Wednesday, November 09, 2011

காய்கறி வாங்குவது எப்படி? ஆண்கள் ஸ்பெஷல்!!??


மல்டிநேஷனல் கம்பெனில வேலை செஞ்சு, அமெரிக்க, அப்பிரிக்க பாஸுங்க்கிட்ட நல்ல பேர் வாங்கி என்னைப் போல ஆளுண்டா?!ன்னு பொண்டாட்டிகிட்ட மார்தட்டிக்குவாங்க.  ஆனால், வீட்டு விஷயங்களில் மட்டும் ஆண்கள் அத்தனை சாமர்த்தியமா நடந்துக்க மாட்டாங்க. 
அதுலயும் முக்கியமா காய்கறி வாங்குறதுல இவங்க வாங்குற பல்புங்க இருக்கே. அட அட அதை வெச்சு ஒரு ஊரையே இருட்டில்லாம ஆக்கலாம். அப்படி பல்ப் வாங்குவாங்க. 
கத்திரிக்காய் சொத்தையா இருக்கும். இல்லாட்டி முள்ளங்கி முத்தலா இருக்கும், அப்படியில்லையா? கீரை பூச்சியடிச்சு இருக்கும்.., கொத்துமல்லி அழுகியிருக்கும், வாழைத்தண்டு நாராயிருக்கும், தக்காளி காயாயிருக்கும், அவரைக்காய் வதங்கி இருக்கும்...., இப்படி எத்தனை எத்தனையோ..., ஆக மொத்தம் பாஸ் மார்க் வாங்கவே திணறிப்போவாங்க. அதனால, சக ஆண்பதிவர்களுக்கு இந்த டிப்ஸ்.
இதை படிச்சு நல்லா உருவேத்தி காய்கறி வாங்குறதுல பாஸாகுங்க. 
*முருங்கைக்காய் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக இருக்க வேண்டும்.
* அவரையில் விதைகள் புடைத்து வெளியே தெரிந்தால், அது முற்றல்.
* வெண்டைக்காய் நுனிப்பகுதி ஒடித்தால் பட்டென்று ஒடிய வேண்டும்.
* கீரை மஞ்சள் பூத்திருந்தால் அருகில்கூட செல்லாதீர்கள். அரைக்கீரை, முளைக்கீரை போன்றவற்றில் தண்டுகள் பெருத்திருந்தால் சுவையாக இருக்காது.
* வெண்மையாகவும், அழுத்தமாகவும் இருந்தால் மட்டுமே காலிஃப்ளவரை வாங்குங்கள். பூத்து விரிந்திருந்தால் சுவை இருக்காது.
* வெங்காயம், வாழைக்காய், மாங்காய் போன்றவற்றை வாங்கும்போது விரல்களால் அழுத்திப் பார்க்கவும். அழுந்தினால் வாங்கக் கூடாது. நூல்கோல், முள்ளங்கி, சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய் போன்றவை அழுந்தினால் நல்லது என்று பொருள்.
* சிவப்பு நிறத்தில் இருந்தால் மட்டும் அது நல்ல கருணைக்கிழங்கு என்று அர்த்தம். சீக்கிரமாக வெந்து சூப்பர் சுவையாகவும் இருக்கும்.
* நன்றாகப் பழுத்த தக்காளிகளைவிட, பாதி பழுத்த கெட்டியான தக்காளிகளே சுவையானவை.
* வாழைத்தண்டை கிள்ளிப் பாருங்கள். நார் தெரிந்தால் அது முற்றல், நூல் தெரிந்தால் ஓ.கே!
* சாதம் அல்லது டிபனுக்கு தொட்டுக் கொள்ளத்தான் காய்கறி என்று நினைக்காதீர்கள். அதுவும் சாப்பாட்டில் மூன்றில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இன்னொரு பகுதி தண்­ணீர். மூன்றில் ஒன்றுதான் சாதம் / டிபன்.
*தேங்காய் ஆட்டி பார்த்து உள்ளே நல்லா தண்ணி இருக்குற காயா பார்த்து வாங்கணும்
*முட்டைகோஸ் இலை பிரியாம கொஞ்சம் பச்சை நிறமா இருக்குறதை வாங்கணும்.

                     
*வெங்காயம் வாங்கும்போது, மேற்பாகமும், கீழ்பாகமும்  அதிகம் வளராமலும், நீள்வாக்க்கில் இல்லாமல் உருளையாக இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்.
*கத்திரிக்காய் வாங்கும்போது அழுத்தி பார்த்து கல் போலில்லாமலும், காம்புகள் நீளமாகவும், மேல்தோல் காயைவிட்டு பிரியாமலும் இருக்க வேண்டும்.

      
அசைவ பிரியர்களுக்கு:
*மீன் கடையில் பச்சை கலர் பெரிய ஈ சுத்தக்கூடாது . வயிற்றுப்பகுதி வீக்கமாகவோ உடைந்தோ இருக்க கூடாது

*எந்த மீனுமே புதிதானால் கவுச்சி வாடை இருக்காது . செவுலும் கண்ணும் பாத்து வாங்கனும்.  மீனின் மேற்பரப்பு பள பளன்னு வழு வழுப்புடன் இருந்தாலே புதிதாக இருக்கும்
*தேளி, கெண்டை, கெளுத்தி மீன், போன்றவை வறுக்க நல்லா இருக்கும்.
*டேம் கெளுத்தி, ஜிலேபி, விரால், போன்ற மீன்கள் குழம்பு வைக்க நல்லது.
ஆட்டுகறி வாங்கும்போது  கால் தொடைக்கறி வாங்குனா நல்லாருக்கும்(ரம்பா, தொடை அது இதுன்னு கமெண்ட் போட்டால்.. அவங்க தளத்துல மைனஸ் ஓட்டு போடப்படும் என்பதை தாழ்மையுடன் கூறிக் கொள்கிறேன்.)

