Monday, July 17, 2017

ஆடி மாதம் தம்பதிகளை பிரித்து வைப்பதன் காரணம் - ஐஞ்சுவை அவியல்

 இந்தா புள்ள. மணி எட்டாகுதே! இன்னும் காஃபி கைக்கு வந்தபாடில்ல. 

இன்னிக்கு ஆடி மாசம் பொறந்திருக்கு மாமா. அதனால, நம்ம வீட்டு வாசல்லயும், எதிர்வீட்டு வாசல்லயும் கோலம் போட்டு செம்மண் இழுக்க நேரமாகிட்டுது. 

ஏன்?! பக்கத்து வீட்டு புள்ளைக்கு உடம்புக்கு முடியலியா?!

ம்ஹூம். அவளுக்கு இது தலை ஆடி. அதான் அவ அம்மா வீட்டுக்கு போயிருக்கா. 

சரி, ஆடி மாசம் புதுப்பொண்ணை அம்மா வீட்டுக்கு கூட்டி போறாங்களே! ஏன்ன்னு தெரியுமா?!

ம் தெரியுமே. ஆடி மாசம் புருசனும் பொண்டாட்டியும் ஒன்னாயிருந்தா சித்திரை மாசம் குழந்தை பொறக்கும்.   அப்ப கத்திரி வெயில் தாயையும் , குழந்தையையும் பாடாய் படுத்தும் அதான்.

இது எல்லாரும் சொல்றது. அப்படின்னா குடும்பக்கட்டுப்பாடு செஞ்சுக்கும்வரை பொண்ணுங்களை அவங்கம்மா வீட்டுக்கு அனுப்பனுமே. முதல் ஆடிக்கு மட்டும் ஏன் கூட்டி போறாங்க?! மத்த ஆடிக்குலாம் ஏன் கூட்டிப்போறதில்ல?! அப்ப ரெண்டாவது குழந்தை சித்திரை வெயில்ல பொறந்தா அவஸ்தைப்படாதா?! இல்ல ரெண்டாவது ஆடில இருந்து ஆடி மாசம் மட்டும் கருத்தரிக்காம போய்டுமா?!

ம்க்கும் இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டா எப்படி?! என்ன காரணம்ன்னு நீயே சொல்லு மாமா.



இந்த ஆடி மாசத்துலதான் விவசாயமும், இறை வழிபாட்டுலயும் மனசும், உடம்பும் லயிக்கனும்ன்னுதான் புதுப்பொண்ணை அம்மா வீட்டுக்கு கூட்டிப்போறதும், கல்யாணம் மாதிரியான சுபநிகழ்ச்சிகளை செய்யாம இருக்குறதும்.. அந்த காலத்தில் விவசாயத்தை நம்பித்தான் ஜீவனம் நடந்துச்சு. ஆடிப்பட்டம் தேடி விதைன்னு ஒரு பழமொழியே இருக்கு. ஆடியில உழவு, சேடை ஓட்டுதல்,  நடவு, விதைத்தல், நடுதல்ன்னு விவசாயம் சார்ந்த பணிகள் ஏராளம்.  ஆடியில் விவசாய வேலைகளை ஆரம்பிச்சாதான் தீபாவளி, கார்த்திகை, பொங்கல் மாதிரியான பண்டிகை நேரங்களில் அறுவடை நடந்து பண வரவு இருக்கும். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண வைபவங்களுக்குப் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும்.  அதேமாதிரி ஆடிமாசம் விதை வாங்க, வரப்பு சீர் செய்ய, கிணறை சரிப்பார்க்க, ஏர் உழ, நடவு மாதிரியான வேலைகளுக்கு அதிகளவு பணம் தேவைப்படும். அதனாலதான் அந்த மாசம் சுப காரியம் எதும் நடத்தாம விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. இதுமட்டுமில்லாம இந்த மாசத்தில பித்ரு கடன் செய்ய ஆடி அமாவாசை, ஆடிக்கிருத்திகை, கருட பஞ்சமி, நாகபஞ்சமி, ஆடிப்பெருக்கு, ஆடித்தபசு, ஆடிப்பூரம், தீமிதி, கூழ் வார்த்தல்ன்னு வரிசையா விசேச தினம் வரும். இந்த நாளில் புதுசா கல்யாணம் ஆனவங்க ஒன்னா இருந்தா மனசு சஞ்சலப்படும்ன்னுதான் புது பொண்ணை அம்மா வீட்டுக்கு அனுப்பி வைக்குறாங்க.  ஒரு வருடத்தை போக சம்பிராதாயம், யோக சம்பிராதாயம் என ரெண்டா பிரிப்பாங்க. ஆடி முதல் மார்கழி மாதம் வரையிலான ஆறு மாசமும் யோக சம்பிராதயம்.  இந்த ஆறு மாசம் தெய்வ வழிபாடு உச்சத்துல இருக்கும்.  தை முதல் ஆனி மாதம் வரையிலான ஆறு மாசத்தை போக சம்பிராதயம்ன்னு சொல்வாங்க கல்யாணம், காது குத்த, விருந்துன்னு சந்தோசத்தை அனுபவிக்கும் காலம். இப்பவாவது புரிஞ்சுக்கிட்டியா?! ஆடி மாசத்துல ஏன் அம்மா வீட்டுக்கு பொண்ணுங்களை அனுப்புறாங்கன்னு..

