தீபாவளி பலகாரம்ன்னாலே எங்க ஊர் பக்கம் அதிரசத்துக்குதான் முதலிடம். மத்ததுலாம் அதுக்கடுத்துதான். தீபாவளிக்கு மறுநாள் நோன்பு எடுப்போம். இப்ப அது விசயம்ல்ல. அந்த நோன்புக்கு அதிரசம் அதுலயும் குறிப்பா வெல்ல அதிரசம்தான் செய்வோம். எண்ணி வச்சது, அப்படியே வச்சது, பாகு எடுத்தது, பாகு எடுக்காததுன்னு விதம் விதமா அதிரசம் சுடுவாங்க. என் அம்மா வீட்டில் நெய்ல செஞ்ச அதிரசம்தான் நோன்புக்கு. முன்னலாம் நார்மல் சைசுக்கு செஞ்ச அதிரசம் இப்ப பத்து ரூபா காயின் அளவுக்கு சுருங்கிடுச்சு. கேட்டா ஆயிலாம்.. உடம்புக்கு சேராதாம். என் மாமியார் வீட்டில் பாகு எடுக்காம அதிரசம் செய்வாங்க. இதை நாலு நாள் கழிச்சுதான் சாப்பிட முடியும். என் அம்மா கைப்பக்குவம் எனக்கு அதிரசத்துலதான் வந்திருக்கு. பெருமைக்கு சொல்லலீங்கோ. அதிரசம் நான் நல்லாவே செய்வேனாக்கும்....
தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி - 1 கிலோ
வெல்லம் - 1கி
சுக்கு - 10கிராம்
ஏலக்காய் - 5
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
அரிசியை தண்ணில 2 மணி நேரம் ஊற வெச்சு, தண்ணி நல்லா வடிச்சு, ஒரு காட்டன் துணில மூட்டை கட்டி வைங்க. அரை மணி நேரம் கழிச்சு, லேசா ஆற வச்சு, மெஷின்ல இல்ல மிக்சில போட்டு அரைச்சுக்கோங்க. அரிசி லேசான ஈரப்பதத்துல இருக்கனும், ரொம்ப காய்ஞ்சுட்டாலும் அதிரசம் நல்லா இருக்காது. மிக்சிலயும் அரைச்சுக்கலாம்
அரைச்சு வந்த மாவை நல்லா ’சலிச்சுக்காம’ சலிச்சுக்கனும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணிய பொடிச்ச வெல்லத்தை போட்டு வெல்லம் முங்குற அளவுக்கு தண்ணிய ஊத்தி வெல்லம் கரைஞ்சதும் வேற ஒரு பாத்திரத்துல வடிக்கட்டி கொதிக்க விடனும். எஃப்.பில அப்டேட் பண்றேன்ன்னு பொங்க விடாதீங்க. அடிக்கடி கிளறி விடுங்க.
சுக்கு, ஏலக்காயை பொடிச்சு சலிச்சுக்கோங்க.. கசகசாவை வண்டு, பூச்சி இல்லாம பார்த்துக்கோங்க. ஏன்னா அதிரசம் சைவ ஜாதி...
பாகு வந்திடுச்சான்னு பார்க்கலாமா?! ஒரு தட்டுல தண்ணி ஊத்தி, அதுல கொதிக்குற பாகுல சொட்டு விட்டா கரையாம நிக்கனும். அதுக்கு பேரு முத்து பதம். அதான் சரியான ஸ்டேஜ்.
அடுப்பை சிம்ல வச்சிட்டு கொஞ்சம் கொஞ்சமா வெல்லப்பாகில் மாவை சேர்த்து கிளறி விடுங்க..
அடிப்பிடிச்சுடாம நல்லா கிளறி விடுங்க...
சுக்கு, ஏலக்காய், கசகசா, வெள்ளை எள்ளை சேர்த்துக்கோங்க...
கொஞ்சம் நெய் சேர்த்துக்கோங்க...
மாவை சின்ன, சின்ன உருண்டையாக்கி, வாழை இலை இல்லாட்டி பாலிதீன் பேப்பர்ல எண்ணெய் தொட்டு தட்டிக்கோங்க.

வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் ஒண்ணொண்ணா போட்டு, ரெண்டு பக்கமும் நல்லா சிவந்ததும் எடுங்க. வடை போல வாணலி ஃபுல்லா அதிரசம் போடாதீங்க. ஒண்ணு இல்ல ரெண்டு போட்டு சுடுங்க.
ரெண்டு பக்கமும் பொன்னிறமா வெந்ததும், அதிரசம் அமுக்கும் கட்டையில வச்சு அழுத்தி எடுத்தா, அதிரத்துல இருக்கும் அதிகப்படியான எண்ணெய் வெளில வந்துடும். இந்த மாதிரி கட்டை இல்லாட்டி பூரி அழுத்துறதுல வச்சு லேசா அழுத்தலாம். இல்லாட்டி ஒரு கிண்ணத்தை திருப்பி போட்டு அது மேல அதிரசம் வச்சு ஒரு தட்டால அழுத்தி எடுத்தாலும் எண்ணெய் வந்திரும்.
சூடான, சுவையான அதிரசம் ரெடி. குறைஞ்சது பதினைந்து நாள் வச்சு சாப்பிடலாம். சுக்கு, கசகசா, எள் சேர்த்திருக்கிறதால உடம்புக்கும் ஒண்ணும் பண்ணாது. சூடா இருக்கும்போதே அதிரசம் சாப்பிட சூப்பரா இருக்கும்.
அக்கம் பக்கம் முஸ்லீம் வீடுக இருக்கு. இந்த அதிரசத்துக்காகவே வெயிட்டிங்க்.. தீபாவளி காலைல கொடுத்தாகனும். கொஞ்சம் லேட்டானாலும் சண்டை பிடிப்பாங்க. பகிர்ந்து மகிழத்தானே பண்டிகை?!
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1474990
ராஜி.