ஹலோ ராஜி மேடம்!! சாரி சாரி, ராஜியக்கா! நேத்து மனசு விட்டு அழுததால உங்க மனபாரம் நீங்கிடுச்சா?! மிச்ச கதைலாம் பேசலாமா?!
ம்ம்ம்ம் பேசலாம் லட்சுமி மேடம்!!
மகளை பார்த்துட்டு பெங்களூருல இருந்து ப்ளைட் பிடிச்சு ஞாயித்துக்கிழமை காலைல 8.30க்கு சென்னை மீனம்பாக்கம் வந்தேன். அடடா! பதிவர் சந்திப்பு 9 மணிக்கு தொடங்குமேன்னு டாக்சி பிடிச்சு மண்டபம் வந்தேன். வந்ததும், என் சொந்தங்களை பார்த்ததும் பரவசமாகி சட்டுன்னு இறங்கி டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்பிட்டேன். மண்டப்த்துல வந்து பார்த்தப் பின் தான் தெரிஞ்சது கேமரா டாக்சிலயே விட்டுட்டேன். அடடா, படம் எடுத்து ஒரு மாசத்துக்கு போஸ்ட் தேத்தலாம்ன்னு நினைச்ச என் நினப்புல மண்.
(அப்பாடி! பதிவுலகம் தப்பிச்சுது) அப்புறம்மா!
சுய அறிமுகம் நடந்துக்கிட்டு இருக்கும்போது, தூரமா நின்னுட்டு இருந்த ஜீவா இங்க வாங்கக்கான்னு கூப்பிட்டார். என்னன்னு தெரியலியே! ஒரு வேளை கோவை காட்டன் புடவை வாங்கி வந்து அக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்துறாரோன்னு நினைச்சுக்கிட்டே போனேன். ஆகா, இந்த பதிவர் உங்களை பார்க்கனும்ன்னு சொன்னார். யார்ன்னு தெரியுதா பாருங்கன்னு சொன்னார். யாருன்னு தெரியலை, ஒரு க்ளூ குடு ஜீவானு சொன்னேன்..அதுக்கு அந்த பதிவரே, நான் திருத்தணியை சேர்ந்தவன்மான்னு சொன்னதும்தான் பட்டுன்னு தோணுச்சி அது,”விக்கியண்ணா”ன்னு. சொல்லாம கொள்ளாம வந்து ஆச்சர்யத்துல ஆழ்த்திட்டார் மனுசன்.
பதிவர் சந்திப்புல பிரியாணிலாம் போடுறாங்கன்னு கேள்விப்பட்டதிலிருந்து டெய்லி ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு ஃபுல் கட்டு கட்ட ரெடியா இருந்தேன். ஆனா, பாருங்க தட்டெடுத்து போய் நீட்டினதும் வெஜ் பிரியாணி வந்து விழுந்துச்சு!! இது யார் பண்ண சதின்னு தெரியலை!!
அச்சச்சோ! இத மாதிரியான கொடுமையெல்லாம் கூடவா நடந்துச்சு?!
ஆமாங்க. சரி, சிக்கன் ஃபீசாவாது எடுத்து சாப்பிடலாம்ன்னு பார்த்தா ஒரு சின்ன தயக்கம். என் தம்பிகள் யாரும் பக்கத்தில் இல்லாததால எடுத்துக்கலை. ஞாயித்துக்கிழமை வெறும் வெஜ்ஜோட முடிஞ்சு போச்சு!!
இப்படியே அடுத்த வருசம் காது குத்து, அதுக்கடுத்த வருசம் பொண்ணுக்கு அப்பாவான சேதி, அதுக்கு காது குத்து, புது வீட்டு கிரகப்பிரவேசம், மகளோட சடங்கு, கல்யாணம்ன்னு பதிவர் சந்திப்புலயே அழைப்பு வச்சு இன்விடேசன், போன் செலவை குறைக்கும் மயிலனின் புத்திசாலித்தனத்தை பார்த்து, இப்படிதான் நாமளும் இனி சிக்கனமா நடந்துக்கனும்ன்னு முடிவு பண்ணிட்டேன் மேடம்.
