Tuesday, December 25, 2018

கிறிஸ்துமஸ் தாத்தா உருவாக காரணமானவர் யார்?!


கிறிஸ்துமஸ்ன்னதும் வாசலில் தொங்கவிடும் ஸ்டார், இரவு முழுக்க சர்ச்சில் பாடப்படும் பாடல்கள்,  வெள்ளை நிற உடைகள் அணிந்த பெண்கள், கொஞ்சமே கொஞ்சமா தெரிஞ்ச ஏசுவின் கதை.. அப்புறம்?! கிஸ்துமஸ் மரம், பரிசுலாம் கொடுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா..  இதுலாம்தான் நமக்கு தெரிஞ்ச கதை.. கடவுள்ன்னு வந்தபின் அது ஏசுவாய், அல்லாவாய், சிவனாய், விஷ்ணுவாய், புத்தராய்.. எந்த கடவுளாய்  இருந்தாலும் எனக்கு ஒன்னுதான். ஆனா, இந்துங்குறதால ஏசு கிறிஸ்துவின் கதையை சரியா சொல்லத் தெரியல. படிச்சதை, கேட்டதை, தெரிஞ்சதை சொல்லலாம்ன்னா ஏதும் தப்பும்தவறுமா சொல்லிடக்கூடாதுல்ல!! அதனால, கிறிஸ்துமஸ் சம்பந்தப்பட்ட விசயங்களை மட்டும் பதிவா பார்க்கலாம்...

பெயர்காரணம்..

ஏசு பிறந்த நாளைத்தான் கிறிஸ்துமஸ் ன்னு கொண்டாடுவது எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனா, ஏசுநாதர் பிறந்தகதைலாம் ரொம்ப சுவாரசியம். கிறிஸ்துமஸ்ன்ற வார்த்தை "கிறிஸ்ட் மாஸ்"ன்ற 2 வார்த்தைகளின் கூட்டால் உருவானது. ஏசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியா தெரியலை. ஆனாலுமென்ன?! கிறிஸ்து பிறப்பதற்கு முன், கிறிஸ்து பிறப்பதற்கு பின் என இரண்டாய் பிரித்து வரலாற்றை பதிய ஆரம்பித்தனர்.  கி.மு 7க்கும் கி.மு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் நினைக்குறாங்க. 
அதுமாதிரியே, யூதர்களின் காலக்கட்டம், நாள்காட்டிகள் மூலம் கணக்கிட்டு, ஒரு யூக அடிப்படையில்தான் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையா கொண்டாடப்படுவதா சொல்றவங்க உண்டு. கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன்முதலா 4வது நூற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதா சில வரலாற்று குறிப்புகள் இருக்கு. ஆனா, வேறு சில பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, ஜனவரி 6ம் தேதிதான் ஏசு பிறந்ததாக கொண்டாடுனாங்க. நாளடைவில் உலகம் சுருங்கினப்பின் டிசம்பர் 25தான் கிறிஸ்துமஸ் தினம்  எல்லாராலும் கொண்டாடப்படுது. எது எப்படி இருந்தாலும் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுக்க இருக்கும் கிறிஸ்தவ மக்கள் மிகச் சிறப்பான நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நாளை கிறிஸ்துவர்கள் புனிதமா நினைக்குறதால இந்துக்கள் விநாயகர் சதுர்த்தி,விஜயதசமியில் புதிய தொழில், பொருள் வாங்குறமாதிரி  புதிய பணிகளைத் தொடங்குவதையும் கிறிஸ்துவர்கள் வழக்கமா வச்சிருக்காங்க. 

