வந்த என்ற சொல்லுக்கு நூறு என்ற பொருள். வாசி ன்னா வசிப்பது, வசிப்பவர். நூற்றவர் வாழுமுர் என்ற பொருள்படும்படி உண்டானதே வந்தவாசி.
ஆறு பூங்காக்கள் என பொருள்படும்படி உருது மொழியில் CHE BAGH என நவாப் காலத்தில் அழைக்கப்பட்டதே இன்றைய சேப்பாக்கம்.
சித்திரை திருவிழாவில் அழகரை குதிரை வாகனத்தில் தூக்கிவைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) ஓரிடத்தில் அலங்காரம் செய்வார்கள். அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால், அலங்காரநல்லூராக இருந்து, பின்பு அலங்காநல்லூராக மாறிப்போனது.
பல்லவர்கள் பண்டைய காலத்தில் போர் நடத்த பயன்படுத்திய பகுதியே இன்றைய போரூர்
கோவன்களால் உருவாக்கப்பட்ட புதிய ஊரான கோவன்புத்தூர் என அழைக்கப்பட்டு மருவி கோயம்புத்தூர் என்றாகி விட்டதாம்.
கல்லாதவர்கள் யாரும் இல்லாதவர்கள் என்பதை குறிக்கும் வகையில் கல்லல் என்று அந்த ஊருக்கு பெயர் வந்ததாம்.
திரு+சிராய்+பள்ளி=திருச்சிராப்பள்ளி. சிராய்ன்னா பாறை, பள்ளின்னா ஊர். பாறையில் இறைவன் இருக்கும் ஊர்ன்னு பொருள்படும்படி திருச்சிராப்பள்ளின்னு உண்டாச்சுன்னும், சிரான்ற சமணத்துறவி திருச்சி மலைக்குகையில் தங்கி இருந்ததால் திருச்சிராப்பள்ளி என்றழைக்கப்பட்டு இப்ப திருச்சி ன்னு அழைக்கப்படுது.
பார்வதிதேவி சிவனின் சாபத்திற்குள்ளாகி, பெண் மயில் உருக்கொண்டு, இந்த இடத்தில் வந்து, சிவபெருமானை வணங்கி வந்ததால். இந்த ஊருக்கு மயிலாடுதுறைன்னு வந்தது. முன்னலாம் 'மாயூரம்' என்ற சமஸ்கிருத பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்நகரம் இன்று 'மயில் ஆடும் நகரம்'ன்னு பொருள் தரும் 'மயிலாடுதுறை' என மாற்றப்பட்டுள்ளது.
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் தொடரும்....
நன்றியுடன்,
ராஜி
புதுமையான தகவல்கள் அருமை சகோ தொடரட்டும்...
ReplyDeleteஅவசரத்துல ரெடி செஞ்ச பதிவு.. அடுத்த பதிவு இன்னும் சுவாரசியமாய் வரும்ண்ணே
Deleteஅலங்காநல்லூரில் சமையல் பதிவர் நண்பர் சுரேஷ் இருக்கிறாரே...
ReplyDeleteகடற்பயணங்களில் எழுதி இருப்பார். அவர் பெயர் சுரேஷ்குமார். பெங்களூர்காரர். அலங்காநல்லூருக்கான படம் தேடும்போது கிடைத்தது. அவர்தான் பிளாக்கை மறந்துட்டார். ஆனா பிளாக் அவரை மறக்கலண்ணே
Deleteசிறப்பான தகவல்கள்.....ஒவ்வொரு ஊருக்கும் காரணமின்றிப் பெயர் சூட்டுவது/வழங்குவது கிடையாது....என்ன,சில ஊர்ப் பெயர்களுக்கு இன்றைய நாகரீக உலகில் அர்த்தம் சொல்ல,பழமையான மனிதர்கள் இல்லை.....அன்றைய கால மனிதர்கள் வரலாற்றைப் பொறித்து வைக்க மறந்து விட்டது தான் சோகம்.... நன்றி பதிவுக்கு.........///கருத்தோடு கருத்தாக......மயிலாடுதுறை.....அந்தப் பெரிய மனிதரின் ஊரும் அது தானே.....ஹ!ஹ!!ஹா!!!
ReplyDeleteஅந்த பெரிய மனிதர் யாருண்ணே?!
Deleteநல்ல தகவல்கள் சகோதரி/ராஜி
ReplyDeleteஇருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteநல்ல தொகுப்பு; நல்ல சுவாரசியமான இடுகை!
ReplyDeleteசில ஊர் பேர்கள் ஏன் இப்படி வைக்கப் படுகிறது என்று தெரியுமா?
உதாரணமா...எருமை நாயக்கன் பட்டி! ஆட்டையாம் பட்டி....இப்படி
பதிவாக்கிடலாம் சகோ
Deleteஅருமை சகோதரி... தொடருங்கள்...
ReplyDeleteநன்றிண்ணே
Delete