Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Saturday, January 26, 2019

கிடைத்த சுதந்திரத்தை தக்கவைத்துக்கொள்ள உருவான குடியரசு தினம்.

Image may contain: one or more people, people standing, sky, nature and outdoor
பாரதத்திருநாட்டை காலங்காலமாய் மன்னர்கள் ஆண்டுவந்தனர். மன்னர்களுக்குப்பின் அவர்களது வாரிசுகள் மன்னனார்கள்.  சிலர் நல்லாட்சி கொடுத்தனர். சிலர் கொடுங்கோலாட்சி புரிந்தனர். இன்னும் சிலரோ குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் நாட்டை ஆளத்தெரியாமல் ஆண்டனர். தங்களுக்குள் போட்டி, பொறாமையால் சிதறுண்டு கிடந்தனர். இவர்களுக்கிடையிலான இந்த ஒற்றுமையின்மையை பயன்படுத்திக்கொண்டு முதலில் முகலாயர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் உட்பட அன்னியர்களின் படையெடுப்புக்கு இந்தியா ஆளாகி, விரைவில் அந்நியர் வசம் பழம்பெருமை வாய்ந்த இந்தியா அடிமைப்பட்டது.
பல்வேறு தியாகங்கள், சதிகள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், மறியல்கள், உயிரிழப்புகள்,  குழிபறிப்புகள் என பல கட்டங்களை கடந்து இந்தியா ஆகஸ்ட் 15, 1947ல் சுதந்தர காற்றை சுவாசித்தது. மீண்டுமொருமுறை இதுப்போல இந்தியா அன்னியரின் கையில் அகப்பட்டுவிடக்கூடாதென அப்போதிருந்த இந்திய தலைவர்கள் ஒன்றுக்கூடி முடிவெடுத்து  வாரிசு உரிமையுள்ள மன்னராட்சி முறை கூடாதென நினைத்து, மக்கள் பங்குக்கொள்ளும் மக்களாட்சி உள்ள நாடாக இந்தியா இருக்க வேண்டுமென தீர்மானித்து,  இந்திய நாடு குடியரசாக இருந்தால்  மீண்டும் அன்னியர்வசம் அடிமைப்படாதென நினைத்து குடியரசு நாடென அறிவித்தனர்.
குடியரசு என்றால் குடிமக்களின் அரசு, மக்களாட்சி என்று அர்த்தம். தேர்தல்மூலம் மக்கள் தங்கள் விருப்பப்படி  தங்களுடைய தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. ஜனவரி 26-ம் தேதி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்ததுன்னு அஞ்சாப்பு பாடத்துல படிச்சிருப்போம். அரசியல் அமைப்புச் சட்டம்ன்னா என்னன்னு  தெரியுமா? நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பவர்கள் எப்படி ஆட்சி செய்யவேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம்(அந்த சட்டம் இப்ப அமலில் இருக்கான்னு கேட்டா தெரியாதுன்னுதான் சொல்வேன்). டாக்டர் அம்பேத்கர் தலைமையில் சட்டமேதைகள் பலர் சேர்ந்து இதை உருவாக்கினார்கள். இந்த அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால்தான் அன்றைய தினத்தைக் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம்.   அதனால்தான் ஒருநாள் லீவும், ஆரஞ்ச் முட்டாயும் கிடைச்சுது. 
சுதந்திர தினத்தைவிட இந்தநாள்தான் முக்கியமானதுன்னு சொல்றாங்க. ஏன்னா, நம்ம விருப்பப்படி தலைவனை தேர்ந்தெடுக்கலாம். அந்த தலைவன் சரியில்லைன்னா அவரை நீக்கிட்டு இன்னொரு தலைவனை தேர்ந்தெடுக்கும் உரிமை சாதாரண குடிமகனுக்கும் இருக்குறதால இந்த நாள் சுதந்திரதினத்தைவிட முக்கியமானதானதாய் இருக்கு. 
No photo description available.
பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய்நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம் - இது 1928 ஜனவரி 26 ல் காந்தி கூறிய வாா்த்தை இது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதந்திர போராட்டம் நடந்தக் காலகட்டத்தில் “1928 ஜனவரி 26 ம் நாளை இந்திய சுதந்திர நாள்” என்று காந்தி அறிவித்தார். அவர் அறிவித்தப்படி சுதந்திரம் கிடைக்கவில்லை என்றாலும் அந்த நாள் தான் இன்று குடியரசு  தினமாக போற்றப்படுகின்றது.
Image may contain: one or more people, sky, ocean and outdoor
பாடுப்பட்டு வாங்கின சுதந்திரத்தை தக்கவைக்க குடியரசு தினமாய் மாற்றிய நம் தலைவர்களின் தீர்க்கதரிசனத்தை போற்றும் விதமாய் நம் பொறுப்புகள், கடமைகளை உணர்ந்து குப்பைகளை அங்கங்க கொட்டாம, கண்ட இடத்தில் அசுத்தம் பண்ணாம, வாக்குரிமையை காசுக்காக விலை பேசாம, விடுமுறை கிடைச்சுதேன்னு வாக்குரிமையை செலுத்தாமலும் இருக்காம ஒழுங்கா வாக்குச்சாவடிக்கு போய் வாக்கு செலுத்தி, சரியான வருமான வரியை செலுத்தி, சாலைவிதி உட்பட அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி சகமனிதனின் உணர்வுகளை புரிந்து அவனுக்கான உரிமைகள் பெற வழிவிட்டு, அடங்க வேண்டிய இடத்தில் அடங்கி, பொங்க வேண்டிய இடத்தில் பொங்கி சிறந்த குடிமகனாய் வாழ்ந்து நம் தாய்திருநாட்டை  சிறந்த நாடாய் பாரினில் முன்னிறுத்துவோம்.

