கொண்டைக்கடலைன்னு சொல்லப்படுற மூக்குக்கடலையில் வெள்ளை மற்றும் சிவப்பு என ரெண்டு வகையுண்டு. ஒன்னு வெள்ளை கொண்டைக்கடலை. இதை ”சென்னா” ன்னும் சொல்வோம். இன்னொண்ணு நாம அதிகமா பயன்படுத்துற சிவப்பு கொண்டைக்கடலை. வெள்ளை கொண்டைக்கடலையவிட சிவப்பு கொண்டைக்கடலை அளவில் சின்னது, அதிகசத்தானதும்கூட. நாடு முழுக்க இது பயிர்விக்கப்படுது. சிவப்புக்கொண்டைக்கடலை உற்பத்தில இந்தியாதான் முதல் இடத்துல இருக்கு. இது தென்கிழக்கு துருக்கியிலிருந்து இந்தியாவுக்கு வந்துச்சு. வெள்ளைக்கொண்டைக்கடலைக்கு முன்னாடியே சிவப்பு கொண்டைக்கடலை இந்தியருக்கு அறிமுகமாகிடுச்சு. உலகம் முழுக்க பரவலா இந்த கொண்டைக்கடலை புழக்கத்திலிருக்கு. இந்தியா மட்டுமில்லாம பாகிஸ்தான், வங்கதேசத்தில் அதிகமா பயிர் செய்யப்படுது.
பழுப்பும், கருப்பும் சேர்ந்த நிறத்திலிருக்கும் இந்த கொண்டைக்கடலைல அதிகம் புரதசத்து உள்ளது. கொண்டைக்கடலையின் எல்லா நிலையும் பயன்பாட்டிலுண்டு. இதன் காய் பச்சையா இருக்கும்போதே வேகவைக்கப்பட்டு சேலட்டிலும், சாட் ஐயிட்டத்திலயும் வடநாட்டுல சேர்ப்பாங்க.
சிவப்பு கொண்டைக்கடலையை பெரும்பாலும் சுண்டல் செய்து சாப்பிடுவாங்க. உப்புக்கடலையாயும் கடைகளில் விற்கப்படுது. சுண்டல்ன்னா இந்த கொண்டைக்கடலைதான் நினைவுக்கு வரும். மத்ததுலாம் இதுக்கப்புறம்தான். கேரளத்தில் புட்டுக்கு கடலைக்கறிதான் சைட் டிஷ். முளைக்கட்டிய கொண்டைக்கடலை சாலட்டா செய்யப்படுது. இந்த கடலையை வறுத்து பொடி செஞ்சு தண்ணி சேர்த்து கொதிக்க வெச்சு காஃபி, டீக்கு பதிலா குடிச்சா உடலுக்கு நல்லது.
இந்த கொண்டைக்கடலைல போலேட்டு மக்னீசியம் இருக்கு. இது ஹார்ட் அட்டாக் வர காரணமான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைக்க உதவுது. கர்ப்பிணிப்பெண்களுக்கு அத்தியாவசியமான ஃபோலிக் அமிலம், ஆன்டிஆக்சிடண்ட் தன்மைக்கொண்ட சாப்போனின் மாதிரியான வேதிப்பொருள் அதிகமாய் உள்ளது. வெள்ளைக்கொண்டைக்கடலையவிட சிவ் கொண்டைக்கடலைல நார்ச்சத்து அதிகம் இருக்கு. சர்க்கரையின் அளவு இதில் அதிகமிருக்குறதால நீரிழிவு நோய்காரங்களுக்கு மிகவும் நல்லது. கொண்டைக்கடலை வேக வெச்ச தண்ணில அதிகம் இரும்பு சத்து உண்டு. அதனால ரத்தசோகைய தடுக்கும். இதில் தாமிரம், மெக்னீசியம் செலேனியம், கொஞ்ச்சூண்டு துத்தநாகம்லாம் இருக்கு.
இது செரிமானகோளாறு, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுமந்தம் தீர்க்க உதவுது. முதிராத கொண்டைக்கடலைய வேகவெச்ச தண்ணிய குடிச்சா சீதபேதி சரியாகும். அதேப்போல சிறுநீர் அடைப்பை சரி செய்யும் குணமும் இந்த தண்ணிக்குண்டு. இளம் கொண்டைக்கடலை விதைகளுக்கு காமத்தை பெருக்கும் சக்தி உண்டு. கொண்டைக்கடலை செடிமேல வெள்ளைத்துணியை போர்த்தி அதன்மீது விழும் பனித்துளிய சேகரிப்பதற்கு ‘கடலை புளிப்பு’ன்னு சொல்லப்படுது. இந்த நீர் வாந்தி, செரிமான பிரச்சனையை சரி செய்யும் தன்மை கொண்டது.
இனி கொண்டைக்கடலை சாறு ரசம் வைக்குறது எப்பிடின்னு பார்ப்போம்..
