சிலபல வருடங்களுக்கு முன் மதுரை, திருச்செந்தூர், குற்றாலம்ன்னு தென் தமிழகத்தில் ஒரு வாரம் குடும்பத்தோடு டூர் போனோம். ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளை தரிசனம் செய்து முடிச்சோம். அப்பதான் கோவிலில் அன்னதான திட்டம் அறிமுகப்பட்டிருந்தது. தரிசனம் முடிச்சு வரும் வெளியூர் பக்தர்களுக்கு டோக்கன் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. எங்க வீட்டில் யாரும் அன்னதானத்தில் சாப்பாடு வாங்கி சாப்பிடுறதை கௌரவக்குறைச்சலா நினைக்க மாட்டோம். அதனால் டோக்கன் வாங்கி சாப்பிட உக்காந்தோம்...
நல்ல தரமான அரிசியில் சுடச்சுட சாதம், சாம்பார், ரசம், மோர், கத்தரிக்காய் பொரியல்ன்னு சாப்பாடு சூப்பரா இருந்தது. பொதுவா கத்தரிக்காயில் கூட்டு, எண்ணெய் கத்தரிக்காய் செய்து பொரியலா செய்து சாப்பிட்டு பழக்கம். அந்த கோவிலில் கத்தரிக்காயை வேர்கடலை போட்டு புதுவிதமா பொரியல் செய்து வச்சிருந்தாங்க. வேர்கடலையின் மணம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பின் மொறுமொறுப்புன்னு பொரியல் எங்களுக்கு பிடிச்சு போச்சுது. செய்முறையை கேட்டுக்கிட்டு வந்து, அன்றிலிருந்து எங்க வீட்டில் அடிக்கடி செய்கிறோம். கத்தரிக்காயில் இப்படி பொரியல் செய்வது அந்த ஊரு வழக்கமான்னு தெரில...
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய்
வெங்காயம்
கடலைப்பருப்பு
உளுத்தம்பருப்பு
காய்ந்த மிளகாய்
வேர்கடலை
கடுகு
பூண்டு
உப்பு
எண்ணெய்
கத்தரிக்காயை நீளவாக்கில் மெல்லிசா கட் பண்ணி தண்ணி, உப்பு சேர்த்து வேகவிடனும். வறுத்து தோல் நீக்கிய வேர்கடலை, அதோடு எண்ணெயில் வறுத்த மிளகாயை சேர்த்து பொடியாக்கி, அதோடு தோலோடு பூண்டையும் நசுக்கி வச்சுக்கனும்.
கத்தரிக்காய் வெந்ததும் தண்ணியை வடிச்சுக்கனும்..
வாணலியை அடுப்பில் வச்சு எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிக்க விடனும், கடுகு பொரிஞ்சதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்க்கனும்..
பருப்புகள் சிவந்ததும் காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்க்கனும்..
கருவேப்பிலை சேர்க்கனும்..
வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லிசா வெட்டி சேர்த்து வதக்கனும்..
வெங்காயத்துக்கு தேவையான உப்பை சேர்த்துக்கனும்..
வெங்காயம் நல்லா வதங்கியதும் வேக வைத்திருக்கும் கத்தரிக்காயை சேர்த்துக்கனும்..
கத்தரிக்காய் வதங்கியதும் பொடிச்சு வச்சிருக்கும் வேர்கடலை+காய்ந்த மிளகாய்+பூண்டு பொடியை சேர்த்து கிளறனும்.
அப்ப போட்டோ எடுக்க முடிலன்னு இன்னிக்கு போட்டோ எடுத்தது. அதும் மொபைலில்.. சுட்டதான்னு யாரும் கேக்கப்படாது..
வேர்கடலை மணத்தோடு, வதங்கிய வெங்காயத்தின் ருசியோடும், க.ப, உ.பருப்பின் மொறுமொறுப்போடு அட்டகாசமா இருக்கும். என்ன ஒன்னு காரசாரமா சாப்பிடுறவங்களுக்கு இது சப்புன்னு இருக்குறதா தோணும்..
இந்த டிஷ்சுக்கு பேர் என்னன்னு சொல்லிட்டு போங்க சாமிகளா!
நன்றியுடன்,
ராஜி
க க போ...?
ReplyDeleteவேகமா படித்தால் நல்லா இல்லையே.. வேற ஒரு பேரா சொல்லுங்க.
Deleteஎன்னைய வச்சு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்களா?!
Deleteஅடே அடே சூப்பர்.
ReplyDeleteஇந்த டிஷுக்கு என்ன பெயர்ன்னு தெரியாது. ஆனால் இதை அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன் ரெண்டு கருவாடு துண்டை போட்டு இறக்குனா.. "கருவாட்டு கத்திரி" ன்னு செல்லமா அழைக்கலாம்.
கருவாடு வேகனுமே!
Deleteஇதுக்கு பேரு கத்திரிக்காய் கடாய்.
ReplyDeleteகடாய் கத்தரிக்காய்ன்னும் சொல்லலாமில்ல!
Deleteமீசைக்கார நண்பரின் கருத்தை வழி மொழிகின்றேன்
ReplyDeleteஆக, யாரும் பேர் என்னன்னு சொல்ல மாட்டீங்க. அப்படித்தானே?!
Deleteவடக்கே சில ஊர்களில் எல்லா சப்ஜிகளிலும் இப்படி பொடியாகவோ அல்லது முழு கடலையாகவோ சேர்ப்பதுண்டு. நன்றாகவே இருக்கும்.
ReplyDeleteபிடித்திருந்தால் சாப்பிட வேண்டியது தான் - பேர் வைத்தால் தான் சாப்பிட வேண்டுமா என்ன!
சாப்பிட பேர் தேவைப்படாது. ஆனா, மத்தவங்களுக்கு சொல்ல பேர் தேவைப்படும்ல!!
Deleteராஜி இப்படிச் செய்வதுண்டுவீட்டில். கத்தரி கடலை சேர்த்த பொரியல் அம்புட்டுத்தான் வீட்டில சொல்லறது. நான் கத்தரியை வேக வைத்து தண்ணீர் வடிப்பதில்லை. ஒன்று ஸ்டீம் செஞ்சுருவேன் அல்லது வதக்கி மூடி போட்டு குறைந்த தீயில் கொஞ்சம் தண்ணி தெளித்து வேக வைச்சு.
ReplyDeleteஇதுல ஆந்திரா சைடுல கடலியோடு கொஞ்சம் எள்ளும் வறுத்து பொடி செஞ்சு போடுவாங்க. அதுவும் நல்லாருக்கும்
கீதா
அடுத்த முறை செய்யும்போது எள்ளும் சேர்த்துக்குறேன்.. ஸ்டீம் செய்தால் உப்பு எப்படி இறங்கும்?!
Deleteபொரியல் என்போம்.உங்கள் முறையில் காரம்போட்டு செய்து பார்கிறேன்.
ReplyDeleteநான் கத்தரி மிளகாய்பொடி அரை ஸ்பூன் ,உப்பு சேர்த்து பிரட்டி எண்ணெயில் சற்று கூடுதலாக வதக்குவேன்.
வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கறுவா பட்டை போட்டு இறக்குவேன். அரை ஸ்பூன் சீனி சேர்த்து கலந்து விடுவேன். விரும்பினால் எலுமிச்சை சாறு சிறிதளவு விடலாம்.காரசாரமாக இருக்கும். தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
புதுவிதமா இருக்கு. நானும் முயற்சிக்கிறேன்
Delete