திங்கள், செப்டம்பர் 02, 2013

பதிவர் சந்திப்பு - ஐஞ்சுவை அவியல்


காலைல சமைக்காம எங்க போய்ட்டு வரே!  போட்டது போட்ட படியே கிடக்கே! வேலை செய்யாம எங்க போய் வரே புள்ள!

ராஜி வீட்டுக்கு மாமா!

ராஜி வீட்டுக்கா?! காலையிலேவா?! ஏண்டி, அவளுக்குதான் வேற வேலை இல்ல, நேத்துலாம் பெங்களுரு, சென்னைன்னு சுத்திட்டு வந்து உன் கிட்ட பெருமை பீத்திக்க கூப்பிட்டான்னா, உனக்கெங்க போச்சு அறிவு?! சமைக்காம அவ வாயையே பார்த்துக்கிட்டு இருந்தியா?!

 பெங்களூரு போய் அவ பொண்ணை பார்த்து வந்தது, சென்னைல நடந்த பதிவர் சந்திப்புல கலந்துக்கிட்டது,  அங்க நடந்ததுலாம் சொல்லிட்டு இருந்தா அதான் நேரம் போனது தெரியாம கேட்டுட்டு இருந்தேன்.

என்ன சொன்னா உன் ஃப்ரெண்ட்?!

சனிக்கிழமை காலைல பெங்களுருக்கு கிளம்பி போனா..,

ஐயோ! அந்த கதையை அப்புறம் சொல்லு, ஒரு மாசமா, சேலை வாங்கனும், நகை வாங்கனும், மூஞ்சிக்கு சுண்ணாம்பு அடிக்கனும் வான்னு உன்னை இம்சை பண்ண காரணமா இருந்த பதிவர் சந்திப்பை பத்தி சொல்லு.

ம்ம்ம் சரிங்க, அவ ஆசைப்பட்டப் படியே சேலைல ஸ்டோன்லாம் ஒட்டி சின்ன பொண்ணு இனியா, அவ பையன் அப்புவை கூட்டிக்கிட்டு கொஞ்சம் லேட்டாகிடுச்சே! நிகழ்ச்சி ஆரம்பிச்சிருப்பாங்களேன்னு பதறிக்கிட்டே போனாளாம். நல்ல வேளை நிகழ்ச்சி ஆரம்பிக்கலையாம்!

போன உடனே, அவளோட கணேஷ் அண்ணா முதல் ஆளாய் வரவேற்றார். ”வீடு திரும்பல்”மோகன்குமார் அடுத்த ஆளாய் தன் அக்காவை வரவேற்று நலம் விசாரிச்சிருக்கார்.

அடுத்ததா கவியாழி, புலவர் ஐய்யா, பட்டிக்காட்டான்லாம் வந்து வரவேற்றிருக்காங்க, ராஜி பெங்களூரிலிருந்து ஃப்ளைட்ல வந்ததால கலாய்க்கலாம்ன்னு போட்டோ எடுக்கலாம்ன்னு கூப்பிட்டாராம். நான் தெரியலைன்னாலும் பரவாயில்ல ஃப்ளைட்ல ஒட்டுன டேக்லாம் தெரியனும்ன்னு கண்டிஷன் போட்டு ரார்ஜி எல்லோரோடவும் நின்னு போட்டோ எடுத்திருக்கா. ராஜி போட்டோ எடுத்துக்குறதை பார்த்து சசியும் ஓடி வந்து க்ரூப்புல நின்னுக்கிட்டா.

அடுத்து சங்கவி வந்து வரவேற்றிருக்கார். கோவை ஆவி, மதுமதி, “ராஜபாட்டை” ராஜா, கோவை நேரம்” ஜீவா,  சீனு, சிவா, ரூபக்ன்னு எல்லார்கிட்டயும் நலம் விசாரிச்சிருக்கா. 

