அட்சயம் என்ற சொல்லுக்கு வளர்தல் என்று பொருள். அன்றைய தினம் செய்யப்படும் எல்லா விசயமும் பல்கிப்பெருகும் என்பது ஐதீகம். அதனால, அன்னிக்கு என்ன நல்ல விசயம் செய்யலாம்ன்னு யோசிக்காம என்ன பொருள் வாங்கலாம்ன்னு கடைகளை நோக்கி சில வருசங்களாய் படையெடுக்குது இன்றைய சமுதாயம். தங்கம் விலை தாறுமாறாய் இருக்கும் இக்காலகட்டத்தில் கடன் வாங்கியாவது தங்கம் வாங்க துடிக்குறாங்க நம் மக்கள்.
அட்சய திருதியை தினம் உருவான கதை...
பாஞ்சால நாட்டில் பூரியசஸ் என்ற அரசன் இருந்தான். வேற்று நாட்டு அரசனிடம் தன் நாட்டை இழந்து தன் மனைவி சிகிநீ யுடன் காட்டிற்கு சென்று முப்பது ஆண்டுகள் படாதபாடுபட்டான். அவ்வழியே தற்செயலாய் சென்ற யாஜகர், உபயாகர் என்ற முனிவர்கள் அவ்வழியே சென்றனர். அவர்களை கண்டதும் காலில் விழுந்து வணங்கி பணிவிடை செய்து தன் நிலையை எடுத்து சொன்னான். ராஜாதிராஜன் இன்று குடிசையில் வாழும் காரணத்தை தங்கள் ஞானத்திருஷ்டியில் கண்டனர். மன்னா! பத்து தலைமுறைகள் நீ வேடனாய் இருந்து பத்தாவது பிறவியில்கௌட தேசத்தின் காட்டில் இருக்கும்போது வழிப்பறியில் ஈடுபட்டும், முனிவர்களை இம்சித்தும் பல கொடுமைகளை இம்சித்தும் வந்ததன் பலனை இப்போது அனுபவிக்கிறாய். இவ்வளவு கொடுமை செய்தும் எப்படி மன்னனாய் பிறந்தேன் என வினவி நின்றான் பூரியசஸ்.
தெரியாமல் செய்த தானத்திற்கே இத்தனை பலனா என்று யோசித்த மன்னன் விஷ்ணுவை வணங்கியபடி வெயிலில் வருவோருக்கு நிழலும், நீரும் தந்து வந்தான். சிலநாட்களில் அவனுக்கு உதவ அவனின் உறவினர்கள் முன்வந்தோடு அவன் நாட்டையும் அவனுக்கு திரும்ப கிடைத்து பதினாறு செல்வங்களோடு நல்லாட்சி புரியும்போது விஷ்ணு பகவான் அவன்முன் தோன்றி என்ன வரம் வேண்டுமென கேட்க, உன்னை மறவாத மனமும், மாறாத பக்தியும் வேண்டுமென வேண்டி நின்றான். அவ்வாறே வரமளித்து மன்னனுக்கு வைகுண்ட பதவி அளித்த நன்நாள் வைகாசி மாதம் மூன்றாம் நாளான அட்சய திருதியை நாள்.
கௌரி என்றழைக்கப்படும் பார்வதிதேவி தனது பிறந்த வீட்டுக்கு வந்தது இந்த நாளில்.
க்ருஷ்ணரின் ஆறாவது அவதாரமான பரசுராமர் அவதரித்தது இப்புண்ணிய நாளில்...இந்நாளில்தான் கிருத யுகம் உருவானது...
ஏழ்மையில் வாடிய தன் பால்ய நண்பனின் வறுமையை ஒருபிடி அவலில் போக்கிய நாளும் இதுவே....இன்றைய தினத்தில்தான் மகாலட்சுமி மகாவிஷ்ணு மார்பில் வாசம் செய்ய வரம் வாங்கினாள்....
மனிதர்களின் பாவத்தை போக்கும் கங்காதேவி பூமியில் உருவான நாளும் இந்நாளே....
பிரம்மனின் தலையை கொய்த சிவனின் பாவம் தீர பிட்சானனாய் உலகை வலம் வந்த வேளையில் அன்னப்பூரணி மாளிகையின் முன் பிட்சை கேட்க பிட்சை இட இட உணவு குறைந்துகொண்டே வருவதைக்கண்டு வேதனையுற்று தன் சகோதரனான விஷ்ணுவிடம் உதவிக்கேட்க மகாலட்சுமியின் அருளால் கிடைத்த பாத்திரத்தை அட்சயம் என்று சொல்லி தொட அது அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரமானது. அட்சய பாத்திரம் உருவான நாளும் இதுவே.செல்வத்துக்கு அதிபதியான குபேரன் தன் செல்வம் என்றென்றும் நிலைத்து நிற்க மகாலட்சுமியை பூஜை செய்யும் நாளும் இதுவே
தேய்ந்து, வளரும் சாபத்தால் அவதிப்பட்ட சந்திரன் சிவனை சரணாகதி அடைய சிவனின் ஜடாமுடியில் மூன்றாம் பிறையாக இடம்பெற்றதும் இந்நாளே...
அட்சயதிருதியை அன்று செய்ய வேண்டியது...
மறைந்த முன்னோர்களுக்கு நீத்தார் கடன் செய்யலாம். முன் ஜென்ம வினைகள் தீரும்.
சுமங்கலி பெண்கள் பூஜை செய்து ஆடைகள் தானம் செய்யலாம். வஸ்திரதானம் செய்தால் பதவி உயர்வு கிடைக்கும். பசுக்களுக்கு ஒரு பிடி புல் கொடுக்கலாம். தங்கம்தான் வாங்கனும்ன்னு இல்ல. அரிசி, சர்க்கரை, உப்பும்கூட வாங்கலாம். உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது நம் நம்பிக்கை.
