எல்லோருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை சொல்லிக்குறேன் சகோ’ஸ்,
பத்து வயதுல:
ஒரு வாரத்துக்கு முன்னயே ஸ்கூல் களை கட்ட ஆரம்பிசாலும், சுதந்திர தினத்தன்னிக்கு முதல் நாள் தான் கிளாஸ் ரூம்லாம் ஒட்டடை அடிச்சு பெருக்கி, கழுவி, பிளாக் போர்டுக்கு கோவை இலையும் கரியும் சேர்த்து இடிச்சு பிழிஞ்ச சாறை தேய்ச்சு பளபளப்பாக்கி..., சிவப்பு, வெள்ளை, பச்சை கலர் பேப்பர்களை சணல் கயிறில் பசை தடவி ஒட்டி காய வச்சு தோரணம் கட்டி முதல் நாள் வீட்டுக்கு போக மணி எட்டாகும்.
அப்படி போகும்போது...,
ஏய் பிள்ளைகளா! நாளைக்கு வரும்போது துவைச்சு, நீட்டா இருக்குற யூனிஃபார்ம்லதான் வரனும். கொடி ஏத்த எல்லோரும் கண்டிப்பா வரனும். இல்லாட்டி 5ரூபா ஃபைன் கட்டனும் கூடவே ஒரு நாள் முழுக்க முட்டி போடனும்ன்னு சொல்லுவார்.
ஆனா, அவர் அப்படி செய்ய மாட்டார்ன்னு தெரிஞ்சும் கூட எல்லோரும் போவோம். அந்த ஊருல இருக்குற பெரிய ஆளுங்க யாரையாவது கூட்டி வந்து கொடியேத்த சொல்லுவாங்க. அவர் சுதந்திர போராட்ட தியாகின்னு நாங்கலாம் நினைச்சுக்கிட்டு இருப்போம். வளர்ந்தப்புறம்தான் தெரிஞ்சது அவர் ஹெட் மாஸ்டருக்கு கடன் கொடுக்குற பணக்காரர்ன்னு!!
பெட்டிக்குள்ள, காலன்டர்ல இருக்குற, காந்தி, நேரு, வ.ஊ.சி, பாரதியார் படத்தையெல்லாம் தேடி பிடிச்சு அழகா கட் பண்ணி ஸ்கூல்ல அங்கங்க ஒட்டுவோம். காலையிலேயே சீக்கிரம் வந்த டீச்சருங்களும் அக்காக்களும் கொடி பறக்குற கோலம் போட்டு பார்டர் கட்டுவாங்க. பிடி சார், கொடி கம்பத்துக்கு பக்கத்துல ஒரு மேஜை போட்டு வெள்ளை துணி விரிச்சு அதன் மேல ஒரு தட்டுல ஆரஞ்ச் மிட்டாய், சந்தனம், பூ”லாம் போட்டு மேஜை மேல வைப்பார்.
நாங்கலாம் சார் சொல்லி தந்த எக்சசைஸ்லாம் செய்ய கைல, கலர் பேப்பர் ஒட்டுன எதாவது ஒண்ணை வெச்சுக்கிட்டு ரொம்ப டீப்பா டிஸ்கஸ் பண்ணிட்டு இருப்போம்!! கலை நிகழ்ச்சி நடக்க காந்தி, நேரு, பாரத மாதான்னு கலர் பேப்பர், ஜிகினா உபயத்துல பசங்க ஜொலிப்பாங்க!!
அப்புறம் எல்லாரும் வருவாங்க. கொடி கம்பத்துக்கு பக்கத்துல அந்த பெரிய மனுசருக்கு பக்கத்துல ஹெட்மாஸ்டரும், பிடி சாரும் நிப்பாங்க. மறுபக்கம் ஒரு ஸ்டூடண்ட் நிப்பார். அவர் அழகா லெஃப்ட், ரைட் போட்டுக்கிட்டு போய் அந்த பெரிய மனிதரை கூடி வந்து கொடி கட்டி இருக்கும் கயிறை பிடிச்சு கொடுப்பார்.
அந்த கயிறை பிடிச்சு அப்படி இப்படி அசைச்சா கொடி பறக்கும். அதுக்குள்ள இருக்கும் பூ பறக்கும். ”தாயின் மணிக்கொடி பறக்குது பாரீர்”ன்னு பத்து நாளா மனப்பாடம் பண்ண பாட்டை பாடி கொடுத்த ஆரஞ்ச் மிட்டாயை சாப்பிட்டு கொண்டாடினேன்!!
15 வயதுல:
காலண்டர் வந்ததும் முதல் வேலையா என்னிக்குலாம் லீவ் வருதுன்னு பர்ப்போம். சுதந்திர தினம் சனி, ஞாயிறுல வந்தா செம கடுப்பா இருக்கும். வெள்ளி, திங்கள்ல வந்தா கூடுதல் சந்தோசம். ஏன்னா, 3 நாள் லீவ் கிடைக்கும்ன்னு.