அப்புறம் மதுமதியோட 90டிகிரின்னு ஒரு குறும்படம் போட்டாங்க. நல்லா இருந்துச்சு. முதல்ல அந்த பொண்ணு ஏன் பிச்சை எடுக்க போகுதுன்னு யூகிச்சுட்டேன். ஆனா, ஜியாமிண்ட்ரி பாக்ஸ் வாங்காம அப்பாக்கு மருந்து இல்லாட்டி வேற யாருக்காவது அந்த காசுல எதாவது அந்த பொண்ணு செய்யும்ன்னு முடிவை யூகிச்சு வச்சிருந்தேன். ஆனா, என் யூகம் பொய்யா போச்சு! அந்த பொண்ணு ஜியாமிண்ட்ரி பாக்ஸ் வாங்கிட்டு போற மாதிரி முடிச்சிருந்தார்,
அதும் சரிதான். அந்த பொண்ணு நல்லா படிச்சு வந்தாதானே இதுப்போல இருக்குறவங்களுக்கு உதவ முடியும்!!
நீங்க சொல்றது சரிதான் ராஜியக்கா!
சேட்டைக்காரன், மோகன்குமார், சதீஷ் எழுந்தின புத்தகம் வெளியிடும் நேரம் வந்துச்சு. நான் அப்பவே பஸ் பிடிச்சாதான் நைட் 9மணிக்காவது வீட்டுக்கு போக முடியும்ன்னு புறப்பட்டு வந்துட்டேன். இனி நான் மொக்கை போடக்கூடாதுன்னு எச்சரிச்சு எனக்கொரு ஷீல்ட் கொடுத்ததாவும், அதை கணேஷ் அண்ணா வாங்கி வச்சிருக்குறதாவும் சொன்னார்.
சேட்டைக்காரன், மோகன்குமார், சதீஷ் எழுந்தின புத்தகம் வெளியிடும் நேரம் வந்துச்சு. நான் அப்பவே பஸ் பிடிச்சாதான் நைட் 9மணிக்காவது வீட்டுக்கு போக முடியும்ன்னு புறப்பட்டு வந்துட்டேன். இனி நான் மொக்கை போடக்கூடாதுன்னு எச்சரிச்சு எனக்கொரு ஷீல்ட் கொடுத்ததாவும், அதை கணேஷ் அண்ணா வாங்கி வச்சிருக்குறதாவும் சொன்னார்.
நம்ம வீட்டு விசேசத்துக்கு, நம்ம வீட்டு பிள்ளைகளே ஒரு நிமிசம் ஓய்ஞ்சு நிக்கும். ஆனா, சீனு, சிவா, பிரபா, அரசன், ஆவி, செந்தில், மதுமதி, இன்னும் பெயர் தெரியா சகோதரர்கள் ஓடின ஓட்டம் இருக்கே! தன் சொந்தங்கள் வரலை. அதே நேரத்துல அவங்களால எந்த உபகாரமும் நடக்க போறதில்லை. ஆனாலும், சந்திப்புக்காக கிட்டத்தட்ட ஒரு மாசமா ஓடி..., ஓடி..., சான்சே இல்ல . அடுத்த வருசமும் இதுப்போன்ற நிகழ்ச்சியை நடத்தனும்.
நாலு ஆம்பிளைங்க இருக்குமிடத்தில் ஒரு பொம்பளை போனால் வயசை மறந்து பார்ப்பாங்க. கமெண்டி இல்லாட்டி ஒரு கோணல் சிரிப்பாவது இருக்கும். ஆனா, இத்தனை பேர் இருந்த அரங்கத்தில் ஒரு கெட்ட பார்வை ஒருத்தரும் பார்க்காம, இவங்க எங்க சகோதரி, எங்களை நம்பி இவங்க வீட்டில் அனுப்பி இருக்காங்கன்னு கண்ணியம் காத்தாங்க.
இதை விட வேறென்ன வேணும். இந்த தோழமைக்காகவே, சின்ன சின்ன அசவுகரியங்களை தாங்கிக்கலாம்.
ஓ! அப்படியா!! நீங்க சொன்னதுக்கப்புறம் எனக்கே கலந்துக்கனும்ன்னு தோணுது. அடுத்த வருசம் நானும் கலந்துக்குறேன்மா! என்னையும் கூப்பிடுவீங்களா?!
யாருக்கும் தனிப்பட்ட அழைப்பு இல்ல. ஆனா, பதிவரா இருந்தா உலகத்தின் எந்த மூலைல இருந்தும் வரலாம்!
