Wednesday, October 25, 2017

வள்ளி வரப்போறா... துள்ளி வரப்போறா....



ஒருமுறை கோவிலுக்கு போய் இருந்தோம். அது சிவன் கோவில். என் பிள்ளைக்கிட்ட சொன்னேன். டேய், இவரு சக்தி வாய்ந்தவர். நல்லா கும்பிட்டுக்கோன்னு.. அதுக்கு, என் மகன் அப்ப நம்ம வீட்டு பின்னாடி இருக்கும் சிவனுக்கு சக்தியில்லையா?! எங்கிருந்தாலும் எல்லா சாமியும் ஒன்னுதான்மா.  சும்மா ஊர் உலகத்தை தெரிஞ்சுக்கத்தான் இந்த மாதிரி போறோம். அதனால சும்மா இருன்னு சொன்னான். அதுமாதிரி, ஒவ்வொரு கோவிலுக்கு ஒவ்வொரு தலவரலாறு.

வேளிமலை
ஆனா  பாருங்க, இரு கோவிலுக்கு ஒரே தலவரலாறு. அதும் வடக்கு மூலையில் இருக்கும் ஒரு கோவிலுக்கு, தெற்கு மூலையில் இருக்கும் இருவேறு கோவில்கள்.  இது என்ன அதிசயம்ன்னு தெரில... ஆற்காடு பக்கமிருக்கும் வள்ளிமலைக்கும், குமரி மாவட்டத்திலிருக்கும் வேளிமலைக்கும் ஒரே தலவரலாறுதான். என்ன எங்க ஊரு வள்ளிமலை  வரலாறுல சேசிங், ஃபைட்டிங்லாம் கிடையாது. ஆனா, வேளிமலை வரலாற்றில் இதுலாம் உண்டு. நாங்கலாம் காதலுக்கு முக்கியத்துவம் தர்றவங்க. நாகர்கோவில்காரங்களுக்கு இது புரியாது போல! சரிதானே கீதாக்கா?! துளசி சார்?!


எல்லாருக்கும் தெரிஞ்ச அதே வள்ளி, முருகன் லவ்ஸ் கதைதான் இங்கயும். அதனால, அதைபத்தி ரொம்ப பேசவேணாம்.  நாகர்கோவிலிலிருந்து 15 கிமீ தூரத்தில் இந்த கோவில் இருக்கு. வள்ளியை மணமுடிக்க முருகன் வேள்வி செஞ்சதால  இந்த ஊருக்கு வேள்வி மலைன்னுதான் பேரு. காலப்போக்கில் மருவி வேளிமலைன்னு வந்துச்சுன்னும். மலையாளத்தில் கல்யாணத்துக்கு வேளின்னு பேரு அதனால் வேளிமலைன்னு பேர் வந்திச்சுன்னும், வேள்ன்னா அழகானவன்ன்னு அர்த்தம். அழகன் முருகன் இருக்குறதால் இந்த ஊருக்கு வேளிமலைன்னு பேர் வந்திச்சுன்னும், வேளி மலைச்சாரலில் இருக்குறதால இந்த பேர் வந்திச்சுன்னும் சொல்றாங்க.  வேள் என்பது இன்றைய கன்யாகுமரி மாவட்டப் பகுதியை ஆண்ட ஆய் மன்னர்களின் குடும்பப் பெயர். ஆய் மன்னர்களின் பெயரால் வேள்+நாடு என்பது வேணாடு ஆனது. வேள் மன்னர்களின் மலையே வேளிர் மலை என்றானது என்பது முனைவர் அ.கா. பெருமாள் அவர்களின்  கருத்து.



இந்த தலத்தோட தல விருட்சம் வேங்கை மரமாகும்.  முருகப்பெருமான்  வேடுவன் வேடம் கொண்டு புள்ளிமானை  துரத்திக்கொண்டு வள்ளி காவல் காத்து வந்த தினைப்புனத்துக்கு வந்து அவளை வம்புக்கிழுக்க, வள்ளி கூக்குரலிட, வள்ளியின் கூக்குரல் கேட்டு அங்கு அவளுக்கு துணையாய் வந்த வேடுவர் கண்ணில்  இருந்து மறைய வேங்கி மரமாய் நின்றார். புதிதாய் நின்ற மரத்தை கண்ட வேடுவர்கள் கிளைகளை வெட்டி வீசினர். ஆனா, வேரோடு பெயர்த்தெடுக்க முடியவில்லை...  முருகப்பெருமானாகவே பாவிக்கப்படுகிறது. தல மரத்திற்கு தனிச் சன்னிதி அமைக்கப்பட்டு, தினமும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.


