Monday, October 16, 2017

வீட்டுக்கு வரும் மாப்ளைக்கு ஏன் இத்தனை கவனிப்புன்னு தெரியுமா?! ஐஞ்சுவை அவியல்

இந்தா புள்ள காஃபி! 

எதுக்கு மாமா?! நானே வந்து போட்டு எடுத்து வந்திருப்பேனே! 

இன்னிக்கு சனிக்கிழமை விரதம். கூடவே மாவிளக்கு, 9 பொரியல், வடை, பாயாசம், சுய்யம், சர்ர்க்கரை பொங்கல், சாம்பார், ரசம்ன்னு செஞ்சு அலுத்திருப்பே. அதான் நானே போட்டு கொண்டு வந்தேன்.  இப்ப அதுல என்ன குறைஞ்சு போய்ட்டுது?!

ம்ம்ம் எவன் கண்டுப்பிடிச்சான் தெரில. இந்த பண்டிகைலாம்?! அவன் மட்டும் என் கையில் சிக்கனும்!! எல்லாம் இந்த நாராயணனால் வந்த வினை..

நாராயணன்ன்னு சொல்லுறியே! அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?!

ம்க்கும். முருகனுக்கு அர்த்தம் கேட்டா சொல்வேன். இல்ல கிருஷ்ணனுக்கு அர்த்தம் கேட்டா சொல்வேன்.

தாயி! நீ உன் புராணத்தை ஆரம்பிக்காத. பக்திக்கு முருகன்னும், காதலுக்கு க்ருஷ்ணன்ன்னும் வெரைட்டி காட்ட உன்னால்தான் முடியும். நான் சொல்ல வந்ததை கேளு.  நாராயணன்ன்ற பேரில  நாரம் ன்ற சொல் மறைஞ்சிருக்கு. நாரம் ன்னா தண்ணீர், தீர்த்தம் ன்னு பொருள்.  பெருமாள் கோயில்களில் தீர்த்தம் கொடுப்பதுகூட அவரது பெயர் காரணமாதான்.  நாரம்ன்ற சொல்லுக்கு பிரும்ம ஞானம்ன்ற பொருளும் உண்டு. இந்த உலக வாழ்வு நிலையற்றது, என் திருவடியே நிலையானது என்ற தத்துவத்தையும் அவரது பெயர் உணர்த்துது. நாராயணன் என்பதை நாரம்+ அயணன் என பிரிக்கலாம். நாரம் என்றால் தீர்த்தம். அயணன் என்றால் படுக்கை உடையவன். பாற்கடலாகிய தீர்த்தத்தில் பாம்பணையில் படுத்திருப்பவன் என்பதே நாராயணன் என்ற சொல்லுக்குப் பொருள்.  நாராயணனின் நாமத்தை அதிகமாக உச்சரிப்பவர் நாரதர். நாராயண! நாராயண! ன்னு உச்சரித்தபடியேதான் அவர் சகல லோகங்களுக்கும் செல்வார். இவர் தோன்றுவதற்கு முன், இந்த உலகில் தண்ணீர் என்பதே குறைவாக இருந்ததாம். அவரது பிறப்புக்கு பின்தான் தண்ணீர் அதிகரித்தது. இதன் காரணமாக அவர் நாரதர் என்ற பெயர் பெற்றார்ன்னும் சொல்வாங்க. 
பொதுவா, பெருமாளை சனிக்கிழமையில் வழிபடுவது சிறப்பு. அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை விரதமிருந்து வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை. ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதனின் அதிதேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி மாதம் திகழ்கிறது. 

புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் சொல்லுது.  எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்கனும். ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருக்குறது நல்லது. அதனாலதான், நாம மாசம் ஒரு சனிக்கிழமை அமாவாசை, கிருத்திகை மாதிரி பெருமாளுக்கு கும்பிடுறோம். எல்லாராலயும் அதுமாதிரி விரதம் இருக்க முடியாதில்லையா?! அதனால, புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும். அதனாஅலதான், புரட்டாசி மாசம் நாம விரதமிருக்கோம். 

