சனி, அக்டோபர் 07, 2017

நமக்குலாம் இப்படி ஒரு ஹஸ்பண்ட் ஏன் அமையல?! கேபிள் கலாட்டா


நிக்க, நடக்க, உக்கார, எழ... என எல்லாத்துக்கும் முருகனைதான் கூப்பிடுவேன். எந்த கடவுள் கோவிலுக்கு போனாலும் முதல்ல, அப்பனே! முருகா! ஞானப்பண்டிதா! சன்முகான்னு சொல்லி அதுக்கப்புறம் சுயநினைவுக்கு வந்து அந்த கோவில்ல இருக்கும் சாமி பேரை சொல்லி கும்பிடுமளவுக்கு முருக பக்தை..., விஜய் டிவில தமிழ்கடவுள் முருகன் விரைவில்..ன்னு விளம்பரம் வந்ததும் ஆகா, நம்ப முருகன் பத்திய கதைன்னு ஆசையா ரெண்டு நாள் உக்காந்து பார்த்தேன். ஆனா, மனசு இந்த தொடரில் ஒட்டவே இல்ல. கந்தன் கருணை மாதிரியான பழைய புராண படங்களை பார்த்தபோது இருந்த ஈர்ப்பு இந்த தொடரில் இல்ல. காரணம் என்னன்னு தெரில. இந்த நிகழ்ச்சி தினமும் இரவு 9 மணி முதல் 9.30 வரை ஒளிப்பரப்பாகுது.


இதுக்கு போட்டியா சன் டிவில வினாயகர் தொடர் ஒளிப்பரப்பாக போகுதாம். வரும் திங்கள் முதல் மாலை 7 மணி முதல் 7.30 வரை ஒளிப்பரப்பாக போகுது. இனி எல்லா சேனலும் மாரியம்மா, கெங்கையம்மா, பெருமாள்ன்னு தொடர் ஆரம்பிப்பாங்க. ஏன்னா பாம்புகளை மையமா வச்சு சீரியல் ட்ரெண்ட் முடிஞ்சு இப்ப பேய் ட்ரெண்ட் சீரியல் எல்லா சேனலிலும் ஓடிக்கிட்டிருக்கு . அடுத்து சாமி ட்ரெண்ட் ஆரம்பிப்பானுங்க.
தினமும் இரவு 8.30க்கு சரவணன் மீனாட்சி ஒளிப்பரப்பகும். எங்கூட்டுல நண்டு சிண்டுக உக்காந்து பார்க்கும். எனக்கு எரிச்சலா இருக்கு. சீரியல்ல வில்லிக்கு பேய் பிடிச்சுட்டுது. அது ஹீரோயினை கொல்லப்பாக்குது. ஆனா, ஹீரோயினோட  ஹீரோ பேயை எதுத்து நிக்குறார். என்ன ஆனாலும் சரி, நான் மீனாட்சியை காப்பாத்துவேன், அவளை விட்டுத்தரமாட்டேன்னு சொல்லி பேயை எதிர்த்து நிக்குறாரு. இதுக்காகவே இந்த சீரியல் பிடிச்சு போய் இப்ப பார்க்க ஆரம்பிச்சுட்டேன். நம்மாளுங்களா இருந்தா இந்நேரத்துக்கு தெறிச்சு ஓடிப்போவாங்க. இல்லன்னா நம்பளை பிடிச்சு பேய்க்கிட்ட கொடுப்பாங்க. எத்தனை ஜென்மம் ஆனாலும் நமக்குலாம் இப்படி ஒரு ஆள் அமையாது :-(
ஆரம்பத்துல நல்லா இருந்த தெய்வ மகள் இப்ப போரடிக்க ஆரம்பிக்குது.  சீரியல்ல லாஜிக் பார்க்க கூடாதுங்குறது ஓகே. அதுக்காக ஒரு ஹையர் போலீஸ் ஆஃபீசரை கொலை பண்ணுவாங்களாம். ஆனா, அதை கண்டுப்பிடிக்க முடியாதாம். படுத்த படுக்கையா இருந்திக்கிட்டே எத்தனை எத்தனை கொலை, சதி?! இதுலாம் டூ இல்ல ட்வெண்டி மச். கதையை எப்படி கொண்டு போறதுன்னு தெரிலன்னா முடிச்சு தொலைங்கடா பக்கி பயலுகளா!!

