தீபாவளி பலகாரம்ன்னாலே எங்க ஊர் பக்கம் அதிரசத்துக்குதான் முதலிடம். மத்ததுலாம் அதுக்கடுத்துதான். தீபாவளிக்கு மறுநாள் நோன்பு எடுப்போம். இப்ப அது விசயம்ல்ல. அதை பத்திய பதிவு வியாழக்கிழமை வருது. அந்த நோன்புக்கு அதிரசம் அதுலயும் குறிப்பா வெல்ல அதிரசம்தான் செய்வோம்.
தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி - 1 கிலோ
வெல்லம் - 1கி
சுக்கு - 10கிராம்
ஏலக்காய் - 5
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
அரிசியை தண்ணில 2 மணி நேரம் ஊற வெச்சு, தண்ணி நல்லா வடிச்சு, ஒரு காட்டன் துணில மூட்டை கட்டி வைங்க. அரை மணி நேரம் கழிச்சு, லேசா ஆற வச்சு, மெஷின்ல இல்ல மிக்சில போட்டு அரைச்சுக்கோங்க. அரிசி லேசான ஈரப்பதத்துல இருக்கனும், ரொம்ப காய்ஞ்சுட்டாலும் அதிரசம் நல்லா இருக்காது.
வெல்லத்தை பொடிச்சு ஒரு பாத்திரத்துல போட்டு 100மிலி தண்ணி ஊத்தி வெல்லம் கறையும் வரை சூடு பண்ணி, அடுப்பை அணைச்சுட்டு வெல்லத்தண்ணியை ஆற விட்டு, அடிக்கணமான பாத்திரத்துல வடிக்கட்டிக்கோங்க.
அடுப்புல வச்சு கொதிக்க விடுங்க. அடிக்கடி ஜல்லிக் கரண்டியால கிளறி விடுங்க. இல்லாட்டி, பாத்திரத்துல அடிப்பிடிச்சுக்கும்
வெல்லம் கொதிக்கும்போதே ஏலக்காய், சுக்கை மிக்சில போட்டு நைசா அரைச்சு, ஜலிச்சு வச்சுக்கோங்க.
ஒரு தட்டுல கொஞ்சம் தண்ணி ஊத்தி, கொதிக்கும் வெல்லப் பாகை எடுத்து ஒரு சொட்டு விடுங்க. லேசா விரலால நகர்த்தி பாருங்க. பாகு தண்ணில கரையாட்டி, அதான் சரியான பதம். அடுப்பை சிம்ல வச்சுட்டு, பாகுல அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமா போட்டு கிளறுங்க. கைல எடுத்து தொட்டு பாருங்க சப்பாத்தி மாவு பதத்துக்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிடுங்க.
அப்படி கிளறும்போதே வெள்ளை எள்ளை போட்டுக்கோங்க.
அடுத்து கசகசாவை சேர்த்துக்கோங்க.
பொடிச்சு வச்ச சுக்கு, ஏலக்காய் பொடியை சேர்த்து நல்லா கிளறுங்க.
நெய் சேர்த்து கிளறி மூடி வைங்க.
மாவை சின்ன, சின்ன உருண்டையாக்கி, வாழை இலை இல்லாட்டி பாலிதீன் பேப்பர்ல எண்ணெய் தொட்டு தட்டிக்கோங்க.
வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் ஒண்ணொண்ணா போட்டு, ரெண்டு பக்கமும் நல்லா சிவந்ததும் எடுங்க. வடை போல வாணலி ஃபுல்லா அதிரசம் போடாதீங்க. ஒண்ணு இல்ல ரெண்டு போட்டு சுடுங்க.
ரெண்டு பக்கமும் பொன்னிறமா வெந்ததும், அதிரசம் அமுக்கும் கட்டையில வச்சு அழுத்தி எடுத்தா, அதிரத்துல இருக்கும் அதிகப்படியான எண்ணெய் வெளில வந்துடும். இந்த மாதிரி கட்டை இல்லாட்டி பூரி அழுத்துறதுல வச்சு லேசா அழுத்தலாம். இல்லாட்டி ஒரு கிண்ணத்தை திருப்பி போட்டு அது மேல அதிரசம் வச்சு ஒரு தட்டால அழுத்தி எடுத்தாலும் எண்ணெய் வந்திரும்.
சூடான, சுவையான அதிரசம் ரெடி. குறைஞ்சது பதினைந்து நாள் வச்சு சாப்பிடலாம். சுக்கு, கசகசா, எள் சேர்த்திருக்கிறதால உடம்புக்கும் ஒண்ணும் பண்ணாது.
டிஸ்கி: இன்னும் கேமரா வாங்காததால, பதிவருக்குண்டான கடமையை ஆத்தோ, ஆத்தோன்னு ஆத்தனுமேன்னு மொபைல்ல படங்கள் எடுத்தேன். கொஞ்சம் அப்படி, இப்படிதான் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கப்பா! அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட வரேன்.
