Saturday, April 29, 2017

காமெடி சேனல் நிகழ்ச்சிகளில் நடக்கும் கூத்து - கேபிள் கலாட்டா

அது ஒரு பெயிண்ட் விளம்பரம்.  பெயிண்ட் அடிச்சா வீடு அழகா இருக்கும், மழை வெயிலுக்கு பல வருசம் தாங்கும்ன்னு சொல்றதுதானே வழக்கம். இந்த பெயிண்ட் விளம்பரத்துல கெட்ட காத்தை சுத்தம் செஞ்சு நல்ல காத்தாக்குமாம். ஒரு   பெயிண்ட் எப்பிடிடா காத்தை சுத்தம் பண்ணும்?! உங்க அக்கப்போருக்கு அளவேயில்லையா?!



காதலிக்கும்போது வாடா, போடான்னு பேசுறது சகஜம். கல்யாணத்துக்கு பிறகு காதலிச்சவனையே கைப்பிடிச்சாலும் வாடா போடான்னு பேச மாட்டாங்க. ஆசைக்கு தனிமைல இருக்கும்போது வேணும்ன்னா டா போட்டு பேசுவாங்க.   சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சி தன் புருசனான சரவணனை டா போட்டுதான் பேசுது. அதும் சரவணன் அப்பா, அம்மா, தாத்தான்னு மொத்த குடும்பத்து முன்னாடியும் கூப்பிடுது. மீனாட்சியை கண்டாலே பிடிக்காத, எல்லாத்துக்கும் குறை சொல்ற அவ மாமனாரும் இதுக்கு மறுப்பு சொல்றதில்ல.  அதேப்போலதான் தெய்வ மகள் சீரியல்லயும் மாமனார் மாமியார் முன்னாடியே வூட்டுக்காரரை பேர் சொல்லி கூப்பிடுறது...



காமெடி சேனல்களில், காமெடி நிகழ்ச்சிகளில் வரும் தொகுப்பாளர்களுக்கு எது காமெடின்னு கொஞ்சம் கிளாஸ் எடுத்து அனுப்புங்கப்பா. எதிர்த்து பேசுறதும், ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்குறதும், சத்தமா பேசுறதும்தான் காமெடின்னு யாரோ இவங்க ஆழ்மனசுல பதிய வெச்சுட்டாங்க போல.  எரிச்சலா இருக்கு.  அதும் விஜய் டிவில ஜாக்குலின், பிரியங்கா சிரிக்குற சிரிப்பிருக்கே. யப்ப்ப்ப்ப்பா முடில.



நியூஸ் 7ல  திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4 மணிக்கு ‘என்ன படிக்கலாம்.. எங்கு படிக்கலாம்’ன்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. இது 10, ப்ளஸ் டூ பரிட்சை எழுதியிருக்கும் மாணவர்களுக்கு பேருதவியா இருக்கும். மத்திய மாநில அரசு கல்லூரிகள்,  பட்ட மற்றும் பட்டய படிப்புகள் பற்றிய சந்தேகங்கள் இந்த நிகழ்ச்சியின் தெரிந்துக்கொள்ளலாம். இது மட்டுமில்லாம கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு, நுழைவுத்தேர்வுக்குண்டான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி எங்கு நடக்குது மாதிரியான பயனுள்ள தகவல்களை இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம். நேயர்களின் கேள்விகளுக்கு தொலைக்காட்சி வாயிலாக பதில் சொல்றாங்க. இந்நிகழ்ச்சியை மறுநாள் காலைல மறு ஒளிபரப்பும் செய்றாங்க.



டிஸ்கவரி, அனிமல் பிளேனட், நேஷனல் ஜியாகரபி மாதிரியான உலக அளவில் பிரபலமான சேனல் ‘டிராவல் எக்ஸ்பி’ ஆங்கிலத்தில் ஒளிப்பரப்பாகி வந்த இந்த சேனல் இப்ப தமிழ்லயும் ஒளிப்பரப்பாகுது. ’கிரேஸி புட்ஸ்’ன்ற தலைப்புல இந்திய சமையலை ஒளிப்பரப்புறாங்க. இந்தியாவின்  ஊர் சார்ந்த உணவுகளையும் ஊர் பெருமைகளையும் சொல்றாங்க.

கிரிக்கெட் சீசன்ங்குறதால ரிமோட் வீட்டு ஆண்கள் வசம். அதனால, டிவி நிகழ்ச்சிகளை அதிகமா பார்க்க முடில..

திங்கள் ஐஞ்சுவை அவியலில் சந்திப்போம்...
நன்றியுடன்...
ராஜி.


17 comments:

  1. உங்களுக்குத்தான் டி.வி. பார்ப்பது பிடிக்காதே...
    அப்படினு கேள்வி கேட்கமாட்டேன்..

    ReplyDelete
    Replies
    1. புரிஞ்சா சரிங்கண்ணே

      Delete
  2. கொஞ்ச நாளைக்கு டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை என்று பெண்கள் முடிவு செய்தால் மட்டுமே தமிழில் நல்ல நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் வருவார்கள். அதுவரை அழுகையான அபத்தமான சீரியல்கள் தான் வரும்.

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
    Replies
    1. சீரியல் இல்லன்னா டிவில வியாபாரம் படுத்துக்குமே

      Delete

  3. என்ன மாமா கையில் இருந்து டிவி ரிமோட்டை பிடிங்கி வைத்து அவரிடம் திருப்பி கொடுக்காமல் சகட்டு மேனிக்கு டிவியை தொடர்ந்து பார்த்துவிட்டு பதிவு எழுதி இருப்பிங்க போல இருக்கே

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும். அவங்க வீட்டுக்குள் வந்தா டிவி ரிமோட் அவங்கக்கிட்ட போயிடனும். நியூஸ், கிரிக்கெட் பார்க்க....

      Delete
  4. சுவாரஸ்யமான டிப்ஸ். ஆனால் நான் தொலைகாட்சி பார்ப்பதில்லை!

    தம +1

    ReplyDelete
    Replies
    1. நானும்தான் பார்க்குறதில்ல

      Delete
    2. நம்பினாதான்ப்பா சோறு

      Delete
  5. டிவி பார்க்க முடிவதில்லை...உங்கள் மூளும் நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நல்லதுங்க கீதா.

      Delete
  6. வணக்கம்.

    உங்கள் பதிவைக் கண்டபின் கொஞ்சம் தொலைக்காட்சிப் பக்கம் போகவேண்டும் எனத் தோன்றுகிறது. :)

    தம

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நல்ல நிகழ்ச்சிகளை பாருங்க தப்பில்ல

      Delete
  7. எப்பவும் டிவி ஒரு பக்கம் ஒரு கண் ,fb&வலைப்பக்கம் ஒரு கண் ....மாமாவுக்கு யார் சோறு ஆக்கிப் போடுறாங்க:)

    ReplyDelete
    Replies
    1. அவர் ஆக்கிப்போட்டு சாப்பிட்டு எனக்கும் சோறு போட்டுடுவாரு

      Delete
  8. நமக்கும்.டி.வி.க்கும் ரொம்ப தூரம்...

    ReplyDelete