மலைக்கோவிலான இந்த ஆலயத்தில் இருக்கும் சுமார் ஐம்பது படிகட்டுகளுக்கும் குறைவான படிகளை ஏறிச்சென்றால் முருகனை காணலாம். இது திருமணத்தடைகளை அகற்றும் தலமா திகழ்கிறது. கருத்து வேறுபாடுகள் உள்ள தம்பதிகள் இக்கோவிலுக்கு வந்து வழிப்பட்டால் மேட் ஃபார் ஈச் அதரா திரும்பி போவாங்க.   இங்குள்ள முருகனின் வலதுகரம் அபய வரத ஹஸ்த முத்திரையுடனும், இடக்கரம் தொங்கவிட்டப்படியும் அருள்புரிகிறார்.
வேடனாய் வந்த முருகப்பெருமான், வள்ளியை கவர்ந்து சென்றபோது, அவருடன் போரிட்ட மலைக்குறவர்களுக்கு முருகன் வேடன் உருவிலேயே காட்சி கொடுத்தார். நமக்கும் அதே கோலத்திலேயே வள்ளி மணாளனாக, காண்போரை கவரும் கந்தசுவாமியாக காட்சியளித்து அருள்புரிகிறார்.  மூலவர் மூர்த்தம் 9 அடி உயரத்தில் தெற்கு திசை நோக்கி காட்சி அளிக்கிறார். உற்சவருக்கு மணவாள குமரன் என்று பெயர். இங்கு வள்ளி மட்டுமே முருகனுடன் இருக்கின்றாள். தெய்வானைக்கு இங்கு இடமில்லை. 


கோவிலின் வலது புறம் தெப்பக்குளம் இருக்கு.  அதன் முன்புறம் விநாயகப்பெருமான் சன்னிதியும் உள்ளன. மூலவரின் சிவபெருமான் நந்தியோடும், ஆறுமுக நயினார்  நடராஜ பெருமானும் தெற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார்கள்.   

முருகனின் தாத்தா முறையான  தட்சனுக்கு  தனிச் சன்னிதி உண்டு.  சிவபெருமானை அழைக்காமல் தட்சன் யாகம் செய்தான். அவனது ஆணவத்தால் யாகம் அழிந்ததும், தட்சனும் அழிந்து ஆட்டுத் தலையுடன் விமோசனம் அடைந்தான். ஆட்டுத் தலையுடன் உள்ள தட்சனே இந்த சன்னிதியில் காட்சி தருகிறார். ஆட்டுத்தலையுடன் காட்சிதரும் தட்சனுக்கு இங்கு தனியாக கோவிலின் மேற்கு வாசல் அருகில் சன்னிதி அமைந்துள்ளது. பெரும்பாலும் மேற்கு வாசல் வழியாக வரும் பக்தர்கள் தட்சனை முதலில் பின் வாசலில் வணங்கிவிட்டு, கோவில் முன் வாசல் வழியாக வழிபாட்டுக்குச் செல்கின்றனர். வழிபாடு முடிந்து பின் வாசல் வழியாக திரும்பும்போது, தட்சனைப் பார்த்துவிட்டால் பெற்ற புண்ணியம் பறிபோகும் என்ற எண்ணத்தில், கண்களைக் கைகளால் மறைத்த வண்ணம், தட்சனுக்கு முகம் காட்டாத வகையில் சன்னிதியைக் கடந்து செல்வதை இன்றும் காணலாம் .



இங்குள்ள தூண் ஒன்றில் பின்னிப் பிணைந்திருக்கும் இரு பெரிய பாம்புகளுக்கு நடுவில் சிவலிங்கம் ஒன்று எழிலாக காட்சி தருகிறது. இதற்கு முன்பாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ராகு காலத்தில் வழிபட்டால், நாக தோஷம் அகலுமாம். 


கோவிலுக்கு அரைகிலோமீட்டர் தொலைவில் வள்ளியை முருகப்பெருமான் மணம் செய்த மண்டபம் இருக்கு.   அதன் அருகில் விநாயகருக்கு ஒரு கோவிலும், வள்ளியம்மை குகைக்கோவிலும் இருக்கு. குகைக் கோவிலுக்கு அருகில் தினைப்புனம், வள்ளிச் சோலை, கிழவன் சோலை, வட்டச் சோலைலாமும் இருக்கு வள்ளி நீராடிய சுனைக்கு அருகில் உள்ள பாறையில், விநாயகர், முருகன் மற்றும் வள்ளியின் சிற்ப வடிவங்கள் காணப்படுது

