம் வரை
வீசுது வாசம்...
தினமும் ஆயிரம் முறை
பார்த்து முடித்தாலும்
இன்னும் பார்த்திட சொல்லி
பாழும் மனம் ஏங்கும்..

தாரமே! தாரமே! வா!!
வாழ்வின் வாசமே வாசமே நீதானே!!?
தாரமே! தாரமே! வா!!
எந்தன் சுவாசமே சுவாசமே நீ
உயிரே வா!!
மேலும் கீழும் ஆடும் உந்தன்
மாய கண்ணாலே..
மாறுவேடம் போடுது என்
நாட்கள் தன்னாலே...
ஆயுள் ரேகை முழுவதுமாய்
தேயும் முன்னாலே..
ஆளும்வரை வாழ்ந்திடலாம்
காதலின் உள்ளே..

இந்த உலகம் தூளாய்
உடைந்து போனாலும்
அதன் ஒரு துகளில்
உன்னை கரை சேர்ப்பேன்
தாரமே! தாரமே! வா!!...

நீ நீங்கிடும் நேரம்
காற்றும் பெரும்பாரம்..
உன் கைத்தொடும் நேரம்
தீ மீதிலும் ஈரம்..
நீ நடக்கும் பொழுது
நிழல் தரையில் படாது
உன் நிழலை எனது உடல்
நழுவ விடாது..

பேரழகின் மேலே ஒரு
துரும்பும் தொடாது..
பிஞ்சு முகம் ஒரு நொடியும்
வாடக்கூடாது..
உன்னை பார்த்திருப்பேன்
விழிகள் மூடாது..
உன்னை தாண்டி எதுவும்
தெரியக்கூடாது..
தாரமே தாரமே வா


பாட்டு உங்களுக்கும் பிடிச்சிருக்குதானே?!
படம்: கடாரம் கொண்டான்
இசை:ஜிப்ரான்
நடிகர்கள்; அபி ஹாசன், அக்‌ஷராஹாசன்
பாடியவர்:சித் ஸ்ரீராம்


நன்றியுடன்,
ராஜி

12 comments:

  1. Replies
    1. என் இனமண்ணா நீங்க..

      Delete
  2. நல்ல பாடல். முதல் முறையாகக் கேட்டு ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இந்த காலத்திலேயும் வார்த்தைகள் புரியுற மாதிரி ஒரு பாட்டு. அதான் நமக்கு பிடிச்சு போச்சுதுப்போல!

      Delete
  3. முதல்முறையாகக் கேட்டு ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. டிவில மணிக்கு ஒருமுறை போடுறாங்க சகோ. அதுமில்லாம இளவட்ட பசங்க போன்லயும் ரிங்க்டோனா இருக்கு.

      Delete
    2. நான் எங்கே டீவி எல்லாம் பார்க்கிறேன்...!!  விடுமுறை நாட்களாயிருந்தால் அது மகன்கள் வசம்.  அவர்கள் சேனல் சேனலாய் மாற்றிக்கொண்டே இருப்பார்கள்!  மற்ற நாட்களில் அது மனைவி, மாமியார் வசம்!

      Delete
    3. மகிழ்ச்சி

      Delete
  4. சில நாட்கள் வாயைத் திறந்தாலே இந்தப்பாட்டு தான் வந்து கொண்டிருந்தது...!

    ReplyDelete
    Replies
    1. எப்பயுமே அண்ணன் தாரமே! தாரமே!ன்னு அண்ணியைதான் மூச்சுக்கு முன்னூறு தரம் கூப்புடுவாப்லன்னு ஊருக்கே தெரியுமே!

      Delete
    2. ஹா...ஹா...😄😄

      Delete
  5. வேறெதுவும் தேவை இல்லை
    நீ மட்டும் போதும்!!
    கண்ணில் வைத்து காத்திருப்பேன்..
    என்னவானாலும்......


    எனக்கும் ரொம்ப பிடிக்கும் ராஜி கா...

    ReplyDelete