Monday, July 10, 2017

மாதவிடாய் காலங்களில் பூச்சூடுவது சரியா?! - ஐஞ்சுவை அவியல்

மாமோய்!

எதுக்கு புள்ள இப்படி கூவுறே?!

பிரதோஷம்ன்னு கோவிலுக்கு போனேன்., அங்க  கோவில் குருக்கள் விபூதி குங்குமம் கொடுத்தார். அப்படியே எப்பயும் போல பூ கொடுத்தாரு. ஆனா, இந்த பூ புதுசா இருக்கே. இதோட பேரு என்னன்னு தெரில... இதை என்ன பண்ணனும்ன்னும் தெரில. தலைல வச்சுக்குறதா இல்ல சமைக்குறதான்னு புரில. இதை என்ன செய்யட்டும் மாமா.



இந்த பூவோட பேரு நாகலிங்கம் பூ.  ஒரு சில சமையலுக்கு, ஒருசில பூக்கள் மரணத்துக்கு... பெரும்பான்மையான பூக்கள் கடவுளுக்கு... ஆனா, இந்த பூ மட்டும் கடவுளாவே பார்க்கப்படுது.  இது கடவுளுக்கு சூட்டப்படும் பூவில்லை. கடவுளே குடியிருக்கும் பூன்னு இதை சொல்லுவாங்க.  இதை கொஞ்சம் உத்துப்பாரு. சிவலோகத்தோட மினியேச்சர் மாதிரி இந்த பூ தெரியும். நடுவில் சிவலிங்கம், அதை சுற்றிலும் முனிவர்கள் தவம் செய்யுற மாதிரி ஒரு அமைப்பு. எல்லாத்துக்கும் மேல பல தலைகள் கொண்ட நாகம்...  இந்த பூ பூக்கும் மரத்தோட பேரு நாகலிங்க மரம். இந்த மரம்ன்னா பாம்புகளுக்கு கொள்ளை பிரியம். எல்லா பூக்களையும் போல  மரத்தோட எல்லா கிளைகளிலும் இந்த பூ பூக்காது. வேருக்கும், மரத்தின் கிளைகள் உண்டாகும் இடத்துக்கும் நடுவுல இருக்கும் இடத்தில்   ஒரு தனி கிளை உண்டாக்கி அதுலதான் இந்த பூ பூக்கும்.



வடநாட்டில இந்த பூவுக்கு ஷல்பூல்ன்னும் கைலாஷ்பதின்னும் வடநாட்டுல சொல்வாங்க. நாகவல்லிப்பூ, மல்லிகார்ஜூனப்பூன்னு தெலுங்கர்கள் சொல்வாங்க.  எல்லா மரத்தையும்போல பருவத்துக்கு ஏத்தமாதிரி இந்த மரம் மாறாம எப்பயும் பசுமையா இருக்கும். ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் பூ பூக்கும்.  இதோட காய் வளர்ந்தா கால்பந்து அளவுக்கு பெருசா இருக்கும். 100லிருந்து 550 விதைகள் ஒரே மரத்தில இருக்கும்.  பூ பூத்து காயாகி கனிய  ஒன்னரை வருசம் வரை டைமாகும். காட்டுப்பகுதிகளில் இந்த மரம் இருந்தா துஷ்ட சக்திகளிடமிருந்து காக்கும்.  ஆசிய கண்டத்துல இந்த மரம் சந்தனம், பன்னீர், தேக்கு, செம்மரம் மாதிரி இதுவும் செல்வத்தின் அடையாளமா இருக்கு. மாசு கட்டுப்பாட்டின் தன்மையை காட்டுற மெஷினாவும் இந்த மரம் பயன்படுது. காற்றில் சல்பர் இருந்தால் இதன் இலைகள் உதிர்ந்திடுமாம்.



