அந்திவானம்
அலையில்லாக் கடலை அணைத்து
சிவப்பை பூசிக்கொள்ள,
அதைக்கண்ட நானும் சிவந்தேன்
நீ அருகில் இருப்பதாலேயே!!
அசுர அலைகள் நடுவே
தத்தளிக்கும் படகாக நான்!!
கருவண்டின் இருளில்
ஆழ்கடல் அமைதியாக நீ!!
கண்ணீரால் உயர்த்துகிறது
கடல்மட்டத்தை படகு.
உன் வலையில் வலிய
சிக்கிய மீனாக நான் இருக்க,
என்னை வலையில் சிக்கிய
சிப்பிக்குள் முத்தாய்
நீ கருதி கொண்டாடினாய்!!
அன்று,
கடற்கரையில் நாம் இருவர் நடந்தும்
ஒரே பாதசுவடுதான்!!!!!!,
மாலை வெய்யிலில் நாம் இருவர் அமர்ந்திருந்தும்
ஒரே நிழல்தான்!!!!!
இன்றும்,
ஒரே பாதசுவடுதான்,
ஒரே நிழல்தான்!!
ஆனால்,
தனிமையில் நான்......,
பாதச் சுவடுகள் பிரிந்து தனித் தனியாவது துன்பத்தில் உச்சம் பெறும் .வலிநிறைந்த கவிதை வரிகள் .மனதை வாட்டியது .அருமையான படைப்பு வாழ்த்துக்கள் தோழி
ReplyDeleteதனிமை வலி நிறைந்தது! அதை கவிதையில் வடித்த விதம் சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதனிமையில் சுகமும் உண்டு, வலியும் உண்டு....
ReplyDeleteகவிதை வரிகள் தனிமையின் தவிப்பை அழகாய் சொல்கிறது.
ReplyDeleteதனிமை (சிலசமயம்) கொடுமை...
ReplyDeleteகவிதை .
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteதனிமையின் தவிப்பு பற்றி அருமையான கவி படைத்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தனிமையின் தவிப்பு அழகிய கவியாகி ....
ReplyDeleteவலையில் வழி(லி)ய சிக்கிய மீன் யாரது?
ReplyDeleteத.ம.7
ReplyDeleteஉங்கள் அறிவுரையின் படி, என் காதலுக்காக இந்த கவிதையை நான் copy செய்து கொள்கிறேன்...ஹி ஹி ஹி ...
ReplyDeletesuper...........
ReplyDeleteவணக்கம்... தங்களை தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பகிருங்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteலிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Try-Training-Success.html
தனிமையின் வலி...... கவிதையில்...
ReplyDeleteநல்ல கவிதை.
த.ம. 9
தனிமையில் அனைத்தும் உண்டு...
ReplyDeleteஇன்றும்,
ReplyDeleteஒரே பாதசுவடுதான்,
ஒரே நிழல்தான்!!
ஆனால்,
தனிமையில் நான்......,/
இள வயது தனிமையை விட முதிர் வயது தனிமை மிகவும் கொடிது. அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.
தனிமையின் மொத்த வலியையும் கடைசி இரண்டு வார்த்தை உணர்த்துகிறது
ReplyDeleteகணிப்பொறி என் தோழி
ReplyDeletehttp://eniyavaikooral.blogspot.com/2013/07/blog-post_30.html