ம்ம்ம்ம் சின்ன பிள்ளையில் இப்படி புரட்டாசி சனி கும்பிடும்போது, ஒரு பாத்திரத்தில் அம்மா துளசி மாலை கட்டி, அந்த பாத்திரத்தில் நாமம் வரைஞ்சு கொடுத்து அனுப்புவாங்க.  எழுநூறு இல்ல எண்ணூறு பாலதான் பிடிக்கும் அந்த பாத்திரம். ஊர் முழுக்க சுத்தினாலும் அது நிரையாது. நிரையாம வர்றதில்லன்னு வைராக்கியத்தோடு போவோம். ஃப்ரெண்ட் வீட்டுல அவக்கிட்ட கெஞ்சி  அதிகமா போடச்சொல்லி கேப்பேன். யார் பாத்திரம் சீக்கிரம் நனையுதுன்னு போட்டி வேற பசங்களுக்குள் நடக்கும். அப்பலாம் ஒரு பத்து இருபது அரிசிக்கு மேல போட மாட்டாங்க :-( .  அப்படி வாங்கி வந்த அரிசிலதான் வெல்லம் சேர்க்காம பொங்கல் வச்சு சாமிக்கு படைப்பாங்க. அந்த எப்பயும் போடுற இலையோடு நடுவால ஒரு இலை போட்டு அந்த பொங்கலை போட்டு, கெட்டி தயிர், வெல்லம், சுத்தி  செஞ்ச சாப்பாடு அத்தனையும் வச்சு சாத்துக்குடி, கொய்யா, திராட்சை, வாழைப்பழம்லாம் துண்டாக்கி படைச்சு அதை எல்லாத்தையும் பிசைஞ்சு பிரசாதமா கொடுப்பாங்க. அந்த ருசி.... யம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மீ... அடுத்த புரட்டாசி வரை நாவில் இருக்கும்.  சாமி கும்பிடுறதுக்காக போட்ட நாமத்தை நான் அழிக்கவே மாட்டேன் மாமா...  அப்படியே, சினிமா, டியூசன், டைப்பிங்க் கிளாஸ்ன்னு போயிருக்கேன். இப்ப, இதுலாம் மாறிட்டுது.... 

ம்ம்ம்ம்ம் சரி உன் புராணம் போதும்...  ஒரு ஆணோ, இல்ல பெண்ணோ தன் வாழ்நாள்ல எத்தனை குழந்தை பெத்துக்க முடியும்ன்னு சொல்லு பார்க்கலாம். 

புராணக்கதைகளில் நூத்துகணக்கா சொல்வாங்க. புராணக்கதையில் பல பொண்டாட்டி இருந்ததால சாத்தியம்.  நம்ம தாத்தா பாட்டி காலத்துல இருதார மணம்ங்குறது சகஜம். கூடவே குழந்தை இறப்புங்குறது சகஜம். அதனால பதினாறு, பதினேழுன்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்பலாம் ஒன்னுத்துக்கே வழிய காணோம்.  ஏன் கேக்குறீங்க மாமா?!

18ஆம் நூற்றாண்டில் மொரோக்கோவை ஆண்ட மன்னர் மொர்லே இஸ்மாயிலுக்கு 500 அந்தப்புரப் பெண்கள். அவர்கள் மூலம் அவர் பெற்ற பிள்ளைகளின் எண்ணிக்கை 888. 1816 முதல் 1872 வரை ரஷ்யாவில் வாழ்ந்த வாசிலெட் என்ற பெண்மணிதான் அதிக குழந்தைகள் பெற்றவர். 27 முறை கர்ப்பம் தரித்திருக்கிறார். பதினாறு பிரசவத்தில் இரட்டைக்குழந்தைகள்ஏ, ஏழு பிரசவத்தில் மும்மூன்று குழந்தைகள்,  நான்கு குழந்தைகள் வீதம் நான்கு பிரசவம். மொத்தம் 69 குழந்தைகளாம்.  இதுதான் இப்ப வரைக்கும் லீடிங்க்ல இருக்கு..

ஆத்தாடியோவ், இதுங்களைலாம் எப்படி படிக்க வச்சு, கல்யாணம் கட்டிக்கொடுத்து கரையேத்துறதாம்?!

