Monday, November 28, 2011

புடவை வாங்கலியோ! புடவை !



புடவைக்கு ஆசைப்படாத பெண்ணும் உண்டா? புடவை வாங்குகிறார்களோ? இல்லையோ? புடவைகளைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்ப்பதற்காகவாவது புடவைக் கடைகளுக்கு விசிட் அடிக்காதவர்கள் தமிழ்நாட்டில் கம்மி. புடவை மீது பெண்களுக்கு இருக்கும் ஆசைக்கு சற்றேறத்தாழ மூவாயிரம் ஆண்டு சரித்திரம் இருக்கிறது என்கிறார்நூலோர்’. புடவையின் சரித்திரத்தைப் பார்ப்போமா?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வரலாற்றில் சேலை இடம் பெற்றிருந்தது. சங்க காலத்துக்கு முன்பு தாழையையும் பூவையையும் சேர்த்து உருவாக்கப்பட்ட தாழை ஆடைகளை பெண்கள் அணிந்து வந்தார்கள். உடைகளை கொடிகளாலும் நொச்சி இலைகளாலும் ஆக்கிக் கொண்டார்கள். விழாக் காலங்களில் நெய்தல் மலர்களால் தாழையுடை செய்தார்கள். இடுப்பிலும் மார்பிலும் மகளிர் தாழையுடை அணிந்தார்கள் என சங்ககால வாழ்வியல் கூறுகிறது. காலம் செல்ல பருத்தி உடையும்,  பட்டு உடையும் அணிந்தார்கள்.
பருத்தி உடை முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்றும் இங்கிருந்து மேல் நாடுகளுக்குப் பரவியது என்றும் வயர்சாண் மார்சல் கூறுகிறார். பால் ஆவி போன்ற மெல்லிய துணிகளும், பாம்பு தோல் போன்ற அழகான துணிகளும், காகிதம் போன்ற மெல்லிய துணிகளும், சாக்கு போன்ற முரட்டுத் துணிகளும் நெய்யப்பட்டன.
இங்கிருந்து மாதூரம் எனப் பெயர் பெற்ற புடவைகள் காசி, பாடலிபுரம் முதலிய இடங்களுக்கு அனுப்பப்பட்டது என்று 3-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அர்த்த சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ரோம் முதலிய நாடுகளுக்கும் துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
அன்று நெசவு செய்பவர்கள் காருகர் என்று அழைக்கப்பட்டனர். வடகம், பாடகம், கோங்கலம், சித்திர கம்பி, பேடகம் எனப் பல பெயர்களில் ஆடைகளை சூடி மகிழ்ந்தனர். நீலம், சிவப்பு, மஞ்சள், கருப்பு முதலிய நிறங்களில் ஆடைகள் நெய்யப்பட்டன. அவற்றில் நுண்ணிய வேலைப்பாடுகள் இருந்தன. பருத்தியும் பட்டும் கொண்ட துணிகள் துகில் எனப்பட்டன.
நீளமாக நெய்யப்பட்ட துணிகள் பிறகு வெட்டப்பட்டு வேட்டிகளாகவும் துண்டுகளாகவும் பயன்படுத்தினர். இதனால் இவை அறுவை என்றழைக்கப்பட்டது. பருத்திப் புடவைகளுக்கு கலிங்கம் எனப் பெயர். பட்டு ஆடைகள் நூலாக் கலிங்கம்எனப்பட்டது.
நெய்வதில் தேர்ந்த தமிழன், அதற்கு சாயம் தீட்டுவதிலும் சிறந்து விளங்கினான். மலர்கள், செடிகொடிகள், இலைகள் ஆகியவற்றின் சாறுகளில் வண்ணமேற்றினான். அவுரி செடியிலிருந்து ஏற்கப்பட்ட சாயம் ஐரோப்பியர்களின் மனதைக் கவர்ந்தது. இதில் இருந்து கிடைத்த நீல நிறச் சாயத்தை இண்டிகோ என்று அழைத்தனர்.கடுக்காய், கொன்றைப் பூ போன்றவையும் சாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.
நாகரிகம் வளர வளர துணிகளின் ரகங்களும் வண்ணங்களும் மேலும் சிறப்படைந்தன. 18-19 ஆம் நூற்றாண்டுக்குச் செல்வோம். புடவைகள் முப்பாகமாக சிறப்படைந்தன. அதாவது உடல், பார்டர், முந்தி என மூன்று பகுதிகள் உள்ள புடவைகள். ஆட்டுமுழி, புளியங்கொட்டை, சொக்கட்டான், வைரஊசி, பாய் பின்னல் மற்றும் மயில் கழுத்து, கிருஷ்ண மேகவர்ணம் போன்ற இரட்டைக் கலப்பு நிறங்களும் மோஸ்தராக இருந்தது.
முன் காலத்தில் காஞ்சிப்பட்டு சேலைகள் கனமாக இருக்கும். ஜரிகையையும் வேலைப் பாட்டையும் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால், இப்போது பெண்கள் வெயிட் இல்லாத புடவைகளையே விரும்புகிறார்கள். டெஸ்ட்டட் ஜரிகைப் புடவைகள் என்பவை தாமிரத்தில் தங்க முலாம் பூசுவார்கள். இவை எடை குறைவாக இருக்கும்.
போதுமே புடவை கதை. இனி அந்த புடவைகளை, எப்படி தேர்ந்தெடுப்பது,  எப்படி கட்டுவது, எப்படி பராமரிப்பது  என பார்ப்போம்....