டிஸ்கி: சொந்தமா யோசிச்சீங்க போல இருக்குன்னு யாரும் கமெண்ட் போட வேணாம். இது சொந்தமா யோசிச்சு போட்ட பதிவல்ல. சொந்த அனுபவங்களை வச்சு போட்ட பதிவு. என் அப்பா எனக்கு சொல்லி குடுத்தது.

18 comments:

  1. >>காய்கறி வங்குவது எப்படி? ஆண்கள் ஸ்பெஷல்!!??

    டைட்டில்லயே தகராறா?

    காய்கறி வாங்குவது எப்படி? ஆண்கள் ஸ்பெஷல்!!??

    ReplyDelete
  2. >>>என் அப்பா எனக்கு சொல்லி குடுத்தது.

    HI HI இனிமே உங்களுக்கு சொல் புத்தியும் இல்ல , சுய புத்தியும் இல்லைனு யாரும் சொல்ல முடியாது?

    ReplyDelete
  3. நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க
    நான் வாங்குற கடையில தொடக்கூட விட மாட்டான் அப்பறம் எங்கே அராய்ச்சி எல்லாம் பண்றது? ஹி ஹி ஹி

    ReplyDelete
  4. அப்படியே சமைக்கவும் கத்துகுடுங்க ..

    ReplyDelete
  5. நல்ல பயனுள்ள பதிவு
    ஆனால் என் மனைவி ரிஸ்க் எடுக்க மாட்டார்கள்
    ஏதோ இதுவரைவண்டி ஓடிடுச்சு
    நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. உங்களுக்கு காய்கறி கொடுக்குறதுக்குள்ள காய்கறிகாரனின் நிலைமையை கற்பனை பண்ணி பார்த்தேன்... சிரிச்சு முடியல ஹா...ஹா...ஹா...

    மீனையும் அழுத்தி பார்க்கலாம். ஓவரா அழுந்தினால் நொந்த மீன்.

    செவுல் அடர்த்தியான இரத்த சிவப்பில் இருக்க வேண்டும். கொஞ்சம் வெளுத்த மாதிரி இருந்தால் ஐஸில் பதப்படுத்திய மீன் என்று அர்த்தம்

    கோழி அரைகிலோவோ ஒரு கிலோவோ வெட்டி வாங்குவதை விட்டுட்டு சின்ன கோழியா உயிர்கோழி வாங்கிக்கிறத பெட்டர். நிறைய கடைகளில் செத்த கோழியை விற்கிறார்கள் ஜாக்ரதை!

    உயிர்கோழி வாங்கி வெட்ட போகும் போது சுடுநீரில் போட வேண்டாம் என கண்டிப்பாக சொல்லிடவும். இல்லைன்னா கோழி பீஸ் சக்கையா ருசி இல்லாம இருக்கும்

    ஹி...ஹி...ஹி..

    ஏதோ நமக்கும் தெரிஞ்சது

    வாழ்த்துக்கள் ராஜி :-)

    ReplyDelete
  7. என் அப்பா எனக்கு சொல்லி தந்தது//

    அருவாளை எங்கேயோ மறந்து வைச்சிட்டேனே எங்கே வச்சேன்...?

    ReplyDelete
  8. எனக்கு எப்பிடி எல்லாம் வாங்க வேணும்னு என் வீட்டம்மா டிரைனிங் குடுத்து வச்சிருக்காங்க...!!!

    ReplyDelete
  9. சி.பி.செந்தில்குமார் கூறியது...
    >>>என் அப்பா எனக்கு சொல்லி குடுத்தது.

    HI HI இனிமே உங்களுக்கு சொல் புத்தியும் இல்ல , சுய புத்தியும் இல்லைனு யாரும் சொல்ல முடியாது?//

    ஹா ஹா ஹா ஹா போச்சுடா கவுத்துட்டானே படுபாவி...

    ReplyDelete
  10. Good one.

    Please read this book.
    www.vallalyaar.com/?p=409

    http://www.youtube.com/user/balunatarajan?feature=mhsn

    ReplyDelete
  11. அனுபவம் தான் சரியாக கணிக்கும்..

    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  12. ரங்கமணிகளுக்கான நல்ல ஆலோசனை!

    ReplyDelete
  13. நல்ல ஆலோசனை... :)

    எல்லாவற்றிலும் சில விதிவிலக்குகளும் உண்டு...

    ReplyDelete
  14. புக்மார்க் செஞ்சு வச்சுக்குறேன்... வருங்காலத்துல யூஸ் ஆகும்...

    ReplyDelete
  15. அது என்னவோ நல்லா தான் வாங்கி, பொண்டாட்டி கிட்ட நல்ல பெயர் வாங்கனும்னு கடை தெருவுக்கு போறோம், அங்கே அண்ணே என்ன வேணும் அப்படின்னு கேப்பார் பாருங்க தம்பி... அங்கே பாசத்தில மெய் மறந்து பல்பு வாங்கி கிட்டு வரோம்... கொசுறா அதாவது வாங்கி கிட்டு வரோம்னு சந்தோஷப் படாம இப்படியா மானத்த கப்பலேத்துவீங்க

    ReplyDelete
  16. பயன்னுள்ள குறிப்புகள், சமீபகால இளைஞிகளுக்கும்!

    ReplyDelete