Social Icons

4.30.2012

முயற்சி தன் மெய்வருத்த தெய்வம் கூலி தரும்- ஐஞ்சுவை அவியல்

                                              
ஏனுங்க மாமா! நம்ம பக்கத்து வீட்டு பார்வதி பாவமுங்க. சாப்ப்பாட்டுக்கே கஷ்டப்படுதுங்க. அந்த தெய்வம் அவ விசயத்துல கண் தொறக்கலயே.

இதப்பாரு புள்ள, சாமி நேருல வந்து உதவி செய்யாது.கடவுள் மறைமுகதான் செய்யும் அதை புரிஞ்சுக்கிட்டு நாமதான் அதை யூஸ் பண்ணிக்கனும்.

புரியலியே மாமா, சாமியாலதான் எல்லாமே முடியுமே, அவ கஷ்டத்தை ஒரு நொடியில மாத்த முடியாதா மாமா?!

இதப் பாரு புள்ள, எதுவுமே ஈசியா கிடைச்சுட்டா அதுக்கு மரியாதை கிடையாது. அதனாலதான. உன்னை மாதிரிதான் கீரனூர்ல இருந்த முத்து, கடவுள் நேருல வந்து சொன்னாதான் சாப்பிடுவேன்னு அடம் பண்ணிக்கிட்டு, எதிர்க்க சாப்பாடை வச்சுக்கிட்டு  உக்காந்துக்கிட்டான்.

மணி 9 ஆச்சு. ஏங்க சாப்பிட வாங்கன்னு அவன் பொண்டாட்டி போய் கூப்பிட்டா. ஏய், நான் என்னடி சொன்னேன். சாமி வந்து ஊட்டினாதான்  சாப்பிடுவேன்னு சொன்னேன்லன்னு சீறினான். எக்கேடோ கெட்டுப் போன்னு போய்ட்டா. மணி 12 ஆச்சு, டேய், சாமிக்கிட்டலாம் சவால் விடாத , ஒழுங்கா சாப்பிடுன்னு அவனை பெத்தவங்க சொன்னாங்க. சே ஒரே ரோதனையா போச்சு, அட்வைசுலாம் பண்ணிக்கிட்டுன்னு சாப்பாட்டை எடுத்துக்கிட்டு பெட்ரூம்ல போய் உக்காந்துக்கிட்டான்.

சாயந்தரம், மணி 4 ஆச்சு பசங்க ஸ்கூலிருந்து வந்து அப்பா சாப்பிடுப்பா அம்மா செஞ்ச உப்புமா நல்லா இருக்குன்னு குழந்தை அவன் வாய்ல உப்புமா ஊட்ட போச்சு. சீ போ அந்தாண்டன்னு சொல்லி சாப்பாட்டு மூட்டையைக் கட்டிக்கிட்டு யாருமில்லாத ஏரிக்கரையில போய் உக்காந்துக்கிட்டான். 

ராத்திரி 12 ஆச்சு. அந்த வழியா, கொள்ளையடிச்சுக்கிட்டு  டயர்டா  திருடனுங்க  வந்தானுங்க. அவனுங்களுக்கு செம பசி. சோத்து மூட்டையை பார்த்ததும் அவன்கிட்ட பிடுங்கிக்கிட்டு போய் சாப்பிட உக்காந்தாங்க.

அப்போ, டேய் கபாலி,  கொஞ்சம் பொறுமையா இரு. அவன் எதிர்க்க சோத்து மூட்டையை வச்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டு இருக்கான், ஒரு வேளை நம்மை பிடிக்க ராசா இந்த சாப்பாட்டுல வெசத்தை வெச்சு இருதா நம்ம கதின்னு சொல்லி, முத்துவை சாப்பிட வற்புறுத்தினாங்க. அவன் மாட்டேன்னு சொல்லி அடம்பிடிசான்.

இதுல ஏதோ சூது இருக்குன்னு முடிவுக்கு வந்து முத்துவை அடிச்சு உதைச்சு சாப்பாட்டை அவன் வாய்ல திணிச்சு சாப்பிட வச்சாங்களாம். முத்துவோட பொண்டாட்டி, பெத்தவங்க, பையன் ரூபத்துல வந்து  சாமி சொல்லிச்சு. அப்பவே அவன் கேட்டிருந்தா முத்து உடம்பு புண்ணாகியிருக்க வேணாமே.

