Thursday, September 26, 2013

நீ எங்கே?!


புலர்ந்தும், புலராத காலை பொழுதில் 
உன்னை காண ஓடிவந்த காலங்கள் 

யாவும், மறக்க முடியாமல் கனவுகளில் ...,
விழிகள் மட்டும்  ஓர்மையில்....,

இருள் சூழ்ந்த இரயில் வண்டி கூட 
உன்பகை கொண்டதால், புகை சூழ்ந்து
சிவப்பு விளக்கை எனக்காய் இட்டு 
பச்சை விளக்கோடு பாசமில்லாது போனதே!!

இடைவெளி இல்லாது ஒலித்த 
அலைபேசி கூட, 
அன்பே உன்அழைப்பு இல்லாமல்    
அலங்கோலமாகி போனதே!!


உணர்வில்லா உறிஞ்சல்களுடன் 
சுவையான காபி கூட..., 
உன் அருகாமை இல்லாது 
சுவை இல்லாது போனதே !!

நிறைவான வாதங்களுடன் 
அறை முழுவதும் நின்ற விவாதங்கள், யாவும் 
சிறையாகி போனதே!! இனி அது 
பிறையாகி வளர்வது என்னாளோ!?

கடந்த கால நினைவுகள் எல்லாம் 
கல்லறையினுள் தூங்கினாலும் 
கலங்காது வந்து செல்வேன்!!
உன் காதல் என்னுள் இருக்கும் வரை...,

11 comments:

  1. //சிவப்பு விளக்கை எனக்காய் இட்டு
    பச்சை விளக்கோடு பாசமில்லாது போனதே//

    அருமையான வரிகள்!!

    ReplyDelete
  2. மனம் லயித்தது கவிதையில்..

    மிக்க நன்றி!

    ReplyDelete
  3. இந்த நம்பிக்கை வீண் போகாது .மனம் கலங்க வைத்த அழகிய
    காதல் கவிதை .தொடர வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  4. காதல் நினைவுகள் மனதுகுள் இருக்கும் போது
    நம்மை சுற்றிய சூழல்கள் துன்பமாகவே தோன்றும்...?


    ReplyDelete
  5. உணர்வில்லா உறிஞ்சல்களுடன்
    சுவையான காபி கூட...,
    உன் அருகாமை இல்லாது
    சுவை இல்லாது போனதே !!//////

    அருமை ராஜி

    ReplyDelete
  6. வரிகள் மனம் கவர்ந்தது...

    ReplyDelete
  7. அன்பின் ஆழம் சொல்லும்
    அற்புதமானக் கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. என்னைக் காணவில்லை என்பதற்காக
    இப்படியா பட்டெல்லாம் போட்டு தேடுவது?

    நான் எங்கேயும் போகவில்லை.
    உன்னுள் தான் இருக்கிறேன்.....

    ReplyDelete
  9. உங்களைக் காணலேன்னுஇங்கே ஜோக்காளியும் தவிச்சுக்கிட்டு இருக்கான்,சீக்கிரம் வரப் பாருங்க !

    ReplyDelete
  10. தனிமையின் வேதனையைப் பிரதிபலிக்கும் கவி வரிகள் நெகிழவைக்கின்றன ராஜி.

    ReplyDelete