புடவை கட்டுமுன் கவனத்தில் கொள்ளவேண்டியது:
1.  சில புடவைகளில் உள்பக்கம், வெளிப்பக்கம் என இரு பக்கங்களிலும் வித்தியாசம் இருக்கும். அதாவது வெளிப்பக்கம் இருக்கவேண்டிய பக்கம் பகட்டாகவும், உள்பக்கம் மங்கலாக இருக்கும். இதனை கவனித்துக் கொள்ளவும்.
2.  புடவையின் ஒரு முனையில் முந்தானையும், மறுமுனையில் சில புடவைகளில் பிளவுஸ்க்கான துணியும் இருக்கும். பிளவுஸ் தைப்பதற்கான் துணி இருந்தால் அதனை வெட்டி எடுத்து விடவும். இல்லையேல் நீளம் அதிகமாக இருக்கும்.

3.  புடவை கட்டுவதற்கு முன், அதனை அயர்ன் செய்து கொள்ளுங்கள்.
                                                          

புடவை பல விதமாக கட்டுகிறார்கள். ஆனால், பொதுவான ஒரு முறை பற்றி இங்கே விளக்கம் தரப்படுகின்றது.

புடவையின் வெளிப்பக்கம்(அழகான பக்கம்) வெளியே தெரியக்கூடியதாக, புடவையின் முந்தானை இல்லாத மற்றொரு முனையைப் வலது கையால் பிடித்து (அகலமான கரை கீழே இருக்கக் கூடியதாக) மேல் கரைத்தலப்பில் இரண்டு மூன்றுமுறை மடித்து சிறிய மடிப்புகளாக மடித்து அதனை கட்டியிருக்கும் உள்பாவாடைக்குள் வலது பக்க இடுப்போரமாக செருகுங்கள். (செருகும்போது புடவையின் கீழ் உயரத்தை கவனித்துக் கொள்ளுங்கள்) சிலர்  நுனியில் ஒரு சிறு முடிச்சுப் போட்டு அதனைச் செருகுவர்.

2. அதன்பின் புடவையின் மேல்கரைப் பகுதியை, சுருக்கிப் பிடித்து இடப்பக்கமாக எடுத்து உடம்பை ஒருமுறை சுற்றியபின் புடவையின் மேல்கரையைப் பிடித்து திரும்பவும் வலது வயிற்றடியில் உள்பாடைக்குள் இறுக்கமாகச் செருகுங்கள். புடவையின் உயரத்தைக் கவனித்து அதற்கு ஏற்றாப்போல் உயர்த்தியோ இறக்கியோ செருகி விடுங்கள். இப்போது உடம்பைச் சுற்றிய சாறியின் மேல் விளிம்பு பாவாடைக்கு மேல் தெரியலாம். அவற்றையும், உடம்பைச் சுற்றிவர பாவாடைக்குள் செருகி விடுங்கள்.