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்
நன்றியுடன்,
ராஜி

Wednesday, August 15, 2018

ஆடுவோமே! பள்ளு பாடுவோமே! - சுதந்திர தினம்

 flag GIF
இந்தியா சுதந்திரம் பெற்ற வரலாற்றை சொல்லனும்ன்னா என்னோட வாழ்நாள் பத்தாது. அறிவும் பத்தாது. ஏன்னா, அத்தனை தியாகம், துரோகம், வஞ்சகம், வீரம், கண்ணீர், நெகிழ்ச்சின்னு அத்தனை கதை இருக்கு. வெளிச்சத்துக்கு வந்த, வராத எத்தனையோ தியாகிகள், வெளிச்சத்துக்கு வந்த தியாகிகள் வீட்டார் பட்ட துன்பங்கள்ன்னு எத்தனையோ இருக்கு. அப்படியிருக்க ஒருசிலரை சொல்லி பலரை சொல்லாமல் விட்டால் நன்றிக்கெட்டவர்களாவோம். அதனால அந்த எப்படி சுதந்திரம் கிடைத்ததுன்னு போகாம சுதந்திரம் கிடைத்தபோது நடந்தவற்றில் சிலவற்றை பார்ப்போம்....

Hindustan Times front page on August 15, 1947.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்தியாவுக்கான தேசிய கீதம் கிடையாது.. 1911ல் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட 'ஜன கண மன' பாடல் 1950ல் தான் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனால் சுதந்திர தினத்தன்னிக்கு வந்தேமாதரம் பாடல்தான் பாடப்பட்டது.
இந்தியாவுக்கு  சுதந்திரம் கிடைத்த அன்னிக்கு தேசப்பிதா மகாத்மா காந்தி கோல்கத்தாவில் இருந்தார். மத மோதல்களை எதிர்த்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.  சுதந்திரம் பெற்றப்பின் காங்கிரஸ் இயக்கத்தையே கலைக்க நினைத்தார் காந்திஜி. சுதந்திரம் பெற்று தந்ததை சொல்லிக்காட்டி மக்களிடம் அதிகாரம் செலுத்துவர் என அவர் நினைத்தார். 
கதர் துணியில் மட்டுமே தேசியக்கொடி தயாரிக்க வேண்டும். மற்ற  துணி வகைகளில் கொடியை தயாரிப்பது தண்டனைக்குரிய குற்றம்.  அரபிந்தோ கோஸ், நெப்போலியன் போனபார்ட்லாம் ஆகஸ்ட் 15ல் பிறந்தவர்கள்.  மகாதேவ் தேசாய், அமர்சிங் சவுத்ரி, ஆகியோர் ஆகஸ்ட் 15ல் இறந்தவர்கள்.
1947ல்இந்தியாவின் ஒரு ரூபாய் அமெரிக்காவின் ஒருடாலருக்கு சமமாக இருந்தது. ஆனால் இன்று?! இந்தியா சுதந்திர தினம் கொண்டாடும் இதே நாளில் தென்கொரியா, பஹ்ரைன், காங்கோ ஆகிய மூன்று நாடுகளும் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன. இந்தியாவில், சுதந்திரத்தின்போது 1,100 மொழிகள் வழக்கத்தில் இருந்தன. ஆனா, இன்னிக்கு 880 மொழிகள் மட்டுமே இருக்கு.  
இந்திய பிரதமராக செங்கோட்டையில் 17 முறை ஜவகர்லால் நேரு தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார். அதிகமுறை கொடியேற்றியவர் என்ற பெருமையை நேரு பெறுகிறார். இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.88.62 பைசா.  சுதந்திரம் பெற்ற போது  இந்தியா 562 சுதேச சமஸ்தானங்களாக பிரிந்து இருந்தன. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்ததால்தான் சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என்று பெயர் பெற்றார். மவுண்ட்பேட்டன் டில்லி(இந்தியா) மற்றும் கராச்சி(பாகிஸ்தான்) ஆகிய இரண்டு இடங்களிலும் நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றார்.



இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவில் 562 சுதேச மாகாணங்கள் இருந்தது.  இந்திய தேசியக் கொடி முதன் முதலாக 1906-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி ஏற்றப்பட்டது. கல்கத்தாவில் உள்ள பார்சி பாகன் சதுக்கத்தில்தான் ஏற்றப்பட்டது. அப்ப, தேசியக்கொடி சிவப்பு, மஞ்சள், பச்சை வண்ணத்தில் இருந்தது. மேலே 8 தாமரைப் பூக்கள், கீழே சூரியனும், பிறை நிலாவும் இருந்தன. இப்ப இருக்கும் தேசியக்கொடியின் நிறங்களுக்கு அர்த்தம் உண்டு. காவி வண்ணம் தைரியம், தியாகத்தையும்,  வெள்ளை உண்மை, அமைதி, தூய்மையையும், பச்சை வண்ணம் நம்பிக்கை, தீரச்செலையும், நடுவிலிருக்கும் அசோகச்சக்கரம் நீதியையும் குறிக்கும்.  தற்போதுள்ள தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கய்யா. 1921-ல் வடிவமைத்தார். இக்கொடி 1947-ம் ஆண்டு ஜூலை 22 அன்று தேசியக் கொடியாக முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தியா சுதந்திரமடைந்தபோதும் கோவா மட்டும் சுதந்திரம் பெறாமலேயே இருந்தது. ஏன்னா, கோவா போர்த்துகீசியர் வசம் இருந்தது. 1961-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி, இந்திய ராணுவம் தலையிட்ட பிறகு, கோவா இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.   இந்தியா ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது போல இன்னும் 3 நாடுகளும் அன்றைய தினம் தங்களது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடுகின்றது.  இதே நாளில் 1945-ம் ஆண்டு ஜப்பானிடமிருந்து கொரியாவும், 1971-ம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து பஹ்ரைனும், 1960-ம் ஆண்டு பிரான்ஸிடமிருந்து காங்கோவும் விடுதலை பெற்றன.

