Showing posts with label புத்தாண்டு. Show all posts
Showing posts with label புத்தாண்டு. Show all posts

Wednesday, January 02, 2019

ஆங்கில புத்தாண்டின் வளர்ச்சி - மௌன சாட்சிகள்

ஆங்கிலேயர்கிட்ட அடிமைப்பட்டு கிடப்பதை கௌரவக்குறைச்சலா நினைச்சு அவனை விரட்டியடிச்சுட்டு, அவன் விட்டுப்போன கொண்டாட்டங்களை மட்டும் விமர்சையா கொண்டாடிக்கிட்டிருக்கோம்ஆங்கில புத்தாண்டு இப்ப எல்லா இடத்திலும் களைக்கட்ட ஆரம்பிச்சாச்சு! வாணிப நிறுவனங்கள்லாம் போட்டி போட்டுக்கிட்டு தங்களுக்குள் ஆஃபர்களை போட்டு கல்லா கட்டுறாங்க.

அதுப்போல பெருநகரங்கள்ல புத்தாண்டுக் கொண்டாட்டம் விதம்விதமா களைக்கட்டுது. நேற்றைய தினம் மட்டும் 327 சாலை விபத்துகள் நடந்திருக்கு. இது சென்னையில் மட்டுமே! கிட்டத்தட்ட  2கோடி ரூபாய்க்குமேல டாஸ்மாக் வருமானம் வந்திருக்கு. இது வேலூரில் மட்டுமே!  சென்னை, மும்பை மாதிரியான பெருநகரங்களில் நள்ளிரவு கொண்டாட்டம்ன்ற பேரில் நடந்தேறிய வேண்டாத வேலைகள்லாம் இப்ப சின்னச்சின்ன நகரங்களில் தலைக்காட்ட ஆரம்பிச்சிருக்கு. வீதிக்கு வீதி நள்ளிரவில் கேக் வெட்டுறதும், பைக் ரேஸ்ன்னு வீணாய் திரியுதுங்க. எதுக்கு இந்த தேவையில்லாத ஆடம்பரம்!? பொது இடத்தில் அதிகாலைவரை கும்மாளம்!? இதெல்லாம் கொண்டாடுறோமே ஆங்கில புத்தாண்டுக் கொண்டாட்டம் எப்படி வந்ததுன்னு தெரிஞ்சுக்கலாம்ன்னு மெனக்கெட்டதுல வந்த பதிவுதான் இது.

மேல இருக்கும் படத்தில் இருப்பது எகிப்து காலெண்டர். உலகின் பல்வேறு வகையான நாடுகளுக்கு, பல்வேறு வகையான மொழிகளுக்கு, பல்வேறு வகையான இனங்களுக்குன்னு தனித்தனியா காலண்டர்கள் இருக்கு. இன்றைய வருடம் 2019ஐ ஒப்பிடும்போது ஆசிரியன் காலண்டர் 6762 ஆண்டுகள் கொண்டது.  புத்தமத காலண்டர் 2557 வருடங்கள் கொண்டது சைனீஸ் காலண்டர் டிராகன் மற்றும் பாம்பு காலண்டர்கள் 4609 வருடங்கள் கொண்டது. ஹீப்ரு காலண்டர் 5774 ஆண்டுகள் கொண்டது ஹோலோசியன் காலண்டர் 12013 வருடங்கள் கொண்டது. கொரியம் 4346 வருடங்கள் கொண்டது. எகிப்த் காலண்டர் 4236 B.C.,ஆண்டுகள் கொண்டது.

மேல முதலில் இருப்பது சைனீஸ் காலெண்டர். அடுத்து பல்கேரியன். அதனையடுத்து பாபிலோனியன் காலண்டர்கள் குறித்த படங்கள் இவை. . இந்த புதுவருட கொண்டாட்டங்கள்லாம் இயேசு கிறிஸ்து பிறப்பதற்குமுன் பழைய காலங்களில் எல்லாம் வசந்தகால தொடக்கமான மார்ச் மாதத்தில்தான் கொண்டப்பட்டு வந்தன.  இயேசு கிறிஸ்து பிறப்பதற்குமுன் இருந்த சுமார் 2000 முற்பட்ட  மெசப்படோமியா நாகரிகத்தில் மார்ச்மாத மத்தியில்தான் கொண்டாடப்பட்டதாம். அப்பதான் வசந்தகாலம் தொடங்கும் சமயம். முற்கால  ரோமானியர்கள்கூட மார்ச் 1ம் தேதியைத்தான் புத்தாண்டின் முதல்நாளாக கொண்டாடினார்கள். அதுவும் அந்த காலண்டரில் வெறும் பத்து மாதங்கள் கொண்டவையாகத்தான் இருந்ததாம்.

அவர்கள் மாதங்களை அந்தந்த எண்களுடனே தொடர்புப்படுத்தி இருப்பதாகவே காலண்டர்களை வடிவமைத்தனர்.   லத்தின்   மொழியில் 
Septemன்னா seven என்பதையும், Oct ன்னா eight என்பதையும், Novem என்றால்  nine என்பதையும்., decem என்றால் ten  என்பதையும்   குறிப்பதாகவும் வடிவமைத்தனர்.




முதன்முதலில் கி.மு 153 ம் வருடத்தில்தான் ஜனவரி1 வருடத்தின் முதல்நாளாக கொண்டாடப்பட்டதாம்.  கி.மு 700 முன்புவரை ஜனவரி அவங்க காலண்டரில் இல்லையாம். அதன்பிறகு ரோமனின் 2வது அரசன் நுமாபண்டிளியஸ் ஜனவரியையும், பிப்ரவரியையும் சேர்த்தாராம். அதன் பிறகுகூட சிலசமயங்களில் மார்ச் 1ம் தேதிகளில் புதுவருட கொண்டாட்டாங்கள் கொண்டாடபட்டதாம். அதன்பிறகு  கி.மு 46ல் இருந்த ரோமானிய அரசன் ஜூலியஸ் சீசர் சூரியமண்டலத்தை அடிப்படையாகக் ண்ட ஒரு புதிய ஜூலியன் காலண்டரை உருவாகினாராம். ஜூலியன்  நாட்காட்டி என்பது கிமு 46 இல் ஜூலியஸ் சீசரினால் அறிமுகப்படுத்தப்பட்டு கிமு 45இல் பயன்பாட்டுக்கு வந்த நாட்காட்டியாகும். இது ரோமில் பயன்பாட்டில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக வானியல் அறிஞர் அலெக்சாந்திரியாவின் சொசிசெனசு என்பவரின் கருத்துக்கமைய சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்கேத்தவாறு அமைக்கப்பட்டது. அது 12 மாதங்களையும், 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட லீஃப் ஆண்டாக வடிவமைக்கப்பட்டது. 