ரொம்ப வாய பொளக்காத... வாட்ஸ் அப்ல வந்த ஒரு ஜோக்கை காட்டுறேன். பார்த்து சிரிச்சு ரிலாக்சாகி, காஃபி குடிச்ச டம்ப்ளரை கழுவு.

ம்ம்ம் காஃபி போட்டு கொடுக்க முடிஞ்ச உங்களால ரெண்டு டம்ப்ளரை கழுவ முடியாதாக்கும். அதுமில்லாம, என்னையவிட நீங்கதான் சுத்தமா பாத்திரம்லாம் கழுவுவீங்க.

பார்த்தியா?! இடத்தை கொடுத்தா மடத்தை புடுங்குறியே! இதுக்குதான்டி உன்ன்னாக்கூடலாம் சேரக்கூடாதுன்னு என் அம்மா சொல்லி இருக்காங்க...

டம்ப்ளரை குடுடி எரும. கழுவி தொலைக்குறேன்...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1474850

நன்றியுடன்,
ராஜி. 

18 comments:

 1. மொர்லே இஸ்மாயில் மீது பொறாமையாக இருக்கு. நாராயணா....
  மாப்பிள்ள் தியாகிதானோ....

  ReplyDelete
  Replies
  1. பொறாம பட்டா அப்புறம் அதுகளூக்கு சம்பாதிக்கனும். முடியுமாண்ணே

   Delete
 2. குழந்தைகளை பாக்கியமாகக் கருதிய காலத்தில்நிறையப் பெற்றுக் கொண்டார்கள் குழந்தைகளை பாரமாகக் கருதும் போது குழந்தைகள் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது எல்லாம் அவன் செயல் ....!

  ReplyDelete
 3. குழந்தைகள் புராணம் நன்று!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

   Delete
 4. அழகு குழந்தைகள் புராணம் பாராட்டுகள்

  ReplyDelete
 5. நாரயணன் விளக்கம் அருமை! ஒரு தியாகிக்குத்தான் இன்னொரு தியாகியின் அருமை தெரியும் இல்லே! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனி தீபாவளி வாழ்த்துகள் சகோ

   Delete
 6. நாராயணன் பெயருக்கு விளக்கம் சூப்பர் மத்தவங்களுக்கு தான் நாமம் போட கூடாது நாமளே போட்டுக்கிட்டு சுத்தலாம் குழந்தை புராணம் வயதில புளிய கரைச்சது மாமா கூட வ்ம்பு பண்ணத்தில பாருங்க ஒரு கடைசியில எப்படி ஆப்பு வச்சிட்டாரு ஜோக்கை சொல்லுறேன்னு

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம் நிஜமாவே அவரு தியாகிதான்.. இல்லன்னா என்னை கட்டி மேய்ப்பாரா?!

   Delete
 7. நாராயண பெயர்க் காரணமும் விவரங்கள் அறிந்து, இஸ்மாயில் மனைவி கணக்கு அறிந்து, ஜோக்கையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 8. நாராயணன் பெயர்க்காரணம் அறிந்தோம். யம்மாடியோவ் இவங்களே உலக ஜனத்தொகைய கூட்டிருப்பாங்க போல....அந்த அரசர் ஓகே நிறைய அந்தப்புரத்துப் பெண்கள் இத்தனையும் எப்படிச் சமாளிச்சாரோ அப்ப அவருக்கு இந்த வாட்சப் ஜோக் ரொம்பவே பொருந்துமோ ஹாஹாஹா ஆனா அவருக்குத் தீபாவளி எல்லாம் கிடையாதே...ச்சே பாவம்...அந்த ரஷ்யா பெண்மணி யே அபா என்று ப்ரமிக்க வைக்கிறார்...எப்படி 69 தையும் சமாளிச்சுருப்பாரு...ஹான் முதல்ல பிறந்தது கொஞ்சம் பெரிசானதும் மத்த குழந்தைகளைப் ப்ரார்த்துக்குமா இருந்துருக்கும் போல.ஜோக் செம...

  ReplyDelete
  Replies
  1. அப்படிதான் இருக்கும் சகோ

   Delete