அதுப்போலதான்  பார்வதி கதைதான். பத்தாவது படிச்சிருக்குறவ எதாவது கைத்தொழில் கத்துக்கிட்டு, கவர்ன்மெண்டுல லோன் வாங்கி பொழச்சுக்காம சாமி நேருல வரும்னு காத்துக்கிட்டு இருந்தால் எப்படி புள்ள? திருவள்ளுவரும் திருக்குறள்ல முயற்சி தன் மெய்வருத்த தெய்வம் கூலி தரும்ன்னு சொல்லியிருக்கார்.

நீங்க சொன்னது சரிதானுங்க மாமோய். நானும் பார்வதிக்கிட்ட நல்லவிதமா எடுத்து சொல்றேனுங்க.
                                          

அப்புறம் மாமா, என் செல்போன்ல ஒரு மெசேஜ் வந்திருக்கு. படிச்சதும் சிரிச்சுட்டேன் மாமா

அப்படியா, எனக்கும் சொல்லு புள்ள,

ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி. அதை நான் பேசாத வரை...,
 வீட்டை சுத்தப்படுத்துவதற்காகவே பண்டிகைகளைக் கண்டுபிடித்துள்ளான் தமிழன்.
வெயில் காலத்திற்கும், பனி காலத்திற்கும் ரெண்டே ரெண்டு வித்தியாசம்தான். எப்படா குளிக்க போறோம்ன்னு நினைச்சா வெயில் காலம். ஏண்டா குளிக்க போறோம்ன்னு நினைச்சா அது பனி காலம்ன்னு மெசேஜ் வந்துச்சு மாமா.
ஹா ஹா நல்லா இருக்குடி.

                                           

நான் உன்கிட்ட ஒரு கணக்கு சொல்றேன். தெரியுதான்னு பார்க்கலாம் புள்ள.  
ஹா ஹா மாமா, நம்ம தெருலயே  பால்கணக்கு, வரட்டி கணக்குலாம் வெவரமா நாந்தான் போடுவேனாக்கும்.
அப்பிடியா, யோசிச்சு சொல்லுடி என் செல்லக்குட்டி, ஒருநாள் தன் வூட்டுக்காரனோட  சண்டையிட்டுக் போட்டுட்டு  கோபத்தோட  வூட்டை வுட்டு பொண்டாட்டி நாள் ஒன்னுக்கு ஒரு காதம் (10 மைல்) வீதம் நடந்து போறா. ஏழு நாட்களுக்குப் பிறகு கவூட்டுக்காரன் அவளைத் தொடர்ந்து, புறப்பட்டு நாளொன்றுக்கு ஒன்றரை காதம் வீதம் நடந்து போறான். அவ்விருவரும் எப்போ மீட் பண்ணுவாங்க ?  இருவரும் நடந்த தூரம் எவ்வளவு ?
ஐ கண்டுபிடிச்சுட்டேன் மாமா! 
இருடி,  அவசரப்படாதே அவங்கலாம் என்ன சொல்றங்கன்னு பார்க்கலாம். 
சரிங்க மாமா, 
இன்னிக்கு காணாமல் போன கனவுகள் ராஜி வீட்டுக்கு போனேன். அவங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போது அவங்க பையன் செஞ்ச காமெடியை சொல்லி சொல்லி சிரிச்சாங்க.
என்னன்னு சொன்னா நானும் சிரிப்பேனே புள்ள, 
ராஜி குடும்பமும், அவங்க அண்ணன் குடும்பமும் எந்திரன் படத்துக்கு போய் இருக்காங்க. போய்ட்டு வீட்டுக்கு வந்ததும் அவங்க அண்ணன் பையன் ஒரு கேள்வி கேட்டானாம். அவங்க ஷாக்காகி நின்னுட்டாங்களாம்.
அப்படி என்ன புள்ள கேட்டானாம்?
எலக்ட்ரானிக்ஸ் சாமான்லாம் தண்ணில விழுந்த கெட்டு போகுது. ஆனா, எந்திரன்ல ’சிட்டி’ மட்டும் மழைல நனையுது, தண்ணில குதிக்குது ஆனா, அது கெட்டு போகலியே எப்படின்னு கேட்டு ராஜியை நிலைகுலைய வச்சிருக்கான் மாமா.
            
