திங்கள், ஏப்ரல் 24, 2017

ஆணுக்கும் பெண்ணுக்குமான வித்தியாசம் - ஐஞ்சுவை அவியல்


ஏனுங்க மாமா! ஜோசியம் பார்த்துட்டு வந்தேன். உங்களுக்கு நேரம் சரியில்லையாம். அதனால,  வியாழக்கிழமைல சுக்கிரனுக்கு வெள்ளை கொண்டைக்கடலை மாலை போட்டு  நவக்கிரகத்தை 9 சுத்து சுத்தி வரசொன்னாங்க மாமா. 

 பொதுவா நீ நவக்கிரகத்தை எப்படி வலம் வருவே?!

நேரா சனிப்பகவான் முன் நின்னு விளக்கேத்தி 9 முறை எப்பயும் போல சுத்திட்டு அதுக்கு எதிர்பக்கமா சுத்திட்டு வருவேன். ஏன் மாமா கேக்குறீங்க?!

சொல்றேன் இரு.  கோவிலை வலம்வருதல் என்பது  16 உபச்சாரங்கள்ல ஒன்னு. பிரதட்சணம்ன்னு பேரு. பொதுவா மூணுமுறை சுத்தினாலே இந்த பிரதட்சணம் முழுமையடையும்.   ஆனா, அங்க இருக்கும் தெய்வ உருவங்களுக்கும்  பிரதட்சணம் வருவதற்கும் சம்பந்தமில்லை. அதனால, 9 தெய்வங்களுக்கு ஒன்பது முறை பிரதட்சணம் வரனும்ன்னு கணக்கில்ல. அதேப்போல எதிர்வலம் வருவதும் தப்பு.  நவக்கிரகங்களின் திருவுருவங்கள் ஒரே மேலையில் ஒருங்கே இருக்குறதால தனித்தனியா சுத்தி வர முடியாது. அதனால ஒட்டுமொத்தமா மூணு முறை சுத்தினாலே போதும். நவக்கிரகத்தை பிரதட்சணம் வந்ததற்கான பலன் கிடைக்கும். அதனால, இன்னின்ன தெய்வத்துக்கு இத்தனை முறை பிரதட்சணம் வரனும்ன்னு சொல்றதுலாம் அந்தந்த தெய்வங்களின் பெருமைப்படுத்த உண்டாக்குனதே தவிர வேற ஒன்னுமில்ல. ஆனா, நேர்த்திகடனுக்காக கூடுதல் எண்ணிக்கையில்  பிரதட்சணம் வர்றது இதுல சேராது. மூணு முறை பிரதட்சணம் வந்தாலே போதும்ன்றது நவக்கிரகத்துக்கு மட்டுமில்ல எல்லா இறைவனுக்கும் பொருந்தும். 
ஓ இத்தனை விசயம் இருக்கா?! இனி இதுப்போலவே நவக்கிரகத்தை சுத்தி வரேன் மாமா.  கால்ல வெடிப்பு அதிகமா இருக்கு. பார்க்க அசிங்கமா இருக்கு. கூடவே வலிக்கவும் செய்யுது. இதுக்கு  மாமா என்ன செய்யலாம்?! 

.வாரம் ஒருநாள் சூடு பொறுக்குமளவுக்கு சுடுதண்ணிய பாத்திரத்துல ஊத்தி, அந்த  தண்ணில கொஞ்சம் டெட்டால், எலுமிச்சை சாறு, ஷாம்பு போட்டு கலக்கி ஒரு பத்து நிமிசம் ஊற வெச்சு ப்யூமிக்ஸ் கல்லு இல்லன்னா ஸ்கிரப்பர் போட்டு நல்லா தேய்ச்சு ஈரம் போக துடைச்சு வாசலின் இல்லன்னா பாதத்துக்குன்னு விக்குற க்ரீம் பூசி ஒரு மணிநேரம் ஊற விடலாம்.தினமும் படுக்கும்போது காலை கழுவி சுத்தமாக்கிட்டு கடுகு இல்லன்னா தேங்காய் எண்ணெய் பூசி காலைல எழுந்து கழுவி வரலாம்.  கால்ல வெடிப்பு வராம இருக்கனும்ன்னா பாதம் சுத்தமா இருக்கனும். மிதியடிகளை அடிக்கடி துவைக்கனும். வீட்டு தரையையும் சுத்தமா வெச்சுக்கனும். அடிக்கடி மருதாணியோடு மஞ்சளை சேர்த்து அரைச்சு பாதத்துல பூசி வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும். தினமும் பீச்சுக்கு போறவங்க அலைல கொஞ்ச நேரம் நின்னாலும் இந்த பிரச்சனை தீறும். இது எதுமே செய்யமுடியாதவங்க பாத்ரூம்ல சொரசொரப்பான கல்லை போட்டு வச்சு தினமும் குளிக்கும்போது அதுல தேய்ச்சு வந்தாலும் பித்த வெடிப்பு சரியாகும்.

டிப்ஸ்லாம் கொடுத்ததுக்கு நன்றி மாமா. அப்புறம் இன்னொரு பிரச்சன்பைக்கும்  அட்வைஸ் சொல்லேன். 

என்ன உன் பிரச்சனை?!

ஒன்னுமில்ல. எதிர்வீட்டு குட்டிப்பையன் கௌதம் நம்ம வீட்டுக்கு வருவான். அவன் அம்மாக்கும் எனக்கும் சின்ன மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்க். அதனால, அவனை இப்பலாம் வீட்டுக்கு அனுப்புறதில்ல. நமக்கு உரிமையான பொருள் இல்லன்னு புத்திக்கு தெரிஞ்சாலும் மனசுக்கு தெரிய மாட்டேங்குது. அவனுக்காக ஏங்குது. என்ன செய்யலாம்ன்னு சொல்லுங்களேன்.

