Showing posts with label உல்லன். Show all posts
Showing posts with label உல்லன். Show all posts

Thursday, March 05, 2020

உல்லன் வாசல் தோரணம் - கைவண்ணம்.


கால்  உடைஞ்சு வீட்டில் முடங்கி கிடக்குறது கை ஒடிஞ்ச மாதிரி இருக்கு. பிள்ளைகள் ஆளுக்கொரு திக்கில்.. எந்த கடையில் என்ன பொருளை வாங்குவேன்னு பசங்களுக்கு மட்டுமே தெரியும்.  அதனால், வயர், உல்லன் நூல், மணிகள்ன்னு வாங்கி கொடுக்க ஆளில்லாம போரடிக்குது. அதைவிட, பிளாக்கில் பதிவு போடனுமேன்னு கடமை உணர்ச்சியில் செய்வதறியாது கை பிசைஞ்சுக்கிட்டிருக்கும்போது பழைய மெமரிக்கார்டில் எப்பவோ செஞ்ச உல்லன் தோரணம் இருந்துச்சு. பதிவாக்கியாச்சு. அடுத்த வாரத்திலிருந்து புதுசா செஞ்சதுலாம் பதிவா வரும். யூ ட்யூப் பார்த்து செஞ்சது..

Related image


நல்லா இருக்குதா மக்களே!?

நன்றியுடன்,
ராஜி

Thursday, May 16, 2019

பழைய வளையலில் வாசல் தோரணம் - கைவண்ணம்

இந்த வாரம் பின்னியது.. வாசல் தோரணம்...

மதியம் 2 மணிக்கு,  நாளைக்கு காலைல விருந்தாளிங்க வர்றாங்க. அதுக்குள் ஒரு வாசல் தோரணம் பின்னிக்கொடும்மான்னு ஒருத்தர் கேட்டாங்க.  மாலையில் வாசல் தோரணம் பட்டியை அரை மணிநேரத்துல பின்னியாச்சு.. 

நைட் பத்து மணிக்கு உக்காந்து மீண்டும் ஆரம்பிச்சு.....  பழைய வளையலில் வுல்லன் நூல் சுற்றி..... 
பழைய வளையல் வீணாகாம காப்பாத்தியாச்சு.. 
 வளையல்களை இணைச்சாச்சு....
குஞ்சலம் வைக்காம வாசல் தோரணமா?! வாசல் தோரணம் ரெடி. அவங்க கேட்டபடியே காலையில் கொண்டுப்போய் கொடுத்தாச்சு.    
பொண்ணு பார்க்க வரும்போது ரோஸ் பகுடர் போட்டு பொண்ணை பளப்பளன்னு காட்டுற மாதிரி நைட்ல  எடுக்கும்போது லைட் வெளிச்சத்துல ஒரு நிறமாவும், காலையில் இயற்கை வெளிச்சத்தில் வேற மாதிரியும் காட்டுது:-(

நன்றியுடன்,
ராஜி

Thursday, January 23, 2014

பழைய வளையல்தான் ஆனா, இப்ப புதுசு! - கிராஃப்ட்

என் அம்மாக்கு புது புடவை, நகைங்க மேல ஆர்வம் இல்ல. எங்க போனாலும் சிம்பிளாதான் போவாங்க. அவங்க வளர்த்ததாலயோ என்னமோ எனக்கும் புடவை, நகை மேல ஆர்வம் இல்ல. தேவைக்கு மீறி வாங்கி குவிக்க மாட்டேன். 

ஆனா, கழுத்துக்கு, காதுக்கும் நகை இருக்கோ இல்லியோ,  புடவைக்கு மேட்சா வளையல் இருந்துடனும். தங்க வளையல் பிடிக்காது. கலர் கலரான மெட்டல் வளையல் பிடிக்கும். எங்க போனாலும் வளையல் மட்டும் வாங்கி வந்துடுவேன். அப்படி காசு கொடுத்து வளையல் வாங்கினாலும் ரெண்டே நாள்ல உடைச்சுப் போட்டுடுவேன். அதைப் பொறுப்பா, பாதுகாக்கனும்ன்ற அறிவு இல்ல. உனக்கு தண்டவாளத்துலதான் வளையல் செஞ்சுத் தரனும்ன்னு தூயா திட்டுவா. 