ஹா ஹா நல்லாதாண்டி கேட்டிருக்கான். அப்புறம். நம்ம மரத்துல முருங்கக்காய் நிறைய காய்ச்சிருக்கு. அக்கம் பக்கட்துல இருக்குறவங்களுக்கு குடுத்துட்டு மிச்சத்தை அப்படியே ஃபிரிட்ஜ்ல வெக்காம, காயோட தோள் எடுத்து சின்ன சின்னதா வெட்டி, பிளாஸ்டி க் கவர்ல போட்டு ஃப்ரிட்ஜ்ல வெச்சா ஒரு வாரம் வரைக்கும் கெடாது.  குருமாக்கும், சிக்கன் குழம்புக்கும் தேங்கா அரைச்சு ஊத்துவே தானே.  அதுல தேங்காயை குறைச்சுக்கிட்டு பாதாம் பருப்பை சேர்த்துக்கிட்டா, ருசியும் நல்லா இருக்கும், குழந்தைகளுக்கு ஞாபக சக்தி பெருகும், ரிச்னசும் வரும்டி. சின்ன புள்ளைகளுக்கு  சோம்பை பொடி செய்து தேனில் கலந்து 21 நாள் சாப்பிட்டு வந்தா ஞாபக சக்தி வருமாம் புள்ள. 

சரிங்க மாமா, துணி துவைக்கனும், வீட்டை கூட்டனும் வேலை நிறைய இருக்கு நான் வாரேன் மாமோய். 


22 comments:

 1. ஐஞ்சுவை அவியல் அமர்க்களமாக இருக்கே.

  ReplyDelete
 2. //எலக்ட்ரானிக்ஸ் சாமான்லாம் தண்ணில விழுந்த கெட்ட் போகுது. ஆனா, எந்திரன்ல சிட்டி மட்டும் மழைல நனையுது, தண்ணில குதிக்குது ஆனா, அது கெட்டு போகலியே எப்படின்னு கேட்டு ராஜி நிலைகுலைய வச்சிருக்கான் மாமா.//

  அஹா அவன் என்னை போல புத்திசாலின்னு நினைக்கிறன்

  ReplyDelete
 3. அவியல்...சுவை...தூக்கலா உப்பு ( சி பி ) க்காக வெயிட்டிங்...

  ReplyDelete
 4. வணக்கம் சகோதரி
  நலமா?
  நீண்ட இடைவெளி..
  விடுமுறைக்கு இந்தியா வந்துள்ளதால்
  வலையுகம் பக்கம் வர முடியவில்லை..

  இன்றைய புதிருக்கு விடை..210 வது மைல் தொலைவில் சந்திப்பார்கள்
  என்பது சரியான விடை என நினைக்கிறேன்..
  மனைவி சென்ற பிறகு பதினான்கு நாட்கள் கழித்து சந்திப்பார்கள்..
  கடந்த தொலைவு.. 210 மைல் ..

  இனிய ஐஞ்சுவை
  மணக்கிறது சகோதரி...

  ReplyDelete
 5. அற்புதமாய் சுவைக்கிறது ஐஞ்சுவை அவியல்..

  கைவண்ணத்துக்கு பாராட்டுக்கள்..

  ReplyDelete
 6. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இன்றைய அவியலும் சூப்பர் அக்கா..

  ReplyDelete
 7. அட, இந்த அவியலை நீ பிரஸன்ட் பண்ணின விதம் ரொம்பவே நல்லா இருக்கும்மா. விடாம புடிச்சு்கோம்மா.

  சாப்பிட மறுத்த அந்த பக்தனின்(?) கதை அருமை. புதிர்..? மகேன் சொன்னது சரியா இருககும்னு நம்பறேன். ஹி... ஹி... உங்களை விட குழந்தைங்க புத்திசாலிங்களாத் தேங் இருக்குது! தொடரட்டும் அவியல் அமர்க்களம்!

  ReplyDelete
 8. அவியல் செம டேஸ்ட்.
  நன்றி

  ReplyDelete
 9. அவியல்... அமர்க்களமான சுவையோட இருக்கு சகோ....

  பக்தனின் கதை படித்து நல்ல விஷயம் தெரிந்து கொண்டேன்.... :)

  பசங்க பசங்க தான்... நமக்கு சிட்டி பத்தி இப்படி யோசிக்க தெரியல பாருங்க! :)

  தொடரட்டும் பகிர்வுகள்...

  ReplyDelete
 10. செல்போன் மெசேஜை ரசித்தேன்.

  ReplyDelete
 11. சிரித்தேன்., சிந்தித்தேன் ...!