இதன் விதைகளை சாப்பிட்டா அலர்ஜி வரும். இந்த மரத்தின் இலையை அரைத்து தோல் நோய்க்கு மருந்தா பத்து போடலாம். இலைகளை மென்னு தின்னா பல்வலி குணமாகும். மரத்து பட்டைகைளையும், காய்களையும் பக்குவப்படுத்தி  விஷஜுரத்துக்கு மருந்தா பயன்படுத்தலாம்.   பரவலா எல்லா இடத்துலயும் இந்த மரங்கள் வளர்ந்தாலும், மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகமா காணப்படுது. சின்ன பிள்ளையில கோவிலுக்கு போகும்போது பார்த்திருக்கேன். பறிச்சிக்கவான்னு கேட்டா சிவன் சொத்து குலநாசம்ன்னு சொல்லி அப்பா வேணாம்ன்னுடுவாரு. ஆனா, அப்பா மலைக்கு போக மாலை போட்டிருக்கும்போது மட்டும் வீட்டுக்கு கொண்டு வந்து சாமிக்கு போடுவாரு. அதனால, இதை சாமிக்கு போட்டுடு. இல்லன்னா பீரோவுல வை.


ம்ம்ம்ம்ம்ம் மாமா கொஞ்ச நாளுக்கு முன்னாடி ராத்திரி பூக்கும் பூக்களுக்குன்னு ஒரு சிறப்பு இருக்கும்ன்னு அது என்னன்னு கேட்டீங்க. அதுக்கு யாருமே பதில் சொல்லல. அதுக்கு என்ன மாமா பதில்?! அதை தெரிஞ்சுக்கனும் சொல்லுங்களேன்..



ம்ம்ம் இப்பவாவது கேக்கனும்ன்னு தோணுச்சே! ராத்திரில பூக்குற பூக்கள்லாம் வெள்ளை நிறத்துலதான் இருக்கும். அதுக்கு காரணம் மகரந்த சேர்க்கை நடக்கனும்ன்னுதான்.  பூக்களோட படைப்பு எதுக்குன்னா இனப்பெருக்கத்துக்காகத்தான். இந்த இனப்பெருக்கம் எப்படி நடக்குதுன்னா காற்று, பூச்சிகள், பறவைகள், விலங்குகளாலதான் நடக்கும்ன்னு உனக்கு தெரியும்ல.  பகல்ல பூக்குற பூக்கள்லாம் சிவப்பு, ஆரஞ்ச், ஊதா, மஞ்சள், நீலம்ன்னு கண்ணை பறிக்குற நிறத்துல இருக்கும். இந்த நிறத்தால் ஈர்க்கப்பட்டுதான் பூச்சிகள், மிருகங்கள், பறவைகள்லாம் பூக்களை நெருங்க. அதுங்க மேல மகரந்தத்தூள் ஒட்டிக்கிட்டு பல இடத்துல பரவி மகரந்த சேர்க்கை நடக்குது.  ராத்திரில இந்த மாதிரி கலர்ல பூத்தா இருட்டுல எப்படி பூச்சிகளை ஈர்க்கும்?!  வெள்ளை கலர்ல இருந்தா இருட்டுலயும் தெரியும்ங்குறதுக்காகத்தான் பூக்கள்லாம் வெள்ளை கலர்ல பூக்குது. அதேமாதிரி  ராத்திரி பூக்கும் பூக்கள் அத்தனையும் வாசனையா இருக்கும். மல்லி, முல்லை, இருவாட்சி, சம்பங்கி, ஜாதிமல்லின்னு இதுக்கு எடுத்துக்காட்டு. பகல்ல  பூக்குற பூக்கள்ல ஒரு சில பூக்கள் மட்டுமே வாசமா இருக்கும்.

தெரியாத விசயம் மாமா. இன்னிக்கு தெரிஞ்சுக்கிட்டேன். அப்புறம் மாமா... குழந்தை பெத்த பெண்களும், அந்த மூணு நாட்களிலும் பெண்கள் பூ வைக்கக்கூடாதுன்னு சொல்லுறாங்களே! ஏன் மாமா!



உண்மைதான்.  வாசனையான பூக்கள் வச்சுக்குறதால குழந்தைக்கு தலைவலிய உண்டாக்கும். மல்லிகைப்பூ தாய்ப்ப்பால் சுரப்பை கட்டுப்படுத்தும். பூக்கள்ல கண்ணுக்கு தெரியாத பூச்சி, புழு இருக்கும் அது குழந்தைகளை கடிக்க, காதுகளில் போக வாய்ப்புண்டு. பூக்கள்ல இருக்கும் தேனை குடிக்க தேனியும், எறும்பும் வர வாய்ப்புண்டு. அது குழந்தைகளை கடிக்கும்.  இப்பத்திய பூக்கள் சீக்கிரம் வாடிடாம இருக்க ஏதேதோ கெமிக்கல்லாம் தெளிக்குறதால தாய் குழந்தையை தோளில் வச்சிருக்கும்போது குழந்தை பூவை வாயில் வெச்சா அந்த கெமிக்கல்லாம் குழந்தை வயித்துக்கு போகும்.  அதனாலதான் பூ வைக்கக்கூடாதுன்னு சொல்றாங்க