தேவையானப் பொருட்கள்:
தேவையானப் பொருட்கள்:
வேகவைத்த கொண்டைக்கடலை தண்ணி
காய்ந்த மிளகாய்
பூண்டு,
தக்காளி,
மிளகு,
சீரகம்,
புளி,
பெருங்காயம்,
உப்பு,
மஞ்சப்பொடி
கறிவேப்பிலை
கொத்தமல்லி
கொண்டைக்கடலையை எட்டு மணிநேரம் ஊறவெச்சு, உப்பு போட்டு வேக வெச்சு தண்ணிய எடுத்துக்கோங்க. வேறொரு பாத்திரத்தில் புளியை ஊறவெச்சுக்கோங்க.
மிளகாய், தக்காளி, பூண்டு, மிளகு, சீரகம், பூண்டை விழுதா அரைச்சுக்கோங்க.
ஒரு பாத்திரத்தில் அரைச்ச விழுதை கொட்டிக்கோங்க.
அதுல புளி கரைச்சு ஊத்தி, உப்பு, பெருங்காயம், மஞ்சப்பொடி சேர்த்து கொதிக்க விடுங்க.
கொதிச்சு பச்சை வாசனை போனதும். கொண்டைக்கடலை தண்ணிய ஊத்தி நுரைக்கட்டி வரும்போது...
கடுகு, கறிவேப்பிலை, கொ.மல்லி போட்டு தாளிச்சு கொட்டுங்க.
காரம் கம்மியா இருந்தா காய்ந்த மிளகாயை தாளிப்புல சேர்த்துக்கோங்க.
காய்ச்சலின்போது இந்த ரசத்தை சூடான சாதத்தில் சேர்த்து கரைச்சு சாப்பிட்டா நாக்கின் உணர்ச்சி நரம்புகள் பழையபடி வேலை செய்ய ஆரம்பிக்கும். ஃப்ரிட்ஜுக்கு வெளில இருந்தாலும் ரெண்டு நாளுக்கு நல்லா இருக்கும்.
நாளைக்கு ஆனாய நாயனார் பத்தி தெரிஞ்சுக்க வாங்க..
நன்றியுடன்,
ராஜி.
//கொஞ்ச்சூண்டு துத்தநாகம்லாம் இருக்கு//
ReplyDeleteஉண்மையாகவா ?
செய்முறைகளோடு மருத்துவகுணம் பற்றி சொல்லி இருப்பது நன்று.
ஆமாம்ண்ணே. கொண்டைக்கடலைல துத்தநாகம் இருக்குங்குறது உண்மை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Delete#இது தென்கிழக்கு துருக்கியிலிருந்து இந்தியாவுக்கு வந்துச்சு#
ReplyDeleteஉங்ககிட்டே எனக்கு பிடிச்சது இதுதாங்க ,கொண்டைக் கடலை எங்கே போகுதுன்னு மட்டும் சொல்லாம ,எங்கே இருந்து வந்ததுன்னும் சொல்றீங்களே :)
வரலாறு முக்கியமாச்சே
Deleteஅருமையான குறிப்பு, மருத்துவத்தையும் நோட் பண்ணிட்டேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஆதிரா
Deleteநல்ல குறிப்பு. வடக்கே இது அடிக்கடி பயன்படுத்தப்படும் பொருள் - சப்பாத்திக்கு சைட் டிஷ்-ஆக இந்தக் கடலை போட்ட சப்ஜி!
ReplyDeleteநம்மூர் பக்கம் கொண்டைக்கடலையின் பயன்பாடு குறைச்சல்தான்ண்ணே. அதிகபட்சம் சுண்டல் அப்புறம் குழம்பு செய்வோம். அவ்வளவ்தான்
Deleteஉபயோகமான குறிப்பு. நான் இதுவரை இதில் சுண்டலும் பிட்லையில் போடுவதும் மட்டுமே செய்திருக்கிறேன்!
ReplyDeleteஇந்த ரசம் நல்லா இருக்கும் சகோ. ஒருமுறை செஞ்சு பாருங்க. எங்க வீட்டுல எல்லாருக்கும் பிடித்தமானது. சக்கை மட்டும்தான் மிஞ்சும்.
Deleteஇந்தக் கடலை கேரளத்தில் அடிக்கடி செய்வதுண்டு....எங்கள் ஸீட்டிலும்....
ReplyDeleteகீதா: அடிக்கடி சேர்ப்பதுண்டு. ரசமும் செய்வதுண்டு....உங்கள் குறிப்புகளையும் குறித்துக் கொண்டேன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கீதா
Deleteஇந்த நீரில் ரஸம் நான் செய்வதுண்டு. அதிகம் காரம்,உப்பு புளிப்பு தாங்காது. ரஸமும் தெளிவாக இருக்கும். சுண்டலுக்கு வேக வைக்கும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் , வடிக்கட்டின தண்ணீரில் இந்த ரஸம்தான். வேகவைத்த கொண்டைக்கடலையில் சட்னி அரைத்தாலும் நன்றாக இருக்கும்.கொண்டைக்கடலையின் சரித்திரம் தெரிய மிக்க உதவியது உங்கள் பதிவு. அன்புடன்
ReplyDelete