ம்ம்ம் இப்ப தெரிஞ்சுக்கிட்டேன் மாமா. வெள்ளெருக்கஞ்செடி வீட்டில் இருந்தா நல்லதுன்னு சொல்லுறாங்களே! உண்மையா மாமா.



எனக்குதான் இந்த மூட நம்பிக்கை பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்ல. எனக்கு தெரிஞ்சு கருவேலம் மரம் தவிர எல்லா செடியுமே நல்லதுதான்.  துளசி செடி இன்னும் நல்லது ஏன்னா அதுதான் ஒருநாளைக்கு 20 மணி நேரம் ஆக்சிஜனை வெளியிடுது. 

ம்க்கும் தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லு. அதைவிட்டு பெரியார் மாதிரி பேசாத.

ம்க்கும். சாமி இல்லன்னு என்னிக்காவது சொல்லி இருக்கேனா?! நமக்கு மிஞ்சுன சக்தி ஒன்னு இருக்கு. அதை கடவுள்ன்னு ஏத்துக்குறேன்.அதுக்காக கடவுள் பேரை சொல்லி எதாவது சொன்னா ஏத்துக்கமாட்டேன். வெள்ளெருக்கஞ்செடி வச்சிட்டு படிக்காமயே இருந்தா ப்ளஸ்டூவுல ஸ்டேட் பர்ஸ்ட் வர முடியுமா?! இல்ல வேலைக்கு போகாமயே சோறு கிடைச்சிடுமா/! மனுசனோட திருப்திக்கு இதுலாம் சொல்லிக்குறது. உண்மையான பக்‌ஷியோட ஒரு நிமிசம் சாமி கும்பிட்டு உன் செயல்ல உண்மையா இருந்தா எல்லா நல்லதா நடக்கும். உன் திருப்திக்காக சொல்றேன். எருக்கைல நீல எருக்கை, ராம எருக்கை, வெள்ளெருக்கைன்னு மொத்தம் 9 வகையான எருக்கஞ்செடி இருக்கு. எருக்கஞ்செடி தண்ணி ஊத்தாம, மழையும் பெய்யாம இருந்தாலும் 12 வருசம் சூரிய ஒளியில் இருக்கும் காத்தை உறிஞ்சு வளரும். வெள்ளெருக்கை பூவால் விநாயகருக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கை பட்டையை திரியாக்கி விளக்கு போஒட வீட்டிலிருக்கும் தீய சக்திகள் நீங்கும். வெள்ளெருக்கை வேர்ல ஜெபமாலை செஞ்சு போட்டுக்கிட்டு மந்திரம் சொன்னால் நினைச்சது நடக்கும். வெள்ளெருக்கை வேரில் செஞ்ச வினாயகரை வீட்டில் வச்சு 48 நாட்கள் குறிப்பிட்ட மந்திரம் சொல்லி கும்பிட்டால் சகல காரியமும் சித்தியாகும். தூங்கி எந்திரிச்சதும் எருக்கஞ்செடியை பார்க்குறது நல்லதில்ல. ஆனா, வெள்ளெருக்கஞ்செடியை பார்த்தா தப்பில்லன்னு ஐதீகம். இதை வீட்டிலும் வளர்க்கலாம்.    

வாஷிங் மெஷின் ரிப்பேர் ஆகிடுச்சு. சர்வீசுக்கு ஆளை வரச்சொன்னேனே சொன்னீங்களா?!



ம்க்கும் உனக்கு இதே பொழப்பா போச்சு. இருக்குற மெஷின்லயே அதிகம் கஷ்டம் கொடுக்காதது வாஷிங்க் மெஷின்னு எல்லாருக்கும் தெரியும். அதுவே உன்கிட்ட மாட்டிக்கிட்டு சீரழியுது என்னை மாதிரி... ஃப்ரிட்ஜ், மிக்சி, மாதிரி வாஷிங் மெஷின் அதிகமாக கரெண்டை இழுக்காது. வாஷிங் மெஷின்ல துணிகளை போடும்போது துணிக்கேத்த மாதிரி தண்ணி லெவலை செட் செய்யனும். கொஞ்சம் துணிகளுக்கு அதிக தண்ணியும், அதிக துணிகளுக்கு கொஞ்ச தண்ணியும் மெஷினை திணற வைக்கும்.  வாஷிங்க் மெஷின் கொள்ளளவுக்கு மேல துணிகளை போடக்கூடாது.  மாசத்துக்கு ஒருமுறையாவது டப் கிளீன் பண்ணனும். சாதாரண சோப் பவுடருக்கு பதில் சோப் லிக்விட் யூஸ் பண்ணா நல்லது. வாஷிங்மெஷின்ல இருக்கும் வாட்டர் பில்டர் வேலை செய்யுதான்னு பார்த்துக்கனும். இல்லாட்டி தண்ணில இருக்கும் மண்லாம் மெஷின்ல போய் அடைச்சுக்கும். துணி துவைச்சு முடிச்ச பின் காட்டன் துணியால துடைச்சு மூடி வைக்கனும்.  நைந்து போன துணிகளை போடக்கூடாது. ஏன்னா பஞ்சுத்துகள்லாம் டப்புக்குள் போய் அடைச்சுக்கும். அதிக நுரை வரும் பவுடரை யூஸ் பண்ணக்கூடாது.  பெட்ஷீட்டோடு மத்த துணிகளை போடக்கூடாது. வாஷிங்மெஷின்ல துணிகளுக்கு போடுற நீலத்தை போடக்கூடாது... இப்படிலாம் பார்த்துக்கிட்டா மெஷினும் நல்லா இருக்கும். 