  ReplyDelete
 12. கதை நன்றாக இருக்கிறது வழக்கம் போல......உங்களுக்கு வந்த SMS யை இன்னொரு ஆன்லைனில் வேறு ஒரு இடத்தில் படித்தேன். படித்ததும் சிரிப்பு வந்தது எப்படிதான் இப்படியெல்லாம் சிந்திக்கிறார்களோ.....எந்திரன் கமெண்ட எவ்வளவு கோடி பணம் போட்டு எடுத்தாலும் சரியாக கவனிக்காமல் விட்டதால் அது சிரிப்புக்கு ஆழாகிவிடுகிறது மொத்ததில் பதிவு படிக்க நன்றாக இருக்கிறது.

  போன பதிவில் நீங்கள் சொன்ன கதையை என் மகளுக்கு சொன்னேன் அவளுக்கும் பிடித்திருந்தது . நன்றி

  ReplyDelete
 13. இரசிக்கும்படி இருந்தது அனைத்துமே!
  நன்றி!

  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 14. அவியல் சிந்திக்க வைத்தது

  ReplyDelete
 15. >>>சரிங்க மாமா, துணி துவைக்கனும், வீட்டை கூட்டனும் வேலை நிறைய இருக்கு நான் வாரேன் மாமோய்.

  இதுல ஒரு லாஜிக் மிஸ்டேக்ஸ். இந்த வேலை எல்லாம் ஆம்பளைங்க தானே செய்வாங்க?

  ReplyDelete
 16. அவியல் அருமை...

  ReplyDelete
 17. சுவையான அவியல்.

  முதல் கதை நகைச்சுவை போல தெரிந்தாலும் மிக உயர்ந்த கருத்தை கொண்டுள்ளது சிறப்பு.

  ReplyDelete
 18. அவியலின் சிறப்பே சுவையும் சத்தும்தான்
  இந்த அவியலிலும் இந்த இரண்டும் மிக மிக அதிகம்
  தொடர்ந்து தர வேண்டுகிறேன்
  மனம் கவர்ந்த பயனுள்ள பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete

 