அட்சயதிருதியை அன்று அன்னதானம் செய்தால் ஆயுள் பெருகும். இனிப்புகள் தானம் செய்தால் திருமணத்தடை நீங்கும், தானியங்களை தானம் செய்தால் விபத்துகளிலிருந்து காப்பாற்றும், கால்நடைகளுக்கு உணவளித்தால் வாழ்வு வளம்பெறும்.
அட்சய திருதியை அன்று நீராடி, வீடு துடைத்து பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் மனைப்பலகை போட்டு அதன்மேல் வாழையிலை வைத்து, இலையில் பச்சரிசி சிறிது பரப்பி ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை வைத்து மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து கும்பம் தயாரிக்கவேண்டும். கும்பத்தினில் காசுகள் போடலாம் அல்லது பச்சரிசியில் காசுகள் போடலாம்.
குத்துவிளக்கு ஏற்றி வைத்து மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். கலசத்தின் அருகில் படியில் அல்லது உழக்கு அல்லது டம்ப்ளரில் நெல் நிரப்பி வைத்து பூ பொட்டு . இன்றைய தினம் லட்சுமி, குபேரன், மகாவிஷ்ணு மூல மந்திரங்களை சொல்லி வழிப்படுதல் நலம். குசேலர் கதையினை படித்தலும் நலம் சேர்க்கும்.
கேபிள் கலாட்டாவில் நாளை சந்திப்போம்..
நன்றியுடன்..
ராஜி.
கடன் வாங்கியாவது தங்கம் வாங்குபவன் அதை மறுவாரமே அடகு கடையில் வைக்கிறான் இதுதான் உண்மை.
ReplyDeleteஅதேநேரம் தங்கத்தை விற்றவன் மறு வருடம் அடுத்த கடையை திறந்து விடுகிறான் இதுவும் உண்மை
ஆனால் உழைத்தவன் உயரலாம் இதுதான் பலருக்கும் புரியவில்லை
ஏழை ஏழையாகவும், பணக்காரன் இன்னும் பெரிய பணக்காரனா மாறும் இடம்தான் இந்தியா
Deleteசென்ற ஆண்டு இதே திதியில் நான் ஆதரவற்ற பெரியோர்களுக்கு உணவளித்தேன். உப்பு வாங்கினேன். எதிர்பாராதவிதமாக ஒரு சொத்து நல்ல விலைக்கு விற்பனை ஆனது. அதனால் கடன்கள் தீர்ந்தன. ஆனால் தங்கம் வாங்கும் வழக்கம் இல்லை.
ReplyDelete- இராய செல்லப்பா நியூஜெர்சி
எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லப்பா. அதனால ஸ்பெஷலா எதும் வாங்கல
Deleteஇத்தனை விஷயங்களையும் படித்தும், தெரிந்தும் கூட நிறைய பேர்கள் நகைக்கடையில்தான் வரிசையில் நிற்கின்றனர்! விளம்பரத்திற்கு அடிமையாகி விட்டோம்!
ReplyDeleteதானங்களைக் கூட பலன் கொடுக்கும் என்று எதிர்பார்த்துச் செய்வதில்லை.
நிஜம்தான் சகோ. இந்த தானம் செஞ்சா நமக்கு என்ன பலன் கிடைக்கும்ன்னு பார்த்துதான் தானமே செய்யுறோம். இதனால என்ன பலன்ன்னு கிடைக்கும்ன்னு எனக்கு தெரில
Delete#பாஞ்சால நாட்டில் பூரியசஸ் என்ற அரசன் இருந்தான்#
ReplyDeleteஎனக்கொரு டவுட்டு ....பாஞ்சால நாடு ,பாஞ்சால நாடுன்னு சொல்றாங்களே ,அது எங்கேதான் இருக்கு :)
உங்க கேள்விக்கான பதில்
Deleteபாஞ்சால நாட்டின் பகுதியாக தற்கால உத்தராகண்ட் மாநிலப் பகுதிகள் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஃபரூக்காபாத் மாவட்டம் மற்றும் பதாவுன் மாவட்டங்களை கொண்டிருந்தது. பாஞ்சால நாடு, வடக்கு பாஞ்சாலம், தெற்கு பாஞ்சாலம் எனப் பிரிக்கப்பட்டிருந்தது. வடக்கு பாஞ்சால நாட்டுப் பகுதியின் தலைமையிடமாக தற்கால பரேலி மாவட்டத்தில் உள்ள இராம்நகர் எனும் சத்திராவதி அல்லது அத்ஹிசத்திராவும்; தெற்கு பாஞ்சால நாட்டுப் பகுதிக்கு தலைமையிட நகரமாக தற்கால ஃபரூக்காபாத் மாவட்டத்தில் இருந்த காம்பில்யம் நகரம் விளங்கியது. புகழ் பெற்ற கன்யாகுப்ஜம் என்று அழைக்கப்பட்ட கன்னோசி நகரம் பாஞ்சால நாட்டில் இருந்தது....
மேலும் அதிக தகவலுக்கு https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
மீ நோ நம்பிக்கை இதில்....பலனை எதிர்பார்த்துச் செய்வது என்ற பழக்கமே இல்லையே...நல்ல தகவல்கள்..
ReplyDeleteகீதா
எனக்கும் நம்பிக்கை இல்லைங்க. இதை செய்தா இந்த பலன் கிடைக்கும்ன்னு நினைச்சு தானம் செஞ்சா அந்த தானத்துக்கே மரியாதை இல்லியே. பக்தியும், தானமும் எதையும் எதிர்பார்க்காம செய்யனும்
Delete