இதுக்கு என்ன அட்வைஸ் சொல்ல. இது அட்வைஸ் சொல்லி தீரும் பிரச்சனை இல்ல. மனசு சம்பந்தப்பட்டது. அதுக்கு நிறைய சொல்லனும். ஆனா சிம்பிளா சொல்லனும்ன்னா யாருக்கும் உங்கள் உண்மையான அன்பை அவ்வளவு எளிதில் கொடுத்து விடாதீர்கள். அன்பை அவர்கள் ஏளனமாக பார்த்துவிடுவார்கள். ன்றதை ஃபாலோ செஞ்சாலே பாதி பிரச்சனை குறையும். சரி நீ சோகமா இருக்கே அதனால இந்த மீம்சை பாரு. ரிலாக்சாகும் மனசு.

இன்னிக்கு முழுக்க நீங்களே பேசிக்கிட்டிருந்தீங்க.  நான் கோவிலுக்கு போகனும் அதனால் ஒரு விடுகதைய சொல்றேன்.   நிலத்தில் நிற்காத செடி. நிமிர்ந்து நிற்காத செடி ..... அது என்ன செடி?!  யோசிச்சு வைங்க. கோவிலுக்கு போய் வந்து விடையை கேட்டுக்குறேன். கூடவே பிளாக்குல கொண்டைக்கடலை சாறு ரசம் எப்பிடி செய்யுறதுன்னும் பதிவை ரெடி பண்ணுறேன். பை பை...


13 கருத்துகள்:

 1. //யாருக்கும் உங்கள் உண்மையான அன்பை எளிதில் கொடுத்து விடாதீர்கள் அவர்கள் ஏளனமாக பார்த்து விடுவார்கள்//

  மனம் கனத்து விட்டது நிதர்சனமான உண்மை நான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது எல்லாருக்குமே பொருந்தும்ண்ணே.

   நீக்கு

 2. ///அவனுக்காக ஏங்குது. என்ன செய்யலாம்ன்னு சொல்லுங்களேன்.///

  அப்ப இன்னொரு குழந்தை பெற்ற் கொள்ளுங்க அதன் பின் ஏக்கம் குறைஞ்சுடும்......வேணும் என்றால் நம்ம வீட்டு மாப்பிள்ளையிடம் இது பற்றி பேசுறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இன்னொரு பிள்ளை பெத்துக்கிட்டா அண்ணனான உனக்குதான் செலவாகும். சீமந்தம், அஞ்சுசோறு, பிரசவம், அப்புறம் பாப்பாக்கு நகை, ட்ரெஸ், காதுகுத்து......ன்னு பட்டியல் நீளும். வருசத்துக்கு ஒரு லட்சமாகும். பர்ர்ர்ர்ர்வாயில்லையா?!

   நீக்கு
  2. என்ன ராஜி பிள்ளைக்கு மாமா கிட்ட இம்புட்டு லிஸ்ட் சொல்லிப்பூட்டு வருஷத்துக்கு 1 லட்சமதான் ஆகும்னு..சொல்றீங்க...அம்புட்டுதானா...

   கீதா

   நீக்கு
 3. அவியல் அருமை.........கொஞ்சம் மனசுக்கும் சங்கடம் தான்,அதீத அன்பை நமக்குச் சொந்தமில்லாத பொருளில் வைப்பது .......ஹூம்.......எல்லாத்துக்கும் மனசு தான் காரணம்.தீர்வு சொல்லத் தெரியல.........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அறிவுக்கு தெரிஞ்சது மனசுக்கு தெரியாதுண்ணே

   நீக்கு
 4. எதிர்வலம் நானும் கேள்விப்பட்டதில்லை. உண்மையான அன்பைக் கொடுத்து விடக்கூடாது என்று தடுத்து நிறுத்திக் கொள்ள முடியுமா? கஷ்டம்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்க ஊர் பக்கம் இப்படி வலம் வருவாங்க சகோ. நவக்கிரகத்தை மூணு முறை எப்பயும்போல சுத்திட்டு இன்னொரு முறை வலம் வந்தால் சனி பகாவான் பிடிக்காதாம்.

   நீக்கு
 5. #மூணு முறை பிரதட்சணம் வந்தாலே போதும்#
  அதுக்கும் மேலே சுற்ற நினைத்தால் ஒண்ணு ரெண்டுன்னு எண்ணத் தோன்றுமே தவிர தெய்வத்தை எண்ணத் தோன்றாது :)

  பதிலளிநீக்கு
 6. Moondru muRai valam vandhaalE pOdhumaa appa 9 muRai sutthaRadhu thappaa thEvai illaiyaa?

  பதிலளிநீக்கு
 7. ராஜி என் சிற்றறிவுக்கு எட்டியது...அவர்கள் குட்டிப் பையனை அனுப்பலைநா அவங்களுக்க் தெரிஞ்சது அவ்ளவுதான்...உங்க அன்பைப் பூரி து கொள்ள முடியல...ஆனா உண்மையான அன்பு எனவது எந்த கண்டிஷனும் அற்ற ஒன்று..எதிர்பார்ப்புகள் அற்ற ஒன்று..அதைத் தடுக்கவும் முடியாது...

  கீதா

  பதிலளிநீக்கு