Sample text

மொழி மாற்றம்

கனவுகள் இவ்வளவு தான்

அனுபவம் நகைச்சுவை சமையல் காதல் கவிதை மொக்கை ஐஞ்சுவை அவியல் மகிழ்ச்சி கதை கிச்சன் கார்னர் ஆன்மீகம் புண்ணியம் தேடி ஒரு பயணம் மௌனச்சாட்சிகள் கோவில் டிப்ஸ் வாழ்த்து பிரிவு புதிர் விடுகதை சுற்றுலா ஜோக்ஸ் குட்டீஸ் கார்னர் கொண்டாட்டம் கிராஃப்ட் சென்னை படங்கள் வெங்காயம் குட்டீஸ் பதிவர் சந்திப்பு மனைவி திருமணம் பிறந்த நாள் புண்ணியம் தேடி ஏக்கம் கணவன் கேபிள் கலாட்டா சுட்ட பழம் நட்பு பதிவர்கள் பொங்கல் . பிரிவு கவிதைகள் குழந்தை தக்காளி பாட்டி சொன்ன கதை அம்மா சிவன் சைட் டிஷ் பண்டிகை வாழ்க்கை ஆண்கள் ஐயம் சிவப்பெருமான் சுட்டப்பழம் ஜோக் தீபாவளி பெண் . கவிதைகள் அன்பு அழகு அழுகை உலகம் கடவுள் வாழ்த்து கனவு சுட்டப் பழம் தனிமை திருவண்ணாமலை தூயா தேங்காய் பூக்கள் பொக்கிஷம் மதுரை முருகர் விளையாட்டு விஷ்ணு அரண்மனை அறுபடைவீடு இட்லி இனிப்பு உறவுகள் அன்பு எம்ப்ராய்டரி கண்ணாடி காடு காதல்கவிதைகள் காய்கறிகள் குறுஞ்செய்தி கோலம் சிரிப்பு சிரிப்பு ஆன்மீகம் செஞ்சிக்கோட்டை சோகம் தாய் தேர்வு தேவதை தொடர்பதிவு நன்றி பதிவு பரிசு புத்தாண்டு மரம் மழை மின்சாரம் முட்டை முத்தம் விபத்து ஃபேஸ்புக் அப்பா அம்மன் அரிசி அறிவுரை ஆசை இந்தியா இந்திரன் உயிர் கடிதம் கணக்கு கண்கள் கண்ணீர் கத்திரிக்காய் கம்ப்யூட்டர் கார்த்திகை தீபம் காலேஜ் குதூகலம் குறும்பு கைவண்ணம் கோவம் சட்னி சண்டை சமாதானம் சுந்தரர் சூரியன் தங்கம் தண்டவாளம் தத்துவம் தாய்மை திருக்கச்சூர் திருமண நாள் தூக்கம் தொலைப்பேசி தோழி நாகர்கோவில் நொறுக்ஸ் பக்தி பணம் பயணம் பள்ளி பாம்பு பிரிவு கவிதைகள் பிள்ளையார் புகைப்படம் புடவை" புத்தகம் புனைவு பெருமாள் போண்டா மகள் மணமகள் மலை ரசனை லட்சுமி வரம் வாழ்த்துக்கள் விடுதலை விநாயகர் விருது வீடு வெற்றி வெல்லம் "வெறுப்பு" ஃப்ளவர் வாஸ் அனுபவம் கோலம் அனுப்வம் அன்னை அரசியல் அரபு நாடு அலங்காரம் அலட்சியம் அலை அழகர் கோவில் ஆண் ஆரணி ஆரோக்கியம் இதயம் இனியா இமை உதவி உல்லன் நூல் உளுத்தம்பருப்பு ஊறுகாய் எதிர்பார்ப்பு ஏமாற்றம் ஐஞ்சுவை ஐஸ்குச்சி கடற்கரை கணவன் மனைவி கணவர் கணினி கண்ணகி கண்ணன் கனவுகள் கமல் தையல் கவிதைகள் காதலர்கள் காத்திருப்பு காரக்குழம்பு கார் கிரிவலம் குடும்பம் குட்டீஸ்கார்னர் குந்தன் கற்கள் குந்தன் கல் குளிர் குழந்தைகள் குழம்பு கூழ் கேழ்வரகு கொழுக்கட்டை கோதுமை சங்கிலித்தையல் சந்திரன் சந்தேகம் சபதம் சமிக்கி சமூகம் சவால் சாக்லேட் சிக்கன் சித்தர் சித்தர்கள் சினிமா சிறப்பு சிறை சிற்றுண்டி சிலை சீர் சுட்டபழம் சுதந்திரம் சோழன் ஜோதிடம் தமிழ்நாடு தலை தீபாவளி திருக்கடையூர் திருக்குறுங்குடி திருவிதாங்கூர் திருவிழா தென்றல் தேசிங்குராஜா தொலைக்காட்சி தோல்வி நன்மைகள் நம்பிக்கை நவராத்திரி நாய் நிலவு நெருப்புக் கோழி நேசம் நேசிப்பு பஜ்ஜி பட்டாசு பப்பாளி பறவை