இந்த ஜூலியன் சராசரி ஆண்டு 365.25 நாட்களாகும். வெப்ப வலய சூரிய ஆண்டு உண்மையில் 365.25 நாட்களை விட 11 நிமிடங்கள் குறைவானதாகும். ஜூலியன் நாட்காட்டியில் இந்த  மேலதிகமான 11 நிமிடங்கள் ஒவ்வொரு நான்கு நூற்றாண்டுகளிலும் 3 நாட்களை அதிகமாகத் தருகிறது. இந்த 3 நாள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, கிபி 16ம் நூற்றாண்டளவில், சில நாட்காட்டி நாட்கள் அகற்றப்பட்டு கிரெகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், கிரெகோரியன் நாட்காட்டியில் நான்கு நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மூன்று நெட்டாண்டு நாட்கள் அகற்றப்பட்டன. 20ம் நூற்றாண்டு வரை யூலியன் நாட்காட்டி சில நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. ஆனாலும் தற்போது அனேகமாக அனைத்து நாடுகளிலும் கிரெகோரியின் நாட்காட்டியே பயன்படுத்தப்பட்டு வருது. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை, கீழைத்தேய கத்தோலிக்கத் திருச்சபைகள் மற்றும் சீர்திருத்தத் திருச்சபைகள் கிரெகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்துகின்றன. ஆனாலும், கிழக்கு மரபுவழி திருச்சபை உயிர்த்த ஞாயிறு போன்ற புனித நாட்களை கணக்கிடுவதற்கு  ஜூலியன் நாட்காட்டியையேப் பயன்படுத்துகின்றது. வட ஆப்பிரிக்காவின் பெர்பெர் மக்கள் ஜூலியன் நாட்காட்டியையே தற்போதும் பயன்படுத்துகின்றனராம் .
அதன்பிறகு வந்த கிரிகோரியன் காலெண்டர் இயேசுவின் விருத்த சேதன விழா நாளும் இந்நாளிலேயே கிறிஸ்துவ  தேவாலயங்களை  சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுது. இந்நாட்களில் பல உலக நாடுகளும் கிரிகோரிய நாட்காட்டியையே தங்களது பொதுவான நாட்காட்டியாகப் பயன்படுத்துகின்றனர். மேலும், இந்தப் புத்தாண்டு நாளே உலகின் அதிகமாகக் கொண்டாடப்படும் நாளாகும். 

எங்கப்பா காலத்துலலாம் காலையில் எழுந்து குளிச்சு கோவிலுக்கு போய் அறுசுவை உணவு சாப்பிடுவாங்க. அன்னிக்கு கண்டிப்பா இன்ப்போடு துவர்ப்பு சுவை உணவும், கசப்பு சுவை சேர்ந்த உணவும் சேர்த்துக்குவாங்க. சொந்தக்காரங்களோடு சந்தோசமா இருப்பாங்களாம். இதுலாம் தமிழ்  புத்தாண்டுக்கு மட்டுமே. ஆங்கில புத்தாண்டுலாம் மற்றொரு நாளே! .


நான் சின்னப் புள்ளையா இருந்தப்போ, ஒரு வாரத்துக்கு முந்தியே க்ரீட்டிங்க்ஸ் வாங்கி ஃப்ரெண்ட்ஸ், சொந்தக்காரங்களுக்கு அனுப்பிட்டு  பார்த்து, நைட் 12 மணி வரை முழிச்சிருந்து, தெருவிலிருக்குறவங்களுக்கும், தெரு அக்காக்களை சைட்டடிக்க வரும் அண்ணன்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி, புத்தாண்டு அன்னிக்கு கோவிலுக்கு போய் இறைவனை தரிசித்து வடை, பாயாசத்தோடு விருந்து சாப்பிட்டு, ஹாயா தூங்கி எழுந்து, மாலை நேரத்துல பொதிகை சேனல்ல போடும் சிறப்பு நிகழ்ச்சிகளை  கொண்டாடினோம்.

சில வருடத்துக்கு முந்திவரைகூட நைட் 12 வரை டிவியில் ஒரு நோட்டமும், கம்ப்யூட்டர், லேப்டாப், மெயிலும், க்ரீட்டிங்க்ஸ் அனுப்பிக்கிட்டும் வாழ்த்துச் சொல்லி, புத்தாண்டுக் கொண்டாடி இனிப்போடு, பிரியாணி, கொழம்புன்னு வெளுத்துக் கட்டி, மொபைல்ல எல்லோருக்கும் வாழ்த்துச் சொல்லி, டிவில படம் பார்த்து வந்த கூட்டம், இப்ப மெல்ல மெல்ல இரவு கொண்டாட்டம், அவுட்டிங்க், பிக்னிக்ன்னு போக ஆரம்பிச்சாச்சு. புதுவருச கொண்டாட்ட சாவுகள், விபத்துகள், பாலியல் அத்துமீறல்கள்ன்னு செய்திதாள்களில் படிக்கும்போது மனசு கனக்குது. இதுவா வளர்ச்சி?!