இன்னிக்கும் ஸ்கூல் போகனுமா?!ன்னு சலிச்சுக்கிட்டே போய் கொடி ஏத்தி மிட்டாய் வாங்கிக்கிட்டு, பசங்களோடு அரட்டை அடிச்சு முடிச்சு வீட்டுக்கு வந்து
யாராவது இது எத்தனையாவது சுதந்திரதினம்ன்னு கேட்டா கண்டிப்பா ஒண்ணு கூட்டி இல்லாடி ஒண்ணு குறைச்சுதான் சொல்லுவேன். அப்போல்லாம் டிவில சுதந்திர தினத்தன்னிக்கு ஜனாதிபதி டெல்லில கொடி ஏத்துறதை ”டிடி”ல வெச்ச கண்ணு வாங்காம பார்ப்போம். சிறப்பு பட்டி மன்றம் போடுவாங்க அதையும் பார்ப்போம்.
அன்னிக்குலாம் லீவ் நல்லா எஞ்சாய் பண்ணுவேன்!!
20 வயதுல:
நாடு நமக்கு என்ன செஞ்சது?! ஏன் சுதந்திரம் கொண்டாடனும்?! எங்க பார்த்தாலும் குப்பை, சரியான கழிப்பிட வசதி இல்லை, சரியா வரி கட்டுறதில்லை. யாரும் வரிசை முறையை எங்கயும் கடைப்பிடிக்கறதில்லை, எங்க பார்த்தாலும் லஞ்சமும், அலட்சியமும் தலைவிரித்தாடுதுன்னு வீர வசனம் பேசிக்கிட்டே அதே தப்பை நாமும் செஞ்சுக்கிட்டே.., சட்டையில தலைக்கீழா கொடியை குத்தி நன்பர்கள் கூட, ரிலீசான புது படத்தை பார்க்க போய்டுவேன்!!
25 வயசுல:
சேர்ந்தா மாதிரி 3 நாள் லீவ் வந்துட்டா ஹவுஸ்பாசை கூட்டிக்கிட்டு அம்மா வீடு இல்லாட்டி சின்னதா ஒரு டூர் அடிப்போம். அப்படி இல்லாட்டி ஹாயா டிவி முன்னாடி உக்காந்து சூர்யா, பரத், நமீதா, நஸ்ரியா பேட்டியும், ”வீட்டுக்கு அடங்காத பெண் யார்? வேலைக்கு போகும் பெண்ணா?! இல்லை வீட்டில் இருக்கும் பெண்ணா?!ன்னு பட்டி மன்றம் பார்த்துக்கிட்டு உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையான அரைகுறை அழகிகள் நடிச்ச படத்தை பார்த்து கொண்டாடினேன்!!

30 வயசுல:
வேலை வெட்டி இல்லாம அந்த
காந்தியும், நேருவும்
சுதந்திரத்தை வாங்கி கொடுத்துட்டு, அதுக்கு ஒரு நாள் லீவையும் கொடுத்து, ஒரு புரோகிராமை ஒழுங்க பார்க்க விடாம, உங்ககிட்ட என்னை அல்லாட வைக்குற இந்த சுதந்திர தினத்தை
கொண்டாடத்தான் வேணுமா?!ன்னு
வூட்டுக்காரரை திட்டிக்கிட்டே கொண்டாடினேன்!!
இப்போ:
சுதந்திர தினம் வருதே!!
அதுக்கு பதிவு போடனுமே!! இதுங்களுக்குலாம் லீவாச்சே!! வீட்டுல இருந்துக்கிட்டு
உயிரை எடுக்குமே! அதனால, இப்பவே ரெடி
பண்ணி வச்சுடனும்ன்னு ஒரு வாரத்துக்கு முன்னாடியே படம்லாம் தேடி கண்டுப்பிடிச்சு
அட்டாச் பண்ணி, டைப் பண்ணி
டிராஃப்ட்ல வச்சுட்டு...,
காலையில கண் விழிச்சு
மூஞ்சி புக்குல, ட்விட்டர்ல ஒரு ஸ்டேட்டசும், இங்க ஒரு பதிவும் போட்டு, நேரத்துக்கு சோறு பொங்கி டைனிங் டேபிள் மேல
வச்சுட்டு, எத்தனை ஓட்டு , கமெண்ட் விழுந்துச்சு, இன்னிக்கு போஸ்ட் ஹிட்டாச்சா?!
இல்லியா?! இன்னிக்கு லீவாச்சே!! அதான் ஹிட்டாகலைன்னு
என்னை நானே சமாதானம் பண்ணிக்கிட்டு மத்த பிளாக்குக்கு போய் கமெண்ட் போட்டு, மறுநாளுக்கு பதிவு தேத்தி...,
ஒரு வழியா இந்த ”சுதந்திர தினத்தையும்” கொண்டாடிக்கிட்டு இருக்கேன்!!

.jpg)