Showing posts with label வாசல் தோரணம். Show all posts
Showing posts with label வாசல் தோரணம். Show all posts

Thursday, August 29, 2019

உல்லன் வாசல் தோரணம் - கைவண்ணம்

நிலைவாசற்படியில் தொங்கி இருக்கும் வுல்லன் தோரணத்தை பார்த்த தாத்தா ஒருத்தர் தன் வீட்டு வாசப்படிக்கும் பின்னி தரச்சொல்லி கேட்டார். அவர் கேட்டு ஒரு மாசமாச்சுது. இப்பதான் முடிச்சேன்.சோம்பேறித்தனப்படக்கூடாதுன்னு நானும் எத்தனையோ முறை சபதம் எடுத்தாலும், அதை நிறைவேத்த சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு கடைப்பிடிக்க முடில :-(
No photo description available.


நல்லா இருக்கான்னு பார்த்துட்டு சொல்லுங்க சகோஸ்.
 
நன்றியுடன்,
ராஜி

Thursday, May 16, 2019

பழைய வளையலில் வாசல் தோரணம் - கைவண்ணம்

இந்த வாரம் பின்னியது.. வாசல் தோரணம்...

மதியம் 2 மணிக்கு,  நாளைக்கு காலைல விருந்தாளிங்க வர்றாங்க. அதுக்குள் ஒரு வாசல் தோரணம் பின்னிக்கொடும்மான்னு ஒருத்தர் கேட்டாங்க.  மாலையில் வாசல் தோரணம் பட்டியை அரை மணிநேரத்துல பின்னியாச்சு.. 

நைட் பத்து மணிக்கு உக்காந்து மீண்டும் ஆரம்பிச்சு.....  பழைய வளையலில் வுல்லன் நூல் சுற்றி..... 
பழைய வளையல் வீணாகாம காப்பாத்தியாச்சு.. 
 வளையல்களை இணைச்சாச்சு....
குஞ்சலம் வைக்காம வாசல் தோரணமா?! வாசல் தோரணம் ரெடி. அவங்க கேட்டபடியே காலையில் கொண்டுப்போய் கொடுத்தாச்சு.    
பொண்ணு பார்க்க வரும்போது ரோஸ் பகுடர் போட்டு பொண்ணை பளப்பளன்னு காட்டுற மாதிரி நைட்ல  எடுக்கும்போது லைட் வெளிச்சத்துல ஒரு நிறமாவும், காலையில் இயற்கை வெளிச்சத்தில் வேற மாதிரியும் காட்டுது:-(

நன்றியுடன்,
ராஜி

Thursday, February 07, 2019

வுல்லன் வாசல் தோரணம் - கைவண்ணம்

வீட்டில் சும்மா இருக்கும்போதுன்னு சொன்னா கீதாக்கா சண்டைக்கு வர்றாங்க. அதனால், வீட்டு வேலைபளு, மன அழுத்தத்திலிருந்து, என்னை  புத்தாக்கம் செய்துக்கொள்ள  மாலை 7 மணியிலிருந்து சின்ன சின்னதா கிராஃப்ட் செய்ய நேரம் ஒதுக்கி இருக்கேன். அப்படி நேரம் ஒதுக்கி செய்வதில் போன வாரம் அம்மாவின் உடல்நலம், ஊர்பயணம் செஞ்சதால ஒரேஒரு வாசல் தோரணம் மட்டுமே செய்யமுடிஞ்சது. பின்னிக்கிட்டிருக்கும் வயர்கூடையோ கைப்பிடி போடப்படாம பாதில நிக்குது. சரி, கழுத அடுத்த வாரம் பதிவுக்கு உதவும்ன்னு மனசை தேத்திக்கிட்டு வுல்லன்ல பின்னின வாசல் தோரணத்தை பதிவாக்கியாச்சுது.


தெரிஞ்சவங்க வீட்டுக்கு முன்னமே ஒருமுறை பின்னி கொடுத்திருக்கேன். இப்ப, சாமி ரூம்ல இருக்கும் கப்போர்டுக்கு ஒரு தோரணம் பின்னி தரச்சொன்னாங்க. வாசல் தோராணத்தைவிட சின்னதா பின்னிக்கொடுத்தேன்.100ரூபா கொடுத்தாங்க...

அடுத்தவாரம் வயர்கூடை முடிச்சுட்டு பதிவாக்கனும்ன்னு வேண்டிக்கோங்க. 

நன்றியுடன்,
ராஜி