முன்னலாம் குழந்தை பெத்த பெண்கள் குறைந்தது அஞ்சு மாசத்துக்கு அம்மா வீட்டுல குழந்தையும், தாயும் இருப்பாங்க. இல்லன்னா மாமியார் வீட்டுல இருப்பாங்க. பெரியவங்க இருக்குறதால கொஞ்சம் ‘அடக்கமா’ இருப்பாங்க.  இப்பலாம் அப்படி இல்ல. தனிக்குடித்தனம்ன்றதால ‘அடக்கமா’ இருக்குறது கொஞ்சம் கஷ்டம். அல்வாவும், மல்லி, ஜாதிமல்லியும் எதுக்குன்னு எல்லாருக்குமே தெரியும். புருசனும் மனைவியும் சேர்ந்து குழந்தையை தூக்கினா தோஷம் தாக்கும்ன்னு பெரியவங்க சொல்வாங்க. சிறு குழந்தையா இருந்தாலும் படுக்கையின் அசைவு குழந்தையின் மனநிலையை பாதிக்கும் என்பது அறிவியல் உண்மை.  இதே காரணத்துக்குதான் மாதவிடாய் காலத்துலயும் பூ வைக்கக்கூடாதுன்னும் சொல்றாங்க.

புரிஞ்சுக்கிட்டேன் மாமா.  காம்பவுண்ட்க்குள்ள தும்பை செடி வளர்ந்து வருது. அதை காலைல கொஞ்சம் பிடுங்கிடுங்க.

வேணாம் புள்ள இருக்கட்டும்.  நல்லெண்ணெயோடு அரிசி, காய்ந்த மிளகாய், மிளகு, பூண்டு, இஞ்சி, தும்பைப்பூ, அருகம்புல், முடக்கத்தான் இலை, எருக்கை இலை, துளசி சேர்த்து  காய்ச்சி தலை, உடம்பு முழுக்க தேய்த்தால் உடல்சூடு, கண் எரிச்சல், உடல் அசதி போகும். கண் திருஷ்டி, சனிதோஷமும் நீங்கும்.  தும்பை இலையை அரைச்சு பத்து போட்டா பூரான் கடி குணமாகும். மஞ்சள் காமாலை, சர்க்கரை நோய் குணமாக நாட்டு மருத்துவத்தில் தும்பை பயன்படுது. தும்பைப்பூவோடு, பெருங்காயம் சேர்த்து அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி காதில் விட்டு வர காதில் சீழ் வருதல் நிக்கும்.  முருகப்பெருமானுக்கு தும்பை பூக்கள் உகந்தது. தும்பைப்பூவை பாலில் காய்ச்சி கொடுத்தால் குழந்தைகளுக்கு நெஞ்சிலிருக்கும் கோழை வெளிவரும். இதில்லாம இன்னும் நிறைய மருத்துவ குணம் இந்த செடில இருக்கு. அதனால அதை வெட்டாத.



ம்ம்ம்ம்ம்  சரி . செடியை வெட்டலை.  நம்ம தெரு பசங்க ஒரு புதிர் கேட்டாங்க. பதில் சொல்ல தெரில. நீங்களாவது சொல்லுங்களேன்..



ஒரு பூக்கூடையில் உள்ள பூக்கள் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கு ஒருமுறை. இரு மடங்காகும். 60  நிமிடத்தில் அந்தக் கூடை நிரம்பி விட்டது. அப்படின்னா அரைக்கால் கூடை நிரம்ப எவ்வளவு நேரம் பிடிக்கும்?!