3. இப்போது மிகுதியாக இருக்கும் புடவையை திரும்பவும் இடது பக்கமாகச் எடுத்து உடம்பை மீண்டும் ஒருமுறை சுற்றி இடது தோளின்மீது போட்டுவிடுங்கள். இந்நிலையில் நீங்கள் விரும்பும் உயரத்தில் புடவை தொங்கக் கூடியதாக உயரத்தை சரிசெய்து கொள்ளுங்கள்.

இப்போது புடவையின் முன் பக்கத்தில் சேலையின் ஒரு பகுதி தொய்வாக தொங்கிக்கொண்டு இருக்கும். அதில்தான் மடிப்பு அமைக்க வேண்டும். சேலையை முதல் சுற்று சுற்றி இடுப்பில் செருகிய இடத்தில் இருந்து சுமார் நான்கு விரல்கள் அகலத்திற்கு மடிப்புகளாக மடித்து (தொய்ந்த சாறி இறுக்கமாகும்வரை) மடித்து கொண்டு அதனை வலது பக்க வயிற்றடியில், ஏற்கனவே உள்முந்தானையை  செருகிய இடத்தில் ஒழுங்காகாகவும் இறுக்கமாகவும், கரைகள் வெளியில் தெரியாதபடி, முழுமடிப்பும் உள்ளே ஒழுங்காக இருக்கக்கூடியதாக செருகுங்கள்.(இல்லையேல் அவ்விடம் முன்னுக்கு தள்ளி அசிங்கமாக இருக்கும்).

இப்போது மடித்து செருகிய இடத்தில் இருந்து மேல்கரையை உடம்பைச் சுற்றி அணைத்துப் பிடித்து (நெஞ்சை மறைத்து) கொஞ்சம் இறுக்கமாக தோள்மூட்டடியில் வைத்து ப்ளவ்சுடன் பின் செய்து விடுங்கள்.  னெஞ்சின் மீதிருக்கும் மடிப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக அரேஞ்ச் பண்ணிக்கிட்டால்.., ரங்கமணி பெருமூச்சு விட்ட சேலைக்கட்டு ரெடி.

                                         

பெரிய விலை கொடுத்து வாங்கும் பட்டுச் சேலைகளை எப்படி பராமரிப்பது?…
புடவைகளை பீரோக்களில் வைக்கும் போது ஒரு மெல்லிய மல்-மல் துண்டில் சுற்றி வைத்தால் ஜரிகை கருக்காமல் புடவை புத்தம் புதிதாக இருக்கும். கொஞ்சம் சூடம் அல்லது நெப்தலின் உருண்டைகளையும் பீரோ தட்டுகளில் போட்டு வைக்க வேண்டும்.
ஒவ்வொரு தடவையும் புடவையைக் கட்டிய பிறகு அதை காத்தாட வெளியில் போட்ட பிறகு மடித்து வைக்கவும். மழைக்காலத்தில் பட்டுப் புடவைகளை இளம் வெயிலில் கால் மணி நேரம் போட்டு எடுத்து வைக்க வேண்டும். இப்படி செய்தால் புடவை 70 ஆண்டுகள் வரை புது மெருகு இருக்கும்.
முன்பெல்லாம் பூந்திக் கொட்டையை இடித்து அதைத் தண்ணீரில் போட்டு ஊர வைத்தால் சோப்புத் தண்ணீர் மாதிரி கிடைக்கும். அதைக் கொண்டு கையினால் புடவைகளைக் கசக்கிப் பிழிந்து காய வைத்தால் பட்டின் பளபளப்பும் மென்மையும் காக்கப்படும். இதுக்கெல்லாம் நேரமில்லாதவங்க..,ஷாம்பு போட்டு பட்டு புடவை ஊற வைத்து, அடித்து துவைக்காமல், லேசாக கசக்கி அலசி நிழலில் காய வைக்க வேண்டும்.