மீள்பதிவு
நன்றியுடன்.,
ராஜி

Tuesday, January 01, 2019

கனவு நனவாகும்படி பிறக்கட்டும் புத்தாண்டு

இந்த புத்தாண்டுக்கு பிறகு என்ன பண்ணலாம்?! என்னலாம் பண்ணக்கூடாதுன்னு இந்நேரத்துக்கு  எல்லோரும் ஆயிரம் லிஸ்ட் போட்டு வச்சிருப்பீங்க. எப்படியும் அதுலாம் நாலு நாளைக்கு மெனக்கெட்டு கடைப்பிடிச்சு, அப்புறம் காத்துல விட்டுடப்போறீங்க. அதனால, அதிகாலையில் வாக்கிங்க், பகல்ல தூங்கக்கூடாது. உடம்பைக்குறைக்கனும்ன்னு அப்பிடி இப்படின்னு எதுக்கு வீணா புத்தாண்டு சபதம் எடுக்கனும்?! அப்புறமா அதை காப்பாத்த முடியாம தூக்கிப்போடனும்?! அதனால, என் வசதிக்காக இந்த வருசம் எந்த புத்தாண்டு சபதமும் எடுக்க போறதில்லை:-) 

”ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்”ன்னு கருப்பு வெள்ளை காலத்துல இருந்து சொல்லியே திருந்தாத நாம, “என்னைத் தவிர வேறென்ன கிழித்தாய்”ன்னு காலண்டர் கேட்குற மாதிரி வாட்ஸ் அப் மெசேஜ் கேட்டா திருந்திட போறோம்?! ம்ஹூம் இப்படிலாம் சொல்லப்படாது எதாவது சபதம் எடுத்தே தீரனும்ன்னு சொல்லுறவங்களுக்காக...,

1. மாமாவை தூக்கிப்போடுற மாதிரி ரிமோட்டை தூக்கி போடக்கூடாது?!(மாசத்துக்கு ரெண்டு ரிமோட்டு வாங்குறது கொஞ்சம் ஓவர்தான்)

2.  பிளாக்குல ரொம்ப நீளளளளளளளமாய் எழுதாம இருக்கனும்(ஸ்ஸ்ஸ் அப்பாடான்னு பெருமூச்சு விடுறது யாரு?!)

3. டிவி பார்க்க பிடிக்காது, டிவி பார்க்க பிடிக்காதுன்னு சொல்லி சொல்லியே பதிவு தேத்த டிவி பார்க்க கூடாது.(அப்படியே பதிவுக்காக காலையில் எல்லா சேனல்லயும் ஆன்மீகம் நிகழ்ச்சி பார்த்து சாவடிக்காதம்மான்னு பிள்ளைங்க சோல்லுறது கேக்கலைதானே?!)

5.  மாமாவை, பசங்களை படுத்தாம ப்ளாக் பக்கம் ஒதுங்கிடனும்.(இப்பயே அங்கதானே இருக்க! சோறுகூட பொங்காம...)

6. அடுத்த புத்தாண்டுக்குள் சபதம் எடுத்துக்குற மாதிரி எதாவது கெட்ட பழக்கத்தை உண்டாக்கிக்கனும். (இப்படிலாம் சொன்னா மட்டும் நம்பளை நல்லவள்ன்னு நம்பிடுமா இந்த ஊரு?!)

7. அப்புறம் 2017க்கு இப்படிலாம் சபதம் போடக்கூடாதுன்னு புத்தாண்டுல சபதம் ஏத்துக்குறேன்(அய்யோடா! அடுத்த வருசம் புதுசா பதிவு போடனும்ல்ல)

போதும்.. போதும்.. மொக்கை போட்டது... ராஜி பிளாக்குக்கு வந்தால் எப்படியும் எதாவது தகவல் சொல்லும்ன்னு நம்பி வரும் நம் மக்களுக்காக சில தகவல்கள்:

இப்போ நாம யூஸ் பண்ணுற காலண்டர் முறை ஏசு பிறப்பதற்கு முன்னாடி இருந்தே இருக்கு. கிரேக்க, ரோம காலண்டர் முறையே நாம இப்போ யூஸ் பண்ணுற காலண்டர் முறைன்னு என் ஆராய்ச்சில கண்டுப்பிடிச்சிருக்கேன். ப்ளீஸ் நம்புங்கப்பா! நம்ப மாட்டீங்களே!! சரி, சரி, படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்.
ஜனவரி மாதம், “ஜானஸ்”ன்ற ரோமக் கடவுள் பெயரை கொண்டது”.

பிப்ரவரி மாதம் ”ரோமாரியர்களின் திருவிழாவான “பிப்ரேரியஸ்”ன்ற வார்த்தைல இருந்து வந்தது”.

மார்ச் மாதம் , ரோமக்கடவுளான ”மார்ஸ்” பெயரில் அழைக்கப்படுது.

ஏப்ரல் மாதம்,  ”ஏப்ரலிஸ்” என்ற லத்தீன் மொழில இருந்து வந்தது.  “திறப்பது” என்பது இதன் அர்த்தம். முன்னலாம் ஏப்ரல் மாசம்தான் வருட தொடக்கமா இருந்துச்சாம். 15 நூற்றாண்டுல வாழ்ந்த போப்பாண்டவர் ஒருத்தர்தான் ”ஜனவரி”யை  புத்தாண்டு தொடக்கமா மாத்தினதா சொல்றாங்க. இதை ஐரோப்பியர்கள் மட்டுமே ஏத்துக்கிட்டாங்க. அவங்களை பகடி செய்யவே ஏப்ரல் ஒன்றை முட்டாள்கள் தினமா கொண்டாட ஆரம்பிச்சு இருக்காங்க.

மே மாதம்,  ”மேயஸ்”ன்ற பெண் கடவுளின் பெயரால் அழைக்கப்படுது.

ஜூன் மாதம், ரோம கடவுளான ”ஜூனோ”வின் பெயரால் அழைக்கப்படுது.

ஜூலை மாதம், மன்னர் ”ஜூலியஸ் சீசர்” பெயரால் அழைக்கப்படுது.

ஆகஸ்ட் மாதம், மன்னர் “அகஸ்டிஸ் சீசர்” பெயரால் அழைக்கப்படுது.

