Tuesday, September 03, 2013

பதிவர் சந்திப்பில் ராஜிக்கு அல்வா கொடுத்த பிரபல பதிவர்- சொல்வதெல்லாம் உண்மை

வணக்கம் நேயர்களே! வழக்கமா நம்ம ஸ்டூடியோக்கு அழுது வடிஞ்சுக்கிட்டு தான் எல்லோரும் வருவாங்க. ஆனா, இன்னிக்கு “ராஜி”ன்னு ஒருத்தங்க வந்திருக்காங்க. அவங்க பார்க்க அழகா, அறிவா, நல்லா படிச்ச மாதிரி இருக்காங்க(யாரும் கல்லெடுக்காதீங்க ஸ்டூடியோவுல எழுதி கொடுத்ததை படிச்சேன். மத்தப்படி எனக்கும் இந்த ஸ்டேட்மெண்டுக்கும் எந்த சம்பந்தம் இல்லை).  வந்ததிலிருந்து மகிழ்ச்சியாதான் இருக்காங்க. அப்படி இருக்கும்போது ஏன் நம்ம ஸ்டூடியோக்கு வந்தாங்கன்னு தெரியலை. அவங்களையே கேட்டு பார்ப்போம்!!

          

வணக்கம்மா!

வணக்கம் லட்சுமி மேடம்!

ம்ம்ம் உங்க பேரு என்ன?!

என் பேரு தெரியாதா?! ராஜியக்கான்னு சொல்லி பாருங்க. சும்மா தமிழ்நாடே அலறும்.

(இது லூசா?! இப்போல்லாம் ரஜினி சார் வாய்சுக்கே யாரும் அதிர்வதில்லை.) ராஜி உங்க பேருன்னு தெரியுது. பேருக்கு பின்னாடி வர்ற அக்கான்றது நீங்க படிச்சு வாங்குன பட்டமா?!

ம்ஹூம் எழுதி வாங்குன பட்டம்.

என்னது எழுதி வாங்குன பட்டமா?! புரியலியே!

நான் பிளாக்கரா இருக்கேன். ”காணாமல் போன கனவுகள்”ன்ற பேருல ஒரு வலைப்பூ எழுதுறேன். அதுல எனக்கு தெரிஞ்ச மாதிரி மொக்கை போடுவேன். எங்க நல்லா இருக்குன்னு சொன்னா நிறைய எழுதுவாங்களோன்னு பயந்துக்கிட்டு சூப்பர், ஆஹா,அருமைன்னு கமெண்ட் போடுவாங்க. அப்படி போடுறவங்களாம் மரியாதையா அக்கான்னு சொன்னாலாவது கொஞ்சம் அடங்கும்ன்னு சொல்லி பார்த்தாங்க. ம்ஹூம் அப்படியும் அடங்காம என் மொக்கைகள் தொடருது.

ம்ம் சரிம்மா! உங்க கஷ்டங்களை சொல்லுங்கம்மா! அப்போதான் எங்களால் ஆன ஹெல்ப்லாம் பண்ண முடியும்!

டெய்லி போஸ்ட் போட மேட்டர் கொடுக்கனும், போஸ்ட்க்கு போட்டோ தரனும், ஆஹா! ஓஹோ!ன்னு கமெண்ட் போடனும். ஒவ்வொரு பதிவுக்கும் 50, 60ஓட்டு கிடைக்கனும், முடியுமா உங்களால?!

என்னம்மா! என்னென்னமோ சொல்லுறே!

நீங்கதானே ஹெல்ப் பண்றேன்னு சொன்னீங்க!!

அம்மா, தாயே! முதல்ல உங்க கஷ்டத்தை சொல்லுங்க.

ஏன்?! கஷ்டம் இருந்தாதான் இங்க வரனும்11?

ஆமாம்மா! அப்போதானே நீங்க அழுவீங்க, அடிதடி நடக்கும், அதை பார்த்து நாங்க சிரிப்போம். எங்க ரேட்டிங்கும் கூடும்.

ஓ! சரி, உங்களுக்கு ரேட்டிங் கூடனும் அவ்வளவுதானே! சரி ஒரு மேட்டர் சொல்றேன், அழுகை, சிரிப்பு, கண்ணீர்ன்னு எல்லாமே கலந்து இருக்கும். ஆனா, அது எனக்கு வந்த கஷ்டமில்ல. என் லைஃப்ல நடந்த நெகிழ்ச்சியான தருணத்தை சொல்லுறேன்!!

