Tuesday, August 15, 2017

கத்தியின்றி, ரத்தமின்றி கிடைத்ததா சுதந்திரம்?!


இந்தியா சுதந்திரம் பெற்ற வரலாற்றை சொல்லனும்ன்னா என்னோட வாழ்நாள் பத்தாது. அறிவும் பத்தாது. ஏன்னா, அத்தனை தியாகம், துரோகம், வஞ்சகம், வீரம், கண்ணீர், நெகிழ்ச்சின்னு அத்தனை கதை இருக்கு. வெளிச்சத்துக்கு வந்த, வராத எத்தனையோ தியாகிகள், வெளிச்சத்துக்கு வந்த தியாகிகள் வீட்டார் பட்ட துன்பங்கள்ன்னு எத்தனையோ இருக்கு. அப்படியிருக்க ஒருசிலரை சொல்லி பலரை சொல்லாமல் விட்டால் நன்றிக்கெட்டவர்களாவோம். அதனால அந்த எப்படி சுதந்திரம் கிடைத்ததுன்னு போகாம சுதந்திரம் கிடைத்தபோது நடந்தவற்றில் சிலவற்றை பார்ப்போம்....

Hindustan Times front page on August 15, 1947.
இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்தியாவுக்கான தேசிய கீதம் கிடையாது.. 1911ல் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட 'ஜன கண மன' பாடல் 1950ல் தான் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 
இந்தியாவுக்கு  சுதந்திரம் கிடைத்த அன்னிக்கு தேசப்பிதா மகாத்மா காந்தி கோல்கட்டாவில் இருந்தார். மத மோதல்களை எதிர்த்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.  சுதந்திரம் பெற்றப்பின் காங்கிரஸ் இயக்கத்தையே கலைக்க நினைத்தார் காந்திஜி. சுதந்திரம் பெற்று தந்ததை சொல்லிக்காட்டி மக்களிடம் அதிகாரம் செலுத்துவர் என அவர் நினைத்தார். 
கதர் துணியில் மட்டுமே தேசியக்கொடி தயாரிக்க வேண்டும். மற்ற  துணி வகைகளில் கொடியை தயாரிப்பது தண்டனைக்குரிய குற்றம்.  அரபிந்தோ கோஸ், நெப்போலியன் போனபார்ட்லாம் ஆகஸ்ட் 15ல் பிறந்தவர்கள்.  மகாதேவ் தேசாய், அமர்சிங் சவுத்ரி, ஆகியோர் ஆகஸ்ட் 15ல் இறந்தவர்கள்.
1947ல்இந்தியாவின் ஒரு ரூபாய்அமெரிக்காவின்ஒருடாலருக்கு சமமாக இருந்தது. ஆனால் இன்று?! இந்தியா சுதந்திர தினம் கொண்டாடும் இதே நாளில் தென்கொரியா, பஹ்ரைன், காங்கோ ஆகிய மூன்று நாடுகளும் சுதந்திர தினத்தைகொண்டாடுகின்றன. இந்தியாவில் சுதந்திரத்தின்போது 1,100 மொழிகள் வழக்கத்தில் இருந்தன. ஆனா, இன்னிக்கு 880 மொழிகள் மட்டுமே இருக்கு.  
இந்திய பிரதமராக செங்கோட்டையில் 17 முறை ஜவகர்லால் நேரு தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார். அதிகமுறை கொடியேற்றியவர் என்ற பெருமையை நேரு பெறுகிறார். இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.88.62 பைசா.  சுதந்திரம் பெற்ற போது  இந்தியா 562 சுதேச சமஸ்தானங்களாக பிரிந்து இருந்தன. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்ததால்தான் சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என்று பெயர் பெற்றார். மவுண்ட்பேட்டன் டில்லி(இந்தியா) மற்றும் கராச்சி(பாகிஸ்தான்) ஆகிய இரண்டு இடங்களிலும் நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றார்.

கத்தியின்றி, ரத்தமின்றி சுதந்திரம் கிடைத்ததுன்னு கொஞ்சம் மிகைப்படுத்தி சொன்னாலும், நிஜத்தில் அப்படி நடக்கவில்ல. பலப்பேர் தங்கள் இன்னுயிரை ஈந்தும், உடல் அவங்களை இழந்துதான் இந்த சுதந்திரம் கிடத்தது. அப்பேற்ப்பட்ட சுதந்திரத்தை நாம் எப்படி போற்றி பாதுக்காக்க வேண்டும்/?! கருத்து சுதந்திரம் இருக்கு. ஆனா எதுல?! காதல், காமம், ஆன்மீகம் பற்றி பேச மட்டுமே! அரசியல், நாடு, சமூகம்ன்னு கருத்து சொன்னால் வழக்குகள் பாயும்.  ஆடை சுதந்திரம் உண்டு. ஆனா அது உடல் அவயங்களை காட்ட மட்டுமே... மது அருந்தி சாலையில் விழுந்து கிடக்க அனுமதி உண்டு. ஆனா, ஒரு சமூக அவலத்துக்காக போராட அனுமதி இல்லை.  கல்வி சுதந்திரம் உண்டு., அது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே. சமூக வளைத்தளங்களில் பெண்களுக்கு முழு சுதந்திரம் உண்டு ... செல்ஃபி போட மட்டுமே. எதாவது சமூக கருத்து சொன்னா உடனே வேசி பட்டம்... சமூக வலைத்தளத்தில் கருத்தை பகிர்ந்து கொள்ள உரிமை உண்டு. அது சமூகத்தை பத்தி இருக்கக்கூடாது..