இப்ப மெஷினை ரிப்பேர் செஞ்சுக்கொடுங்க. இனி ரிப்பேராகாம பார்த்துக்குறேன். போலீசுக்கு பதில் சொல்லி மாளாத ஒரு ஆளோட புத்திசாலித்தனத்தை பார்த்து சிரிச்சி யோசிச்சுட்டு, என் கேள்விக்கு பதில் யோசிச்சு வைங்க காஃபி போட்டு கொண்டாறேன்.


சிவப்பு மாளிகை இடப் பக்கத்திலும் நீல மாளிகை வலப் பக்கத்திலும் கருப்பு மாளிகை முன் பக்கத்திலும் இருப்பின் வெள்ளை மாளிகை எங்கிருக்கும்?

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1466655

நன்றியுடன்
 ராஜி.

21 comments:

  1. வெள்ளை மாளிகை எங்கிருக்கும்?
    in America :-)

    ReplyDelete
    Replies
    1. சரிதானுங்க சகோ

      Delete
  2. ஆடியில் பிரிதலுக்கு காரணம் புதிதெனும் ஏற்கக்கூடியதாக இருக்கின்றது.
    வாஷிங்க மெசின் விபரம் அருமை.
    தொடருங்கல் ராஜி.

    ReplyDelete
    Replies
    1. இதான் உண்மை காரணம்ன்னு சொன்னாங்க நிஷாக்கா

      Delete
  3. வெள்ளை மாளிகை எப்போதும் அமேரிக்காவில் தானே இருக்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. மாத்திட்டாங்களோன்னு நினைச்சேன்

      Delete
  4. arumai vaalthukal. angaya irukum alathu pin pakam irukum.

    ReplyDelete
    Replies
    1. அங்கதான் இருக்கு

      Delete
  5. ஆடிச் சிறப்புப் பதிவு அருமை
    கொசுறாய்த் தந்த பிற தகவல்களும்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  6. உரையாடல் மூலம் பல பயனுள்ள தகவல்கள் சகோதரி... சும்மா பிரிச்சி மேய்யுறீங்க...

    வெள்ளை மாளிகை : வாஷிங்டன் - இந்த வார புதிர் : மொக்கை (!)

    ReplyDelete
    Replies
    1. மொக்கை பகுதிலதான் இந்த வார புதிரே இருந்துச்சுண்ணே

      Delete
  7. ஆய்வு நன்று!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  8. மாமாவின் கருத்துகளை ரசித்தோம்...குறிப்பாக நம்பிக்கை பற்றி பேசியது....

    வெள்ளை மாளிகை உலகத்துக்கே தெரியுமே...ஹிஹிஹி....

    நல்லாருக்கு சகோ/ராஜி

    துளசி, கீதா

    ReplyDelete
    Replies
    1. கருத்து சொன்ன இருவருக்கும் நன்றிங்கப்பா

      Delete
  9. ஆடி மாதம்...விளக்கம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வார வழிபாட்டு மையத்துலதான் இந்த கருத்தை சொன்னாங்கப்பா

      Delete
  10. ஆடியில் புதுப்பெண்ணை பிரிந்துவாழச்சொல்லும் விளக்கம் அருமை !

    ReplyDelete
  11. அருமையான புதிய விளக்கம். ஆனா இப்பவும் கேள்வி பதிலளிக்கப்படல. இது போல நடவு, உழவு வேலை எல்லா வருசமும் நடக்குறதுனால, எல்லா வருசமும் தான அம்மா வீட்டுக்கு அனுப்பனும்? உண்மையான காரணம், பழசேதான். தலைப்பிரசவம் நல்லபடியா நடக்கனும். அதுவும் சித்தரைல வெக்கையில கூடாது.

    ReplyDelete
  12. எங்களது கிராமப்புற சகோதர சகோதரிகளுக்கு இனி எஸ்எம்எஸ் படித்தல் கடினமாக இருக்காது. தயவு செய்து பகிரவும்.
    https://play.google.com/store/apps/details?id=com.translatesms.tamil

    ReplyDelete