என் கேர்ள் ஃப்ரெண்ட் எங்க?! ஏன் கூட்டி வரலைன்னு அடையாறு அஜீத் சென்னை பித்தன் ஐயா ராஜிக்கிட்ட கோவிச்சுக்கிட்டார். தூயா இல்லாட்டி பரவாயில்லை இனியா இருக்கான்னு தன் இளைய மகளை காட்டி இருக்கா. அப்புறம், தமிழ்வாசி பிரகாஷ், அரசன், வெங்கட் நாகராஜ், திண்டுக்கல் தனபாலன், ரமணி ஐயா, பெண்கள்ல சசி, ஸ்கூல் பையன், மயிலன், கோகுல், எழில், அகிலா, வெங்கட் நாகராஜோட மனைவி(பேரு கேக்க மறந்துட்டேனே!!) குட்டீசுல சசி மகன்கள், வெங்கட் நாகராஜ் மகள், பட்டிக்காட்டானோட குட்டீஸ், சதீஷ் செல்லதுரை மனைவி, குழந்தைகள்ன்னு எல்லார்க்கிட்டயும் பேசி இருக்கா.

கணேஷ் அண்ணா சேட்டைக்காரன் ஐயாக்கிட்ட இவ என் தங்கைன்னு அறிமுகப்படுத்தும்போது உனக்கு சப்போர்ட் பண்ண உன் தங்கச்சி இருக்கா. அதனால இனி உன்னை பத்தி எழுதும்போது பார்த்து எழுதுறேன்னு கணேஷ் அண்ணாக்கிட்ட பயந்த மாதிரி சொன்னாராம்.

பண்ணையார் கெட்டப்புல புல்லட்ல வந்து வெல்கம் பண்ணி இருக்கார் ஆரூர் மூனா செந்தில். டி.பி.ஆர்.ஜோசப், “மூங்கில் காற்று”முரளிதரன்னு ஒரே அன்பு மழைதானாம். சென்னைலயே இருந்துக்கிட்டு லேட்டா வந்திருக்கார் சௌந்தர்.

போஸ்ட்ல போட்ட புடவை பார்த்துதான் நீங்க ராஜின்னு கண்டுப்பிடிச்சேன்னு   ஒரு பதிவர் வந்து சொல்லி இருக்கார். ஆனா, அவ பேருதான் ராஜி மறந்துட்டாளாம்.

உன் ஃப்ரெண்டுதான் லூசாச்சே!

அவளை திட்டாதீங்க. அத்தனை பேரும் அக்கா, தங்கச்சின்னு பாசம் காட்டுன நெகிழ்ச்சில இருக்கும்போது எப்படி நினைவில் வச்சுக்க முடியும்?!

அப்புறம் பகவான்ஜி வந்து அறிமுகப்படுத்திக்கிட்டார். தருமி ஐயா, கடல் ப்யணங்கள் சுரேஷ் குமார்ன்னு எல்லார்க்கிட்டயும் ஹலோ சொல்லவே அரை மணி நேரம் ஆச்சுதாம்.இவ்வளவுதானா?! நான் என்னமோ சுவாரசியமா எதாவது நடந்திருக்குமோன்னு நினச்சுல்ல வந்தேன். 

நேத்துதான் ஊரிலிருந்து வந்திருக்கா. டயர்டா இருக்காம் யார் யார்லாம் வந்தாங்கன்னு சொன்னதோட சரி, சுவாரசியமான மேட்டர்லாம் நாளைக்கு சொல்லிறேன்னு சொல்லி இருக்கா.

இப்போ கரண்ட் கட் நேரம் அதனால, அப்புறமா சொல்றேனுங்க.

43 கருத்துகள்:

 1. இங்கும் நேற்றைய வருகையை பதிவு செய்தவர்கள் பட்டியல் மட்டும் தானா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம் ஆமா, சசி ரெண்டு நாளாஅ வீட்டில் இல்லியே வீடு வீடா இல்ல. அதை ஒழுங்கு பண்ணனும், அப்புறம் கரண்ட் கட் படுத்தி எடுக்க ஆரம்பிச்சுடுச்சு. கிடைத்த நேரத்தில் சின்னதா ஒரு பதிவு, அடுத்த பதிவில் இருக்கு தீபாவளி!

   நீக்கு
 2. யக்கோவ், என்னை விட்டீங்க... நேத்தே நல்லா கலாய்ச்சு அனுப்பியிருந்தா மறக்காம என் பேரையும் சேர்த்திருப்பீங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களலாம் மறக்கவே இல்லப்பா! நேரமில்லாததால் நிறைய பேரை சட்டுன்னு மறந்து ட்டேன். பேரை சேர்த்துட்டேன்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. சீக்கிரத்துல பதிவு போட்டுடுறேன் சகோ!

   நீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் தண்ணீர் காட்டி அன்பை பறிமாறிய அக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. திருவிழாவில் ஒரு கலக்குக் கலக்கிட்டீங்க!

  பதிலளிநீக்கு
 7. அக்கா, தூக்கத்துல கோவைய கோவி ஆக்கிட்டீங்களே.. உங்களை நேரில் சந்திச்சதுல சந்தோசம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யப்பா, ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் எல்லாம் கண்டுக்கப்படாது... சரியா?

   நீக்கு
  2. நெத்தி கண்ணு தொறந்தாலும் குத்தம் குத்தந்தான்னு சொன்ன ஸ்கூல் பையனா இப்டி சொல்றது ....? வாட் எ சேஞ்சு ...!

   நீக்கு
  3. அக்காக்களுக்கு மட்டும் இந்த சலுகையாம்! அதனால கண்டுக்காதீங்க!

   நீக்கு
 8. புடவை கல் வேலைப்பாடு பார்த்து உங்களை identify செய்தது நான்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படிங்களா?! உங்களை ச்னதிச்சதுல ரொம்ப சந்தோசம்!

   நீக்கு
 9. வெங்கட் நாகராஜ் மனைவி பேர் ஆதிலட்சுமி. பதிவர்சந்திப்பு நேரடி காட்சி பார்க்க முடியவில்லை. வெளியூர் போய் விட்டேன். உங்கள் மூலம் வந்தவர்கள் படித்து விட்டேன். இனி அடுத்தபதிவில்நிகழ்ச்சி தொகுப்பு தருவீர்கள்,வந்து பார்க்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவங்க பெயரை நினைவு படுத்தியமைக்கு நன்றி!

   நீக்கு
 10. உங்களை இந்த வருடமும் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி, ராஜி.
  தொடர்ந்து பதிவர் விழா பற்றி எழுதுங்கள். காலை நிகழ்ச்சிகளை ரொம்பவும் மிஸ் பண்ணிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களும் போயிருந்தீர்களா ரஞ்சனி ! நான் தான் மிஸ் பண்ணிவிட்டேன்.
   எல்லோரையும் பார்த்திருக்கலாம்.
   அடுத்த வருடம் கண்டிப்பாக வர வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன்.

   நீக்கு
  2. ஆமாம். ஆனால் காலை நிகழ்ச்சிகளுக்குப் போக முடியவில்லை. மதியம் புத்தக வெளியீடுகளுக்கு போனேன். நிறைய பேரை பார்க்க முடியவில்லை. அடுத்த வருடம் இரண்டு பேருமாகப் போகலாம், சரியா?

   நீக்கு
 11. இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறேன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏண்ணே, இதில ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் எதுவும் இல்லையே?

   நீக்கு
 12. முதன்முதல்ல உங்களை வாசல்ல வெச்சே வரவேற்றது யாரு.. நன்னா.. யோசிச்சி சொல்லுங்கோ... பார்க்கலாம்..

  பதிலளிநீக்கு
 13. படங்களைப் பகிருங்கள் அக்கா .நாமும் பார்க்க வேண்டாமோ ?.....:)

  பதிலளிநீக்கு
 14. ஆமா! ஸ்டோன் வொர்க் பண்ணின புடவையைடன் ஏதாவது படம் உள்ளதா? இருந்தால் அந்த படத்தைப் போடவும்.

  "ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன மகனை சான்றோன் என கேட்ட தாய்" மகன் சான்றோன் ஆனா என்ன ஆகாட்டி என்ன? அது பிஸ்கோத்து குறள். அதன் அடிப்படையில் என் குறள்!

  வாங்கிய பொழுதினும் பெரிதுவக்கும் தன புடவையை 'சூப்பர்' என கேட்ட பெண்.

  ஒரு பெண் புடவையை வாங்கியபோது அடையும் இனபத்தை விட "அதை எங்கு வாங்கின? எப்படி இவ்வளவு அழகா வாங்கின! இது மாதிரி இன்னொன்னு கிடைக்குமா" என்று சபையில் உள்ள மற்ற பெண்கள் கேட்கும் போது அடையும் இன்பமே பேரின்பம்...!