இந்தியாவுக்கு விடுதலை அளிக்க முடிவு செய்ததும், ஆகஸ்ட் 15தேதிதான் என இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபுதான் முடிவு செய்தார். இரண்டாம் உலகப் போரின்போது 1945-ம் ஆண்டு நேச நாடுகள் படைகளிடம் ஜப்பான் சரணாகதி அடைந்தது அந்தத் தேதியில்தான். அந்த நினைவாக அந்தத் தேதியைத் தேர்வு செய்தார். இந்தியா என்ற அகண்ட நாடு இந்தியா - பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிந்த பிறகு இரு சுதந்திர தினக் கொண்டாட்டத்திலும் மவுண்ட்பேட்டன் பிரபு கலந்துகொள்ள விரும்பினார். அதற்கு வசதியாகப் பாகிஸ்தானுக்கு ஆகஸ்ட் 14-ம் தேதியும், இந்தியாவுக்கு ஆக15 சுதந்திரம் தர முடிவு செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 15 சரியில்லாத நாள் எனவும், இரண்டு நாட்கள் கழித்து கொடுக்கலாம் என ஜோதிடர்கள் இந்திய தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஆக., 15 என்பதில் மவுண்ட் பேட்டன் உறுதியாக இருந்தார். இந்த சூழ்நிலையில்தான் ஆங்கிலேயர் கணக்குப்படி நள்ளிரவு 12 மணி என்பது புதிய நாள். இந்தியர்களுக்கு அதிகாலை 5 மணி தான் புதிய நாள். இதனால் ஆகஸ்ட் 15 நள்ளிரவே இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. அப்பொழுது  எழுப்பப்பட்ட  ஒலியை கேட்டு, அனைவரும்  ஒரே  நேரத்தில்  எழுந்து  நின்று “ வந்தே  மாதரம் “ என  பாடினார். பின்னர், அரசியல் அமைப்பு  சபையில்  ஆகஸ்ட்  15 ஆம் தேதி காலை  10.30  மணியளவில்  தேசியக்கொடி ஏற்றப்பட்டது.


கத்தியின்றி, ரத்தமின்றி சுதந்திரம் கிடைத்ததுன்னு கொஞ்சம் மிகைப்படுத்தி சொன்னாலும், நிஜத்தில் அப்படி நடக்கவில்ல. பலப்பேர் தங்கள் இன்னுயிரை ஈந்தும், உடல் அவங்களை இழந்துதான் இந்த சுதந்திரம் கிடத்தது. அப்பேற்ப்பட்ட சுதந்திரத்தை நாம் எப்படி போற்றி பாதுக்காக்க வேண்டும்/?! கருத்து சுதந்திரம் இருக்கு. ஆனா எதுல?! காதல், காமம், ஆன்மீகம் பற்றி பேச மட்டுமே! அரசியல், நாடு, சமூகம்ன்னு கருத்து சொன்னால் வழக்குகள் பாயும்.  ஆடை சுதந்திரம் உண்டு. ஆனா அது உடல் அவயங்களை காட்ட மட்டுமே... மது அருந்தி சாலையில் விழுந்து கிடக்க அனுமதி உண்டு. ஆனா, ஒரு சமூக அவலத்துக்காக போராட அனுமதி இல்லை.  கல்வி சுதந்திரம் உண்டு., அது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே. சமூக வளைத்தளங்களில் பெண்களுக்கு முழு சுதந்திரம் உண்டு ... செல்ஃபி போட மட்டுமே. எதாவது சமூக கருத்து சொன்னா உடனே வேசி பட்டம்... சமூக வலைத்தளத்தில் கருத்தை பகிர்ந்து கொள்ள உரிமை உண்டு. அது சமூகத்தை பத்தி இருக்கக்கூடாது..

ஆற்று மணலை அள்ள சுதந்திரம்.. ஆனா, ஆற்றை தூர் வாற அனுமதியில்லை. தண்ணியை வீணாக்க சுதந்தரமுண்டு... ஆனா, குளம், குட்டை கிணறு வெட்டக்கூடாது.  மரம் வெட்டிக்கலாம்.. ஆனா, மரம் நடக்கூடாது. எங்க வேணும்ன்னாலும் குப்பை கொட்டலாம்... ஆனா குப்பை அள்ள வரக்கூடாது... கண்ட இடத்தில் மலம், சிறுநீர் கழிக்கலாம்.. ஆனா, அதை சீர் பண்ண வரக்கூடாது... வாக்கு போட வரக்கூடாது... கிராம சபை கூட்டத்துக்கு வரக்கூடாது... அக்கம் பக்கம் நடக்கும் சமூக அவலத்துக்கு குரல் கொடுக்க வரக்கூடாது.