 புடவை வாங்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டியது (ரங்கமணிகளுக்கு டிப்ஸ்):
உயரமான பெண்களுக்கான புடவை:
பருமனாக இருந்தால் டார்க் கலர்ஸ் பொருந்தும்.
மாநிறம், கருப்பு நிறத்தவர்களுக்கு டார்க் கலர் வேண்டாம். அழுத்தமான காம்பினேஷன் (கருப்பு-வெள்ளை, பச்சை-மஞ்சள்). பெரிய டிசைன் பூக்கள், குறுக்கு கோடுகள் தைரியமாக செலக்ட் பண்ணலாம்.
அகலமான கரை வைத்த புடவைகள், முப்போகம் (சேலையின் மொத்த உயரத்தை மூன்றாகப் பிரித்து 2 அல்லது 3 கலரில் வரும்) புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டவை.
ரொம்ப குண்டாக இருந்தால் மெல்லிய ஆடைகளே வேண்டாம். உருவமும் உடல்பாகங்களும் மேலும் பெரிதாகத் தோற்றம் தரும்.
பட்டு, கஞ்சி போட்ட காட்டன், ஆர்கன்டி, ஆர்கன்ஸா, டஸ்ஸர் சில்க் போன்றவை ஒல்லியாக இருப்பவர்களை ஓரளவு பூசினாற்போல காட்டும். நீளத் தலைப்பு வைத்துக் கொள்ளுங்கள். ஒல்லி என்பதால் நிச்சயமாக 6 முதல் 8 ப்ளீட்ஸ் வரும்.., அகலமான பார்டர், நல்ல கான்ட்ராஸ்ட் கலர் புடவையை செலக்ட் செய்யுங்கள்.
பிரின்டட் புடவைகளை அணியும்போது அதற்கு கான்ட்ராஸ்டான பிளவுஸ் போடுங்கள். அகல பார்டர் புடவை நல்லது. உயரத்துக்கு அழகான தோற்றம் தரும்.
பெரிய உருவங்கள் அச்சிடப்பட்ட புடவை கட்டுங்கள்.
குள்ளமான பெண்களுக்கான புடவை:
கம்பீரத்தையும் கண்ணியத்தையும் கலந்துகட்டி வெளிப்படுத்துவது புடவை மட்டுமே. டார்க் கலர்களைவிட வெளிர் நிறங்களே அழகு.தலைப்பின் நீளம் குறைவாக இருப்பது நல்லது.
காட்டன், பேப்பர் சில்க், ஆர்கண்டி, டஸ்ஸர் சில்க் புடவைகளைத் தவிர்க்கவும்.கையளவு பார்டர் உள்ள புடவை அணியுங்கள். நேர் கோடுகள் உள்ள ஆடைகளை அணிவதாலும் உயரத்தை அதிகமாக்கிக் காட்டலாம்.சாய்வான கோடுகள் உள்ள ஆடை அணியவேண்டாம். இன்னும் குட்டையாகக் காட்டும்.
இயன்றவரை பிளெய்ன் புடவை, சிறிய பூக்கள் உள்ள புடவை கட்டுங்கள். பேபி பிங்க், லோ வயலட், வெளிர் நீலத்தில் வெள்ளைப்பூக்கள்... இதெல்லாம் ஓகே.
ஷிபான், ஜார்ஜெட், மைசூர் சில்க், பின்னி சில்க், பிரின்டட் சில்க் டிசைன் புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ரகங்கள். இதில் ஜரிகை ரகங்களை விழாக்களுக்கு அணியலாம். இது காஞ்சிப் பட்டுக்கு ஈடுகொடுக்கும்.
சின்னச் சின்ன பூக்கள், டிசைன்கள் உள்ளதை எடுங்கள். பெரிய பூக்கள், பெரிய டிசைன் வேண்டாம். சின்ன பார்டர் போதும், அதிக டிசைன் தேவையில்லை.
குண்டாக இருப்பவர்கள். ஒரு பக்க கரை போட்ட புடவை அழகு. இரண்டு பக்க ஜரிகை போட்ட புடவை கட்ட ஆசையாக இருந்தால் சிறிய பார்டர் ஓகே. குள்ளம், பருமனை குறைத்துக் காட்டும். டார்க் நிற உடைகளை அணியுங்கள். ஒல்லியான தோற்றத்தைக் கொடுக்கும். லோ ஹிப் வேண்டாம்.
ஒல்லியாக சற்று குள்ளமாக இருப்பவர் அழுத்தமான கலர்களில் உடை அணிவதைத் தவிருங்கள். (ஆனால் கருப்பு, மெரூன் போன்றவை யாருக்கும் பொருந்தும்) சின்ன பார்டர் புடவையைத் தேர்ந்தெடுங்கள். கங்கா, யமுனா சேலை போல் ஒரு பக்கம் டிசைன் உள்ள புடவை சற்று பூசினாற்போலவும் உயரமாகவும் காட்டும். பிரைட் டிசைன், பெரிய பூ டிசைன்களை தவிர்த்துவிடுங்கள். புடவைகளில் நீளவாட்டு கோடுகளும், நீள வாட்டு டிசைன்களும் உங்களுக்குப் பொருத்தம்.

