Saturday, June 27, 2020

இதுக்கு ஈசி சேர்ன்னு பேரு வச்சது யாரு?! - கிராமத்து வாழ்க்கை

பழமையின் முடிவையும், புதுமையின் ஆழம்பத்தினையும் கண்டு களித்த மத்திய வயதுடையவர்களின் நினைவுகளை கிளறி விடும் சிறு முயற்சியே இந்த கிராமத்து வாழ்க்கை தொடர்...


என்னதான் இயற்கையோடு வாழ்ந்திருந்தாலும் இப்ப இருக்குற மாதிரி அப்ப  வீட்டுக்கு வீடு வாழை மரம் இருக்காது. தோப்புகள் இல்லன்னா கடைகளில்தான் வாங்கிவரனும். எல்லார் வீட்டிலும் காய்ந்த மந்தாரை இலைக்கட்டு, இல்லன்னா ஆல இலைக்கட்டு இருக்கும். திடீர்ன்னு வரும் விருந்தாளிகளுக்கு இதுலதான் சாப்பாடு போடுவாங்க. இந்த இலையில் இருக்கும் குச்சி வாய்க்குள் போகாம ரசம் சாதம், பாயாசம்லாம் சாப்பிடுறவங்களுக்கு அவார்டே கொடுக்கலாம். 

அஞ்சாவது வரைக்கும் சிலேட், ஆறாவதிலிருந்துதான் நோட்டில் எழுத சொல்வாங்க. அதுவும் பென்சிலில்.. அந்த பென்சில் தரமற்று இருக்கும் அடிக்கடி உடைஞ்சு போகும். எழுத்துகள் டல்லடிக்கும். எட்டாவது ஆரம்பத்தில் என்னெலாம் வாங்கனும் லிஸ்ட் கொடுப்பாங்க. அதில் கட்டுரை நோட்டு, ரெக்கார்டு நோட்டு, பென்சில்(HB)ன்னு லிஸ்டில் இருக்கும்.  கருப்பும் சிவப்புமா இருக்கும் நடராஜ் பென்சிலைவிட, பூக்கள் இருக்கும் இந்த கேமலின் பென்சில்தான் பிடிக்கும். நல்லா டார்க்கா எழுதும். சீவும்போது சட்டுன்னு உடையாது.
இப்ப கால்கிலோ 20ரூபான்னு விற்கப்படும் இலந்தை பழம் ஹைபிரிட் வகையை சார்ந்தது. மார்க்கெட்டுக்கு வந்த புதுசுல வாங்கி சாப்பிட்டாலும் இப்ப சீந்துறதில்லை. ஆனா, இந்த நாட்டு இலந்தைப்பழத்தை இப்ப கண்டாலும் விடுறதில்லை. சீசனில் கிடைக்கும் நாவல்பழம், இலந்தைப்பழம், அவிச்ச வள்ளிக்கிழங்கு, கொய்யாப்பழம்லாம் கூறுகட்டி பள்ளிக்கூடத்துக்கும் முன்னாடி விப்பாங்க.  இதுல உப்பும், மிளகுத்தூளும் தூவி சாப்பிட்டா சுவை அள்ளும். லீவுக்கு பாட்டி ஊருக்கு போகும்போது  இந்த இலந்தை மரம், நாவல் மரத்தின்கீழ்தான் இருப்போம். வரும்போது பாவாடையில் கட்டிக்கிட்டு வந்து அம்மாக்கு கொடுப்பேன். இலந்தையை வாங்கி தின்னுட்டு, இலந்தை முள் கீறி இருக்கும் காயத்தை பார்த்துட்டு அம்மா திட்டும். நன்றி கெட்டது :-(

ஸ்கூலுக்கு போகும்போது வாட்டர்கேன் கொண்டு போகும் பழக்கம் 1990களில் இல்ல.  ஸ்கூல்ல இருக்கும் தொட்டி தண்ணி குடிப்போம்.. இப்ப மாதிரி ஸ்கூலுக்குள் காலையில் நுழைஞ்சா மாலையில்தான் வெளியில் வரனும்ன்னுலாம் சட்டமில்ல. இண்டெர்வெல் டைம்ல வீட்டுக்கு போய் சாப்பிட்டு வரும் ஆட்கள்லாம் இருக்காங்க. ஏன்னா, ஊருக்கு மத்தியில் ஸ்கூல் இருக்கும் ஒரு பய/பொண்ணும் பங்க் அடிக்கமுடியாது, ஸ்கூலுக்கு பக்கத்தில் இருக்கும் கிணறு, குளம், குட்டைலாம் தண்ணி குடிப்போம். உடலுக்கு ஒன்னும் செஞ்சது இல்ல. இப்ப மாதிரி கூல் டிரிங்க் பாட்டில்கள் புழங்காத காலமது.  கொஞ்ச வசதியான ஆட்கள்  srrpet jar ன்னு  வெள்ளை, பச்சை, பிரௌன் கலர்ல வாட்டர் பாட்டில் வரும். சீக்கிரத்துல உடையாது. மூடி மட்டுமே சீக்கிரம் உடைஞ்சுடும். அதைதான் பெரியவங்க வெளியூர் கொண்டு போவாங்க. சின்ன பசங்கலாம் ஸ்கூலுக்கு போகும்போது படத்திலிருக்கும் பாட்டிலைதான் கொடுத்து அனுப்புவாங்க. இதை தோளில் மாட்டிக்கலாம், சிப்பரும் இருக்கும்..