மீதமுள்ள செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும் 7,8 ,9,10 என்ற லத்தீன் எண்களின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகள்.  அதுமட்டுமில்லாம, அப்போலாம்  மாதங்களின் நாட்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை 30 நாள்களும் 31 நாள்களுமாய் மாறி மாறி வந்தன.
அதாவது, ஜனவரி 31 நாள்கள், பிப்ரவரி 30 நாள்கள், மார்ச் 31 . . .
இதை, ”ஜூலியஸ் சீசர்” ஏத்துக்கல. பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளை பிடுங்கி தன் பெயரில் உள்ள மாதத்திற்கு, அதாவது ஜூலை மாதத்துக்குச் சேர்த்தார். அதனால்  அதுவரை 30 நாளாக இருந்த ஜூலை மாதம் 31 நாளாக மாறிச்சு.  இதனால, காலண்டர் மொத்தமும் மாற வேண்டியதாகிடுச்சு.
இப்படியே ஆகஸ்ட் 30 நாளுன்னு போய்க்கிட்டிருந்துச்சு.  ”அகஸ்டிஸ் சீசரி”ன் ஆதரவாளர்கள் ஆகஸ்ட் மாதமும் 31 நாளாக இருக்கனும்ன்னு ஆசைப்பட்டு,  பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாள் பிடுங்கி ஆகஸ்டில் சேர்த்தாங்க.
ஆக இத்தனைக் குழப்படிகளுக்கு பின்னாடிதான் நாம இப்போ யூஸ் பண்ணுற காலண்டர் உருவாகிச்சு. இந்த காலண்டருக்கு பேரு, ‘கிரீகோரியன்’ (Gregorian) காலண்டர் ன்னு படிச்சவங்க சொல்றாங்க!
இனி, கவிதை பிரியர்களுக்காக...,


பனிரெண்டு மணிக்கு பட்டென்று 
வெடிக்கிறது வானவேடிக்கை..,
புத்தாண்டு ஆரம்பமாம்!!!

காது கிழிக்கும் பேரிரைச்சல்,
மங்கிய விளக்கொளி.,
நட்சத்திர ஓட்டலில் நடனம்..,
ஆடவர்/பெண்டிர் பேதம் இல்லாமல்..,
சமஉரிமை இங்கே சமனாக்கப்படுகிறதாம்!!

குடும்பத்தோடு கொத்தளத்தில் கொண்டாட்ட குதூகலம்..,
தமிழ் கலாச்சாரம் இங்கே தனித்துவம் பெறுகிறது!!
மது வாங்கி,மதி மயங்கி மகான்மியம் தேடும் நவயுக நாகரீகம்
மதுவிலக்கு இங்கே மௌனம் சாதிக்கிறது??!!

கண்டிப்பாய் இவையெல்லாம்  இல்லாமல் 
வரமாட்டேன் என்கிறது...,
சண்டித்தனமாய் இவர்களுக்கு மட்டும்..,
இன்னுமொரு 365
கையில் பீர் பொங்கினால்தான் பொங்குமாம்??!!
அடங்காத காளையருக்கு..,
இன்பம் தரும் இன்னுமொரு 365.

ஆடைக் குறைப்பினில்தான்
 நிறையுமாம் அங்கயர்க்கன்னிகளுக்கு...,
அம்சமான இன்னுமொரு 365.

வாழ்த்துஅட்டை குவித்துதான் ஆரம்பமாகுமாம்
 அன்பின் தூதுவர்களுக்கு!!
அடுத்த ஒரு சில 365.

நள்ளிரவு சாகசத்திற்குப் பின்தான் நகருகிறது!!
 நகரத்துஆசாமிகளுக்கு..,
நச்சென்ற புது 365.

இதோடு நின்றால் பாரம்பரியத்திற்கே இழுக்கென்று
தொலைக்காட்சியில் தொல்லையாய் காட்சிகளைக்
கண்டு தம் பாவம் தொலைக்கும் பரிதாப மக்கள்!!


போர் மேகங்கள்,பொருளாதாரப் புயல்ககள்,
அரசியல் அடிதடிகள்,முதலாளித்துவ முகமூடிகள்,
கடும் விலையேற்றம்,கிளர்ந்தெழும் தொழிலாளர் போராட்டங்கள்,
பணவீக்கம்,அத்தியாவசிய பொருட்கள் முடக்கம்..,



இவை எல்லாம் எப்போதுமே இங்கே உண்டு

பழைய வருடத்தில் பழையனவாய்.
புதிய வருடத்தில் மீண்டும் பழையனவாய்.

எப்பொழுதும்போல் ஆண்டு வரும்,
ஆண்டு போகும் இது இயற்கை.
மாண்டு போகும் மனிதனே 
உனக்குத் தெரிய வேண்டாமா??!!
ஆண்டு ஓடினால்..,
 வயது மூப்புதான் வருமென்று...,

ஒரு நொடி இறந்து..,
 மறுநொடி பிறக்கும்.., 
 ஒரு பிறப்பு..
அந்த பிறப்பிற்கு..,
 பித்து பிடித்து அலையும் நீ..,

அந்த ??!! இறப்பிற்கு துக்கம் 
அனுஷ்டிக்க வேண்டாமா???

ஓர் இரவுக்குள், புது அவதாரம் எடுத்து 
புதிய விதி செய்திடுவாயோ?
பார் எங்கும் புதிய சிந்தனை கொடுத்து..,
 புரட்சி ஒன்றைத் தந்திடுவாயோ ??!!

உன்
புத்தாண்டு கேளிக்கை கொடுக்குமா??!!
 இனியும் ஒரு புதிய விதி???
புரட்சி தடைபடுமா??!  இல்லை..,
 புதிய சிந்தனை ஏற்படுமா???

பின்
ஏனிந்த தூக்கம்கெடுத்து.., 
 துக்கம் கொடுக்கும் ஒழுக்கக் கேடு???