கிபி 800ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்னிக்கு, சார்லிமேனின்ற பேரரசன் மன்னராக பதவியேற்றான். அதன்பிறகு கிபி 855ம் ஆண்டு இட்முண்ட்ன்ற தியாகி மன்னராக மூடி சூட்டப்பட்டான். கடந்த 1066ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் வில்லியம் 1 மன்னராக முடிசூட்டப்பட்டார். மேலும் 1377ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் ரிச்சார்ட் 2 கிறிஸ்துமஸ் பண்டிக்கையை மிக விமர்சியாகக் கொண்டாடினர். கடந்த 1643ம் ஆண்டு இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தீவுக்கு "கிறிஸ்துமஸ் தீவு"ன்னு பெயரிடப்பட்டது. இப்படி கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்டு மக்களிடையே பிரபலமடைந்து, பின்னர் உலகமெங்கும் விமரிசையாக கொண்டாடும் வழக்கம் உருவானது. 
கிறிஸ்துமஸ் மரம் உருவான கதை...

இங்கிலாந்து நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன் மரக்கிளைகளையும் பச்சை இலைக் கொத்துக்களையும் வீட்டு வாசலில் தொங்கவிட்டால் தீய ஆவிகள் அணுகாதுன்னு ஒரு நம்பிக்கை இருந்தது. ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த  புனித போனிபேஸ்ன்ற பாதிரியார். கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நிலவிவந்த பல மூடநம்பிக்கைகளை கடுமையாகச் சாடியும் எதிர்த்தும் வந்தார். ஊர்ஊரா சுத்தி மதப்பிரச்சாரம் செய்துவந்த அவர், ஓக் மரம் ஒன்றை மக்கள் வழிபடுவதை பார்த்து, மக்களின் மூடநம்பிக்கையின்மேல் கோபங்கொண்டு வர், அந்த மரத்தை வெட்டி வீழ்த்தினார். அந்தமரம் மீண்டும் துளிர்த்துவிடாமல் இருக்க அந்த மரத்தின் வேர்ப்பகுதியையும் அங்கிருந்து பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தினார். ஆனாலும் அம்மரம் துளிர்த்து, ஓராண்டு காலத்துக்குள்ளாக முன்பிருந்த மரத்தைப் போலவேஓங்கி உயர்ந்து வளர்ந்தது. அதை, ஏசு உயிருடன் மீண்டெழுந்த உயிர்த்தெழுதலின் அடையாளமாக மக்கள் பார்க்க தொடங்கினார்கள். பாதிரியார் போனிபஸ் மீண்டும் அவ்வழியே திரும்பியபோது தாம் வெட்டிப்போட்ட இடத்தில் புதிய மரத்தைக் கண்டு வியந்து அதனடியில் முழந்தாளிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். கிறிஸ்து வழிபாட்டில் ஓக் மரம் சேர்ந்தது. ஆனா, அதுவே இப்ப இருக்கும் கிறிஸ்துமஸ் மரமில்ல. 
15ம் நூற்றாண்டை சேர்ந்த  மார்ட்டின் லூதர் கிங்கும் ஜெர்மானியப் பாதிரியார் ஒருவர் சீர்திருத்த கிறிஸ்துவ மதம் தோன்ற இவர்தான் காரணம்  கிறிஸ்துமஸ் நெருங்கிக்கொண்டிருந்த ஒரு டிசம்பர் மாதத்தின் மத்தியில் பனிப்படந்த பாதையில் போய்க்கிட்டிருந்த்ப்போ சின்னச்சின்ன ஓக் மரங்களின் மத்தியில் வெண்பனி படந்திருந்த ஃபிர் மரமொன்று சூரிய வெளிச்சத்தில் தேவஅழகுடன் ஒளிர்வதைக் கண்டார். அதை ஓர் இறை தரிசனமாக அவர் கருதினார். இந்தக்காட்சியை அனைவருடனும் பகிர்ந்துகொண்டார். அடுத்த இரு வாரங்களில் வந்த கிறிஸ்துமஸ் தினத்துக்கு முதல்நாள், தேவாலய வளாகத்தில் நின்றுகொண்டிருந்த அதேபோன்றதொரு ஃபிர் மரத்தைத் தொங்கும் மெழுகுவர்த்திக் கூண்டு விளக்குகளால் அலங்கரித்தார். 

