செவ்வாய், ஏப்ரல் 03, 2012

சாமுத்திரிகா லட்சணம் பெண்ணுக்கு மட்டுமில்லை..., ஆணுக்கும் உண்டு.


தலை:
ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம். பின் பகுதி புடைத்திருப்பின் அறிவு. தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரம்.

நெற்றி:
அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வம்.  மிகச் சிறுத்திருப்பின் மூடன். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடம்.

கண்: 
ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக்கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும்.

மூக்கு: 
உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.

வாய்:
அழகான,சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும்..

  உதடு:
உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்கும்.

கழுத்து:
ஆண்களின் கழுத்து பருத்தும், மத்திம உயரம் உடையதாகவும் இருப்பின் அதிர்ஷடம். மிக உயரமாகவோ, மிகக் குட்டையாகவோ, நரம்புகள் தெரியும்படியோ இருந்தால் வறுமை.

தோள்:
தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த காரியம் முடியாது.

நாக்கு: 
நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடம். கருத்தும், வெளுத்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரம்.

பல்:
மெல்லிய ஒடுக்கமான பற்களை உடையவர்கள் கல்விமான் ஆவர். கூரிய பற்கள் இருப்பின் கோபம் அதிகம் வரும். வரிசை தவறி, ஒன்றுக்கு மேல் ஒன்று இருப்பின் தரித்திரம்..

காது:
காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி.

கைகள்: நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்புதல் கூடாது. கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின் செல்வந்தன் ஆவான்.

மணிக்கட்டு:
மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக இருப்பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும், மடக்கும் போது சப்தம் வந்தாலும் தரித்திரம்.

விரல்கள்:
கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந்தால் அற்ப ஆயுள். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்கு மூலைகளும் சமமான உயரத்தோடு தட்டையாக இருப்பின் அரசனாவான்.

மார்பு: ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின் அற்பாயுள். ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் இச்சை அதிகம் இருக்கும்..

வயிறு: 
பானை போன்ற உருண்டையான வயிறு இருப்பின் செல்வம் இருக்கும். வயிறு தொங்கினால் மந்த நிலை உண்டாகும். ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேரனாய் இருப்பர். வயிற்றில் மடிப்புகள் இல்லாதிருப்பதே உத்தமம்.

முதுகு: 
சமமான முதுகைப் பெற்றவர்கள் எதிலும் வெற்றி பெறுவர். முதுகில் எலும்புகள் காணப்பட்டால் தரித்திரம்.

 கால்கள்:
கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும்.

கால்பாதம்: கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறுவான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்..

டிஸ்கி: இந்த சாமுத்திரிகா லட்சணத்தை உங்களோடு ஒப்பிட்டு பாருங்க சரியா வந்தா பகிர்வுக்கு நன்றின்னு கமெண்ட் போடுங்க. ஒத்து போகலைன்னா கல், கத்தி, அருவாளெல்லாம்  தூக்காதீங்க. ஏன்னா, இதை நான் ஒரு புக்ல இருந்து சுட்டேன். 

22 கருத்துகள்:

 1. //கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின்//

  தம்மு அடிச்சா கூட கருக்கும்?? அப்ப என்ன சொல்வீக..அப்ப என்ன சொல்வீக

  பதிலளிநீக்கு
 2. //தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால்//

  சத்யராஜ் சார் ப்ளீஸ் ஹெல்ப் மீ

  பதிலளிநீக்கு
 3. நன்றி - எங்கே இருந்து சுட்டீங்க

  பதிலளிநீக்கு
 4. இந்த போஸ்ட்ல பெண்கள் சாமுத்திரிகா லட்சனம் பற்றி எழுதாம விட்டதைக்கூட மன்னிச்சுடலாம்.. ஆனா லேபிள்ல


  Labels: அதிர்ஷ்டம், அழுகை, ஆண்கள், கால், சாமுத்திரிகா லட்சணம், செல்வம், விடுதலை

  அப்டினு போட்டிருக்கீங்களே ஹய்யோ அய்யோ

  பதிலளிநீக்கு
 5. எங்களையும் காட்டி கொடுத்துட்டீங்க... அதுவும் அழுகை அப்படிங்கற லேபிள் வேற!!! ஆ ஆ... ஹா ஹா கமல் மாதிரி அழுதுக்குட்டே சிரிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. //தலை:
  ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம். பின் பகுதி புடைத்திருப்பின் அறிவு. தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரம்///

  அம்மா ராஜி உங்கள் வீட்டுகாரரின் பின் மண்டை புடைத்து இருக்க உங்கள் சப்பாத்தி கட்டைதான் காரணம் அதற்க்காக இப்படியெல்லாம் சாமுத்திரிக்கா லட்சணம் எழுதி சமாளிக்க கூடாது.