காலண்டரை தவிர, வேற எதும் மாறிடப்போறதில்லை. அதே உருவம், அதே குணநலன், அதே வேலை, அதே அன்பு, அதே அவமானம்....ன்ன்னு எல்லாமே அதேதான் இருக்கப்போகுது. இதுல, காசை கொட்டி கொண்டாட்டம் ஏன்?!  ஆனாலும், எதிர்பார்ப்புங்குறது மனிதர்களின் குணங்களில் ஒன்று. இதுவரைக்கு பட்டதுலாம் போதும். இனியாவது நம்ம நிலைமை மாறிடுமான்னு கஷ்டப்படுறவங்களும், இதுவரை வாழ்ந்தமாதிரியே வரும்  புத்தாண்டிலயும் வாழ்ந்திடனும்ன்னு மகிழ்ச்சியா இருக்கவுங்களும் வேண்டிக்குறாங்க. அதேமாதிரியே எல்லாருடைய கனவுகளும், விருப்பங்களும் நிறைவேறி எல்லாரும் மகிழ்ச்சியா இருக்கனும்ன்னு கடவுளிடம் வேண்டிக்குறேன்.
புதிய வருடம்..
புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளுடன்.. 
புதிய முயற்சிகள்
புதிய திருப்பங்களுக்காக,
விருப்பத்துடன்
புதுமலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும்,
புத்தம் புதிதாக உதிக்கட்டும்
அனைவரும்
கனவுகளும், நம்பிக்கையும் நிறைவேறட்டும்!!


அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளுடனும், அப்படியே எனக்கும் நல்லபடியா புத்தாண்டு அமையுமென்ற நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புகளுடனும்..
உங்க
ராஜி

Wednesday, January 01, 2014

ஆங்கில வருட பிறப்பு - மௌனச்சாட்சிகள்

ஆங்கில புத்தாண்டு இப்பவே எல்லா இடமும் களைகட்ட ஆரம்பிச்சாச்சு! வாணிப நிறுவனங்கள்லாம் போட்டி போட்டுக்கிட்டு தங்களுக்குள் ஆஃபர்களை போட்டு கல்லா கட்டுறாங்க.

அதுப்போல பெரு நகரங்கள்ல புத்தாண்டுக் கொண்டாட்டம் களைக் கட்ட ஆரம்பிச்சுடுச்சு. புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கும் அதனோடு மற்றைய விருந்திற்கும் சென்னையில் கூட நகரமெங்கும் போஸ்டர்களை ஒட்டி விளம்பரபடுத்துறாங்களாம்.  அதை கேள்விப்பட்டபோது மனசு கொஞ்சம் வருத்தமாச்சு.

எதற்கு தேவையில்லாத ஆடம்பரம்!? பீச்சில் ராத்திரிவரை கும்மாளம்!? இதெல்லாம் கொண்டாடுறோமே ஆங்கில புத்தாண்டுக் கொண்டாட்டம் எப்படி வந்ததுன்னு தெரிஞ்சுக்கலாம்ன்னு மெனக்கெட்டதுல வந்த பதிவுதான் இது.

மேல இக்கும் படத்தில் இருப்பது எகிப்து காலெண்டர். உலகின் பல்வேறு வகையான நாடுகளுக்கு, பல்வேறு வகையான மொழிகளுக்கு, பல்வேறு வகையான இனங்களுக்குன்னு தனித்தனியா காலண்டர்கள் இருக்கு. இன்றைய வருடம் 2013 ஐ ஒப்பிடும் போது ஆசிரியன் காலண்டர் 6762 ஆண்டுகள் கொண்டது.  புத்தமத காலண்டர் 2557 வருடங்கள் கொண்டது சைனீஸ் காலண்டர் டிராகன் மற்றும் பாம்பு காலண்டர்கள் 4609 வருடங்கள் கொண்டது. ஹீப்ரு காலண்டர் 5774 ஆண்டுகள் கொண்டது ஹோலோசியன் காலண்டர் 12013 வருடங்கள் கொண்டது. கொரியம் 4346 வருடங்கள் கொண்டது. எகிப்த் காலண்டர் 4236 B.C.,ஆண்டுகள் கொண்டது.

மேல முதலில் இருப்பது சைனீஸ் காலெண்டர். அடுத்து பல்கேரியன். அதனையடுத்து பாபிலோனியன் காலண்டர்கள்ம் குறித்த படங்கள் இவை  . இந்த புதுவருட கொண்டாட்டங்கள்லாம் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் பழைய காலங்களில் எல்லாம் வசந்த கால தொடக்கமான மார்ச் மாதத்தில் தான் கொண்டப்பட்டு வந்தன. 

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் இருந்த சுமார் 2000 முற்பட்ட  மெசப்படோமியா நாகரிகத்தில் மார்ச் மாத மத்தியில் தான் கொண்டாட பட்டதாம். அப்பதான் வசந்தகாலம் தொடங்கும் சமயம். முற்கால  ரோமானியர்கள் கூட மார்ச் 1 ம் தேதியைத்தான் புத்தாண்டின் முதல் நாளாக கொண்டாடினார்கள். அதுவும் அந்த காலண்டரில் வெறும் பத்து மாதங்கள் கொண்டவையாகத்தான் இருந்ததாம்.

அவர்கள் மாதங்களை அந்தந்த எண்களுடனே தொடர்புப்படுத்தி இருப்பதாகவே காலண்டர்களை வடிவமைத்தனர்.   லத்தின்   மொழியில் 
Septemன்னா seven என்பதையும், Oct ன்னா eight என்பதையும், Novem என்றால்  nine என்பதையும்., decem என்றால் ten  என்பதையும்   குறிப்பதாகவும் வடிவமைத்தனர்.




முதன்முதலில் கி.மு 153 ம் வருடத்தில் தான் ஜனவரி1 வருடத்தின் முதல்நாளாக கொண்டாடப்பட்டதாம்.  கி.மு 700 முன்பு வரை ஜனவரி அவங்க காலண்டரில் இல்லையாம். அதன்பிறகு ரோமனின் 2 வது அரசன் நுமாபண்டிளியஸ் ஜனவரியையும், பிப்ரவரியையும் சேர்த்தாராம். அதன் பிறகுக் கூட சில சமயங்களில் மார்ச் 1 ம் தேதிகளில் புதுவருட கொண்டாட்டாங்கள் கொண்டாடபட்டதாம்.

அதன் பிறகு  கி.மு 46 ல் இருந்த ரோமானிய அரசன் ஜூலியஸ் சீசர் சூரியமண்டலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய ஜூலியன் காலண்டரை உருவாகினாராம். ஜூலியன்  நாட்காட்டி என்பது கிமு 46 இல் ஜூலியஸ் சீசரினால் அறிமுகப்படுத்தப்பட்டு கிமு 45 இல் பயன்பாட்டுக்கு வந்த நாட்காட்டியாகும். இது ரோமில் பயன்பாட்டில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக வானியல் அறிஞர் அலெக்சாந்திரியாவின் சொசிசெனசு என்பவரின் கருத்துக்கமைய சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்க்கேத்தவாறு அமைக்கப்பட்டது. அது 12 மாதங்களையும், 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட லீஃப் ஆண்டாக வடிவமைக்கப்பட்டது. 