எல்லா தப்பையும் செய்வோம். எல்லாவிதத்திலயும் சுதந்திரம் அனுபவிப்போம். ஆனா, நாடு என்ன செய்ததுன்னு கேட்போம். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சட்டம்தான் போடும். ஆனா குடிமக்களாகிய நாமும், அதிகாரிகளும்தான் சரிவர, மனசாட்சிப்படி நடந்து எல்லா மக்களுக்கும் போய் சேரும்படி பார்த்துக்கனும். அதை விட்டு ஆட்சியாளர்களையே எதுக்கெடுத்தாலும் குறைசொல்லிக்கிட்டு இருக்கக்கூடாது. 



முதல்ல நாம மாறுவோம். அப்புறம் அவங்களை மாத்துவோம்.  அப்படியும் ‘அவிய்ங்க’ மாறாவிட்டால் வேற ஆளை மாத்துவோம்.   மாற்றம் முதல்ல நம்மிடமிருந்து வரனும்... இன்னிலிருந்து மாறுவோமா?!

வந்தே மாதரம்.

நன்றியுடன்,
ராஜி



Tuesday, August 15, 2017

கத்தியின்றி, ரத்தமின்றி கிடைத்ததா சுதந்திரம்?!


இந்தியா சுதந்திரம் பெற்ற வரலாற்றை சொல்லனும்ன்னா என்னோட வாழ்நாள் பத்தாது. அறிவும் பத்தாது. ஏன்னா, அத்தனை தியாகம், துரோகம், வஞ்சகம், வீரம், கண்ணீர், நெகிழ்ச்சின்னு அத்தனை கதை இருக்கு. வெளிச்சத்துக்கு வந்த, வராத எத்தனையோ தியாகிகள், வெளிச்சத்துக்கு வந்த தியாகிகள் வீட்டார் பட்ட துன்பங்கள்ன்னு எத்தனையோ இருக்கு. அப்படியிருக்க ஒருசிலரை சொல்லி பலரை சொல்லாமல் விட்டால் நன்றிக்கெட்டவர்களாவோம். அதனால அந்த எப்படி சுதந்திரம் கிடைத்ததுன்னு போகாம சுதந்திரம் கிடைத்தபோது நடந்தவற்றில் சிலவற்றை பார்ப்போம்....

Hindustan Times front page on August 15, 1947.
இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்தியாவுக்கான தேசிய கீதம் கிடையாது.. 1911ல் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட 'ஜன கண மன' பாடல் 1950ல் தான் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 
இந்தியாவுக்கு  சுதந்திரம் கிடைத்த அன்னிக்கு தேசப்பிதா மகாத்மா காந்தி கோல்கட்டாவில் இருந்தார். மத மோதல்களை எதிர்த்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.  சுதந்திரம் பெற்றப்பின் காங்கிரஸ் இயக்கத்தையே கலைக்க நினைத்தார் காந்திஜி. சுதந்திரம் பெற்று தந்ததை சொல்லிக்காட்டி மக்களிடம் அதிகாரம் செலுத்துவர் என அவர் நினைத்தார். 
கதர் துணியில் மட்டுமே தேசியக்கொடி தயாரிக்க வேண்டும். மற்ற  துணி வகைகளில் கொடியை தயாரிப்பது தண்டனைக்குரிய குற்றம்.  அரபிந்தோ கோஸ், நெப்போலியன் போனபார்ட்லாம் ஆகஸ்ட் 15ல் பிறந்தவர்கள்.  மகாதேவ் தேசாய், அமர்சிங் சவுத்ரி, ஆகியோர் ஆகஸ்ட் 15ல் இறந்தவர்கள்.
1947ல்இந்தியாவின் ஒரு ரூபாய்அமெரிக்காவின்ஒருடாலருக்கு சமமாக இருந்தது. ஆனால் இன்று?! இந்தியா சுதந்திர தினம் கொண்டாடும் இதே நாளில் தென்கொரியா, பஹ்ரைன், காங்கோ ஆகிய மூன்று நாடுகளும் சுதந்திர தினத்தைகொண்டாடுகின்றன. இந்தியாவில் சுதந்திரத்தின்போது 1,100 மொழிகள் வழக்கத்தில் இருந்தன. ஆனா, இன்னிக்கு 880 மொழிகள் மட்டுமே இருக்கு.  
இந்திய பிரதமராக செங்கோட்டையில் 17 முறை ஜவகர்லால் நேரு தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார். அதிகமுறை கொடியேற்றியவர் என்ற பெருமையை நேரு பெறுகிறார். இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.88.62 பைசா.  சுதந்திரம் பெற்ற போது  இந்தியா 562 சுதேச சமஸ்தானங்களாக பிரிந்து இருந்தன. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்ததால்தான் சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என்று பெயர் பெற்றார். மவுண்ட்பேட்டன் டில்லி(இந்தியா) மற்றும் கராச்சி(பாகிஸ்தான்) ஆகிய இரண்டு இடங்களிலும் நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றார்.

