Showing posts with label வெயில். Show all posts
Showing posts with label வெயில். Show all posts

Tuesday, July 30, 2013

அன்றும்!! இன்றும்!!

  

அந்திவானம்
அலையில்லாக் கடலை அணைத்து
சிவப்பை பூசிக்கொள்ள,
அதைக்கண்ட நானும் சிவந்தேன்
நீ அருகில் இருப்பதாலேயே!!

அசுர அலைகள் நடுவே
தத்தளிக்கும் படகாக நான்!!
கருவண்டின் இருளில்
ஆழ்கடல் அமைதியாக நீ!!
கண்ணீரால் உயர்த்துகிறது
கடல்மட்டத்தை படகு.

உன் வலையில் வலிய
சிக்கிய மீனாக நான் இருக்க,
என்னை வலையில் சிக்கிய
சிப்பிக்குள் முத்தாய்
நீ கருதி கொண்டாடினாய்!!

அன்று,
கடற்கரையில் நாம் இருவர் நடந்தும்
ஒரே பாதசுவடுதான்!!!!!!,
மாலை வெய்யிலில் நாம் இருவர் அமர்ந்திருந்தும்
ஒரே நிழல்தான்!!!!!

இன்றும்,
ஒரே பாதசுவடுதான்,
ஒரே நிழல்தான்!!
ஆனால்,
தனிமையில் நான்......,


Tuesday, November 06, 2012

தியாகிகள்- கடல் கடந்து வாழும் என் சகோதரர்களுக்கு சமர்ப்பணம்




வளமையான
வாழ்விற்காக...,
இளமைகளை
தொலைத்த
துர்பாக்கியசாலிகள்!!

வறுமை என்ற
சுனாமியால்!?
அரபிக்கடலோரம்
கரை ஒதுங்கிய
அடையாளம் தெரிந்த
நடைபிணங்கள்!!

சுதந்திரமாக
சுற்றி திரிந்தபோது
வறுமை எனும்..,
சூறாவளியில் சிக்கிய
திசைமாறிய பறவைகள்1!

நிஜத்தை தொலைத்துவிட்டு..,
நிழற்படத்திற்கு
முத்தம்கொடுக்கும்
அபாக்கியசாலிகள் !!

தொலைதூரத்தில்
இருந்துகொண்டே?!
தொலைபேசியிலே...,
குடும்பம் நடத்தும்
தொடர்கதைகள் !

கடிதத்தை பிரித்தவுடன்
கண்ணீர் துளிகளால்
கானல் நீராகிப் போகும்
மனைவி எழுதிய
எழுத்துக்கள்!

ஈமெயிலிலும்
இண்டர்நெட்டிலும்
இல்லறம் நடத்தும்
கம்ப்யூட்டர்வாதிகள் !

நலம் நலமறிய
ஆவல்..., என்றால்
பணம் பணமறிய
ஆவல்..., என கேட்கும்
. டி . எம் . மெஷின்கள்??!!


பகட்டான
வாழ்க்கை வாழ
பணத்திற்காக
வாழக்கையை
பறிகொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள்!!
.சி .காற்றில்
இருந்துக்கொண்டே...,
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும் துறந்தவர்கள் !

வளரும் பருவத்திலே
வாரிசுகளை...,
வாரியணைத்து...,
கொஞ்சமுடியாத
கல்நெஞ்சக்காரர்கள் !

தனிமையிலே
உறங்கும்முன்
தன்னையறியாமலே
தாரைதாரையாக
வழிந்தோடும்
கண்ணீர்துளிகளுக்கு சொந்தக்காரர்கள்

”அபஷி” என்ற அரபி
வார்த்தைக்கு
அனுபவத்தின் மூலம்
அர்த்தமானவர்கள் !


உழைப்பு என்ற
உள்ளார்ந்தஅர்த்தத்தை
உணர்வு பூர்வமாக
உணர்ந்தவர்கள்!
”முடியும்” வரை
உழைத்துவிட்டு...,
”முடிந்தவுடன்
ஊர்செல்லும்
”நோயாளிகள்”!
கொளுத்தும் வெயிலிலும்
குத்தும் குளிரிலும்
பறக்கும் தூசிகளுக்கும்
இடையில் பழகிப்போன
ஜந்துகள்!


பெற்ற தாய்க்கும்...,
வளர்த்ததந்தைக்கும்..,
கட்டிய மனைவிக்கும்...,
பெற்றெடுத்தகுழந்தைக்கும்...,
உற்ற குடும்பத்திற்கும்...,
இடைவிடாது உழைக்கும்
”தியாகிகள்” 
 

டிஸ்கி: சிங்கப்பூர்ல இருக்கும் என் அண்ணாக்கிட்ட விளையாட்டா உனக்கென்ன அண்ணா?! வெளிநாடுல இருக்கே! வாழ்க்கை சொர்க்கம்ன்னு கலாய்ப்பது வழக்கம். ”எங்க” வாழ்க்கை எப்படி இருக்குன்னு இந்த கவிதை பார்த்து தெரிஞ்சுக்கோம்மான்னு அனுப்பினார். ரொம்ப நாளா இது மெயில்ல இருந்துச்சு. நேத்து மனோ அண்ணா பிளாக்குல “வெளிநாட்டில் வாழும் ஏழைகள்”ன்னு போஸ்ட் போட்டிருந்தார். அதை படிச்சதும் இந்த கவிதையை போஸ்ட் போடனும்ன்னு தோணுச்சு. இந்த கவிதை சுட்டதுங்கோ. என்னுதில்லை.