ஒரு செட்டுல சில வளையல் உடைச்சுட்டா அந்த செட்டுல மத்த வளையலை வெளில போட்டு போக முடியாது. தூக்கி போடவும் மனசு வராது. ஏன்னா ஒவ்வொரு வளையல் பின்னாடியும் ஒரு கதை இருக்கும். அதனால தேவை இல்லாத வளையல்களை கேரி பேக்ல போட்டு பரண் மேல வச்சிருந்தேன். வெளில வீசி எறின்சா சுற்று சூழல் பாதிப்புன்னு ஒரு பக்கம் மனசு அடிச்சுக்கும்.

திருப்பதிக்கு போயிருந்தப் போது அங்கிருக்கும் கடைகள்ல கண்கள் மேஞ்சுக்கிட்டு இருக்கும்போது, பட்டு நூலால செஞ்ச வளையல் கண்ணைப் பறிக்கவே விலை கேட்டேன். ஒரு செட் 50 ரூபாய்ன்னு சொன்னாங்க. ஒரு செட் வாங்கி வந்துட்டேன். வீட்டுக்கு வந்து அந்த வளையல்களை பார்க்கும்போது ஒரு யோசனை வந்துச்சு. நாமளே ஏன் இந்த வளையல்களை செய்யக்கூடாதுன்னு. உடனே ஒரு செட் வளையல் செஞ்சுட்டேன். அதான் இன்னிக்கு பதிவுல பார்க்கப் போறோம்.

தேவையான பொருட்கள்:
தேவையான கலர்ல உல்லன் நூல்
குந்தன் கற்கள்
சின்னதும் பெருசுமான கோல்ட் முத்துகள்
ஃபேப்ரிக் க்ளூ.
4 வளையல்

ஒரு வளையல்ல க்ளூ தடவி ரெண்டு வளையலையும் ஒட்டி அரை மணிநேரம் காய விடுங்க.

உல்லன் நூலை வளையலில் முடிப் போட்டு ரெண்டு இழையாக்கிங்கோங்க,

வளையலில் கம் தடவி, உல்லன் நூலை நெருக்கமா சுத்தி வாங்க.
அங்கங்க பசை தடவி உல்லன் நூலை ரொம்ப நெருக்கமா சுத்திக்கிட்டே வாங்க.

உல்லன் நூலை சுத்தி முடிச்சதும் வளையலோட உள்பக்கமா முடிச்சுப் போட்டு பிசிறு தெரியாம மிச்சம் இருக்கும் உல்லன் நூலை கட் பண்ணிடுங்க.


நான் திலகம் ஷேப்புல இருக்கும் கண்ணாடியும் ரெண்டு திலகம் ஷேப் கற்களுக்கிடையில் ஒரு முத்து வச்சிருக்கேன். கற்களை உங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒட்டிக்கலாம்.
திலகம் ஷேப் கற்களுக்கிடையில் மூன்று சின்ன முத்துகளை நீளமா வச்சு செண்டர் வளையலை ரெடிப் பண்ணி இருக்கேன்.

வெறும் முத்துகளை மட்டும் அங்கங்கு ஒட்டி, ஓர வளையல்களை ரெடி பண்ணி இருக்கேன்.

கால் மணி நேரத்துல ஒரு செட் வளையல் ரெடி. என்னோட ரோஸ் நிற பட்டு சேலைக்கு மேட்சான வளையலை நானே ரெடிப் பண்ணிட்டேன். குறைஞ்சது 35 ரூபாய்க்கு விற்கலாம்.

அடுத்த வாரம் வேற ஒரு கிராஃப்ட் செய்யுறதைப் பத்தி பார்க்கலாம்.

டாட்டா, பை பை, ஸீ யூ