கத்தியின்றி, ரத்தமின்றி சுதந்திரம் கிடைத்ததுன்னு கொஞ்சம் மிகைப்படுத்தி சொன்னாலும், நிஜத்தில் அப்படி நடக்கவில்ல. பலப்பேர் தங்கள் இன்னுயிரை ஈந்தும், உடல் அவங்களை இழந்துதான் இந்த சுதந்திரம் கிடத்தது. அப்பேற்ப்பட்ட சுதந்திரத்தை நாம் எப்படி போற்றி பாதுக்காக்க வேண்டும்/?! கருத்து சுதந்திரம் இருக்கு. ஆனா எதுல?! காதல், காமம், ஆன்மீகம் பற்றி பேச மட்டுமே! அரசியல், நாடு, சமூகம்ன்னு கருத்து சொன்னால் வழக்குகள் பாயும்.  ஆடை சுதந்திரம் உண்டு. ஆனா அது உடல் அவயங்களை காட்ட மட்டுமே... மது அருந்தி சாலையில் விழுந்து கிடக்க அனுமதி உண்டு. ஆனா, ஒரு சமூக அவலத்துக்காக போராட அனுமதி இல்லை.  கல்வி சுதந்திரம் உண்டு., அது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே. சமூக வளைத்தளங்களில் பெண்களுக்கு முழு சுதந்திரம் உண்டு ... செல்ஃபி போட மட்டுமே. எதாவது சமூக கருத்து சொன்னா உடனே வேசி பட்டம்... சமூக வலைத்தளத்தில் கருத்தை பகிர்ந்து கொள்ள உரிமை உண்டு. அது சமூகத்தை பத்தி இருக்கக்கூடாது..

ஆற்று மணலை அள்ள சுதந்திரம்.. ஆனா, ஆற்றை தூர் வாற அனுமதியில்லை. தண்ணியை வீணாக்க சுதந்தரமுண்டு... ஆனா, குளம், குட்டை கிணறு வெட்டக்கூடாது.  மரம் வெட்டிக்கலாம்.. ஆனா, மரம் நடக்கூடாது. எங்க வேணும்ன்னாலும் குப்பை கொட்டலாம்... ஆனா குப்பை அள்ள வரக்கூடாது... கண்ட இடத்தில் மலம், சிறுநீர் கழிக்கலாம்.. ஆனா, அதை சீர் பண்ண வரக்கூடாது... வாக்கு போட வரக்கூடாது... கிராம சபை கூட்டத்துக்கு வரக்கூடாது... அக்கம் பக்கம் நடக்கும் சமூக அவலத்துக்கு குரல் கொடுக்க வரக்கூடாது.
எல்லா தப்பையும் செய்வோம். எல்லாவிதத்திலயும் சுதந்திரம் அனுபவிப்போம். ஆனா, நாடு என்ன செய்ததுன்னு கேட்போம். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சட்டம்தான் போடும். ஆனா குடிமக்களாகிய நாமும், அதிகாரிகளும்தான் சரிவர, மனசாட்சிப்படி நடந்து எல்லா மக்களுக்கும் போய் சேரும்படி பார்த்துக்கனும். அதை விட்டு ஆட்சியாளர்களையே எதுக்கெடுத்தாலும் குறைசொல்லிக்கிட்டு இருக்கக்கூடாது. முதல்ல நாம மாறுவோம். அப்புறம் அவங்களை மாத்துவோம். மாறாவிட்டால் வேற ஆளை மாத்துவோம். 

மாற்றம் முதல்ல நம்மிடமிருந்து வரனும்... இன்னிலிருந்து மாறுவோமா?!
 flag GIF
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
Flag India animated gif 120x90







நன்றியுடன், 
ராஜி

Thursday, March 02, 2017

பாலியல் குற்றங்களுக்கு இத்தனை விதமான தண்டனைகளா??!!

 உலகத்துக்கே பாலியல் பற்றி எடுத்து சொன்ன தமிழ்நாட்டில் இன்று வயது வித்தியாசமின்றி  பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதோடு இன்னுயிரையும் இழக்கின்றனர். இதற்கு பாலியல் பற்றிய முறையான கல்வியும், விழிப்புணர்வும் இல்லாததாலும், கடுமையான சட்டங்கள் இல்லாததே காரணமாய் அமைகின்றது.
மதம், குடும்பம், பொருளாதாரம் உட்பட  பலவித கட்டுப்பாடுகளை போராடி தகர்த்து இந்த நூற்றாண்டில்தான் பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வர ஆரம்பித்துள்ளனர். ஆனால், இப்படிப்பட்ட செயல்களால் இனி பெண்பிள்ளைகளை பெற்று வளர்க்கத்தான் வேண்டுமா என்ற எண்ணம் எழப்போவது நிச்சயும். தமிழ்நாடே உசிலம்பட்டியாய் மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை. இந்த மாதிரியான கேடுகெட்ட செயல்களில் ஈடுபடுபவர்களை மிருகங்களைவிட கீழானவர்கள். ஏனெனில் எந்த மிருகமும் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதில்லை.
இப்படிப்பட்ட கேவலமான செயல்களில் மக்கள் ஈடுபடாமல் இருக்க பாலியல் கல்வியும், வளர்ப்பு முறையும், சட்டங்களிலும் மாற்றங்களை கொண்டு வரவேண்டும். கடுமையான தண்டனை இல்லாவிட்டால் சிறை அல்லது அபராதம்தானே என்ற அலட்சியம் வரும். மீண்டும் மீண்டும் அதே செயலில் ஈடுபடுவர். ஆனால், நம் நாட்டில் கடுமையான சட்டங்கள் இல்லாததாலேயே இப்படிப்பட்ட குற்றங்கள் அதிகம் நடைப்பெறுகிது.  மற்ற நாடுகளில் இருப்பதுப்போல கடுமையான தண்டனைகள் கொடுத்தால் ஓரளவு குறையும்.

இனி பல்வேறு நாடுகளில்  கொடுக்கும் கடுமையான தண்டனை பற்றி பார்ப்போம்...