இந்த ஜூலியன் சராசரி ஆண்டு 365.25 நாட்களாகும். வெப்ப வலய சூரிய ஆண்டு உண்மையில் 365.25 நாட்களை விட 11 நிமிடங்கள் குறைவானதாகும். ஜூலியன் நாட்காட்டியில் இந்த  மேலதிகமான 11 நிமிடங்கள் ஒவ்வொரு நான்கு நூற்றாண்டுகளிலும் 3 நாட்களை அதிகமாகத் தருகிறது. இந்த 3 நாள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, கிபி 16ம் நூற்றாண்டளவில், சில நாட்காட்டி நாட்கள் அகற்றப்பட்டு கிரெகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், கிரெகோரியன் நாட்காட்டியில் நான்கு நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மூன்று நெட்டாண்டு நாட்கள் அகற்றப்பட்டன. 20ம் நூற்றாண்டு வரை யூலியன் நாட்காட்டி சில நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. ஆனாலும் தற்போது அனேகமாக அனைத்து நாடுகளிலும் கிரெகோரியின் நாட்காட்டியே பயன்படுத்தப்பட்டு வருது. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை, கீழைத்தேய கத்தோலிக்கத் திருச்சபைகள் மற்றும் சீர்திருத்தத் திருச்சபைகள் கிரெகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்துகின்றன. ஆனாலும், கிழக்கு மரபுவழி திருச்சபை உயிர்த்த ஞாயிறு போன்ற புனித நாட்களைகணக்கிடுவதற்கு  ஜூலியன் நாட்காட்டியையேப் பயன்படுத்துது பயன்படுத்துகின்றது.வட ஆப்பிரிக்காவின் பெர்பெர் மக்கள் ஜூலியன் நாட்காட்டியையே தற்போதும் பயன்படுத்துகின்றனராம் .
அதன்பிறகு வந்த கிரிகோரியன் காலெண்டர் இயேசுவின் விருத்த சேதன விழா நாளும் இந்நாளிலேயே கிறிஸ்துவ  தேவாலயங்களை  சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுது. இந்நாட்களில் பல உலக நாடுகளும் கிரிகோரிய நாட்காட்டியையே தங்களது பொதுவான நாட்காட்டியாகப் பயன்படுத்துகின்றனர். மேலும், இந்தப் புத்தாண்டு நாளே உலகின் அதிகமாகக் கொண்டாடப்படும் நாளாகும். 

எங்கப்பா காலத்துலலாம் காலையில் எழுந்து குளிச்சு கோவிலுக்கு போய் அறுசுவை உணவு சாப்பிடுவங்க. புத்தாண்டு அன்னிக்கு கண்டிப்பா இன்ப்போடு துவர்ப்பு சுவை உணவும், கசப்பு சுவை சேர்ந்த உணவும் சேர்த்துக்குவாங்க. சொந்தக்காரங்களோடு சந்தோசமா இருப்பாங்களாம்.


நான் சின்னப் புள்ளையா இருந்தப்போ ஒரு வாரத்துக்கு முந்தியே க்ரீட்டிங்க்ஸ் வாங்கி ஃப்ரெண்ட்ஸ், சொந்தக்காரங்களுக்கு அனுப்பிட்டு  கோவிலுக்கு போய் வந்து வடை, பாயாசத்தோடு விருந்து சாப்பிட்டு, ஹாயா தூங்கி எழுந்து, மாலை நேரத்துல பொதிகை சேனல்ல போடும் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்து, நைட் 12 மணி வரை முழிச்சிருந்து, தெருவிலிருக்குறவங்களுக்கும், தெரு அக்காக்களை சைட்டடிக்க வரும் அண்ணன்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லிக் கொண்டாடினோம்.

இந்த காலக்கட்டத்துல நைட் 12 வரை டிவியில் ஒரு நோட்டமும், கம்ப்யூட்டர், லேப்டாப், மெயிலும், க்ரீட்டிங்க்ஸ் அனுப்பிக்கிட்டும் வாழ்த்துச் சொல்லி, புத்தாண்டுக் கொண்டாடி இனிப்போடு, பிரியாணி, கொழம்புன்னு வெளுத்துக் கட்டி, மொபைல்ல எல்லோருக்கும் வாழ்த்துச் சொல்லி, நஸ்ரியா, ஆண்ட்ரியா, சிவக்கார்த்திகேயன், ஆர்யாக்களை டிவில பார்த்துக்கிட்டும் ஆவி, ஸ்பை, சசிகலா, எழில், சுபா, கணேஷ் அண்ணா, பிரகாஷோடு  புத்தாண்டுக் கொண்டாட்டம் நடக்குது.

எது எப்படியோ! கொண்டாடும் விதம் மாறினாலும் புது வருசத்தை எந்த துக்கமுமில்லாம கொண்டாடுவோம். இன்றைய தினம் போலவே வருடம் முழுக்க கொண்டாட்டமும், சந்தோசமும் மட்டுமே எல்லோருக்கும் அமைய எல்லாம் வல்ல இறைவனை வணங்கிக் கேட்டுக்குறேன்.

சகோதரர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். எல்லோரும் எல்லா நலனும் பெற்று நோய் நொடி இல்லாம சந்தோசமா இருக்க இறைவனை இந்த நல்ல நாளில் வேண்டிக்குறேன்.

Wednesday, January 02, 2013

தூக்கத்தை கெடுத்து.. துக்கத்தை கொடுக்கும் புத்தாண்டு கொண்டாட்டம் தேவையா?