மதியுகம் சேனல்ல காலை 7 மணிக்கு ஆலயம் அறிவோம்ன்ற நிகழ்ச்சி, சின்ன சின்ன ஆலயங்கள் முதற்கொண்டு பெரிய பெரிய ஆலயங்கள் வரை தல வரலாற்றோடு கோவிலை கட்டியவர், இப்போதைக்கு அந்த கோவிலில் தேவைப்படும் வசதி, கோவிலை நிர்வகிப்பவர், அங்கு நடக்கும் பூஜை, விழாக்களோடு ஆலயம் பத்தின புதுப்புது தகவல்களை சொல்றாங்க.
பெப்பர்ஸ் டிவில திருமதி. ராஜராஜேஸ்வரின்ற மனநல மருத்துவர் உறவுகளுக்குள் விழும் சிக்கல்கள், மன அழுத்தம், நோய் பற்றிய பயம், பரிட்சை காய்ச்சல் மாதிரியான சிக்கல்களுக்கு அழகா, விளக்கமா, எளிமையா தீர்த்து வைக்குறார். இந்த நிகழ்ச்சி காலை 8.30க்கு ஒளிப்பரப்பாகுது.
 காஜல் வந்து ஒரு கடையில் புடவை வாங்க சொல்றார், அண்ணாச்சி தன்னோட கடையில் துணி எடுக்க சொல்றாரு.  ஒரு குட்டி பொண்ணு வந்து ட்ரெஸ்மாடல்களை சொல்லி ஆசைக்காட்து. ஃப்ரிட்ஜ், வாஷிங்க்மெஷின், மொபைல், வண்டின்னு ஆஃபர் கொடுத்து ஆளுக்காள் தங்க கடைக்கு கூப்பிடுறாங்க. செலவு பண்ண சொல்லித்தர பக்கிங்க சம்பாதிக்க ஒரு வழிய காட்டலாம். ஒரு பொருள் விற்க விளம்பரம் அவசியம்தான்., ஆனா, அதுக்காக இப்படிலாம் இம்சிக்கக்கூடாது.

கேபிள் கலாட்டா தொடரும்......

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1473939
நன்றியுடன்,
ராஜி

24 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்க்கும் நன்றிப்பா

   நீக்கு
 2. //கதையை எப்படி கொண்டு போறதுன்னு தெரிலன்னா முடிச்சு தொலைங்கடா பக்கி பயலுகளா!!//

  முண்டங்களா![இது என் பங்குக்கு!!]

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களும் கடுமையா பாதிக்கப்பட்டிருப்பீங்க போல!

   நீக்கு
 3. தங்களைப் போல்தான் தொட்டது தொன்னூறுக்கும் 'அப்பா முருகா'தான்.

  அந்தத் தொடர் நன்றாக இல்லை என சிலர் எழுதியிருந்தார்கள்.

  எங்க வீட்டிலும் சரவணன் மீனாட்சி நேரத்தில் வேறு சேனலுக்குப் போக முடியாது. அதனால் ஊருக்கு வரும்போது அவர்களுடன் நானும் பார்ப்பதுண்டு...


  பதிலளிநீக்கு
 4. அருமை ரசித்தேன். எனக்கும் தெய்வ மகள் தொடரில் அதே கோபமுண்டு. இப்பொழுது பார்ப்பதில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்ம் நானும்... இப்ப எரிச்சலா இருக்கு பார்க்க,,,

   நீக்கு
 5. விளம்பரங்களுக்கு மட்டுமே தொலைக் காட்சி என்றாகிவிட்டது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விளம்பரங்களும் போரடிக்குதுண்ணே.

   நீக்கு
 6. துளசி : தமிழ்ச்சானல்கள் பார்ப்பதில்லை. வீட்டில் எல்லோரும் மலையாளச் சானல் பார்ப்பதால்..

  கீதா: நானும் முருகா என்று விளிப்பேன்....உங்கள் கேபிள் கலாட்டாவை ரசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் முருகன் தானா?! சூப்பர் கீதாக்கா

   நீக்கு
 7. சிலசேனல்கள் எங்களுக்கு வருவதில்லை. (விடியோகான் டிடிஹெச்)

  முருகன்தான் என் அபிமான அழைப்பாளரும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ் கடவுள் தமிழர் நாவில் வசிக்கிறான் போல!

   நீக்கு
 8. சேனல்காரன் உங்களை ரொம்பவே நோகடிச்சு இருப்பான் போலயே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்ம் ஆமாம்ண்ணே. ரொம்பவே இம்சிக்குறாங்க. முன்னலாம் சீரியல் தவிர்த்து எதாவது சில நிகழ்ச்சி ஈர்க்கும் .இப்பலாம் எதும் ஈர்க்கல

   நீக்கு
 9. சேனல் பெயர் மதியுகமா ,மதிமுகம் தானே வருது ,அதுவும் அது வை கோ சேனல் ,இந்த மாதிரி தொடர் வராதே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதிமுகம்தான்.. ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்ண்ணே. பைசா கொடுத்தால் எல்லாமும் வரும். பணம்சூழ் உலகு

   நீக்கு
 10. பாராட்டுக்குரியது. பதிவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   நீக்கு
 11. நான் நினைப்பதை சொல்லி விட்டாய் மகளே! த ம12

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களும் பாதிக்கப்பட்டவர்தானா?!

   நீக்கு
 12. அதென்ன தமிழ்க் கடவுள் முருகன் அவர் வேறு யாருக்கும் கடவுள் இல்லையா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆப்படிதான் முருகனை சொல்லிக்குறாங்க. வடநாட்டு சிவனுக்கு பொறந்த முருகன் எப்படி தமிழ் கடவுள் ஆனான்னு புரில. இந்த கடவுள்களோடு பெரிய இம்சை

   நீக்கு