ஆற்று மணலை அள்ள சுதந்திரம்.. ஆனா, ஆற்றை தூர் வாற அனுமதியில்லை. தண்ணியை வீணாக்க சுதந்தரமுண்டு... ஆனா, குளம், குட்டை கிணறு வெட்டக்கூடாது.  மரம் வெட்டிக்கலாம்.. ஆனா, மரம் நடக்கூடாது. எங்க வேணும்ன்னாலும் குப்பை கொட்டலாம்... ஆனா குப்பை அள்ள வரக்கூடாது... கண்ட இடத்தில் மலம், சிறுநீர் கழிக்கலாம்.. ஆனா, அதை சீர் பண்ண வரக்கூடாது... வாக்கு போட வரக்கூடாது... கிராம சபை கூட்டத்துக்கு வரக்கூடாது... அக்கம் பக்கம் நடக்கும் சமூக அவலத்துக்கு குரல் கொடுக்க வரக்கூடாது.
எல்லா தப்பையும் செய்வோம். எல்லாவிதத்திலயும் சுதந்திரம் அனுபவிப்போம். ஆனா, நாடு என்ன செய்ததுன்னு கேட்போம். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சட்டம்தான் போடும். ஆனா குடிமக்களாகிய நாமும், அதிகாரிகளும்தான் சரிவர, மனசாட்சிப்படி நடந்து எல்லா மக்களுக்கும் போய் சேரும்படி பார்த்துக்கனும். அதை விட்டு ஆட்சியாளர்களையே எதுக்கெடுத்தாலும் குறைசொல்லிக்கிட்டு இருக்கக்கூடாது. முதல்ல நாம மாறுவோம். அப்புறம் அவங்களை மாத்துவோம். மாறாவிட்டால் வேற ஆளை மாத்துவோம். 

மாற்றம் முதல்ல நம்மிடமிருந்து வரனும்... இன்னிலிருந்து மாறுவோமா?!
 flag GIF
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
Flag India animated gif 120x90







நன்றியுடன், 
ராஜி

19 comments:

  1. உண்மையில் நாம் போலியாக, வறட்டு கௌரவமாக கொண்டாடிக் கொண்டு வாழ்கிறோம்.

    அழகாக பட்டியலிட்டு உள்ளீர்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஒப்புக்காக கொண்டாடப்படும் நாள் இது. அதனாலதான் நான் கொடி குத்திக்க மாட்டேன்.

      Delete
  2. ஒன் டே சுதந்திர தினவிழா! என்று சொல்லலாம் அதைத்தான் வெங்கட்ஜியும் தனது பதிவில் சொல்லியிருக்கிறார். உங்கள் பதிவும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வெங்கட் அண்ணா பதிவையும் படிச்சேன்ண்ணே

      Delete
  3. அன்றைய சுதந்திர தின செய்திகள் எல்லாம் சிறப்பு ராஜிக்கா...

    சுதந்திரம் என்பதிலே இன்றைய நிலை...

    தனக்கு சரி எனப்படுவதை..

    தனக்கு சாதகமானதை..

    தனக்கு பிடித்ததை ..

    தனக்கு தேவையானதே,...

    மட்டுமே செய்யும் தன்னலம் மட்டுமே உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. அருமையாய் சொன்னேம்மா. தனக்கு சரியென பட்டதே சரின்னு நினைக்க ஆரம்பிச்சுட்டோம்.

      Delete
  4. // கருத்து சுதந்திரம் இருக்கு. ஆனா எதுல?! காதல், காமம், ஆன்மீகம் பற்றி பேச மட்டுமே! அரசியல், நாடு, சமூகம்ன்னு கருத்து சொன்னால் வழக்குகள் பாயும். ஆடை சுதந்திரம் உண்டு. ஆனா அது உடல் அவயங்களை காட்ட மட்டுமே... மது அருந்தி சாலையில் விழுந்து கிடக்க அனுமதி உண்டு. ஆனா, ஒரு சமூக அவலத்துக்காக போராட அனுமதி இல்லை. கல்வி சுதந்திரம் உண்டு., அது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே. சமூக வளைத்தளங்களில் பெண்களுக்கு முழு சுதந்திரம் உண்டு ... செல்ஃபி போட மட்டுமே. எதாவது சமூக கருத்து சொன்னா உடனே வேசி பட்டம்... சமூக வலைத்தளத்தில் கருத்தை பகிர்ந்து கொள்ள உரிமை உண்டு. அது சமூகத்தை பத்தி இருக்கக்கூடாது.. //

    நன்றாகவே சொன்னீர்கள். சுதந்திரதின வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  5. மாற்றம் நம்மிடம் தொடங்க வேண்டும்..உண்மை ! Let the change be YOU !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கு நன்றி சகோ

      Delete
  6. வெள்ளையனுக்கு வந்தா ரத்தம் ,பகத்சிங்குக்கு வந்தது தக்காளிச் சாறா:)

    ReplyDelete
  7. சுதந்திரத்தை சுதந்திரமா அனுபவிக்க முடியுமான்னு தெரியலை. அடுத்த சுதந்திரத்தை கொண்டாடுறதுக்கு ஆதார் கேட்டாலும் கேட்பாங்க, ஆதனால அருகிலுள்ள நூலகத்திற்கு சென்று சுதந்திர தினம் கொண்டாடி விட்டேன்

    ReplyDelete
    Replies
    1. நான் பதிவு போட்டு கொண்டாடியாச்சு சகோ

      Delete
  8. ஓட்டைப் போட்டு ஏழாக்கினேன் எனபதிவு ஆறில் நிற்கிறதே நியாமா!!

    ReplyDelete
    Replies
    1. பண்டிகை பிசிப்பா. வந்து பார்த்து போட்டாச்சு

      Delete
  9. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  10. மாற்றம் ஒவ்வொருவரிடமும் வேண்டும். உண்மை.

    த.ம. +1

    ReplyDelete