சீனா;

 சீனாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படும். பாலியல் குற்றங்களிலேயே வக்கிரமான, சைக்கோக்களுக்கு ஆண்மை நீக்கப்படும். உதாரணமாய் சீனாவின்  கான்சு மாகாணத்தின் வுஷுன் நகரின் அருகேயுள்ள கிராம ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த லி ஜிஷுன் என்பவர் கடந்த 2011-2012 ஆண்டுவாக்கில் 4 முதல் 11 வயதுக்குட்பட்ட சுமார் 25 மாணவிகளிடம் வகுப்பறை, தங்கும் விடுதி மற்றும் அருகாமையில் இருக்கும் காட்டுப்பகுதியில் பாலியல்ரீதியாக முறைதவறி நடந்துகொண்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கல்வித்துறை உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில் மிகவும் குழந்தைத்தனமாகவும், அப்பாவியாகவும் இருக்கும் சிறுமிகளை தேர்ந்தெடுத்த லி ஜிஷுன், தனது இச்சைக்கு அவர்களை இரையாக்கிக்கொண்டது தெரியவந்தது. அவர் மீது கோர்ட்டில் நடைபெற்ற வழக்கின் விசாரணையில் குற்றம் நிரூபணமாகி மரண தண்டனை விதிக்கப்பட்டதோடு அவரது ஆண்மையும் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈரான்;

ஈரான்  நாட்டில் கற்பழிப்பில் ஈடுபவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது தலையில் சுட்டுக் கொல்லப்படுவார்கள். இப்படி கடுமையான தண்டனை இருந்தால் தான், இம்மாதிரியான செயலில் யாரும் ஈடுபடமாட்டார்கள் என அந்நாட்டில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஈரானில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள், பொதுஇடத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது அடித்துக்கொல்லப்படுவார்கள். அதேநேரம் குற்றவாளிகளை பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால் மரண தண்டனையில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் 100 கசையடி அல்லது ஆயுள்தண்டனை வழங்கப்படும்.
பாலியல் வல்லுறவு குற்றத்திற்காக ஈரானில் மூன்று பேருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரானின் கொராசான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  சீனாவுக்கு அடுத்ததாக ஈரானிலேயே அதிகமானோர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு மரண தண்டனை அவசியம் எனவும் தீவிரமான நீதிவிசாரணைகளின் பின்னரே மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதாகவும் ஈரானிய அரசாங்கம் கூறுகிறது. கொலைபாலியல் வல்லுறவு, ஆயுத முனைக்கொள்ளைபோதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு ஈரானில் மரண தண்டனை விதிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தான்;

ஆப்கானிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு நீதிமன்ற உத்தரவைப் பொறுத்துநான்கு நாட்களில் தலையில் சுட்டுக் கொல்லப்படுவார்கள் அல்லது தூக்கிலிட்டு மரணத்தை பரிசாக வழங்குவார்கள். அதேப்போல  திருமணத்திற்கு முன் பாலியல் தொடர்பு கொண்டால் ஆப்கானிஸ்தானில் ஆணுக்கும் பெண்ணுக்கும் 100 கசையடிகள். 20-24 வயதுகளுக்கு உட்பட்ட இருவருக்கும் இந்த கசையடி தண்டனை வழங்கப்பபட்டது. அவர்கள் திருமணத்துக்கு முன்பு  பாலுறவில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டிருந்த இருவருக்கும் கசையடி வழங்கி தண்டனை நிறைவேற்றியதாக மத்திய மாகாணமான கோர்-இல் உள்ள அதிகாரி ஒருவர் நாளிதழில் பேட்டியளித்துள்ளார். இப்படி பலவிதமான தண்டனைகள் இந்த பாலியல் குற்றங்களுக்கு கொடுக்கப்படுகிறது
ஆப்கானிஸ்தானில் குடும்பத்தினரோடு காரில் பயணித்துக்கொண்டிருந்த பெண்களை வழிமறித்த கும்பல் ஒன்றுஅவர்களை மிரட்டி நகை மற்றும் பணத்தை திருடியதோடு நில்லாமல்துப்பாக்கி முனையில் ஒரு கர்ப்பிணி உட்பட காரில் இருந்த பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர். இவர்களில் ஒரு பெண் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டது இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  குற்றம்சாற்றப்பட்ட பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த பலாத்காரம் மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
பிரான்ஸ்; .

பிரான்ஸ்  நாட்டில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்குமரண தண்டனையோ அல்லது சுடவோ செய்யமாட்டார்கள். மாறாகஅவர்களுகு 15 வருடங்கள் கடுமையான சிறை தண்டனை வழங்கப்படும். குற்றவாளியின் மோசமான செயலைப் பொறுத்து, 30 வருடங்கள் அல்லது வாழ்நாள் முழுவதும் கூட சிறையிலேயே இருக்கக்கூடும்.
வடகொரியா;

வட கொரியாவில் இம்மாதிரியான செயலில் ஈடுபட்டால் உடனே தண்டனை வழங்கப்படும். அதுவும் குற்றவாளியை அப்போதே நெற்றில் சுட்டு கொல்வார்கள் அல்லது ஆணுறுப்பை வெட்டி விடுவார்கள்.
ரஷ்யா;