அப்படிங்களா?! நான் இன்னிக்கே பிளாக் ஆரம்பிச்சுடுறேனுங்க.
வாங்க! வாங்க! வந்து ஜோதில ஐக்கியமாகுங்க!
வாங்க! வாங்க! வந்து ஜோதில ஐக்கியமாகுங்க!
அப்படிச் சொல்லுங்க சகோதரி... இனி நிறைய பேர் பிளாக் ஆரம்பித்து விடுவார்கள்...
ReplyDeleteஅப்போ அடுத்த வருசம் பெரிய மண்டபமா பார்க்கனும்ன்னு சொல்லுங்க!!
Delete// இந்த தோழமைக்காகவே, சின்ன சின்ன அசவுகரியங்களை தாங்கிக்கலாம்... //
ReplyDeleteஇதை விட வேறென்ன வேணும்...? வாழ்த்துக்கள் சகோ...
வாழ்த்துக்கு நன்றி அண்ணா!
Deleteஅட பாவமே!நான் இயல்பான சைவம்!நீங்க சூழ்நிலை சைவமா!
ReplyDeleteம்ம் இது யார் பண்ண சதின்னு தான் தெரியலை ஐயா!!
Delete//தட்டெடுத்து போய் நீட்டினதும் வெஜ் பிரியாணி வந்து விழுந்துச்சு!!
ReplyDeleteஇந்தக் கொடுமை யாருக்குமே நடக்கக் கூடாது..
அதும் தம்பிகள் படைச் சூழ இருக்கும்போது இப்படி நடக்கலாமா?!
Deleteஅட்டகாசம் அக்கா ...
ReplyDelete//இதை விட வேறென்ன வேணும். இந்த தோழமைக்காகவே, சின்ன சின்ன அசவுகரியங்களை தாங்கிக்கலாம்.
//
அன்று நாங்கள் ஓடியதின் பலன் இன்று தெரிந்து விட்டது அக்கா ,,,,
மிக்க மகிழ்ச்சி
Delete//நான் அப்பவே பஸ் பிடிச்சாதான் நைட் 9மணிக்காவது வீட்டுக்கு போக முடியும்ன்னு புறப்பட்டு வந்துட்டேன்.//
ReplyDeleteபதிவர் திருவிழா பாடலையும் சேர்த்தல்ல மிஸ் பண்ணிட்டீங்க..
அதனாலதான் முன்னமயே ஓட்டம் எடுத்தேன்!!
Deleteலெக்பீஸ் கிடைக்கலைகிறது குறையா அக்கா ?
ReplyDeleteஅய்யகோ......நாங்க சின்ன பசங்க அவங்களை அக்கான்னு கூப்பிடறோம்...பைஜாமா போட்டுட்டு நீங்க அப்படி சொன்னா யூத் னு நம்பிட மாட்டோம்...
Deleteசிரிக்க வச்சிட்டீங்க சார்...
Delete
ReplyDeleteயாருக்கும் தனிப்பட்ட அழைப்பு இல்ல. ஆனா, பதிவரா இருந்தா உலகத்தின் எந்த மூலைல இருந்தும் வரலாம்!
good
முன்னாடியே சாப்பிடுங்க சாப்பிடுங்கனு சொன்னேன் நீஙுக எல்லோருக்கும் நண்ணீர் கொடுத்துக்கிட்டு இருந்தீங்க கடைசில பிரியாணிய மிஸ் பண்ணிட்டீஙக போல பல அசௌகரியத்தில இதுவும் ஒண்ணுனு வச்சிக்க வேண்டியதுதான்
ReplyDeleteஇது சும்மா காமெடிக்கு.
Deleteஉங்களை நேரில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி என்றாலும் நிறைய நேரம் பேச முடியாமல் போன குறை உண்டு
ReplyDeleteஎனக்கும்தான் ரூபக்
Deleteஓகோ...கோவைல இருந்து கோவைக்காட்டன், மதுரையில இருந்து பிரேமா விலாஸ் அல்வா, திருனெல்வேலில இருந்து இருட்டுக்கடை அல்வா,,, இப்படி யார்யார்கிட்டலாம் கேட்டு இருக்கீங்க...
ReplyDeleteம்க்கும் கேட்டுட்டா மட்டும் அப்படியே வாங்கி குடுத்தாப்பலதான் பேச்சுலாம்!!