டிஸ்கி 1:  ரிசப்னிஸ்டுகள், டீச்சர்கள் புடவை கட்டியிருக்கும் பாங்கை பார்த்து..., நம்ம கூட வரும் ரங்கமணிகள் பார்த்து நல்லா ஜொள்ளு விடுவாங்க. தங்கமணிகள், அதை பார்த்துட்டு என்ன? ஏதுன்னு முறைச்சு பார்க்கும்போது, வெறும் 150 ரூபாய் காட்டன் சாரிதான் அவங்க கட்டியிருக்காங்க. எவ்வளவு அழகா, பாந்தமா கட்டி இருக்காங்க. நீயும் இருக்கியே, அரிசி மூட்டை போல 1500ரூபாய் புடைவை சுத்திக்கிட்டு.. ம்ம்ம் இன்னும் எத்தனை வருசம் ஆனாலும் அவங்களை போல உனக்கு கட்ட வருமான்ன்னு பிளேட்டை மாத்தினதும் இல்லாம நம்மளையே குறை சொல்வாங்க.  அந்த பழியிலிருந்து அப்பாவி தங்கமணிகள் தப்பிக்க, எனக்கு தெரிஞ்ச புடவை கட்ட சில டிப்ஸ் தங்கமணிகளுக்கு...,

டிஸ்கி 2: எனக்கு தெரிஞ்ச நண்பர் ஒருவர், என்கிட்ட என் மனைவிக்கு பர்த்டே வருது. அவங்களுக்கு தெரியாம ஒரு கிஃப்ட் பண்ணனும் என்ன பண்ணலாம்னு கேட்டார். புடைவைக்கு மயங்காத பெண்களே இல்லை. வாங்கிக்குடுங்கன்னு சொன்னேன். அதுக்கு அவர், சர்ட்ல XL. XXL இருப்பது போல புடவையிலும் உண்டான்னு கேட்டு வழிஞ்சார். அப்படிப்பட்ட “புத்திசாலி ரங்கமணிகளுக்காகவேபுடவை வாங்கும்போது கவனிக்க வேண்டிய டிப்ஸ்.




20 comments:

  1. பட்டுப்புடவை குறித்த அனைத்துதகவல்களும் நல்லாருக்குங்க..

    பட்டுத்துணி எடுக்கும் பேர்தும் அதை பராமரிக்கும் போதும் கண்டிபபாக இவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் தான்...


    நமக்கும் இவ்வளவு ஞானம் கிடையாதுங்க..

    என்னுடைய துணியை நான் தேடி வாங்கியது கிடையாது..

    ReplyDelete
  2. பதிவுக்கும் தங்களுக்கும் ஒரு வாழ்த்தும் நன்றியும்

    ReplyDelete
  3. மாப்ள சிபி, கத்துக்கோ புடவை எப்படி வாங்கறதுன்னு.. போன தீபாவளிக்கு அடி வாங்குன மாதிரி பொங்கலுக்கும் வாங்கக் கூடாதுல்ல..

    என்ன நான் சொல்றது..

