ஏனுங்க மாமா! ரொம்ப வெக்கையா இருக்கு. வேர்த்து ஊத்துது... ஏசி வாங்கி மாட்டுங்களேன்... இப்பதான் 20000 லயே கிடைக்குதாமே ஒன்னரை டன் வெயிட்ல!!
உனக்கு இருபதாயிரம்ங்குறது அம்புட்டு ஈசியாகிட்டுதா?! சரி பைசா மேட்டரை விடு. ஒரு டன்னு வெயிட்ன்னு சொன்னியே அது என்னன்னு தெரியுமா?!
தெரியுமே! ஏசி பொட்டியோட வெயிட்தானே?!
ம்க்கும். அதான் இல்ல. ஒன்றரை டன், ரெண்டு டன்னு சொல்றதுலாம் ஏசி மெசினோட வெயிட் இல்ல. 1 டன் ஏசின்னா 1 டன் ஐஸ் கட்டிய 24 மணி நேரத்துல உருக்க எவ்ளோ வெப்பம் தேவையோ அந்த வெப்பத்தோட அளவு. இதுல எதாவது வித்தியாசம் இருந்தால் டன் டீவியேசன் வரும் அதாவது இப்ப வெளி வெப்பநிலை 40டிகிரி இருந்தா 1 டன் ஏசி தோராயமா 0.7 டன் கூலிங் குடுக்கும். வேலூர் சேலம் பக்கம்லாம் 120 to 130. அதேமாதிரி ஏசியோடு இன்வெர்ட்டர் வாங்குங்க பவர் சேவிங் அப்படினு சொல்லுவாங்க பவர் சேவிங்னு பாத்தா நார்மல் ஏசி 1 டன் = 1.1 kwh (1.1 unit / hr) இன்வெர்ட்டர், 1 டன் = .9 ~ 0.8 kwh (0.9 unit / hr) அவ்வள்வ்தான் வித்தியாசம்
பெரிய அளவில் ஏசி வாங்கினாதான் சேவிங். நார்மல் ஏசி ~ ஸ்டெபலைசர் வாங்கினா போதும். இன்வெர்ட்டர் தேவையில்ல. கொஞ்சம் சீப்பா போகனும்ன்னா நார்மல் போகலாம் தப்பில்ல. அதேமாதிரி. ஸ்டார் ரேட்டிங் எங்க கிட்ட இருக்குனு சில விளம்பரங்களில் சொல்வாங்க. இப்ப வர்ற ஏசிக்கு 4ஸ்டார் ரேட்டிங் கண்டிப்பா இருக்கனும் அரசு உத்தரவு போட்டிருக்கு. அதனால் இந்த கம்பெனில மட்டும்தான் ஸ்டார் ரேட்டிங் குடுக்குறாங்கனு நினைக்க வேண்டாம். இதேதான் ஃப்ரிட்ஜ்க்கும். அதேமாதிரி, கடைக்கு போகும்போதே ப்ராண்ட் பிக்ஸ் பண்ணிட்டு போக வேணாம் .காரணம் 90% பிராண்ட் ஏசி இன்டோர் எல்லாம் ஒரே கம்பெனி தயாரிப்புதான். லேபிள் & எஸ்த்தடிக் லுக் மட்டும் வேற வேற அவ்ளோதான்.. அவுட்டோர்.. இதான் முக்கியமான பார்ட். எந்த ப்ராண்ட் வாங்கினாலும் ரோட்டரி / ஸ்க்ரால் கம்பரஸர் இருக்குற மிஷினா பார்த்து வாங்கினா போதும்.
உலகத்துல 5 ப்ராண்ட் கம்பரஸர்தான் ஏசிக்கு பரவலா பயன்படுத்துறாங்க . எந்த ப்ராண்ட் ஏசி வாங்கினாலும் இந்த 5 ப்ராண்ட்ல ஒரு கம்பரஸர்தான் இருக்கும். பெரிய அளவு ஏசி போகும்போது ப்ராண்ட் பாக்கலாம். வீடுகளுக்குன்னு வாங்கும்போது பிராண்ட் பார்க்கதேவையில்ல. ஏசி வாங்கும்போது கவனிக்க வேண்டியது...
1. மேல குடுத்த ஏரியா கணக்கு ..
2.வீட்டுக்கு பொருந்துமளவுக்கு சரியான அளவு தேர்ந்தெடுக்குறது.. 3. ங்குற டீலர் சர்விஸ் நல்லா பண்றாங்களா? (வாங்குன முதல் ஒரு வருசம் 4 சர்வீஸ் குடுப்பாங்க ப்ரீயா)
4. ஸ்பேர்ஸ் லோக்கலா கிடைக்குதா?