அந்த வழக்கம் அதன்பிறகு ஜெர்மனி முழுவதும் பரவத்தொடங்கி 16-ம் நூற்றாண்டில் உலகின் பல நாடுகளுக்கும் பரவி, ஓக் மற்றும் ஃபிர் மரங்களை கிறிஸ்துமஸ் சமயத்தில் அலங்கரிக்கவே மத்த நாடுகளிலும் இம்மரத்தை வளர்க்க ஆரம்பிச்சாங்க. இப்படி வளர்க்க முடியாதவர்கள் செயற்கையான கிறிஸ்துமஸ் மரங்களை வாங்கி வச்சுப்பாங்க. கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களின் வர்த்தகச் சந்தை அமெரிக்க, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் மட்டும் 70 ஆயிரம் மில்லியன் டாலர்கள் மதிப்பு. இது இரு வருசத்துக்கு முந்தைய கணக்கு..
கிறிஸ்துமஸ் தாத்தா..

கிறிஸ்துமஸ் நாளில் அடுத்து நினைவுக்கு வருவது பஞ்சாய் நரைத்த தலை, புசுபுசு தாடி, தொப்பை, தோளில் பரிசுப்பொருட்கள் நிரம்பிய பை, சிவப்பு உடயோடு சிரிச்ச முகமாய் வரும் கிறிஸ்துமஸ் தாத்தா. அவர் உருவான வரலாற்றை இப்ப பார்க்கலாம்..

ரோம் சாம்ராஜ்யத்தின் பதாரியா பகுதியில் லைசியா துறைமுகத்தில் பிறந்தவர் நிகோலாஸ். இளம்வயதில் பாலஸ்தீனத்துக்கும் எகிப்துக்கும் பயணம் மேற்கொண்டார். மீண்டும் லைசியா திரும்பிய நிகோலாஸ், கிறிஸ்தவ பிஷப் பதவியை ஏற்றார். ரோம் நகர பேரரசன் டயோக்ளீஸ் காலத்தில் கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்டபோது, பிஷப் நிக்கோலாஸும் சிறையில் தள்ளப்பட்டார். ஆனா, கால மாற்றத்தால் பேரரசர் கான்ஸ்டான்டின் காலத்தில் விடுதலை செய்யப்பட்டார். அவர் இறந்த பின்னர் அவரது சடலம் மைரான்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மக்களிடம் அவர் காட்டிய கருணை, அன்பின் காரணமாகவும் அவரது தயாள குணம் காரணமாகவும் அவரது கல்லறைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பிச்சாங்க. ஆறாம் நூற்றாண்டுக்குள் மக்களிடம் அவரது கல்லறை மிகவும் பிரபலமாகிட்டுது. மைரா பகுதிக்கு வந்த இத்தாலிய மாலுமிகள், நிகோலாஸின் கல்லறையிலிருந்து அவரது நினைவுப்பொருட்களை இத்தாலியின் பாரி நகருக்கு எடுத்து சென்றுவிட்டனர். அதனால், ஜரோப்பா முழுவதிலும் அவரது புகழ் பரவியது. டச்சு யாத்திரிகள் மூலமாக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கும் அவரது புகழ் பரவியது. செயின்ட் நிகோலாஸ் என்பது டச்சு மொழியில் சின்டர்க்ளாஸ் ஆக மருவி, அப்புறமா ஆங்கிலம் பேசும் மக்களால்  சான்டா கிளாஸ் என உலகெங்கும் பேசப்பட்டது.
1822ல் கிளமென்ட் மூர் என்பவர் கிறிஸ்துமசுக்கு முந்தைய இரவுன்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பற்றி வர்ணித்திருந்தார். அது பத்திரிகைகளில் வெளியாக மிகவும் பிரபலமடைந்தது. மூர் எழுதிய ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல் என ஆரம்பிக்கும் தன் கவிதையில் நிக்கோலஸ்சை கதாநாயகனா வடிவமைத்தமையே நிக்கோலஸின் புகழ் அமெரிக்கா எங்கும் பரவ மூலக்காரணமாயிற்று.
இப்ப நாம பார்க்கும் இந்த சாண்டா கிளாஸின் உருவத்தை  ஒரு வேலையாளை மாதிரியாகக் கொண்டு வரையப்பட்டது.  அந்த வேலையாளின் அழகிய சிவந்த கன்னங்கள், பழுப்பு நிறத் தாடி, சிறிய வாய், பெருத்த தொப்பை, சிவப்பு நிற அழகிய மேலாடை, பனிக்கால தொப்பி, தோளிலே ஒரு மூட்டை இவையெல்லாம்தான் முன்மாதிரி. அந்த உருவம்தான் இன்னிக்கு பெரியவர்கள் முதல் குழந்தைகள்வரை எல்லாரோலும் விரும்பப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா.
இப்படித்தான் கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை, கிறிஸ்துமஸ் மரம்லாம் உருவான வரலாறு.  அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் .
நன்றியுடன்,
ராஜி