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1465853
நன்றியுடன், 
ராஜி

21 comments:

  1. பதிவின் விடயங்கள் பிரமிப்பாய் இருக்கிறது எவ்வளவு விடயங்கள் அருமை சகோ

    ReplyDelete
    Replies
    1. படிச்சதை பகிர்ந்துக்கிட்டேன். அவ்வளவ்தான்ண்ணே

      Delete
  2. சவ்வாது மேடையிட்டு பாடலில் ,நாகலிங்கப் பூவெடுத்து நாலுப பக்கம் கோட்டைக் கட்டி வா வான்னு வருதே ,அதுக்கு ஏதோ வில்லங்க அர்த்தமாமே :)

    ReplyDelete
  3. அருமையான செய்திகள். நாகலிங்கப்பூ எங்கு பூக்கும் என்பதை இப்போதுதான் அறிந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலும் சிவாலயங்களில் இந்த மரம் வைப்பாங்க. காரணம் கோவிலோட பாதுகாப்புக்கு இந்த மரத்து காய் கீழ விழும்போது பட் பட்டுன்னு பெரியளவில் சத்தம் கேட்கும். அதனால திருடங்க வர அஞ்சுவாங்கன்னு...

      Delete
    2. என்னம்மா சொல்றீங்க அப்போ சிவனுக்கு அவர் கோவிலைக்கூட திருடர் கிட்ட இருந்து காப்பாத்திக்க முடியாதா? எப்படி எங்களை காப்பாத்த போறார்?
      சும்மா தான் கேட்டேன் கோவிச்சுக்காதீங்க

      Delete
  4. உரையாடல் மூலம் விளக்கங்கள் அனைத்தும் அருமை சகோதரி...

    அப்புறம் :

    முழுக்கூடை : 60 நிமிடங்கள் என்றால், அரைக் கூடை : 60-10=50 நிமிடங்கள்...

    10 நிமிடங்களுக்கு ஒரு முறை இருமடங்காகும் என்றால், முழு கூடை ஆவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னால் அரைக் கூடை நிரம்பி இருக்கும் அல்லவா...?

    கால் கூடை : 50-10=40 நிமிடங்கள்...
    அரைக்கால் கூடை: 40-10=30 நிமிடங்கள்...

    அரைக்கால் கூடை நிரம்ப 30 நிமிடங்கள் தேவை என்பது சரி தானே சகோதரி...

    ReplyDelete
  5. பல செய்திகளின் குவியல் இன்று...அருமை
    நாகலிங்கம் பூ பற்றி பல சுவையான தகவல்களை அறிந்துக் கொண்டேன்...
    வெள்ளை பூக்கள் பற்றிய செய்திகள் சுவாரஸ்யம்...


    அரைக்கால் கூடை நிரம்ப எவ்வளவு நேரம் பிடிக்கும்?!...
    கால் மணி நேரமா...சரியா தெரியலையே..

    ReplyDelete
    Replies
    1. ம்ஹூம் முப்பது நிமிடங்கள்ப்பா

      Delete
  6. அருமை மகளே! தெரியாத செய்திகள் அறிந்தேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  7. ‘காணாமல் போன் கனவுகள்’, தகவல் களஞ்சியமா, கிடங்கா, சுரங்கமா?
    தொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டே இருப்பதால் ‘சுரங்கம்’ என்பதே பொருத்தம்.

    ReplyDelete
    Replies
    1. அப்படிலாம் இல்லப்பா. படிச்ச, தெரிஞ்ச தகவலை பகிர்ந்துக்குறேன். அவ்வளவ்தான்ப்பா

      Delete
  8. அருமையான தகவல்கள்.
    சொல்லிய விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கப்பா

      Delete
  9. என் உறவினர் வீட்டுக்கருகில் இருக்கும் இந்த மரத்தை பூக்காத காலத்தில் பார்த்து படம் எடுத்திருக்கிறேன்.

    பூச்சிகளுக்கு நிறம் தெரியுமா?

    ReplyDelete
    Replies
    1. நிற பேதம் தெரியாது. ஆனா, நிறங்களால் ஈர்க்கப்படும் சகோ

      Delete
  10. எங்கள் வீட்டருகில் நாகலிங்க மரம் இருக்கிறது. சிலர் அதைக் கோயிலில் இறைவனுக்கு வைக்கிறார்கள். தகவல்கள் அருமை.

    கீதா: எங்க வீட்டுப் பக்கத்துலையும் இந்த மரம் இருக்கிறது. அடையார் ஆலமரம் கேம்பஸ் குள்ளயும் இருக்கு. நான் புகைப்படம் எடுத்து வைத்திருக்கிறேன். சுவையான பல தகவல்கள் ராஜி!!

    விடை அரைமணிக்கூரா?

    ReplyDelete
    Replies
    1. விடை சரிதானுங்க கீதா

      Delete