
பல்வேறு தியாகங்கள், சதிகள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், மறியல்கள், உயிரிழப்புகள், குழிபறிப்புகள் என பல கட்டங்களை கடந்து இந்தியா ஆகஸ்ட் 15, 1947ல் சுதந்தர காற்றை சுவாசித்தது. மீண்டுமொருமுறை இதுப்போல இந்தியா அன்னியரின் கையில் அகப்பட்டுவிடக்கூடாதென அப்போதிருந்த இந்திய தலைவர்கள் ஒன்றுக்கூடி முடிவெடுத்து வாரிசு உரிமையுள்ள மன்னராட்சி முறை கூடாதென நினைத்து, மக்கள் பங்குக்கொள்ளும் மக்களாட்சி உள்ள நாடாக இந்தியா இருக்க வேண்டுமென தீர்மானித்து, இந்திய நாடு குடியரசாக இருந்தால் மீண்டும் அன்னியர்வசம் அடிமைப்படாதென நினைத்து குடியரசு நாடென அறிவித்தனர்.
குடியரசு என்றால் குடிமக்களின் அரசு, மக்களாட்சி என்று அர்த்தம். தேர்தல்மூலம் மக்கள் தங்கள் விருப்பப்படி தங்களுடைய தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. ஜனவரி 26-ம் தேதி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்ததுன்னு அஞ்சாப்பு பாடத்துல படிச்சிருப்போம். அரசியல் அமைப்புச் சட்டம்ன்னா என்னன்னு தெரியுமா? நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பவர்கள் எப்படி ஆட்சி செய்யவேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம்(அந்த சட்டம் இப்ப அமலில் இருக்கான்னு கேட்டா தெரியாதுன்னுதான் சொல்வேன்). டாக்டர் அம்பேத்கர் தலைமையில் சட்டமேதைகள் பலர் சேர்ந்து இதை உருவாக்கினார்கள். இந்த அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால்தான் அன்றைய தினத்தைக் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். அதனால்தான் ஒருநாள் லீவும், ஆரஞ்ச் முட்டாயும் கிடைச்சுது.
சுதந்திர தினத்தைவிட இந்தநாள்தான் முக்கியமானதுன்னு சொல்றாங்க. ஏன்னா, நம்ம விருப்பப்படி தலைவனை தேர்ந்தெடுக்கலாம். அந்த தலைவன் சரியில்லைன்னா அவரை நீக்கிட்டு இன்னொரு தலைவனை தேர்ந்தெடுக்கும் உரிமை சாதாரண குடிமகனுக்கும் இருக்குறதால இந்த நாள் சுதந்திரதினத்தைவிட முக்கியமானதானதாய் இருக்கு.


பாடுப்பட்டு வாங்கின சுதந்திரத்தை தக்கவைக்க குடியரசு தினமாய் மாற்றிய நம் தலைவர்களின் தீர்க்கதரிசனத்தை போற்றும் விதமாய் நம் பொறுப்புகள், கடமைகளை உணர்ந்து குப்பைகளை அங்கங்க கொட்டாம, கண்ட இடத்தில் அசுத்தம் பண்ணாம, வாக்குரிமையை காசுக்காக விலை பேசாம, விடுமுறை கிடைச்சுதேன்னு வாக்குரிமையை செலுத்தாமலும் இருக்காம ஒழுங்கா வாக்குச்சாவடிக்கு போய் வாக்கு செலுத்தி, சரியான வருமான வரியை செலுத்தி, சாலைவிதி உட்பட அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி சகமனிதனின் உணர்வுகளை புரிந்து அவனுக்கான உரிமைகள் பெற வழிவிட்டு, அடங்க வேண்டிய இடத்தில் அடங்கி, பொங்க வேண்டிய இடத்தில் பொங்கி சிறந்த குடிமகனாய் வாழ்ந்து நம் தாய்திருநாட்டை சிறந்த நாடாய் பாரினில் முன்னிறுத்துவோம்.
அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்
நன்றியுடன்,
ராஜி
அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்
நன்றியுடன்,
ராஜி
அரசியல் ஆட்சி அளவில் சுதந்திரம் பெற்றுவிட்ட நாம் மனசளவில்சுதந்திரம் பெற்றுவிட்டோமா என்பதே என்கேள்வி
ReplyDeleteமனசளவில் யாராலும் எப்போதும் சுதந்திரம் பெற முடியாது, தனி ஆளா வாழ்ந்தால் ஒழிய.
Deleteவழிமொழிகிறேன்.
Deleteஒன்னு கூடிட்டாங்கய்யா ஒன்னு கூடிட்டாங்க.
Deleteகடைசி பத்திதான் ரொம்ப கஷ்டம் மக்களுக்கு.
ReplyDeleteமத்தபடி உங்களுக்கு மிட்டாய் கிடைத்ததா?
ம்ஹூம் கிடைக்கலியே! அதுலாம் பள்ளிப்படிப்போடு போச்சுது.
Deleteகுடியரசு தின வாழ்த்துகள்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteகுடியரசு தினம் பற்றிய விரிவான விளக்கம் அருமை சகோ.
ReplyDelete1947 என்று திருத்தம் செய்யுங்கள் சகோ.
வழிமொழிகிறேன்.
Deleteஜாரி.. வரலாறில் நான் கொஞ்சம் வீக். பத்தாவதுல 64மார்க்தான் எடுத்தேன். அதனால் இப்படி குழம்பும்
Deleteசுதந்திரம் கிடைத்து விட்டதாய் சொல்லப்படும் நாட்டில் வாழ்கிறோம்.. அந்தளவில் சந்தோஷம்.
ReplyDeleteஊழல், பெண்கள் சிறார்கள் மீதான வன்முறை, வேலைவாய்ப்பின்மை, சமத்துவமின்மை மாதிரியான சில குறைகளை விட்டொழித்தால் உண்மையான சுதந்திரம் கிட்டும். மத்தபடி சுதந்திரமாதான் இருக்குறதா நான் உணர்கிறேன் சகோ
Delete