சிக்கிட்டேன், இனி தப்பவா முடியும்!! சொல்லுங்கம்மா ராஜி!!

ம்ம்ம் போன ஞாயித்து கிழமை வடபழனி மியூசிக் அகாடமில தமிழ் வலைப்பூ எழுதுற பதிவர்கள்லாம் சந்திச்சுக்கிட்டாங்க.

ஆமா, எனக்கும் தெரியும். அதான் ஃபேஸ்புக், ட்விட்டர்ன்னு எங்க பார்த்தாலும் ஓடிக்கிட்டு இருந்துச்சே!

அந்த சந்திப்புக்கு நான் போய் இருந்தேன்.

ம்ம் நான் என்னை பெத்தவங்களுக்கு ஒரே பொண்ணு. சகோதர பாசத்தை அறியாதவ. இங்க போய் சேர்ந்த பின் தான் சகோதர பாசம் திகட்ட திகட்ட கிடைக்குது. கணேஷ் அண்ணா, மயிலன், ஜீவா, பிரகாஷ், கருண், சௌந்தர், தனபாலன், மோகன்குமார், மதுமதி, சசி, எழில்,ன்னு சகோதர பாசத்துல நனைஞ்சுக்கிட்டு இருந்த என்னை ரொம்ப நனையாதிங்கக்கா! சளி புடிச்சுக்கும்ன்னு துண்டெடுத்துக்கிட்டு ஓடி வரும் அளவுக்கு காப்பாத்தும் ஆவி, ரூபக், சதீஷ் செல்லதுரை, ஸ்கூல் பையன், அரசன், சிவா, சீனு, குடந்தையூரார்ன்னு என் சகோதரர்கள் லிஸ்ட் நீளும்.

ம்ம்ம் சரி உங்க பிரதாபம் போதும். நிகழ்ச்சி பத்தி சொல்லுங்கம்மா!!

யார் யாருல்லாம் வந்தாங்கன்னா!!

அம்மா! அம்மா!  ஒரு நிமிசம் உங்களுக்கு ஒரு மணி நேரம்தான் தந்திருக்கோம். அதுக்குள்ள முடிக்கனும். ப்ளீஸ் அங்க நடந்ததை மட்டும் சொல்லுங்க.

இத பாருங்க என்னை அக்கான்னு கூப்பிட்டாதான் பேசுவேன், இல்லாட்டி பேச மாட்டேன்.

(இதென்னடா வம்பா போச்சு! பாதி ஸூட்டிங் நடந்த பிறகு யாரை கூப்பிடுறது!?) சரிங்க ராஜியக்கா!


ம்ம்ம் எல்லோருக்கும் ஒரு ஹலோ சொல்லி முடிச்ச பின் ஒருத்தர் பக்கத்துல வந்து சட்டையில குத்தியிருந்த தன் அடையாள அட்டையை மறைச்சுக்கிட்டு சகோதரி நான் யார் தெரியுமான்னு கேட்டார். இவ்வளவு கிட்டக்க நிக்குறீங்க உங்களை நல்லா தெரியுது ஆனா, யார்ன்னு தெரியலைன்னு சொன்னேன்.  கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்கன்னு சொன்னார். எம்புட்டு யோசிச்சும் யார்ன்னு தெரியலை. நீங்க யார்ன்னு கேட்டேன்.

குபீர் சிரிப்போடு, தங்கச்சி நாந்தான் நாய் நக்ஸ் அண்ணன்மான்னு சொன்னாரு. இம்புட்டு தெளிவா இருக்கீங்களே! நீங்க நாய் நக்ஸ் அண்ணனா இருக்க முடியாதேன்னு கேட்டேன். அப்புறம், கணேஷ் அண்ண சொன்னதாலதான் உண்மைன்னு நம்புனேன்.

அடுத்து ”உணவு உலகம்” சங்கரலிங்கம் அண்ணா! மனோ, விக்கியண்ண மூலம் இவரை பத்தி தெரிஞ்சிருந்தாலும் அவர் பக்கம் போக பயம். ஆனா, அவர் ரொம்ப நாள் பழக்கம் போல நலம் விசாரிச்சார். எனக்கு இந்த சந்திப்பில் ரெண்டு அண்ணாக்கள் கிடைச்சாங்க.