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ரஸ்யாவிலும் நம் நாட்டைப்போல கடுமையான சட்டங்கள் இல்லை. இங்குபாலியல் பலாத்காரம் செய்தால் 3-6 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படும். மோசமான சூழ்நிலையில் 10-20 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படும்.
அமெரிக்கா;
 அமெரிக்காவில் பாலியல் பலாத்காரத்திற்கு அந்நாட்டு சட்டத்தின் கீழ்சில வருட சிறை தண்டனை முதல் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே இருக்க வேண்டிய மரண தண்டனை வழங்கப்படும். ரஷ்ய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக அமெரிக்கர் ஒருவருக்கு 150 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் அப்ரமோவ் (58). இவர் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளிலும் குடியுரிமை பெற்றவர். அப்ரமோவ்கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூனில் ரஷ்யாவுக்கு சென்றிருந்தபோது 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார். போலீசாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அப்ரமோவ் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கைது செய்யப்பட்டார்.இது தொடர்பான வழக்கு விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் அப்ரமோவ்சிறுமியை ஈவிரக்கமின்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு 150 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி ஓடிஸ் ரைட் தீர்ப்பளித்தார்.
சவுதி அரேபியா;

சவுதி அரேபியா உலகிலேயே சவுதி அரேபியாவில் தான் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் மோசமான மற்றும் அச்சத்தை வரவழைக்கும்படியான தண்டனை வழங்கப்படுகிறது எனலாம். ஏனெனில் அங்கு இச்செயலில் ஈடுபட்டால்பொதுமக்கள் முன்னிலையில் தலையை வெட்டிவிடுவார்கள்.

இந்தியா;


இந்தியாவில் பாலியல் பலாத்காரத்திற்கான சட்டம் மிகவும் மோசமாக உள்ளது. டெல்லி நிர்பயா வழக்கில் ஈடுபட்டவனுக்கு தையல்மெஷின் கடை வைத்து கொடுத்த கூத்துலாம் இந்தியாவில் நடந்தேறியது. ஜாதி, மதம், அரசியல், பண தலையீடுகளால் இத்தகைய பல குற்றங்கள் வெளிஉலகிற்கு வராமலே புதைந்துள்ளது. இதனால்தான் இந்தியாவில் சமீப காலமாக பல பெண்கள் கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்துள்ளனர். இருப்பினும்இந்திய அரசாங்கம் இப்படி கொடிய செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு சில வருடங்கள் மட்டுமே சிறை தண்டனை வழங்குகிறது. அதனால், அச்சமின்றி மீண்டும் இச்செயலில் பலர் ஈடுபடுகின்றனர். பாலியல் பலாத்காரத்திற்கு சவுதியைப் போன்று மிகவும் கடுமையான தண்டனை வழங்கினால் தான்யாரும் இந்த மாதிரியான வெட்கக்கேடான செயலில் ஈடுபடமாட்டார்கள்.
இத்தகைய பாலியல் குற்றங்கள் இனி தொடர்ந்து நடைப்பெறாமலிருக்க பாலியல் கல்வி, குழந்தை வளர்ப்பில் மாறுதல், உணவு கட்டுப்பாடு, சமூக மாற்றத்தோடு முறைப்படுத்தப்பட்ட ஆன்மீகமும் கொண்டு வரவேண்டும்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்...
நன்றியுடன்,
ராஜி.

Saturday, August 15, 2015

சுதந்திர தினம் அன்றும்... இன்றும்...

