Monday, April 23, 2012

கழுதையாக மாறிய ஹீரோ - ஐஞ்சுவை அவியல்

சிவனின் அம்சம்...,                
புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன.


ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது.


ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக்கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.


ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்றும் குரோதம் கிடையாது. வட இந்தியப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.


இன்றைக்கும் தரமான, பழமைவாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது.


சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கும். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு. அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.
                               
கழுதையாக மாறிய ஹீரோ...
டைரக்டர்: ஹீரோ சொந்த குரல்ல பாடியே தீருவேன்னு அடம் பிடிக்கிறாரு சார்!  
ப்ரொடியூசர்: சரி ஆம்பத்திலேயே ஒரு மந்திரவாதி வந்து அவரை கழுதையா மாத்திடறது மாதிரி எடுத்திடலாம். 
                                 
கணக்கு போடலாம் வாங்க...,
ஒரு பையில் 175 காசுகள் உள்ளன. அவை ரூ 1, 50காசு, 25 காசுகளாக உள்ளன. அவை ஒரே மாதிரியான தொகையை கொடுக்க கூடியவை. பையில் எத்தனை எத்தனை காசுகளாக இருந்தது. பையிலிருந்த மொத்த பணமிருந்தது?
விடை வழக்கம் போல் அடுத்த பதிவில்....,  
எப்படிலாம் யோசிக்குறான்!? 
சமீபத்துல என் பொண்ணு தூயா படிப்பு விசயமா வேலூர்ல இருக்குற இன்ஜினியரிங் காலேஜுக்கு நான், தூயா, என் பையன் அப்பு மூணு பேரும் போனோம்.  அப்போ எதாவது சாப்பிடலாமேன்னு அங்கிருக்கும்  கேண்டீனுக்கு போனோம். 
ஜூஸ் கார்னர்ல போய் என்ன ஜூஸ் இருக்குன்னு கேட்டோம். அவங்க ஜூஸ் பேரை சொல்லிக்கிட்டே வந்தாங்க. JAVA green juice, JAVA Blue juice,  JAVA Orange juicen ன்னும்,  அது புதுசா இருக்கவே JAVA green juice ஒண்ணு வாங்கி வந்து குடிக்க ஆரம்பிச்சவன் திடீர்ன்னு...,
 ஏம்மா, இது  இன்ஜினியரிங் காலேஜ் அதனால ஜூஸுக்கு JAVAன்னு பேர் வச்சிருக்காங்க. இதுவே மெடிக்கல் காலேஜா இருந்தா, tablet, injection, pshiyoன்னு பேர் வைப்பாங்களான்னு கேட்டான். அதை கேட்டு அங்க இருந்த ஸ்டூடண்ட்ஸ்லாம் எப்படிலாம் யோசிக்குறடான்னு கிண்டல் பண்ண, அவன் அசடு வழிய நின்னான்.
செஞ்சுதான் பாருங்களேன்..., 
பக்கோடா செய்யும் போது சிறிது ரவை கலந்து செய்தால், மொறுமொறுவென்று சுவையாக இருக்கும். இதில் ரவைக்கு பதில் வேர்க்கடலையை பொடி செய்து கலந்தும் பக்கோடா செய்யலாம். வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது. வேப்பம்பூவிற்கு எங்கே போவது என நினைக்க வேண்டாம். கடைகளில் கிடைக்கிறது. மாங்கொட்டையின் உள்ளே உள்ள பருப்பை வெதுவெதுப் பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பித்தளை பாத்திரங்களை துலக்கினால், அவை பளிச்சிடும்.
 

26 comments:

 1. nalla suvai!

  ungal aviyal!

  ReplyDelete
 2. அவியல் சுவை அருமை! ருத்தீராட்ச சுவை அதிகம் எனக்குப் பிடித்தது! சா இராமாநுசம்

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. ருத்ராட்சத்தில் ஒரு முகம் இருமுகம் இப்படி இருப்பதாக கேள்விப்பட்டேன் உண்மையா அக்கா?

  அதை எப்படி கண்டறிவது என்று தெரிந்தால் கூறுங்களேன் ...?

  ReplyDelete
 5. அவியல் அருமைங்க ரசிக்கும்படியாக .

  ReplyDelete
 6. அவியலை சுவைத்தேன் நல்லா தான் இருக்கு அவியல்

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. ஒரு சின்ன request அக்கா... புள்ளைகள மெடிக்கல் காலேஜ் கேண்டீன் பக்கம் கூட்டிட்டு வந்துராதிங்க... பாவம்...

  ReplyDelete
 9. அவியல் அருமையான சுவையாக இருந்தது ராஜி அக்கா. கழுதையாக மாறிய நாயகன் மாதிரி ஈ யாக மாறிய நானின் கதையும் படமாக வரப்போகிறது தெரியுமா அப்ப்த்தின் பெயர் நான் ஈ

  ReplyDelete
 10. அவியல் நல்ல சூடும் சுவையுமாக இருந்தது. ருத்ராட்ச மகிமை நல்லதகவல்

  ReplyDelete
 11. வேலூர் ஜெயிலெல்லாம் சுத்திப்பார்த்தீங்களா?

  ReplyDelete
 12. சசிகலா இளைச்சுட்டாங்களே>? ஓ சாரி இவங்க வேறயா? அவ்வ்வ்

  ReplyDelete
 13. அவிய்ல் இந்த முறையும் நல்லாவே இருக்குது. ருத்ராட்சத்தைப் பத்தி நிறையவே தெரிஞ்சுக்க முடிஞ்சது. அருமை.

  ReplyDelete
 14. நிறைய தகவல்கள்.

  ReplyDelete
 15. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.

  சிறப்பான அவியல்..

  ReplyDelete
 16. கணக்குக்குப் பதில் சொல்லட்டுமா?25 ஒரு ரூபாய்,50 எண்ணிக்கை 50 பைசா,100 எண்ணிக்கை 25 பைசா.சரியா?

  ReplyDelete
 17. உண்மையிலேயே அவியல்தான்.சூப்பர் சுவை
  மருத்துவ ஜோதிடம் என்ற பிரிவில் ருத்ராக்ஷம் பற்ரிக் கூட சொல்லப்பட்டிருக்கிறது!

  ReplyDelete
 18. அவியல் சுவை அருமை... சுவைத்தேன் நல்லா இருக்கு...

  ReplyDelete
 19. சென்னை பித்தன் கூறியது...

  கணக்குக்குப் பதில் சொல்லட்டுமா?25 ஒரு ரூபாய்,50 எண்ணிக்கை 50 பைசா,100 எண்ணிக்கை 25 பைசா.சரியா?
  >>
  ரொம்ப சரிங்க ஐயா

  ReplyDelete
 20. சுவையான அவியல்.

  ருத்திராட்சம் பற்றிய தகவல்களுக்கு நன்றி.

  ReplyDelete
 21. வணக்கம் சகோதரி...
  சென்னைப்பித்தன் ஐயா சரியா விடையை சொல்லிட்டார்...
  அவியல் பஞ்சாமிர்தம் ...

  ReplyDelete
 22. உங்க வீட்டு ஹிரோ பாடுறதை இப்படியெல்லாம் ஜோக் போட்டு கிண்டல் பண்ணாதிங்க....அப்பறம் எனக்கு ரொம்ப கோவம் வந்துரும்

  ReplyDelete
 23. உங்கள் வீட்டு அப்புவின் ஜோக்கை ரசித்தேன்.மொத்தத்தில் ஐஞ்சுவை அவியல் பிரமாதம்

  ReplyDelete
 24. அவியல் சுவை அருமை.

  ReplyDelete