பலகாரம் பல்ப் பிளாக் பிள்ளைகள் புடவை புண்ணியம்தேடி ஒரு பயணம் புரிதல் பூசணிப்பூ பூண்டு பூதம் பெண்கள் பெருமை பெற்றோர்கள் பேச்சு பொழுது போக்கு போகி மகளிர் தினம் மணமகன் மணிகள் மதராசப்பட்டினம் மனம் மனிதன் மரணம் மறு சுழற்சி மறு சுழற்சி. மறுசுழற்சி மழைத்தூரல் மாணவர்கள் மாமல்லபுரம் மாம்பழம் மார்க் மாவளி மிளகாய் மீனாட்சி அம்மன் முந்திரி மெரினா பீச் மைதா மௌனசாட்சிகள் ராஜா ராஜா கோட்டை ராஜா தேசிங்கு ராமர் லட்டு வண்டி வரலாறு வலி வலைப்பூ வளையல் விகடன் விஜய் டிவி வினா விமானம் வியப்பு விளம்பரம் விழி விஷ்னு வீரம் வெயில் வேண்டுதல் வைட்டமின் ஸ்கூல் . பிரிவு .தூயாவின் கவிதை . 250வது பதிவு KFC சிக்கன். கதர் ஆடை SONY ego ஃபேண்ட் ஃபோட்டோ ஃப்ரெண்ட்ஸ் அகத்தியர் அக்கா அச்சம் அஞ்சலி அஞ்சுவை அவியல் அடிசயம் அடுப்படி அட்வைஸ் அணில் அண்ணா சமாதி அதிசயம். தீபாவளி அதிரசம் அதிர்ஷ்டம் அனுபவம். மாமல்லபுரம் அனுமன் அன்னாசி அன்னையர் தின வாழ்த்துக்கள் அன்புபவம் அபீஸ் அப்பு அப்பு. அமிர்தம் அமெரிக்கா அமைதி அம்பிகை அரசாங்கம் அரட்டை அருவி அர்ச்சுனன் தபசு அர்ஜுனன் அலைப்பேசி அவமானம் அவ்வைப்பாட்டி அஷ்டலட்சுமி ஆஃபீஸ் ஆசிரியர் ஆசிரியர்தினம் ஆடு ஆட்டு ரத்தம் ஆணவம் ஆண்டாள் ஆண்மகன் ஆனிமீகம் ஆன்மீகம். ஆப்பிரிக்கா ஆப்பிள் ஆப்பூர் ஆயுத பூஜை ஆரஞ்சு ஆரத்தி தட்டு ஆற்காடு நவாப் ஆஸ்திரேலியா இடி இடி. இடும்பன் இடையினம் இட்லிப்பொடி இதம் இன்பம் இயற்கை இயேசு இரண்யகசிபு இறப்பு. இன்பம் இறைவன் இலை. தண்ணீர் இல்லத்தரசி இல்லம் இல்லறம் இளங்கோவடிகள் இளமை இழப்பு உணர்ச்சி உறவுகள் உற்சாகம் உல்லன் ஊசி ஊடல் ஊணம் ஊமை ஊர்வசி எங்க ஊர் எதிர்பதிவு எந்திரன் என்ஜின் எம்.ஜி.ஆர் எம்ப்ராய்டரி. எரிப்பொருள் எறும்பு எலுமிச்சை சாதம் எழுத்துக்கள் ஏர்வாடி ஏழுமலை ஐச்குச்சி ஐஞ்சுவை அவியல் ஒலிம்பிக் ஓட்டம் ஓவியம் ஔவ்வை கடற்கரை கோவில் கடலை கடல் கடவுள் கடவுள் பக்தி கணக்கு புதிர் கணக்குப் புதிர் கண் கண்ணான் கண்பார்வை கதௌ கத்தரிக்காய் கத்தி கன்னி கன்னியாக்குமரி கன்யாகுமரி கருடாழ்வார் கருப்பண்ணசாமி கருமாரி அம்மன் கரும்பு கர்ப்பிணி கர்வம் கற்பனை கலங்கரை விளக்கம் கலர்பொடி கலை கல்ர்பொடி கழுகு கவிதை. காதலர் தினம் காதலர்தினம் காதலி காதல். தேவதை காந்தி ஜெயந்தி காப்பகம் காமராஜர் காம்பு தையல் காம்புத்தையல் காய்கறி காரம் கார்த்திகை காற்று காலண்டர் கால் காவல் கிஃப்ட் கிஃப்ட் கார்னர் கிஃப்ட். கிச்சன் கிச்சன்கார்னர் கிரகப்பிரவேசம் கிரிக்கெட் கிளாஸ் பெயிண்டிங். கிளிப்பிள்ளை கிழமைகள் கீ செயின் குங்குமம் குடி குடியரசு தினம் குட்டீ ஸ் கார்னர் குட்டீஸ் கார்னர். குட்டீஸ் கார்மர் குட்டீஸ் சுட்டீஸ் குதிரை குரங்கு குரல் குரு குருவிக்கூடு குற்றாலம் குலசேகரபட்டினம் குலத்தெய்வம் குளியல் குழப்பம் கூகிள் கூடல் கேபிள் கலாட்டா. கேரளா கேலி கேள்விகள் கொசு கொசு வர்த்தி கொசுவர்த்தி