16 comments:

  1. நினைச்சேன் ராஜி நாளை கிறிஸ்துமஸ் பதிவு இருக்குமேன்னு முந்தைய பதிவுல கமென்ட் போட நினைச்சு விட்டுப் போச்சு..ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அக்கா மனசை நோகடிக்கலாமா?! அதான் பதிவாக்கியாச்சு.

      Delete
  2. கிறித்துமஸ் நல் வாழ்த்துகள்!ராஜி!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதாக்கா. கேக்தான் கிடைக்கலை :-(

      Delete
  3. படிச்சது எல்லாம் கிறித்தவ பள்ளி, கல்லூரி...பைபிள் வாசிச்சது எல்லாம் உண்டு...உங்க தகவல்கள் அருமை. பார்த்தீங்கனா எல்லா மதத்துலயும், எல்லா நாடுகள் லயும் கிட்டத்தட்ட தத்துவம், நம்பிக்கைகள் எல்லாம் ஒன்னுதான்..பொருள் தான் வேறுபடுது...

    படங்கள் ஜொலிக்குது!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பாடத்தில் படிச்சதோடு சரி. கிறித்துவ நண்பர்கள்கூட கிடையாது. முஸ்லீம் நண்பர்கள் படிக்கும்போதும் குடியிருப்புக்கு பக்கத்திலும் கிடைச்சாங்க. ஆனா, கிறித்துவ நண்பர்கள்தான் கிடைக்கவே இல்ல கீதாக்கா.

      Delete
  4. நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துவதில் நானும் இணைகிறேன் சகோ

      Delete
  5. தகவல்கள் அனைத்தும் சிறப்பு.

    நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே கேட்டது, படிச்சதுதான்ண்ணே.

      நானும் உங்களோடு நண்பர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிச்சுக்கிறேன்.

      Delete
  6. அனைத்து நண்பர்களுக்கும் கிறிஸ்து மஸ் வாழ்த்துகள் கிருத்துவமதத்திலும்பல பிரிவுகள் உண்டு

    ReplyDelete
    Replies
    1. இந்துக்களில்போல அதிலும் நிறைய பிரிவுகள் இருக்குன்னு தெரியும்ப்பா. ஆனா, எதுக்கு தெரியாத விசயங்களில் தலையிடனும்ன்னுதான் அந்த பக்கமே போகல

      Delete
  7. அறியாத தகவல்கள்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. அறிந்துக்கொண்டமைக்கு நன்றிண்ணே

      Delete
  8. ஆஹா எத்தனை தகவல்கள் ....அருமை க்கா ...

    ReplyDelete