                                    
ஒவ்வொரு முறையும் புது வருசம் பொறக்கும் போதும்.., அதை செய்யனும் இதை செய்யனும்னு ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும்,இந்தவருஷமாவது  'இதைச் செய்யனும்', 'இதைமுடிக்கனும்','இதை செய்யக்கூடாது' ன்னு புதுசு, புதுசாஏதாவது ஒண்ணை  சபதமா எடுத்துக்குறது, நினைவு தெரிஞ்சு  பழக்கம்..ஏதோ "புதுப் பொண்டாட்டி" கதையா ஆரம்பத்துல சபதத்தை கடைபிடிச்சுட்டு, ரொம்பப் பெருமையா எல்லார்கிட்டயும் சொல்லிகிட்டுத் திரிவேன். . கொஞ்சநாள் போன பின்னாலே "பழையக்குருடி கதவத்திறடி"ன்னு புத்தாண்டு சபதத்தை காத்துல விட்டுடுவேன்.  மத்தவங்க கேக்க மாட்டாங்க. அப்படியே கேட்டாலும் நமக்கா சமாளிக்க தெரியாது. கேட்டா அதுக்கு ஏதாவது காரணத்த உண்டாக்கி சொல்லிடுவேன்.

அதனால, இந்த புது வருஷத்துக்கு எந்த சபதமும் எடுக்கக் கூடாதுன்னு சபதம் எடுத்திருக்கிட்டேன்.இருந்தாலும் மனசுக் கேக்கல ஏதாவது புதுசா செய்யனும்னு உறுத்திகிட்டே இருந்திச்சு. சரி உடம்பு வெயி குறைக்கலாம்ன்னு பார்த்தேன்.  அதுவும் முன்ன சொன்ன மாதிரி 'சுறு சுறுப்பா' ஆரப்பிச்சு 'கடுகடுப்பா' முடிஞ்சுடும். என்ன பண்ணலாம்னு ரொம்ப நேரம் யோசிச்ச பின்.., யோசிச்ச பின்..., யோசிச்ச பின்னும் ஒண்ணும் தோணலை.:-(

சமைக்குற, கூட்டுற, துவைக்குற வேலைன்னு எது எஞ்சாலும் நல்லா இல்லைன்னு பேர் வாங்குற நாம.., கிடைக்குற வார்த்தைகளை உடைச்சு போட்டு கமா, ஆச்சர்ய குறி லாம் போடு எழுதுறதையும்.., சகோதரி மனசு கஷ்டப்பட கூடாதுன்னு நல்ல இருக்குன்னு  சொல்ற மாதிரி ஏதொ கொஞ்ச நல்ல பேர் வாங்கி வெச்சிருக்கேன்.அதனால.., இந்த நல்ல பேரை தக்க வெச்சுக்கிட்டா போதும்ன்னு புது வருசத்துல சபதம் எடுத்துக்கிட்டு.., கவிதைன்ற பேருல எதோ எழுதி பதிவை போட்டுட்டேன். இந்த புது வருசத்துலயும் இந்த சகோதரி மனசு கஷ்டப்படாம பார்த்துப்பீங்கன்னு நம்புறேன்.

போதும் பில்ட் அப் முதல்ல கவிதையை போடு. சகோதரியாகிட்டதால நல்லா இருந்தா பாராட்டுவோம். இல்லாட்ட்டி ஓங்கி நடு மண்டைல கொட்டுவொம்ன்னு சொல்ற உங்க மைண்ட் வாய்ஸை நான் புரிஞ்சுக்கிட்டேன்.... படிச்சு பார்த்து நல்ல முடிவை எடுங்க...,

புத்தாண்டு வாழ்த்துமே நீ உன்னை உண்மை அறிந்தால்..,

கடற்கரையில் கொண்டாட்ட கேளிக்கை:
காண நூறு பேர் வாடிக்கை
பன்னிரண்டு மணிக்கு பட்டென்று 
வெடிக்கிறது வானவேடிக்கை
புத்தாண்டு ஆரம்பம்??!!!

காது கிழிக்கும் பேரிரைச்சல்,
மங்கிய விளக்கொளி:
நட்சத்திர ஓட்டலில் நடனம்..,
ஆடவர்/பெண்டிர் பேதம் இல்லாமல்..,
சமஉரிமை இங்கே சமனாக்கப் படுகிறது??!!

குடும்பத்தோடு கொத்தளத்தில் கொண்டாட்ட குதூகலம்..,
தமிழ் கலாச்சாரம் இங்கே தனித்துவம் பெறுகிறது??!!
மது வாங்கி,மதி மயங்கி மகான்மியம் தேடும் நவயுக நாகரீகம்
மது விலக்கு இங்கே மௌனம் சாதிக்கிறது??!!

கண்டிப்பாய் இவை இல்லாமல் 
வரமாட்டேன் என்கிறது...,
சண்டித்தனமாய் இவர்களுக்கு மட்டும்..,
இன்னும் ஒரு 365??!!
 
கையில் பீர் பொங்கினால் தான் பொங்கும்??!!
அடங்காத காளையருக்கு..,
இன்பம் தரும் இன்னுமொரு 365.

ஆடைக் குறைப்பினால்தான்??!!
 நிறையும் அங்கயர்க் கன்னிகளுக்கு...,
அம்சமான இன்னுமொரு 365.

வாழ்த்துஅட்டை குவித்துதான் ஆரம்பமாகும்??!!
 அன்பின் தூவர்களுக்கு..,
அடுத்த ஒரு சில 365.

நள்ளிரவு சாகசத்திற்குப் பின்தான் நகருகிறது??!!
 நகரத்துஆசாமிகளுக்கு..,
நச்சென்ற புது 365.

இதோடு நின்றால் பாரம்பரியத்திற்கே இழுக்கென்று??!!
தொலைக்காட்சியில் தொல்லையாய் காட்சிகள்..,
பார்த்து தம் பாவம் தொலைக்கும் பரிதாப மக்கள்.

போர் மேகங்கள்,பொருளாதாரப் புயல்ககள்,
அரசியல் அடிதடிகள்,முதலாளித்துவ முகமூடிககள்,
கடும் விலையேற்றம்,கிளர்ந்தெழும் தொழிலாளர் போராட்டங்கள்,
பணவீக்கம்,அத்தியாவசிய பொருட்கள் முடக்கம்..,

இவை எல்லாம் எப்போதுமே இங்கே உண்டு
பழைய வருடத்தில் பழையனவாய்.
புதிய வருடத்தில் மீண்டும் பழையனவாய்.