ம்ம்ம் நல்லதும்மா! அப்புறம்,

ரெண்டு சாப்பாட்டுக்கடையும் பக்கத்துல பக்கத்துல உக்காந்து நிகழ்ச்சியை பார்த்துட்டு இருந்துச்சு!!

சாப்பாட்டு கடையா?! அது யாரு?!

அதான் கோவை நேரம் ஜீவாவும், கடல் பயணங்கள் சுரேஷ் குமாரும். அவங்க ஹோட்டல், டூர் பத்திதான் எப்பவும் பதிவா போடுவாங்க. அதனால அவங்களுக்கு அந்த பேரு.

ம்ம்ம் அப்புறம்மா!!

என் பசங்களோட சகோ வெங்கட் நாகராஜோட மகள் ரோஷினி நல்லா ஒட்டிக்கிட்டா. எதிர்க்க இருக்கும் விஜயா மாலுக்கு கூட்டி போய் வந்தேன். சசியோட ரெண்டு பிள்ளைகளும் செம வாலுங்க. ஒரு நிமிசம் ஓயலை. இங்கிட்டும், அங்கிட்டும் ஓடிக்கிட்டு இருந்துச்சுங்க. பட்டிக்காட்டானோட குட்டீசும் செம அழகு. அவர் மகன்கிட்ட அத்தைன்னு கூப்பிடுன்னு ஒரு முறை தான் சொன்னேன். பார்க்கும் போதெல்லாம் அத்தைன்னு கூப்பிட்டு பாச மழை பொழிஞ்சான். அப்புறம் சதீஷ் செல்லதுரையோட வொயிஃபும், மகனும்கூட நல்ல பாசமா பழகுனாங்க.

ம்ம்ம் உங்களை பேச சொல்லலியா?! பேச சொன்னாங்க. சரின்னு போய் மைக் எடுத்து என் பேரையும், என் பிளாக் பேரையும்தான் சொன்னேன். போதும் தாயே அறுக்காதேன்னு விசிலடிச்சு இறக்க பார்த்தாங்க.

அச்சச்சோ! மேடையை விட்டு இறங்கிட்டீங்களா?! எவ்வளவு ஆசையா மேடையேறி போய் இருப்பீங்க.

நான் யாரு ராஜியாச்சே! பிளாக்குக்கு வந்தா பதிவை படிக்காமயே கமெண்ட் போட வாய்ப்பிருக்கு. ஆனா, இங்க முழுசா என் பேச்சை கேக்காம போக முடியாது அதுமில்லாம, எங்க வீட்டுக்காரரும், அப்பா, பசங்கலாம் என்னை பேச விட மாட்டாங்க. இதான் சான்ஸ்ன்னு ஒரு மாசமா கண்ணாடி முன் நின்னு ட்ரெயினிங் எடுத்து வந்திருக்கேன்னு சொல்லி மனப்பாடம் பண்ணிட்டு வந்ததை பேசிட்டுதான் இறங்கினேன்.

என் பிளாக்குக்கு எதாவது உடம்பு சரியில்லைன்னா தமிழ்வாசி பிரகாஷ் கிட்டதான் சொல்லுவேன். அதனால, எப்பவாவது போன்ல பேசுவோம். பதிவர் சந்திப்புக்கு வரப்போறார்ன்னு தெரிஞ்சதும்.., தம்பி பிரகாஷ், உங்க ஊருல காலேஜ் ஹவுஸ் ஹோட்டல் எதிர்க்க இருக்கும் பிரேமா விலாஸ் கடை தெரியுமான்னு கேட்டேன். தெரியுமேக்கா. அங்கதான் ரெகுலரா நான் அல்வா வாங்குவேன்னு சொன்னார்.