கொடி கொண்டாட்டட்ம் கொண்டாட்டம். கொண்டைக்கடலை கொய்யா கொலுசு கொள்ளு கோட்டை கோதையாறு கோபம் கோபுரம் கோப்பியம் கோர்ட் கோழிக்கறி கோவம் வாழ்த்து கோவலன் கோவில்கள் சகோதரன் சங்கு சச்சின் சடங்கு சடங்கு காந்திஜி. சட்டை சத்துணவு சத்துமாவு சந்தனம் சந்தோசம் சனி சனிப்பிரதோஷம் சனீஸ்வரன் சன் டிவி சமையல் குறிப்பு சமையல். மணத்தக்காளி சமையல். மொக்கை புனைவு சம்பள நாள் சர்க்கரை சர்க்கரை குளம். சலுகை சஷ்டியப்த பூர்த்தி சாதம் சாப்பாடு சாமுத்திரிகா லட்சணம் சாலை சிங்கம் சிடி சித்திரம் சிந்திக்க சின்ன சின்ன ஆசை சிம்மாசனம் சிரிக்க சிறகுகள் சிறுவர் தினம் சிற்பங்கள். கடல் சிற்பம் சிவகாமியின் சபதம் சிவன் கோவில் சிவராத்திரி சீடன் சீதை சீரகம் சீரியல் சுட்ட பசம் சுட்ட பழம் 1 சுண்ணாம்பு சுதா சந்திரன் சுத்தம் சுமோ சுய நலம் சுவாசம் சுவாமி மலை சுவாமிமலை சுவை செஞ்சி செல்போன் ஸ்டேண்ட் செல்வம் சேமியா சேலை கட்டு சொட்டு மருந்து சொர்க்க வாசல் சொர்க்கம் சொர்ணாகரண கிரிவலம் சொர்ணாகர்ஷன கிரிவலம் சொல்வதெல்லாம் உண்மை சோப் சோயா சோற்றுபருக்கை சோழ மன்னன். ஜடாயுபுரம் ஜப்பான் ஜல்லிக்கட்டு ஜவ்வரிசி ஜாக்கி சான் ஜீவன் ஜூஸ் ஜோ ஞானப்புரீஸ்வரர் டயட் டாவின்சி டி.வி. ஃப்ரிட்ஜ் டி.வி. சினிமா டிசைன் டெலிபோன் டைம் ட்ரெஸ் த மெயில் தகவல் தகவல்கள். அகிம்சை தங்க பதக்கம் தங்கச்சி தங்கை தசரா தண்ணீர் தந்தை தமயந்தி தமிழர்கள் தமிழ் தமிழ் சொல் தமிழ் புத்தாண்டு தமிழ்மணம் தம்பி தர்பூசணி தற்காப்பு கலை தலைதீபாவளி தாமரை திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி திண்ணை தியாகம் திரட்டி திருச்ச்செந்தூர் திருநங்கைகள் திருநீர்மலை திருப்பதி திருப்பதி. திருமண வரவேற்பு திருமணநாள் திருமலை திருமலை நாயக்கர் மஹால் திரும்பிப் பார்க்கீறேன். தொடர்பதிவு திருவடிசூலம் திருவனந்தபுரம் திருவல்லிக்கேணி திருவள்ளுவர் திருவிளையாடல் தீர்ப்பு துணை துன்பம் துறவி துளசி துவரம்பருப்பு துவையல் தூசு தட்டியவை தூண்டில் தூது தூயா பக்கம் தூயா . தூரம் தெனாலி ராமன் தெய்வம் தேசியக்கொடி தேன் தேவை தையல் வகுப்பு தொடர் பதிவு தொடர் பதிவு. தொந்தி தொப்பை தொல்லைக்காட்சி தொழில் தொழில்நுட்பம் தோசை தோரணம் நகச்சுவை நகைச்சுவை. விடுகதை நண்பர்கள் நன்பண் நரசிம்ம பெருமாள் நரசிம்மர் நரி நளன் நவகிரகம் நவக்கிரகம் நாதஸ்வரம் நாத்தனார் நாரதர் நாவல் நினைவு நினைவு நாள் நினைவுகள் நிம்மதி நிலைக்கதவு நீயா!? நானா!? நீலவேணி நூபுர கங்கை நூற்றாண்டு நெகிழ்ச்சி நெல்லிக்காய் நேரு நொடி நொறுக்கு தீனி நோன்பு பகவதி அம்மன் பக்கோடா படிப்பு பட்டுசேலை பணிநிறைவு பண்டிகை கொண்டாட்டம் பண்டிகை பலகாரம் பண்ணையார் பண்பாடு பதில் கடிதம் பதிவர் பதிவர்கள். விழா. கொண்டாட்டம் பதிவுலகம் பத்மநாபபுரம் பரசுராமர் ஷேத்ரம் பல்லவன் பழங்கள் பழனி பழமுதிர் சோலை பாசம் பாடல் பாட்டி பாட்டி வைத்தியம் பாட்டு பாதச்சுவடு