    ReplyDelete
  4. புடவையை பற்றி அருமையான பதிவு. நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் ராஜி, நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  5. முதல் படத்தில் இடம் இருந்து வலமாக கடைச் ஃபிகர் மட்டும் தான் ஓக்கே ஹி ஹி

    ReplyDelete
  6. >> பதிவுக்கும் தங்களுக்கும் ஒரு வாழ்த்தும் நன்றியும்

    11/28/2011 11:35 AM
    பிளாகர் !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    மாப்ள சிபி, கத்துக்கோ புடவை எப்படி வாங்கறதுன்னு.. போன தீபாவளிக்கு அடி வாங்குன மாதிரி பொங்கலுக்கும் வாங்கக் கூடாதுல்ல..

    என்ன நான் சொல்றது..

    ஹா ஹா என்னமோ நாங்க வருஷா வருஷம் தீபாவளிக்கு மட்டும் தான் அடி வாங்கற மாதிரி ஹே ஹே ஹேய்

    ReplyDelete
  7. இந்த பதிவு முதல்வரை நினைத்து எழுதிய உள்குத்து பதிவு இல்லையே...

    ReplyDelete
  8. ஹலோ ராஜி, ரிஷப்சணுல வேலை பாக்குற ஆண்களும் அழகா இருப்பாங்க, காரணம் தெரியுமா...???

    எங்க ஹோட்டலில் [[எந்த ஹோட்டலிலும்]] ரிஷப்சனுக்கு உள்ளே அடிக்கும்படி ஸ்பெஷல் லைட் செட் பண்ணி வச்சிருப்பாங்க, அதான் அவர்களை பார்க்க அட்ராக்சனா இருக்கும், என்னை மாதிரி ஹி ஹி...

    ReplyDelete
  9. சி.பி.செந்தில்குமார் கூறியது...
    முதல் படத்தில் இடம் இருந்து வலமாக கடைச் ஃபிகர் மட்டும் தான் ஓக்கே ஹி ஹி//

    ஆகிர்ர்ர்ர்ர் த்தூ த்தூ.....

    ReplyDelete
  10. பட்டுப்புடவை குறித்த அனைத்து தகவல்களும் நல்லாயிருக்கு...நிறைய தெரிந்து கொண்டேன்...

    ReplyDelete
  11. ம்ம்ம்ம்... நிறைய சொல்லி இருக்கீங்க... நல்ல விஷயம்... அம்மணிகிட்ட படிக்கச் சொல்லிடறேன்...

    ReplyDelete
  12. அக்கா இன்னும் எனக்கு பட்டு புடவை கட்டும் நேரம் வாய்க்கவில்லை இருந்தாலும் குறிப்புகளை எடுத்துக் கொண்டேன் மிகவும் பயனுள்ள செய்தி நன்றி

    ReplyDelete
  13. //சி.பி.செந்தில்குமார் கூறியது...
    முதல் படத்தில் இடம் இருந்து வலமாக கடைச் ஃபிகர் மட்டும் தான் ஓக்கே ஹி ஹி//
    அதில மிச்சம் எல்லாம் ஆன்டிங்க சித்தப்பு sorry தம்பி! :-)

    ReplyDelete
  14. த. ம.5 !

    நல்லபதிவு! என்ன இன்னும் கொஞ்சம் படங்கள் போட்டிருக்கலாம்! :-)

    ReplyDelete
  15. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  16. அருமையான தகவல்கள். நானும் என் மனைவியும் விரும்பிப் படித்தோம். குறிப்பும் எடுத்துக் கொண்டார்கள். நன்றி சகோதரி!
    நம்ம தளத்தில்:
    "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

    ReplyDelete
  17. புடவையில் இவ்வளவு செய்திகளா?நன்று.

    ReplyDelete
  18. வாங்கிவிடுவோம் :)))

    நிறைந்த தகவல்கள்.

    ReplyDelete
  19. Pudavaikku encyclopedia maathiri irukku Sago. Arumai.
    TM 8.

    ReplyDelete
  20. புடவைப் பற்றிய a -z தகவல்களை
    அழகாகத் தொகுத்து இருக்கிறீர்கள்.

    ReplyDelete