Deleteபதிவர்கள் குணமே தன்னிச்சை.இச்சை செயலில் இச்சாசக்தி.அதில் ஞானம் கிரியை.என்னால்தான் கலந்துக்க முடியலே. அடுத்தவருடம் மதுரையாமே!தனபால் திண்டுக்கல் ஒரு பொறி வைத்துள்ளார். சிக்கிகலாமா?பார்க்கலாம் ஒவ்வொரு பங்குபெற்றோர் பதிவு ---கலந்துகொள்ளாத ஏக்கம்..
ReplyDeleteஎங்களையெல்லாம் விழுந்து விழுந்து கவனிச்ச ராஜிக்கா வெஜிடபிள் பிரியாணி....ஸாரிங்க...சாப்பிட்ட மிதப்பில கவனிக்கத் தவறிட்டோம்...
ReplyDeleteஉங்க ப்ரெசென்ஸ் ஆப் மைண்ட் யாருக்கும் வராது ராஜி !
ReplyDeleteபதிவர் சந்திப்பு அருமை . அப்புறம் டாக்ஸியில் விட்டுவிட்டு வந்த காமிரா என்னாச்சு?
ReplyDeleteநம் குடும்ப விழா அல்லவா, ஓடி ஓடி உழைத்த அன்பர்களுக்கு நன்றி....
ReplyDeleteவிக்கியை பார்த்ததும் அலறி ஒடலையாக்கும் ஹா ஹா ஹா ஹா, நான் பார்த்ததைவிட இப்போது ரொம்ப தடிச்சு போயிட்டான்....!
உண்மைதான்... குடும்பவிழாவேதான்....நினைத்தால் மனம் பூரித்துப்போகிறது...
ReplyDeleteபதிவர் சந்திப்பை இரண்டாம் முறையும் தவறவிட்டமை வருத்தம் அளிக்கிறது..!
சகோதரி கள்ளமற்ற தங்கள் கலகலப்பு பாராட்டுக்குரியது!
ReplyDeleteஎன்னால அந்த விழாவிற்கு வரமுடியவில்லை.. நான் ஸ்ரிடி கோவிலுக்கு போயிருந்தேன். விழாவிற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி..
ReplyDeleteயாருக்கும் தனிப்பட்ட அழைப்பு இல்ல. ஆனா, பதிவரா இருந்தா உலகத்தின் எந்த மூலைல இருந்தும் வரலாம்!
ReplyDeleteadada ithu theriyama pochi....
vada poocheeeeeeeeeeeeeeeee
உங்கள் பதிவு நிம்மதி அளிக்கிறது . இதில் உங்கள் உழைப்பை புறக்கணிக்க முடியாது அக்கா ............அனைவரும் உண்ட பிறகு நீங்களும் உங்கள் மகளும் உணவு உண்டது உண்மையிலேயே நெகிழ வைத்துவிட்டது ..அனைவருக்கும் தண்ணீர் குளிர்பானம் என்று நீங்கள் பரிமாறியது . மேடையில் நீங்கள் பேசிய பேச்சி எல்லாம் குடும்பத்தில் ஒருவர் போல் உணர்வு ஏற்படுத்தியது .........சில ஒளிவட்ட பதிவர்களுக்கு இது எல்லாம் புரியாது .................நன்றி
ReplyDeleteஉண்மையில் அடுத்த சந்திப்பு எப்ப நடைபெறும் என்ற ஆவலோட வீடு வந்து சேர்ந்தோம் என்பது உண்மை..
ReplyDeleteகவலை வேண்டாம் அக்கா அடுத்த சந்திப்பில் பிரியாணி கிடைக்க வழி செய்கிறோம்.
சிறப்பா சிரிப்பா பதிவர் சந்திப்பினை பகிர்ந்தமை சிறப்பு! நன்றி!
ReplyDeletehttp://kavianbukavithaikal.blogspot.in/2013/09/blog-post_4.html
ReplyDeletehi akka ithu en friend blog puthusa open pani irukaru nampa kudumpathula orutharaaitaru . nama thane varavekanum . kavithai padichitu eppadi irukunu chinnatha oru comment pottutu vanthudunga
சிக்கன் போச்சா சோழமுத்தா ? விட்றா விட்றா
ReplyDeleteஉங்களைச் சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி மேடம்..!
ReplyDelete