பாதாள லிங்கம் பாப்பா பாமா பாயாசம் பாரதியார் பாரம்பரிய சமையல் பாரீஸ் கார்னர் பார்த்ததில் பாதித்தது பால் பால்யம் பிடாரி ரதம் பிரகலதன் பிரணவ மந்திரம் பிரம்மன் பிறந்தநாள் பிறப்பு பிளாக்கர்ஸ் பிள்ளைபேறு பீச் புகுந்த வீடு புகைவண்டி புணியம் தேடி புண்ணியம் புதிர். புதுமைப்பெண் புத்துணர்ச்சி புன்னகை புல்வெளி பூ பூங்கா பூஜை பூப்பறிக்க வருகிறோம். குட்டீஸ் பூமி பூம்புகார் பூரி பெட்ரோல் விலை பெண்குழந்தைகள் பென் ஸ்டாண்ட் பெரியவங்க பேச்சிப்பாறை அணை பேய் பேராசை பைரவர் பொம்மை பொரி பொரியல் பொறந்த வீடு பொற்றாமரைக் குளம் போட்டோ போராட்டம் போலியோ போலீஸ் பௌர்ணமி மகாபலி புரம் மகாபாரதம் மகாபாரதம். மசால் வடை மடி மண நாள் வாழ்த்து மணமக்கள் மணல் கொள்ளை மணி மாலை மண்டைக்காடு மண்பானை மதம் மதுக்கோப்பை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மதுரை நாயக்கர் மகால் மத்திய அரசு மனநலம் மனித நேயம் மயில் மயில். கேரட் மயில். தங்கம் மரங்கள் மரியாதை மரியாதை ராமன் மருங்கூர் மருதநாயகம் மருந்து மறதி மறந்து போன விளையாட்டு மலடி மவுண்ட் ரோடு மாங்காய் சாதம் மாடு மாணவன் மாநில அரசு மானிட்டர் மாமல்லன் மாமியார் மார்கழி மார்கோனி மிட்டாய் மிதிவண்டி மின்னல் மிருகம் மிளகு மீன் மீள்பதிவு முகப்பூச்சு முதல் கருத்து முதுமை முதுமை. அனுபவம் முருகன் முருங்கைக்காய் முள்ளங்கி மூச்சு மெகந்தி மெட்ரோ ரயில் மெரினா மெரினா கடற்கரை மெல்லினம் மெஹந்தி மேடை மொரிட்டா மொழி மோனோலிசா மோர் மௌன சாட்சி மௌன சாட்சிகள் மௌனச்சாட்சி மௌனச்சாட்சிகள். மௌனச்சாட்சிகள். பத்திரிக்கை. மௌனம் யானை ரசிப்பு ரத்ததானம். ரம்ஜான் ரம்பை ரயில் ராசிப்பலன் ராஜ் டிவி ராணி ராணிக்கோட்டை ராதா ராமன் ராமானுஜர் ராமாயணம் ரிப்பன் கட்டிடம் ரீ எண்ட்ரி ரூபம் ரூபாய் ரோஜா லஞ்ச் பாக்ஸ் லைட் ஹவுஸ் லொள்ளு வகுப்பு வடைகறி வட்டக்கோட்டை வட்டம் வண்டு வண்ணங்கள் வத்தல் வருடப்பிறப்பு வறுவல் வலைப்பதிவு வலைப்பூக்கள் வலையன் கோட்டை வலையில் சிக்கியவை வல்லினம் வளைக்காப்பு வள்ளிக்குகை வாகனம் வாசனை வாசம் வாசல் வாசுகி வாடகைத்தாய் வாத்து வானம் வானொலி வாழை இலை வாழைக்காய் வாழைப்பந்தல் வாழ்க்கை பயணம் வாழ்த்து அட்டை வாழ்த்தூகள் வாழ்நாள். வாழ்க் விஐபி விகதை விக்கிரமாதித்தன் விக்டோரியா ஹால் விசம் விசேசம் விஜய தசமி விஜய் விடிவெள்ளி விடுகதை. விடுமுறை விடுமுறை. பரிட்சை விதை விதைகள் விநாயர் சதுர்த்தி விமானநிலையம் வியாசர்பாடி விரக்தி விரதம் விருப்பம் விலை விலையேற்றம் விலைவாசி வில்லன் விளக்கு விளமபரம் விழா விவசாயி விவச்சி விவேகாந்தர் இல்லம் வெகுமதி வெங்காயம். வெட்கம் வெறுமை வெளிச்சம் வெள்ளி வெள்ளியம்பலம் வெள்ளைக்கொண்டைக்கடலை வேர்கடலை வேர்க்கடலை வேலுத்தம்பி தளவாய் வைகை வைட்டமின் சி வைரமணி ஸ்பைடர் மேன் ஹிக்கின்பாதம்ஸ் ஹீரோ ஹீரோயின் ஹெக்மெட் ஹெல்ப் ஹோட்டல் ஹோம் வொர்க்

Sample Text