உட்கார, எழுந்துக்க சிரமமா இருக்கும் இந்த மர நாற்காலிக்கு பேரு ஈசி சேர்.  எனக்கு இதை மடக்கி, நீட்டி வைக்க பிடிக்கும். எங்க வீட்டில் இருக்கும். அப்பா இதில் உக்கார மாட்டாரு. பாட்டி  ஊருக்கு வரும்போது மட்டுமே வெளியில் எடுப்போம்.  இதில் உக்கார எழுந்துக்க சிரமமா இருந்தாலும் உக்காந்தா ரிலாக்சா இருக்கும்....  விசிறியால் விசிறிக்கிட்டே என் பாட்டி உக்காரும் அழகே தனிதான்.

கொசுவர்த்தி கிடைச்சா மீண்டும் ஏற்றப்படும்...

நன்றியுடன்,
ராஜி

11 comments:

  1. அனைத்தும் சிறப்பு. நானே ஆல இலைகள் கொண்டு வந்து தைத்திருக்கிறேன் - எங்கள் அம்மாவின் அத்தைக்கு உதவியாக.

    ReplyDelete
  2. இனிமைகளை மறக்க முடியுமா...? ம்ஹிம்... முடியவே முடியாது...

    ReplyDelete
  3. இளமைக்கால நினைவுகளை மீட்டுகிறது தங்களின் பதிவு
    நன்றி சகோதரி

    ReplyDelete
  4. பழைய நினைவுகள் அருமை நடராஜ் அண்ணனை மறக்க இயலுமா ?

    ReplyDelete
  5. மந்தார இலையைப் பார்த்தாலே எனக்கு சின்ன வயசு ஞாபகம் வந்து விடும்.  தஞ்சை மருத்துவக்கல்லூரி அருகே ஒரு கேன்டீன் இருந்தது.  அதில் பூரி மசால் பொட்டலம் இதில்தான் கொடுப்பார்கள்.  அந்த நினைவில் மந்தார இலையைப் பார்த்தாலே எனக்கு பூரி மசால் வாசனை நினைவில் அடிக்கும்!

    இலந்தைப்பழம் சரி, கிளாக்காய் சாப்பிட்டிருக்கிறீர்களா?

    ReplyDelete

  6. ஐ மீஸ் இலந்தை பழம்

    ReplyDelete
  7. இளமைக்கால நினைவுகள் என்றும் ஆனந்தமே.

    ReplyDelete
  8. அரை நெல்லி, முழு நெல்லிக்காய் அவித்து காரம் போட்டது - இதைக் குறிப்பிட மறந்துட்டீங்க.

    தையல் இலையில் சாப்பிட்ட காலங்கள் நினைவுக்கு வந்துவிட்டது.

    ReplyDelete
  9. நல்ல நினைவுகள். நான் இன்னும் ஈசிசேர் பயன்படுத்துகிறேன். மிகவும் சிறியதாக உள்ள ஒன்று.

    துளசிதரன்

    மந்தார இலை எங்க புகுந்த வீட்டில தையல் இலைன்னு சொல்லுவாங்க. எங்க ஊர்ல எல்லாம் வாழை இலை ஈசியா கிடைக்கும் பெரும்பாலான வீடுகளில் வாழை மரமும் இருக்கும். வாழை தென்னை, மா இல்லாத வீடுகள் அரிது கொல்லைப்புறத்துல. அதே போல கறிவேப்பிலை. இப்ப எப்படின்னு தெரியலை. நான் ஊர்ல இருந்த வரைக்கும்.

    சென்னைல பெரும்பாலும் தையல் இலைதான். என் மாமியாரின் அம்மா திருவனந்தபுரம் வந்தப்ப, பிராசு இலை அல்லது பலா இலை பொறுக்கிட்டு வந்து அதை ஈர்க்குச்சியை சின்ன சின்னதா உடைச்சு கோர்த்து இலை பண்ணி அதில சாப்பிடுவாங்க.

    கொடுக்காப்புளி, புளிப்பு மிட்டாய், நெத்தில வைச்சு உடைச்சு சொடக்கு போடறாப்ல சத்தம் வருமே ஹையோ மறந்து போச்சு நீட்டமா பூ மாதிரி இருக்கும்...அது...கலர் மிட்டாய், இன்னும் நிறைய சொல்லலாமோ?

    நானும் வாட்டர்பேக் கொண்டு போனதுண்டு..என் அப்பா என்னுடன் இருந்த வரை ஈசி சேருக்கு எங்க ரெண்டு பேருக்கும் போட்டி வரும்..ஹா ஹா ஹா ஹா இப்ப அப்பாகிட்ட இருக்கு அது.

    நல்ல நினைவுகள்

    கீதா

    ReplyDelete
  10. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை !!! இலந்தை பழம்மிகவும் நன்றாக இருக்கும் நன்றி!!!

    ReplyDelete