திருப்பதின்னா லட்டு, பழனின்னா பஞ்சாமிர்தம்..  திருப்பெருந்துறைன்னா பாகற்காய் சாதம். அதுப்போல வேளிமலைல கஞ்சிதான் பிரசாதம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்னிக்கும் கஞ்சி கொடுக்கப்படுது. அக்கஞ்சியை குடிப்போரின் தீராத வியாதியும் தீரும் என்பது நம்பிக்கை.  அவ்வாறு நோய் தீர்ந்தவர்கள் நேர்த்திகடனாக கஞ்சியோ அல்லது அதற்குண்டான பொருட்களையோ வாங்கி கொடுக்குறாங்க.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் பெரும் வறட்சி ஏற்பட்டது. அப்போது இப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மஹாராஜா தனது காவல் படையினரை வேளிர் மலைக்குக் காவடி எடுத்துச் சென்று முருகனுக்குச் சமர்ப்பிக்கும்படி ஆணையிட்டார். அதன் பின் வறட்சி நீங்கி செழிப்பான இடமாக இவ்விடம் மாறியது.




இதைத் தொடர்ந்து இன்றளவும் காவல் துறையினர் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளியன்று மிகக் கோலாகலமாகக் காவடி வழிபாடு நடத்திவருகின்றனர். குமார கோயில் கலம்பகம், குமார கோயில் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்கள் வேளிமலை குமாரசாமி மீது பாடப்பட்டுள்ளன. கேரள மற்றும் தமிழக மக்கள் இத்திருக்கோயிலில் வைத்துத் திருமணம் நடத்துவதை வெகு சிறப்பாகக் கருதுகின்றனர். 


திருக்கார்த்திகை தினத்தில் மாலையில் இந்த ஆலயத்தில் சொக்கப்பனை கொளுத்துவாங்க. அதில்  கலந்துக்கிட்டா நமது முன் ஜென்ம பாவ வினைகளும் எரிந்து போகும் என்பது நம்பிக்கை. பங்குனி மாதம் அனுஷ நட்சத்திரம் அன்று, இரவில் இங்கு வள்ளி திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு, தேனும், தினை மாவும், குங்குமமும் பிரசாதமாக வழங்கு கிறார்கள். அதுமட்டுமில்லாம, குறவர்கள், முருகனை துரத்துவது போலவும்,. போர்க்காட்சிகளையும் நடித்தும் காட்டுவர். திருவண்ணாமலை போல இங்கும் பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது வழக்கத்தில் உள்ளது.

பங்குனி மாதம் அனுஷ நட்சத்திர நாளில் 'வள்ளி கல்யாணம்'  சிறப்பா கொண்டாடப்படுது . திருக்கல்யாண நாளில் காலையில் முருகப்பெருமான் மலைக்கு பல்லக்கில் எழுந்தருளி வள்ளிக்குகை அருகே உள்ள கல்யாண மண்டபம் செல்வார். வழியெங்கும் மக்கள் வரவேற்பு கொடுப்பர். தீபாராதனைக்குப்பின் கல்யாண மண்டபம், கோவிலைச் சுற்றியுள்ள  சத்திரங்கள், மலைப்பாதைகள் எனப் பல இடங்களிலும் அன்னதானம், கஞ்சி தர்மம் நடக்கும்.


பிற்பகல் முருகன், வள்ளியை பல்லக்கில் அழைத்து வருவாங்க.  அதைக்காணும் குறவர்கள், முருகனையும் வள்ளியையும் தடுத்து நிறுத்தி போர் புரிவர். குறவர் படுகளம் எனும் இந்நிகழ்ச்சி மலைப்பாதை வழிநெடுகிலும் நிகழ்த்தப்படுகிறது. இறுதியில் கோவிலின் பின்புற வாசலில் குறவர்கள் முருகப்பெருமானிடம் தோல்வியடைந்து சரணடைவர். இந்நிகழ்ச்சியில் மலைப்பகுதியில் வாழும் குறவர் இனத்தவர்களே கலந்து கொள்கிறார்கள். இரவு, வள்ளிக்கும் முருகனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். பின்னர் தேன், தினை மாவு, குங்குமம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. 

ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாகத் திருவிழாவின் ஆறாம் நாளன்று தேவஸ்தானம் போர்டு ஊழியர் வள்ளிக்குச் சொந்தமான சொத்துக்களின் விவரங்களை பொதுமக்கள்  முன்னிலையில் படிப்பாங்க.  ஒவ்வொரு ஆண்டும் மஞ்சள் தடவிய தாளில்  ஸ்ரீ  பத்பநாப தாச வஞ்சி பால மார்த்தாண்டேஸ்வர குல சேகரப் பெருமாள் ஸ்ரீபதி உத்தரவுப்படி அது படிக்கப்படுவதாகவும் தெரிவிக்கும். குமாரன் வீதி உலா போகும் போது தேவ கன்னியர்களைப் பார்த்தான் என்று வள்ளி ஊடல் கொண்டாள். அந்த ஊடலை நீக்கும்  வகையில் ஆடை, ஆபரணம், குங்குமம், களபம், கஸ்தூரி போன்றவையும் முருகன் பொண்டாட்டியை தாஜா பண்ண கொடுத்தது. அதில்லாம மற்றவர்கள் கொடுத்த பொருட்கள் பாத்திரம், பண்டம், வஸ்து, தோப்பு, துரவு ஆகியவற்றினைப் பற்றிய பட்டியலைப் படிக்கும் பழக்கம் இன்றளவும் கடைப் பிடிக்கப்படுகிறது.


இக்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வேளிமலை. நாகர்கோவில்– திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் மார்த்தாண்டம் என்னும் ஊருக்கு முன்னதாக தக்கலை என்ற ஊர் வரும். அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரத்துல இக்கோவில் இருக்கு.

படங்கள்லாம் நெட்டுல சுட்டது..

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
நன்றியுடன்,
ராஜி.

18 comments:

  1. தரிசித்தேன் புகைப்படங்கள் ஸூப்பர்

    ReplyDelete
  2. நம்பிக்கையே வாழ்க்கை...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ண்ணே. ஆனா, நம்பிக்கை குலையும்போது வாழ்க்கையே கசந்து போகுது. நாம நம்பிக்கை வச்சவங்களே நம்ப காலை வாரும்போது என்ன சொல்ல?!

      Delete
  3. Replies
    1. எல்லாமே நெட்டுல சுட்டது

      Delete
  4. வள்ளிமலை சென்றதில்லை. இன்றுஇக்கோயிலைப் பற்றி அறிந்தேன். வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் செல்வேன்.

    ReplyDelete
    Replies
    1. வள்ளிமலை வேலூர், ஆற்காடு பகுதில இருக்கு..

      இது வேளிமலைப்பா....

      Delete
  5. அழகிய இடம்...

    பலபல சுவையான தகவல்கள் ராஜிக்கா...

    ----------வள்ளியின் கூக்குரலிட, வள்ளியின் கூக்குரல் கேட்டு அங்கு அவளுக்கு துணையாய் வந்த வேடுவர் கண்ணில் இருந்து மறைய வேங்கி மரமாய் நின்றார். புதிதாய் நின்ற மரத்தை கண்ட வேடுவர்கள் கிளைகளை வெட்டி வீசினர்.ஆனா, வேரோடு பெயர்த்தெடுக்க முடியவில்லை... முருகப்பெருமானாகவே பாவிக்கப்படுகிறது...............

    அப்புறம் எப்படி கல்யாணம் செய்தார்.....

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் கிழவனா மாறி வள்ளியை சீண்டி, வினாயகர் யானையா வந்து மிரட்டி... கல்யாணம் கட்டிக்கிட்டார்.

      Delete
  6. இந்தக் கோவிலுக்குப் போன நினைவு பெரிய சிலை மிகவும் அழகானது

    ReplyDelete
    Replies
    1. நான் இன்னும் போனதில்லைப்பா. 9 அடின்னா பெருசுதான். பார்ப்போம் பார்க்கும் லக் இருக்கான்னு...

      Delete
  7. வள்ளிமலையும், வேள்விமலையும் அறிந்தேன் ,பார்த்தேன் ....லவ்விங்கு பைட்டிங்கு எல்லாத்தையும் படித்தேன்

    ReplyDelete
    Replies
    1. பின்ன லவ்ஸ் பண்ணிக்கிட்டு கொஞ்சிக்கிட்டே இருந்தா போரடிச்சுடும். சண்டை, சமாதானம்ன்னு எல்லாம்தான் வேணும். அதும் தமிழ்கடவுள் சண்டை இடாம கடிமணம் புரிஞ்சுக்கிட்டா நல்லாவே இருக்கும்.

      Delete
  8. அழகிய இடம் அருமை

    ReplyDelete
  9. கோவில் அழகாய் இருக்கிறது. ஒரே படம் ரெண்டு வாட்டி போட்டிருக்கீங்க. முதல் கருப்பு வெள்ளை படம் ஜோர்.

    ReplyDelete
  10. படங்கள் அருமை!

    ReplyDelete