  மக்காஸ் யாருக்கு தலை பின் பக்கம் புடைதிருக்காவிட்டால் சகோதரிக்கு ஒரு மெயில் அனுப்பவும். அவர் உங்கள் தலை புடைக்க ஏற்பாடு குறைந்த செலவில் அதிகம் பாதிப்பு இல்லாமல் செய்வார்

  பதிலளிநீக்கு
 7. என்னது... யானைக் கண்கள் பெரிதா? அரிய கண்டுபிடிப்பும்மா... எங்கம்மா சின்னக் கண்கள் உள்ள நடிகர்கள் இரண்டு பேரை ‘யானைக் கண்ணு’ன்னு கிண்டல் பண்ணுவாங்க... சாமுத்ரிகா லட்சணத்தை என்னோட கம்ப்பேர் பண்ணற விபரீத விளையாட்டுக்கு... நான் வரலை! எஸ்கேப்!

  பதிலளிநீக்கு
 8. இங்கா பார்றா தங்கச்சிய... சாமுததிரிகா லட்சணம் லாம் சொல்லுது. அதுவும் ஆண்களுக்கு... என் அலுலவக நண்பர்களுக்கு மேட்ச் பண்ணிப் பார்த்தேன். சிரிப்பு தாங்க முடியல...என்ன பண்ணலாம் உங்கள...?

  பதிலளிநீக்கு
 9. ராஜி...ரொம்ப அநியாயம் இது.இந்தப் பதிவைப் படிக்கிற ஆண்கள் எல்லோரும் தங்களைத் தாங்களே ஒருதரமாவது கண்ணாடியில பாத்துக்குவாங்க !

  பதிலளிநீக்கு
 10. @ஹேமா இந்த பதிவை படிக்கும் பெண்களும் தங்களுக்கு தெரிந்த ஆண்களை ஒரு தரமாவது மேட்ச் பண்ணி பார்ப்பார்கள்தானே??

  பதிலளிநீக்கு
 11. எனக்கு தரித்திரம் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 12. நல்லதாவே சுட்டீங்க.ஒரு சந்தேகம். பெண்களில்,பத்மினி,சித்தினி ,சங்கினி, அத்தினி போல ஆண்களிலும் பிரிவு பற்றி உங்க புத்தகத்தில் ஏதாவது குறிப்பு இருக்கிறதா?!

  பதிலளிநீக்கு
 13. பொன்னியின் செல்வனில்”பெண்களில் பத்மினி, சித்தினி, காந்தர்வி, வித்யாதரி என்பதாக நாலு ஜாதிகள் உண்டு. ” என்று சொல்லியிருக்கிறார்!

  பதிலளிநீக்கு
 14. ஆண்களின் கால் கட்டைவிரலை விட அடுத்த விரல் நீளமாக இருந்தால் மனைவி கை ஓங்கியிருக்குமாமே!

  பதிலளிநீக்கு
 15. இப்படியெல்லாம் பாத்தா விரக்தி தான் மிஞ்சும் போல தோணுகிறது. ச்சீ இந்த பழம் புளிக்கும்...ம்ம்ம் அடுத்த ஜென்மத்திலாவது பார்க்கலாம்.. ஐய்யோ புலம்ப வச்சுட்டாங்களே..'

  பதிலளிநீக்கு
 16. மாப்பிள்ளை பார்க்க போகும் பெண்களுக்கு பயனுள்ள தகவல் சகோ . நல்லா மாட்டினாங்க போங்க .

  பதிலளிநீக்கு
 17. ஆகா அக்கா ஆண்களில் கூட இவ்வளவு விஷயம் இருக்கா இப்போதுதான் அறிந்தேன்.. இனி மாப்பிள்ள பாக்க போகும் போது இதெல்லாம் பாக்க சொல்லனும் பெணட வீட்டாருக்கு

  பதிலளிநீக்கு
 18. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  பதிலளிநீக்கு
 19. neengal solvadhu migavum kurraivu ovoru urruppai pattiyium nirraya kurrippugal ulladhu intha sila kurippugalai vaithu mattum muzhu latchannamum sollamudiyaathu

  பதிலளிநீக்கு
 20. ஆண்களுக்கு சாமுத்திரிகன் லட்சணம்- ன்னு சொல்லியிருந்தா நல்லாயிருந்திருக்கும், பொய்யாய் சொல்லியிருந்தாலும் சுவராசியமாய் இருக்கிறது, அதுவும் படிக்கும் போது என்னை ஒப்பிட்டுக் கொண்டே படித்தேன். என் சிரிப்பை என்னாலேயே அடக்க முடியவில்லை

  பதிலளிநீக்கு