சரிப்பா! அந்த அல்வான்னா, என் பிள்ளைகளுக்கு பிடிக்கும் கொஞ்சம் வாங்கி வான்னு ஒரு மாசம் முன்னாடியே சொன்னேன். ”சரிக்கா”ன்னு அவரும் சொன்னார். மறுபடியும் போன வாரமும் நினைவுப்படுத்தினேன். நினைவு இருக்குக்கா! நாளைக்கு வாங்கி எடுத்து வரேன்னு போன வெள்ளிக்கிழமை சொன்னாரு,

ஞாயித்துக்கிழமை பதிவர் சந்திப்புல பார்த்து அல்வா எங்கேன்னு கேட்டா. வாங்கி வந்ததுலாம், நைட் சைட் டிஷ்ஷா காலியாகிடுச்சுன்னு சொல்லி அல்வா கொடுத்துட்டான் லட்சுமி மேடம்!!

அழாதீங்கம்மா! அழாதீங்க!! உங்க வேதனை என்னன்னு எனக்கு புரியுது. கண்ணை துடைச்சுக்கோங்க.

இல்ல மேடம், நான் என்ன கேட்டேன் பிரகாஷ்கிட்ட, ஒரு தாய்மாமனா என் பொண்ணுக்கு கம்மல் வாங்கி வா!, என் மகனுக்கு வாட்ச் வாங்கி வா!ன்னா சொன்னேன். ஆஃப்டர் ஆல் ஒரு கால் கிலோ அல்வா அதை வாங்கிட்டு வரலியே! அதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு. என்னை கொஞ்சம் அழ விடுங்க மேடம்!!

நேயர்களே! இப்போ ராஜி ரொம்ப துக்கத்துல இருக்குறதால அவங்களால சரியா பேச முடியலை! அதனால, இதோட தொடர்ச்சியை நாளைக்கு பார்க்கலாம்.

 நாளை:

மரு.மயிலனின் புத்திசாலித்தனம்
பொறுப்பில்லாத வரவேற்பு குழு,
பந்தியில் ராஜி ஏமாந்த கதை
ராஜி கேமரா மிஸ் ஆன கதை..,
இதைலாம் பார்க்கலாம்.

ஒரு கால் கிலோ அல்வாவை சகோதரன்கிட்ட வாங்க முடியாத சோகம் எந்த பொண்ணுக்கும் வரக்கூடாது. ராஜியோட நிலையை எண்ணி கனத்த மனசோட இன்றைய நிகழ்ச்சியை நிறைவு செய்கிறேன். நன்றி! வணக்கம்!

36 comments:

  1. ஆபீசர் கிட்டச் சொல்லுங்க.அடுத்தமுறை இருட்டுக்கடை அல்வா கிடைக்கும்!

    ReplyDelete
    Replies
    1. ம்ஹூம். இங்க அல்வா மேட்டர் இல்ல ஐயா! அதை வாங்கி குடுக்காத பதிவரை பத்திதான்!!

      Delete
  2. தமிழ் மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன்

    ReplyDelete
  3. ஐயோ அம்மா தாங்க முடியலையே... இந்த அக்கா கிட்ட இருந்து யாராவது காப்பாத்துங்களேன்...

    ReplyDelete
    Replies
    1. ஒரு பதிவுக்கே இந்த கூப்ப்ப்ப்ப்படா?!

      Delete
  4. அடுத்த தடவை பிரகாஷ் கிட்ட கம்மல் வாச் வாங்கிட்டு வரச்சொல்லுங்க... அப்பத்தான் அல்வா கிடைக்கும்.... (உண்மையான அல்வா இல்லை)

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும் 25 ரூபா அல்வாக்கே வழியை காணோம். இதுல 25000 ரூபா கம்மல் எப்படி வரும்?!

      Delete
  5. //நைட் சைட் டிஷ்ஷா காலியாகிடுச்சுன்னு சொல்லி அல்வா கொடுத்துட்டான்//

    பிரகாஷ்.... என்னப்பா இது? எது எதையெல்லாம் சைட் டிஷ்ஷா யூஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லை?

    ReplyDelete
    Replies
    1. அதானே! நல்ல சைட் டிஷ் எதுன்னு ஸ்கூல் பையன்கிட்ட கேட்டிருக்கலாமில்ல பிரகாஷ்!!

      Delete
  6. Solvathellam unmai program'ku mathippe illaama pannittanga raaji akks

    ReplyDelete
    Replies
    1. விலை மதிப்பில்லாததா ஆகிடுச்சுன்னுதானே சொல்ல வர்றீங்க?!