காலையில எழுந்ததும் காலண்டர்ல நேத்தைய தாளை கிழித்ததும், சுதந்திரதின வாழ்த்துக்களுடன் இன்றைக்கு பொது விடுமுறைன்னு போட்டிருந்ததைப் பார்த்ததும் மனம் எனது பள்ளிப் பருவத்தின் சுதந்திர தினகொண்டாட்டத்தினை நினைச்சுப் பார்த்தேன்..
இப்ப மாதிரி எல்லாமே ரெடிமேட்லகிடைக்காது.எல்லாத்துக்கும் கொஞ்சம் மெனக்கெடனும், ஜுலை மாசக் கடைசிலியே விழாவுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாயிடும். ஒவ்வொரு கிளாசுக்கும் சர்க்குலர் அனுப்பி யார்லாம் கலந்துக்கப் போறாங்கன்னு லிஸ்ட் எடுப்பாங்க. ஆகஸ்டு மாசம் ஆரம்பிச்சதும்,பாட்டு,டான்ஸ், நாடகத்துக்கான ஒத்திகை ஒருபக்கம் நடக்கும். பேச்சுப்போட்டி,விளையாட்டுப் போட்டி,குறள் ஒப்புவித்தல்ன்னு போட்டிகள்னு ஒருபக்கம் விழாவுக்கு யாரைலாம் கூப்பிடலாம்னு மறுபக்கம்.
2 நாளுக்கு முன்னாடி,சணல் கயிறுல பசையைத் தடவி முக்கோண வடிவ கலர் பேப்பர்லாம் ஒட்டி காய வைப்போம்.விழாவுக்கு முதல் நாள் பெரிய வகுப்பு பையனுங்கலாம் கலர் பேப்பர் தோரணத்தை கட்டுவாங்க. பொண்ணுங்கலாம் கோலம் போட்டு, கலர் பவுடர் கொடுத்தும் பள்ளியை அலங்கரிப்பாங்க.இப்ப மாதிரிலாம் பள்ளிகள்ல விழாவுக்காக தனி மேடைலாம் கிடையாது.பள்ளிகள்லயும்,பெரிய வகுப்புகள்ல இருக்குற பெஞ்சுலாம் போட்டு மேடை தயார் பண்ணுவாங்க.
கோவை இலையும், கரியையும் சேர்த்து அரைச்சு சாறெடுத்து தேய்ச்சு பழைய  போர்டைலாம் புதுசாக்கிபடம் வரைஞ்சி அழகு பண்ணுவாங்க.  யூனிஃபார்ம்ல கிழிசல் இருந்தா தைச்சு, துவைச்சு அயர்ன் பண்ணி, நல்லா குளிச்சு படிய தலைசீவி வரனும்.மீறி அழுக்கா, கிழிசலோடு வந்தா உப்புல முட்டி போடனும்னு ஹெட்மாஸ்டர் கண்டிப்போடு சொல்லி அனுப்புவார்.
காலையில ரெடியாகி, சட்டைல தேசியக் கொடிக் (பெரும்பாலும் தலைக்கீழாய் கொடி யை குத்திக்கிட்டு போய் யார்கிட்டயாவது குட்டு வாங்கியிருக்கேன்) குத்திக்கிட்டு போய் கிரவுண்ட்ல வகுப்பு வாரியா வரிசைல போய் நிப்போம்.எப்படா ஆரம்பிச்சு மிட்டாய் குடுப்பாங்கன்னு காத்திருப்போம்.எல்லாரும் வந்த பின் ஹெட்மாஸ்டர் மைக் பிடிச்சு தமிழ்தாய் வாழ்த்தோடு நிகழ்ச்சிலாம் ஆரம்பிக்கும். சீஃப் கெஸ்ட் கொடி ஏத்துவார்.
நம்ம மானத்தை வாங்குறதுக்குன்னே நல்லா படிக்குற பசங்க யாராவது ஸ்கூல்ல இருப்பாங்க.அவங்கள்ல ஒருத்தர் மார்ச்பாஸ்ட் போட்டு சீப்கெஸ்ட்டை கூட்டிட்டு போய் கொடி ஏத்த வைப்பாங்க. சுதந்திரம்னா என்ன? எப்படி வந்தது? அதை வாங்க கொடுத்த விலை என்னன்னு தெரியலைன்னாலும் கொடி ஏத்தி பறக்கும்போதும்,கொடிக்குள் வெச்சிருந்த பூவுலாம் கொட்டும்போதும்,"தாயின் மணிக்கொடி பாரீர்"ன்னு பாடல் பாடும் போதும் இனம்புரியா உற்சாகம் பொங்கும்.
கொடி ஏத்தி முடிச்சதும்,எல்லாருக்கும் ஆரஞ்ச் மிட்டாய் தருவாங்க (இதுக்குத்தானே காத்திருந்தோம்). அப்புறம் கலைநிகழ்ச்சிகளும், போட்டிகள்ல ஜெயிச்ச பசங்களுக்கும் கிஃப்ட் கொடுப்பாங்க.எப்படியும் நம்ப பேரு அந்த கிஃப்ட் லிஸ்ட்ல இருக்காது.அவங்க கொடுக்குற சோப்பு டப்பா, ஜாமின்டரி பாக்ஸ், டிஃபன் பாக்ஃசுக்குலாம் ஆசைப்படுற ஆளா நாம்?! ஜனகன மண பாடி ஃபங்ஷன் முடிஞ்சு, கலர் பேப்பர்ல கொஞ்சம் அத்துக்கிட்டு வீட்டுக்கு ஓடுவோம்.கொடிக்கு கொடுக்க வேண்டிய மரியாதை,சுதந்திர தினத்துக்குண்டான மதிப்பு இதுலாம் தெரிஞ்சுக்கலைன்னாலும் நாக்கில் இருக்கும் மிட்டாயின் புளிப்பு சுவைக்காகவும்,மனசு முழுக்க இருக்கும் சந்தோசத்துக்காகவும், இந்தியன் என்ற உணர்வுக்காகவும் சட்டையில் குத்தியிருக்கும் கொடியை வீட்டு நிலைக்கதவுல ஒட்டி போகும் போதும் வரும் போதும் சல்யூட் அடிச்சிக்கிட்டு அடுத்த சுதந்திர தினத்துக்கு காத்திருப்போம்..

இப்படி கழிந்தது நம் சுதந்திர தினக் கொண்டாட்டம். ஆனால், இன்று ...
நம் பிள்ளைகளுக்கு?!  இந்த நாளும் மற்றொரு விடுமுறை நாளே!! தொலைக்காட்சி முன்னாடி நொறுக்குத்தீனியோடு, உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக போடும் திரைப்படத்தோடும், நடிகர்களின் பேட்டிகளிலும் சுதந்திர தினம் கழியுது.. சுதந்திரத்தின் சிறப்பு, மதிப்பு. மரியாதை, அதற்கு நம் முன்னோர்கள் தந்த விலை என்னன்னு அவர்களும் தெரிஞ்சுக்க விரும்புறதில்ல.
அவங்களுக்கு எடுத்துச் சொல்ல நமக்கும் நேரமில்ல. ஏன்னா நாமளும் தொலைக்காட்சி முன்னாடி உக்காந்துக்கிட்டு வூட்டுக்காரம்மாவைப் பத்தி (வூட்டுக்காரர்) கிண்டலடிக்குற பட்டிமன்றத்தை ரசிச்சுக்கிட்டும்,அசைவம் சாப்பிட்டும், தூங்கியும்..., நம்மோட இன்றைய சுதந்திர தினம் கழியுது.
இந்தா ராஜி! வாட்ஸ் அப், ஃபேஸ்புக், பிளாக்ல பதிவு போட்டும்,சட்டைல கொடி குத்திக்கிட்டு செல்பி, வெல்பி எடுத்தும் ஃபோன்லயும், நெட்லயும்ன்னும், யாரும் என்னைய கேட்கப்படாது. ஏன்னா நான் ஆத்துறது சமுதாயக் கடமை.ஆகவே, குறுக்க பேசாம என்னை என் கடமையை ஆத்த விடுங்க.
எல்லோருக்கும் எனது இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்!