Saturday, December 15, 2018

பெண்கிளியே! பெண்கிளியே! - பாட்டு புத்தகம்

எப்பயுமே கேட்கும் பாடல்கள்தான் ஆனா திடீர்ன்னு ஒருநாள் அந்த பாட்டு ரொம்ப பிடிச்சு போய் ஓரிரு நாளுக்கு அந்த பாட்டையே திரும்ப திரும்ப கேட்க தோணும். அதுக்கு காரணம் எதும் தோணாது.  அப்படி கேட்கும்போது இதுவரை தோணாத குறியீடுகள் தோணும். அது அந்த மனநிலையோடு ஒத்துப்போக அந்த பாட்டு இன்னமும் பிடிச்சு போகும். அந்தமாதிரி இந்த இரண்டு நாளாய் அடிக்கடி கேட்கும் பாடல்,  ’சந்தித்தவேளை’ படத்தில் உன்னிக்கிருஷ்ணனும், சுஜாதாவும் பாடும் பாட்டு. அதேப்போல தீபங்களை வைத்து படமாக்கப்பட்ட பாடல்களில் இந்த பாட்டு ரொம்ப அழகா படமாக்கி இருப்பாங்க. 

மனதை ஈர்க்கும் எளிமையான மெட்டில், அழகான தமிழ்வார்த்தைகளை கொண்டு இந்த பாட்டு ரொம்ப நல்லா வந்திருக்கும். பெண் கண்களே, நாடகம் ஆகுமா? பெண் நெஞ்சமே, ஊடகம் ஆகுமா?ன்னு வரும் இந்த வரி உன்னிக்கிருஷ்ணன் உருகி பாடியிருப்பார். அதுக்கு கார்த்திக் நடிப்பும் செம. தன் காதலை நாயகன் சொல்ல, அதுக்கு நாயகி நாசூக்கா காதலை மறுக்கும் வரிகள்லாம் செமயா இருக்கும். இப்ப இருக்கும் பாடல்களில் இரைச்சல் மட்டுமே இருக்கு. இந்த பாட்டில் வரிகள் தெள்ளத்தெளிவா புரியும். எத்தனை அழகான தமிழ்வார்த்தைகள்?!

அழகான கார்த்திக், ரோஜாவும் செம அழகா இருப்பாங்க.  பாடலும் கேட்க, பார்க்க நல்லா இருக்கும்.  படம்?! சுமார் ரகம்தான்.


தீப தீப தீப தீப தீப தீபபப... கார்த்திகை

தீப தீப தீப தீப தீப தீபபப...
தீப தீப தீப தீப தீப தீபபப மேளா...கார்த்திகை
தீப தீப தீப தீப தீப தீபபப மேளா...

பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு..
என்  பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக்கொடி காட்டு..
பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என்  பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக்கொடி காட்டு...

வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
உள்மனம் பேசாமல் உண்மை தோன்றாது

வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
பெண்கிளி பொய் சொன்னால் ஆண்கிளி தூங்காது

ஆண்கிளியே ஆண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால்
உன் பல்லவியை நீ மாற்று


பெண் கண்களே நாடகம் ஆடுமா?!
பெண் நெஞ்சமே பூடகம் ஆகுமா?!

யார் சொல்லியும் பெண்மனம் கேட்குமா?!
கை தட்டினால் மொட்டுக்கள் பூக்குமா?!
விடை கேட்டேன் 
கேள்வி தந்தாய்!!
இது புதிரான புதிர் அல்லவா??!!

கேள்விக்குள்ளே 
பதில் தேடு..
அது சுவையான சுவை அல்லவா??!
உள்ளத்தின் வண்ணம் என்ன தெரியவில்லை
உடைத்து சொல்லும்வரை புரிவதில்லை
மூடாத பூவுக்குள் என்றும் தேன் இல்லை

பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என்  பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக்கொடி காட்டு


என் நெஞ்சிலே 
ஆயிரம் ஓசைகள்
 உன்  காதிலே கேட்கவே இல்லையா?!
நீ ஆழிபோல் அலைகளை ஏவினாய்
நான் கரையைப்போல் மௌனமாய் நேவினேன்.
நெஞ்சில் பாசம் 
கண்ணில் வேஷம்
இது பெண் பூசும் அரிதாரமா

உண்மைக் காண 

வன்மை இல்லை
உங்கள் விழி என்
மேல் பழி போடுமா?!
நிலவை பிழிவதற்கு வலிமை உண்டு
உன் நெஞ்சை புரிவதற்கு வலிமை இல்லை

கானல் நீரில் தேடாதே அங்கே மீன் இல்லை
ஆண்கிளியே ஆண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால்
உன் பல்லவியை நீ மாற்று

பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என்  பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக்கொடி காட்டு

படம்: சந்தித்தவேளை
இசை: தேவா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள்: உன்னிக்கிருஷ்ணன், சுஜாதா
நடிகர்கள் : கார்த்திக், ரோஜா.

பாட்டு எப்படி இருக்குன்னு கேட்டுட்டு சொல்லுங்க..

நன்றியுடன்,
ராஜி


8 comments:

  1. நானும் இப்பாடலை அடிக்கடி கேட்டு இருக்கிறேன் சகோ. அருமையான பாடலே...

    ReplyDelete
    Replies
    1. வார்த்தைகள் தெள்ளத்தெளிவா புரியுமாறு இசை இருக்கும். இசைன்ற பேரில் இரைச்சல் இருக்கக்கூடாதுண்ணே

      Delete
  2. கேட்காத பாடல்.

    ஆனால் எனக்கு உன்னி கிருஷ்ணன் பாடும் சினிமாப் பாடல்கள் பிடிக்காது!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா! எனக்கு குரல் பத்தி தெரியாது.

      Delete
  3. உங்களை போல நானும் பலமுறை ரசித்துள்ளேன்.....

    ReplyDelete
  4. ரசித்த பாடல்களில் ஒன்று.

    ReplyDelete