எப்பொழுதும் போல் ஆண்டு வரும்,
ஆண்டு போகும் இது இயற்கை.
மாண்டு போகும் மனிதனே 
உனக்குத் தெரிய வேண்டாமா??!!

ஆண்டு ஓடினால்..,
 வயது மூப்பு தான் வரும் என்று...,
ஒரு நொடி இறந்து..,
 மறுநொடி பிறக்கும்.., 
 ஒரு பிறப்பு..

அந்த பிறப்பிற்கு..,
 பித்து பிடித்து அலையும் நீ..,
அந்த ??!! இறப்பிற்கு துக்கம் 
அனுஷ்டிக்க வேண்டாமா???

ஓர் இரவுக்குள், புது அவதாரம் எடுத்து 
புதிய விதி செய்திடுவாயோ?
பார் எங்கும் புதிய சிந்தனை கொடுத்து..,
 புரட்சி ஒன்றைத் தந்திடுவாயோ ??!!

உன்
புத்தாண்டு கேளிக்கை கொடுக்குமா??!!
 இனியும் ஒரு புதிய விதி???
புரட்சி தடைபடுமா??!  இல்லை..,
 புதிய சிந்தனை ஏற்படுமா???

பின்
ஏனிந்த தூக்கம்கெடுத்து.., 
 துக்கம் கொடுக்கும் ஒழுக்கக் கேடு???
சனவரிக்கு சனவரி மட்டும் ஏன் இந்த பரிவர்த்தனம்??!!

Monday, January 02, 2012

புத்தாண்டில் கடவுளுக்கு நான் போட்ட அப்பிளிகேஷன்...,

         

ஹாய்! ஹலோ! .. எல்லாரும் எப்படி இருக்கீங்க?

புது வருஷம் உங்க எல்லாருக்கும் எப்படி ஆரம்பிச்சுது? 

     நான் ரொம்ப புத்திசாலி.......ன்னு எனக்கு நானே நினைச்சுக்கிட்டு,   நைட் 12 மணிக்கு எல்லா நெட்வொர்க்கும் பிசியாகிடுமே நாம எதுக்கு வேஸ்ட்டா  முழிசிருக்கணும்னு 9 மணிக்கெல்லாம் சமத்தா தூங்க போயிட்டேன்..  எனக்கு வாய்ச்ச ஃப்ரெண்ட்ஸ்லாம் ரொம்ப நல்லநல்லவங்க. 

     10  மணிக்கே ஒரு லூசு ஃப்ரெண்ட் எழுப்பி மொக்கை போட ஆரம்பிச்சுடுச்சு. ஹேய் நான் பீச்சுல இருக்கேன், ஹோட்டல்ல இருக்கேன், அலையடிக்குது, ஹோட்டல்ல சாண்ட்விச் விக்குறான்னு மொக்கை போட ஆரம்பிச்சது. இதுக்கு மேல நாம தூங்குன மாதிரிதான்னு நினைச்சு நானும் அதுகூட கொஞ்ச நெரம் மொக்கை போட்டுட்டு 11 மணிக்கு தூங்க போனேன்.
    நல்ல தூக்கம்... 12.00 மணியிலிருந்து அடுத்தடுத்து போன். தூக்க கலக்கத்துல யார்கிட்ட பேசறேன்னே தெரியாம  மாத்தி மாத்தி பேர் சொல்லி பேசி ஏகப்பட்ட பல்ப் வாங்கினேன்னு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா?
   ஆக மொத்ததுல பல பல்ப்களுடன் எனது புத்தாண்டு ரொம்ப பிரகாசமா?! ஆரம்பிச்சிருக்கு. வருசப் பிறப்பு அன்னிக்கு என்ன கிடைக்குதோ! அதெல்லாம் வருஷம் ஃபுல்லா கிடைக்கும்ன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்லும்.  

   அதனால ஆண்டவா! இந்த வருஷம் முழுக்க இது தொடராம(பல்ப் வாங்குறது) மத்தவங்களுக்கு நான் நிறைய பல்புகள் வாரி வழங்குற மாதிரி அமைஞ்சு நான் சந்தோஷமா இருக்கனும்ன்னு வேண்டிக்கிட்டேன்.

நான் வேண்டிக்கிட்டது கரெக்ட்தானே மக்களே?..



Saturday, December 31, 2011

புதிதாய் பிறப்போம்....,


                                           

யாவரும் சமமென்று ஒன்றாய் .....,
ஆண் பெண் என்று அன்பில் இரண்டாய் ....,
வாழ்வின் சுவை சேர்க்கும் கனிகள் மூன்றாய் ....,
உன்னைப் பதம் செய்யும் வேதங்கள் நான்காய்....,
அகிலம் நிரப்பும் பொறிகள் ஐந்தாய்....,
மனிதத்தின் மகத்துவ அறிவு ஆறாய்....,
மனதிற்கு வண்ணம்கூடும் வர்ணங்கள் ஏழாய்...,
வெற்றியின் முரசு கொட்டும் திசைகள் எட்டாய் ...,
பூமியின் உன் படிக்கட்டுக்கள் மேலும் நீளும் கோள்கள் ஒன்பதாய்...,
விண்ணைத் தொட உன் மூலதன நம்பிக்கை பத்தாய்...,
பல பாடங்களை கற்று தந்த ஆசான் பதினொன்றாய்..,
அமைந்தது கடந்த வருடம்.....
மீண்டும் புதிதாய் பிறப்போம் பதினொன்றோடு பனிரெண்டாய்(2012)...... 

டிஸ்கி:இனி நான் பதிவெழுத  போறதில்லை. இதுதான் என் கடைசி பதிவு. யாருப்பா அது விசிலடிச்சு, கைத்தட்டுறது. ரொம்ப சந்தோசப்படாதே.., நான் 2011 ல போடப்போகும் கடைசி பதிவு இதுன்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி? 2012 லயும் என் இம்சை தொடரும்...,
அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (சில மணித்துளிகள் முன்னதாகவே சொல்லிக்குறேன்.)