ஹாய்! ஹலோ! .. எல்லாரும் எப்படி இருக்கீங்க?
புது வருஷம் உங்க எல்லாருக்கும் எப்படி ஆரம்பிச்சுது?
நான் ரொம்ப புத்திசாலி.......ன்னு எனக்கு நானே நினைச்சுக்கிட்டு, நைட் 12 மணிக்கு எல்லா நெட்வொர்க்கும் பிசியாகிடுமே நாம எதுக்கு வேஸ்ட்டா முழிசிருக்கணும்னு 9 மணிக்கெல்லாம் சமத்தா தூங்க போயிட்டேன்.. எனக்கு வாய்ச்ச ஃப்ரெண்ட்ஸ்லாம் ரொம்ப நல்லநல்லவங்க.
10 மணிக்கே ஒரு லூசு ஃப்ரெண்ட் எழுப்பி மொக்கை போட ஆரம்பிச்சுடுச்சு. ஹேய் நான் பீச்சுல இருக்கேன், ஹோட்டல்ல இருக்கேன், அலையடிக்குது, ஹோட்டல்ல சாண்ட்விச் விக்குறான்னு மொக்கை போட ஆரம்பிச்சது. இதுக்கு மேல நாம தூங்குன மாதிரிதான்னு நினைச்சு நானும் அதுகூட கொஞ்ச நெரம் மொக்கை போட்டுட்டு 11 மணிக்கு தூங்க போனேன்.
நல்ல தூக்கம்... 12.00 மணியிலிருந்து அடுத்தடுத்து போன். தூக்க கலக்கத்துல யார்கிட்ட பேசறேன்னே தெரியாம மாத்தி மாத்தி பேர் சொல்லி பேசி ஏகப்பட்ட பல்ப் வாங்கினேன்னு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா?
ஆக மொத்ததுல பல பல்ப்களுடன் எனது புத்தாண்டு ரொம்ப பிரகாசமா?! ஆரம்பிச்சிருக்கு. வருசப் பிறப்பு அன்னிக்கு என்ன கிடைக்குதோ! அதெல்லாம் வருஷம் ஃபுல்லா கிடைக்கும்ன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்லும்.
அதனால ஆண்டவா! இந்த வருஷம் முழுக்க இது தொடராம(பல்ப் வாங்குறது) மத்தவங்களுக்கு நான் நிறைய பல்புகள் வாரி வழங்குற மாதிரி அமைஞ்சு நான் சந்தோஷமா இருக்கனும்ன்னு வேண்டிக்கிட்டேன்.
நான் வேண்டிக்கிட்டது கரெக்ட்தானே மக்களே?..
நான் வேண்டிக்கிட்டது கரெக்ட்தானே மக்களே?..

நல்லதொரு வேண்டுதல் சகோ..இதை வரவேற்கிறேன்..
ReplyDeleteஅன்போடு அழைக்கிறேன்..
உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)
ஆண்டவா! இந்த வருஷம் முழுக்க இது தொடராம(பல்ப் வாங்குறது) மத்தவங்களுக்கு நான் நிறைய பல்புகள் வாரி வழங்குற மாதிரி அமைஞ்சு நான் சந்தோஷமா இருக்கனும்ன்னு வேண்டிக்கிட்டேன்.
ReplyDeleteபிரகாசமான புத்தாண்டு வாழ்த்துக்கள்..
//அதனால ஆண்டவா! இந்த வருஷம் முழுக்க இது தொடராம(பல்ப் வாங்குறது) மத்தவங்களுக்கு நான் நிறைய பல்புகள் வாரி வழங்குற மாதிரி அமைஞ்சு நான் சந்தோஷமா இருக்கனும்ன்னு வேண்டிக்கிட்டேன்.//
ReplyDelete- ஆஹா..நம்பிட்டேன். நல்ல வேண்டுதல்தான் சகோ. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
- த ஓ 3.
நல்ல வேண்டுதல்
ReplyDeleteபல்பு வாங்குவதும் கொடுப்பதுமாய்
செம ஜாலியா போகட்டும் புதுவருடம்
வாழ்த்துக்கள்
த.ம 4
மத்தவங்க பல்பு வாங்கின அனுபவத்தை படிக்கிறது ரொம்பவே ஜாலியான விஷயம் தங்கச்சி. நிறைய பல்பு கிடைக்கட்டும்னு வாழ்த்தறேன். எங்களுக்கு பல்பு தரப் போறியாம்மா... அவ்வ்வ்வ்வ்!
ReplyDelete// மத்தவங்களுக்கு நான் நிறைய பல்புகள்
ReplyDeleteவாரி வழங்குற மாதிரி அமைஞ்சு நான்
சந்தோஷமா இருக்கனும்ன்னு வேண்டிக்கிட்டேன். //
இப்படி வேண்டிக்கிட்டதுக்கா அந்த ஆண்டவே
சொந்த செலவுல ஒரு பல்பு குடுக்க போறாரு
பாருங்க..!
அதான் பல்பு வாங்கியாச்சே ஹா ஹா ஹா ஹா தொடரும் - நம்ம பாட்டி...
ReplyDeleteநாடு ராத்திரில பல்பு வாங்கிட்டு முழிச்ச தங்கச்சி அவ்வ்வ்வ்வ்வ்......
ReplyDelete>>
ReplyDelete10 மணிக்கே ஒரு லூசு ஃப்ரெண்ட் எழுப்பி மொக்கை போட ஆரம்பிச்சுடுச்சு. ஹேய் நான் பீச்சுல இருக்கேன், ஹோட்டல்ல இருக்கேன், அலையடிக்குது, ஹோட்டல்ல சாண்ட்விச் விக்குறான்னு மொக்கை போட ஆரம்பிச்சது.
உங்கள் ஆருயிர்த்தோழி மாலதியை நக்கல் அடித்ததால் வெளிநடப்பு பண்றேன்
புத்தாண்டில் கடவுளுக்கு நான் போட்ட அப்பிளிகேஷன்...,"
ReplyDeleteஅது அப்ளிகேஷனுங்கோவ்
தமிழ்மணம் - 49 வாழ்த்துகள்
ReplyDeleteஅது சரி... !
ReplyDeleteபுத்தாண்டு இந்த மாதிரியான பல்புகளிலும் பிரகாசமா இருக்கும்னு இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.
ReplyDeleteஆனாலும் உங்க ஃப்ரண்ட்ஸ்களை இப்படி வாரிட்டிங்களே!.
நல்ல வேண்டுதல்....
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள் சகோ.....
புத்தாண்டு வாழ்த்துகள் பாஸ்
ReplyDeleteபிரகாசமான புத்தாண்டாக அமைய வாழ்த்துகள்....!
ReplyDelete-இப்படிக்கு அனீஷ் ஜெ...
வாழ்த்துகள்.
ReplyDeleteநல்ல வேண்டுதல் அக்கா
ReplyDeleteஇந்த வருடம் உங்கள் அப்பிளிகேஷன் நிறைவேற வாழ்த்துக்கள்...
எனக்கு என்னமோ நீங்க கண்டிபா பல்பு வாங்குவீங்கனுதான் தோணுது அவ்வ்வ்வ்வ்வ்
வாழ்க வளமுடன்! ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDelete