இப்ப கொத்தவரைங்காய் சீசன் ஆரம்பிச்சிட்டுது. கொத்தவரங்காயில் உசிலி, கூட்டு, வத்தல், புளிக்குழம்புன்னு செய்யலாம். எங்க ஊர் பக்கம் வேர்க்கடலை பருப்பு பொடி போட்டு செய்யும் பொரியல் சுவையாவும் வித்தியாசகாவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்..
கொத்தவரங்க்காய்
வெங்காயம்
தக்காளி
பூண்டு
கடுகு
கடலைபருப்பு
உளுத்தம்பருப்பு
எண்ணெய்
உப்பு
வேர்க்கடலை
காய்ந்த மிளகாய்
புளி(தேவைப்பட்டால்)
கொத்தவரங்காயை பொடிபொடியாய் நறுக்கி உப்பு போட்டு வேக வச்சு தண்ணிய வடிச்சுடனும். கொத்தவரங்காயை நறுக்க வெசனப்பட்டா, பிடிக்காத புருசன், இல்லன்னா நாத்தனார், மாமியார், மாமனார்கிட்ட கொடுத்து நறுக்க சொல்லுங்க.
வாணலியில் எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விட்டு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை போட்டு சிவக்கவிட்டு, வெங்காயம், நசுக்கிய பூண்டை போட்டு வதக்குங்க.
பொடியா நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்குங்க.
உப்பு சேர்த்துக்கிட்டா சீக்கிரம் வெங்காயம் தக்காளி வெந்துடும்...
மிளகாய் தூள், மஞ்சத்தூள் சேர்த்து வதக்குங்க.
கொஞ்சமா தண்ணி சேர்த்து மிளகாய் தூள் வாசனை போகும்வரை கொதிக்க விடனும். புளி தண்ணி தேவைப்பட்டா இந்த நேரத்தில் சேர்த்துக்கலாம்.
தண்ணி சுண்டி வரும் நேரத்தில் வடிகட்டி வச்சிருக்கும் கொத்தவரங்காயை கொட்டி வதக்கவும்.
தண்ணி நல்லா சுண்டியதும் பொடி செஞ்சிருக்கும் வேர்கடலை பொடியை சேர்த்து, சுருள கிளறிக்கனும்.
கொத்தவரங்காய் பொரியல் ரெடி. வேர்கடலையோடு எண்ணெயில் வறுத்தெடுத்த காய்ந்த மிளகாயை சேர்த்து பொடி செஞ்சும் போடலாம். முன்னலாம் அம்மில வச்சு பொடிக்கும்போது கடைசியா பூண்டு போட்டு நசுக்கி அம்மா சேர்ப்பாங்க. வாசமாவும் இருக்கும்.
கொத்தவரங்காய்க்கு சீனி அவரைக்காய்ன்னும் பேரு. இதன் காய்கள் செடியில் கொத்து கொத்தாகக் காய்க்குறதால இதுக்கு கொத்தவரங்காய்ன்னு பேர் வந்தாம். இது தீவனப்பயிராவும் பயன்படுது. இதில் நார்சத்து, புரதம், போலிக் ஆசிட்ன்னு இருக்கு. . இதை ஒரே நேரத்தில் அதிகமா சாப்பிட்டா ஜீரணக்கோளாறு ஏற்படும்.
நன்றியுடன்,
ராஜி
அருமை எனக்கு கொத்தவரங்காய் வற்றல் மிகவும் பிடிக்கும்.
ReplyDeleteஎனக்கும்...
Deleteஎனக்கும்..
Deleteசேம் பிஞ்ச்ச்
Deleteசிறந்த செய்முறை வழிகாட்டல்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteநல்லா இருக்கு இந்த கொத்தவரங்காய் பொரியல்..ராஜிக்கா
ReplyDeleteசெம டேஸ்டா இருக்கும்ப்பா. மிளகாய் காரத்தோடு பூண்டு இடிச்சு போட்டு நல்ல வாசமா இருக்கும்.
Deleteவெங்காயம், தக்காளி, பூண்டு சேர்க்காமல்தான் இதுவரை செய்திருக்கிறோம். இப்படியும் அடுத்த முறை முயற்சித்து விடுகிறோம்.
ReplyDeleteவெங்காயம் சேர்த்து செஞ்சுருக்கேன் பட் தக்காளி சேர்த்துச் செஞ்சதில்லை. செஞ்சிட்டா போச்சு....ரொம்பப் பிடிக்கும்
ReplyDeleteகீதா
This comment has been removed by the author.
ReplyDelete