  இப்படிக்கு 11-வது திருவள்ளுவர்

  பதிலளிநீக்கு
 15. உங்கள நேரில் சந்திச்சதில் மிக்க மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
 16. என்னால கலந்துக்க முடியலன்னும் உங்களை எல்லாம் பார்க்க முடியலைன்னும் வருத்தமா இருக்கு!? பார்க்கலாம் அடுத்த பதிவர் சந்திப்பில்?????????

  பதிலளிநீக்கு
 17. உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 18. என்ன அக்கா அம்முட்டுதானா....

  பதிலளிநீக்கு
 19. அவ ஆசைப்பட்டப் படியே சேலைல ஸ்டோன்லாம் ஒட்டி சின்ன பொண்ணு இனியா, அவ பையன் அப்புவை கூட்டிக்கிட்டு கொஞ்சம் லேட்டாகிடுச்சே//

  அதானே பார்த்தேன், எங்க இத விட்டுறுவீங்களோன்னு நினைச்சேன். ஆனாலும் டிசைன் உண்மையிலேயே நல்லாத்தான் இருந்துது. லேடி பதிவராருந்தா இத நேர்லயே சொல்லியிருப்பேன்.. நாகரீகம் தடுத்துவிட்டது.

  என்னையும் நினைவு வச்சிருந்து போட்டுட்டீங்களே அதுக்கு நன்றி.

  இனியும் வருமா? இல்ல முடிஞ்சிருச்சா?

  பதிலளிநீக்கு
 20. நேக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகோணும்.....

  பெண்கள்ல சசி , அகிலா ,எழில் ஒகே ... அட சங்கவிய கூட சேர்த்தாக்க பரவா இல்ல..... அது ஏனுங்கோ ஸ்பை , கோகுலை எல்லாம் சேர்த்தீங்கோ....?

  சொல்லுங்க ஜி சொல்லுங்க ....!

  பதிலளிநீக்கு
 21. அவியல் அட்டகாசம் ...! அடுத்தடுத்து வட , பாயாசம் , வத்தக் குழம்பு ன்னு போட்டு அசத்துங்க ஜி ...!

  பதிலளிநீக்கு
 22. "போஸ்ட்ல போட்ட புடவை பார்த்துதான் நீங்க ராஜின்னு கண்டுப்பிடிச்சேன்னு ஒரு பதிவர் வந்து சொல்லி இருக்கார்." அந்தப் பதிவர் நான்தானுங்க (திண்டுக்கல் தனபால்கூட இருந்தேனே மறந்துடுச்சாங்க)
  சுடுதண்ணி போடறது எப்படினு கத்துக்குடுப்பீங்கனு வந்தா எல்லாருக்கும் தண்ணீர் கொடுத்து புண்ணியம் (ஓட்டு) தேடிக்கிட்டீங்க.(இப்ப ஞாபகம் வந்துச்சாங்க?)

  பதிலளிநீக்கு
 23. காலையில விழாவை ஒரு கலக்கு கலக்கிட்டீங்களாமே! நான் மதியம்தான் வந்தேன்! நீங்கதான் ராஜியா இருப்பீங்கண்ணு நினைச்சேன்! தயக்கத்தை உதறி பேச ஆரம்பிக்கிறதுக்குள்ள எஸ்கேப் ஆயிட்டீங்க! நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 24. அபயாஅருணா9/02/2013 8:31 pm
  புடவை கல் வேலைப்பாடு பார்த்து உங்களை identify செய்தது நான்தான்.

  ippadi oru name maranthutengaley

  பதிலளிநீக்கு
 25. ஜீவன்சுப்பு9/03/2013 1:06 pm
  நேக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகோணும்.....

  பெண்கள்ல சசி , அகிலா ,எழில் ஒகே ... அட சங்கவிய கூட சேர்த்தாக்க பரவா இல்ல..... அது ஏனுங்கோ ஸ்பை , கோகுலை எல்லாம் சேர்த்தீங்கோ....?

  சொல்லுங்க ஜி சொல்லுங்க ....!

  ivaraium antha listla serthu iruntha. ippadi oru kelvi ungala parthu kettu irupara

  பதிலளிநீக்கு
 26. mokkai poda koodanthunu solli thanae shield koduthanga....


  ippadiya... romba over udampukku nallathilla..


  sivaparkavi

  பதிலளிநீக்கு