      Delete
  7. Night Briyaani thane saapitten. No halva. Yempa school paiya, evening'la irunthu night varai naan un kooda thane irunthen. Maranthutiya.

    ReplyDelete
  8. ஒரு கால் கிலோ அல்வாவை சகோதரன்கிட்ட வாங்க முடியாத சோகம் எந்த பொண்ணுக்கும் வரக்கூடாது//

    உண்மையான ஏக்கம்தான்!

    ReplyDelete
  9. பதிவர் விழாவில் யாருக்கும் அல்வா கொடுக்காமலேயே ஒரு கலக்கு கலக்கி விட்டீர்கள் போலிருக்கிறது. காளியம்மன் கோயிலுக்கு கூழ் வார்த்து கொண்டாடிய மகிழ்ச்சி உங்கள் பதிவில் தெரிகிறது.

    ReplyDelete
  10. இனி பிரகாஷ் அல்வா வாங்காமல் வருவாருங்கறீங்க ?

    ReplyDelete
  11. "அக்காவை பெற்ற தம்பிகளுக்கு தான் தெரியும்.. நீள்பேச்சு, அறுவையில் சேர்ந்ததில்லை என்பது"

    ReplyDelete
  12. ஹா ஹா .. உங்க சேட்டை தாங்கல

    ReplyDelete
  13. // தமிழ்நாடே அலறும்....///

    பதிஊலகமே அலறுகிறது... ஹா... ஹா...

    ReplyDelete
  14. 50..60 ஓட்டா நல்ல மெசினா வாங்கி வையுங்க

    ReplyDelete
  15. ஹஹா சூப்பரா கீது

    த ம +1

    ReplyDelete
  16. யக்கா ரொம்ப அழுது அப்புறம் உங்க தம்பிமார்களையும் அழவிடாதீங்க...

    அப்புறம் பதிவர் சந்திப்புக்கு ப்ளைட்டில் வந்த ஒரே பதிவர் நீங்கதான் அதைப்பத்தியும் பதிவு போடுங்க வரலாறு முக்கியமக்கா... முக்கியம்...

    ReplyDelete
  17. solvathellam unmai ungalai vidalaya raji kaa.


    ennada puthusa oru sontham kooduthenu pakurengala. ungaluku neraya sagos irukaga avaga koda naan oru sagothari ini.

    ini naangalum daily varuvomley

    ReplyDelete
  18. அப்பாடா! காலையில் விழாவுக்கு வராம தப்பிச்சேன்னு பார்த்தா இங்க வந்து மாட்டிக்கிட்டேன்ல! சீக்கிரமே கிளம்பிட்டீங்க போல! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  19. சூப்பர், ஆஹா,அருமை அக்கா

    ReplyDelete
  20. அல்வா வாங்கிக்கொடுத்தாலும் அல்வா கொடுத்திட்டார்னு சொல்வீங்க, அல்வா வாங்கிக்கொடுக்கலைன்னாலும் அல்வா கொடுத்திட்டார்னு சொல்றீங்க. கலக்கல் பதிவு ராஜி.

    ReplyDelete
  21. ''இத பாருங்க என்னை அக்கான்னு கூப்பிட்டாதான் பேசுவேன், இல்லாட்டி பேச மாட்டேன்.''
    சரி சரி நாங்களும் இனி அக்கா அக்கானே கூப்பிடறோம் சரிங்களா அக்கா!

    ReplyDelete
  22. பதிவர் சந்திப்பை நல்ல கலகலப்பாக ஆக்கிவிட்டீர்கள்.

    ReplyDelete
  23. good narration.... akka



    sivaparkavi

    ReplyDelete
  24. ஏம்பா பிரகாசு இப்படி பண்ண..இப்ப அக்கா எப்புடி அழுவுது பாரு..இந்த பாவம் சும்மாவிடுமா..

    ReplyDelete
  25. ஹா...ஹா...நாங்கள் நேரில் கண்டுக்க முடியவில்லையே :))))

    எத்தனை சகோதரர்கள் கிடைத்திருக்கிறார்கள் பிறகு என்ன அழுகை ? நீங்கள் அவர்களுக்கு அல்வாகொடுத்திட மாட்டீர்கள் :))))))

    ReplyDelete
  26. மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.

    ReplyDelete