இந்த வாரம் பின்னியது.. வாசல் தோரணம்...
மதியம் 2 மணிக்கு, நாளைக்கு காலைல விருந்தாளிங்க வர்றாங்க. அதுக்குள் ஒரு வாசல் தோரணம் பின்னிக்கொடும்மான்னு ஒருத்தர் கேட்டாங்க. மாலையில் வாசல் தோரணம் பட்டியை அரை மணிநேரத்துல பின்னியாச்சு..
நைட் பத்து மணிக்கு உக்காந்து மீண்டும் ஆரம்பிச்சு..... பழைய வளையலில் வுல்லன் நூல் சுற்றி.....
பழைய வளையல் வீணாகாம காப்பாத்தியாச்சு..
வளையல்களை இணைச்சாச்சு....
குஞ்சலம் வைக்காம வாசல் தோரணமா?! வாசல் தோரணம் ரெடி. அவங்க கேட்டபடியே காலையில் கொண்டுப்போய் கொடுத்தாச்சு.
பொண்ணு பார்க்க வரும்போது ரோஸ் பகுடர் போட்டு பொண்ணை பளப்பளன்னு காட்டுற மாதிரி நைட்ல எடுக்கும்போது லைட் வெளிச்சத்துல ஒரு நிறமாவும், காலையில் இயற்கை வெளிச்சத்தில் வேற மாதிரியும் காட்டுது:-(
நன்றியுடன்,
ராஜி
பாராட்டுகள்.
ReplyDeleteஅருமை
ReplyDeleteவாழ்த்துகள் சகோதரியாரே