வாவ், சூப்பர் அக்கா... இந்த செய்முறையை அப்படி வீட்டம்மா கிட்ட காட்டி செய்யச் சொல்லவேண்டியதுதான்... (நமக்கும் சமையலுக்கும் ரொம்ப தூரம்)
ReplyDeleteம்ம்ம் செய்ய சொல்லுங்க. எதாவது டவுட்னா போன்ல கூப்பிடுங்க!!
Deleteஅதி மதுரம் போல் இனிக்கும்
ReplyDeleteஅதிரசம் ...
தீபாவளி வந்தால் மறக்கமுடியாத
மறுக்கமுடியாத இனிப்பு..
உண்டு முடித்து பலமணி நேரம்
இனிப்பு வாயில் ஓட்டிக்கொண்டே இருக்கும்...
செய்முறை விளக்கம் இனிது சகோதரி..
நிஜம்தான் அண்ணா! அதே நேரம் உடம்புக்கும் கெடுதல் இல்லாதது. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா!
Deleteஎன்ன சொன்னாலும் எனக்கும் கிச்சனுக்கும் ம்ஹூம்... இப்படியெல்லாம் சமையல்ல அசத்தறவங்களை பார்த்தா ரொம்ப பிடிக்கும்! பத்திரிக்கையில் ரெசிப்பி எழுதற தோழியை கூப்பிட்டுதான் கொஞ்சம் பலகாரம் செய்து தர சொல்லி தீபாவளி பலகாரத்தை சமாளித்தேன்.!
ReplyDeleteநானே வாயல் வைக்குற மாதிரி சுமாராசமைக்கும்போது உங்களுக்கென்னங்க!? சீக்கிரமே நல்லா சமைப்பீங்க, வருகைக்கு நன்றிங்க!
Deleteபடம் அப்படி இப்படி இருந்தாலும்
ReplyDeleteசுவை அதிமதுரமாய் இருக்கும்
எனப் பார்த்தாலே புரிகிறது
படங்களுடன் செய்முறை விளக்கம் அருமை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
tha.ma 5
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteநல்ல செய்முறை விளக்கம் குறித்துக் கொண்டேன்.... நேரம் இருக்கும் போது செய்து பார்க்கலாம்.... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
15 நாள் இருக்குமுன்னா எனக்கு அனுப்பி வைச்சுருக்லாமே?
ReplyDeleteஎங்களை வெல்ல,சுவையான அதிரசம் செய்து காட்டி விட்டீர்ர்கள்!
ReplyDeleteஇனி தமிழ் பதிவாளர்களும் (Tamil Bloggers), ஆங்கில பதிவாளர்களுக்கு (English Bloggers) இணையாக வருமானம் பெற முடியும்.
ReplyDeleteதமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in ல் பதிவுசெய்து, Ad30days Network விளம்பரங்களை தங்கள் தலத்தில் காண்பிப்பதன் மூலம் மாதம் நிரந்திர வருமாணம் பெற முடியும்.
தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்துவது முற்றிலும் இலவசம் .
வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம். ( Bank Transfer, Paypal)
சுவையா இருக்கே உங்க பதிவு...ஆனால் ரொம்ப வேலை மாதிரி தெரியுதே..ஹ்ம்ம்..ஒரு நாள் முயற்சி செய்து பார்க்கிறேன்...நன்றிங்க ராஜி!
ReplyDeleteஅருமையா விளக்கமா எழுதி இருக்கீங்க ராஜி மா. பாகு தான் முக்கியம் .அதைச் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். சூப்பர் அதிரசம்.அதுவும் எண்ணெய் இல்லாத வழியையும் சொல்லி இருக்கீங்க.நன்றி ராஜி
ReplyDeleteபார்சல் இன்னும் வந்து சேரலையே அக்கா!! ;-)
ReplyDeleteஎனக்கு பிடித்த இனிப்பு..... ஒரு பத்து அதிரசம் பார்சல்..... ப்ளீஸ். கோவை போற வழியில திருச்சில கொடுத்துட சொல்லுங்க!
ReplyDeleteஐ அதிரசம்.....எங்க ஊர்ல நடுவுல ஓட்டை போட்டு பண்ணுவாங்க...!
ReplyDeleteஇப் பெயர் மிக அழகான பெயர்.
ReplyDeleteஈழத்தில் இப் பலகாரம் வெகுகுறைவு, நான் இதுவரையில் கண்டதில்லை,உண்டதில்லை. இனி உண்னும் சாத்தியமில்லை.இனிப்புப் பண்டம் தவிர்க்கவேண்டிய நிலை.
இது பற்றி அப்பப்போ படித்துள்ளேன்.
படிக்கும் போதே இனிக்கிறது, எனினும் நாம் அய்யோ பாவம், நம்மைப் போல் பலர் சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள்தான். ஆனால் மற்றவகை அரிசி & இனிப்பினை குறைத்து ஒரு நாளைக்கு மட்டும் அதிரசம் உனண்டோமானால், சமளித்திடலாம். கவலை வேண்டாம்.
Delete