5. பட்ஜெட்
1. மேல குடுத்த ஏரியா கணக்கு ..
2.வீட்டுக்கு பொருந்துமளவுக்கு சரியான அளவு தேர்ந்தெடுக்குறது.. 3. ங்குற டீலர் சர்விஸ் நல்லா பண்றாங்களா? (வாங்குன முதல் ஒரு வருசம் 4 சர்வீஸ் குடுப்பாங்க ப்ரீயா)
4. ஸ்பேர்ஸ் லோக்கலா கிடைக்குதா?
5. பட்ஜெட்
6. கேஸ். இதுமட்டும் பார்த்து வாங்கினால் போதும்.
கடைக்கு போனோமா நல்ல பிராண்ட் ஏசி வாங்கினோமா.. வீட்டில் மாட்டி ஹாயா இருந்தோமான்னு இல்லாம ச்சே எத்தனை பார்க்க வேண்டி இருக்கு, எனக்கு ஏசியே வேணாம் மாமா. நம்மாளுங்ல மரங்களை வெட்டாம இருந்திருந்தா ஹாயா வேப்பமர காத்துல தூங்கி இருக்கலாம்.
காத்துல எத்தனை வகை இருக்குன்னு தெரியுமா?!
ம்ம்ம் காத்து, உலர்காற்று, வெப்பக்காற்று, குளிர்காற்று, தென்றல், புயல், சூறாவளி.. எனக்கு தெரிஞ்சு இவ்வளவ்தான்.
நீ சொன்னது சரிதான். காத்து எந்த திசையிலிருந்து வீசுதுன்னு வச்சு அதுக்கு பேர் வச்சிருக்காங்க நம் முன்னோர்கள். வடக்கிலிருந்து வீசும் காத்துக்கு வாடைன்னும், தெற்கிலிருந்து வீசும் காத்துக்கு சோழகம்ன்னும், கிழக்கிலிருந்து வீசும் காத்துக்கு கொண்டல்ன்னும், மேற்கிலிருந்து வீசும் காத்துக்கு காத்தான்ன்னும் பேரு. காத்துக்கு வளின்னு இன்னொரு பேரும் இருக்கு.இதுல, வாடைன்ற பேரை மட்டும் கேள்விப்பட்டிருக்கேன் மாமா.
சினிமா பாட்டுல வரும். அதானே! நீ மாறவே மாட்டே. பூமிப்பந்தை எந்தளவுக்கு நாறடிக்கனுமோ அந்தளவுக்கு மேல நாறடிச்சுட்டு இப்ப வெக்கை, வெப்பம்ன்னு பேசினா எப்படி?! இப்பலாம் மரம் நடுமளவுக்கு வீடுகளில் இடமில்லைதான், ஆனா, மொட்டை மாடில, ஜன்னலோரத்தில்ன்னு சின்ன சின்ன தொட்டிகளில் செடி வளர்க்கவும், போற போக்கில் ரோட்டோரத்திலிருக்கும் மரத்துக்கு ஒரு சொம்பு தண்ணி ஊத்தவும் நமக்கு மனசில்லையே!
இப்ப, வெயில், தண்ணி, மின்சாரம்ன்னு எல்லாத்தையும் வீணடிச்சுட்டு இப்பவே அவதிப்படுறோம். இதேப்போல உணவையும் வீணாக்கும்போக்கு இப்ப அதிகமாகிட்டிருக்கு. முன்னலாம் சாதம் மீந்துட்டா தண்ணி ஊத்தி வச்சிருந்து பழையசாதமா சாப்பிட்டோம். அதேமாதிரி அந்த மிச்சம் மீதி சாதத்தில் புளி, இல்லன்னா எலுமிச்சை சாறுடன் உப்பு சேர்த்து கலந்து வச்சு காலையில் தாளிச்சு புளிசாதம் இல்லன்னா எலுமிச்சை சாதமா சாப்பிடுவோம். ரொம்ப அதிகமா சாதம் மீந்துட்டா வத்தல் விடுவோம். குழம்பு, ரசம் பொரியல் மீந்துட்டா எல்லாத்தையும் கலந்து சுடவச்சு மறுநாள் சுண்டக்குழம்பா சாப்பிடுவோம். இப்பலாம் ஹைஜீனிக்ன்னும், கேஸ் பிராப்ளம்ன்னு சப்பைக்கட்டு கட்டி, சாப்பாட்டை குப்பையில் கொட்டுறோம். இப்பவே பட்டினிச்சாவு விழ ஆரம்பிச்சுட்டுது. ஒரு பருக்கை சாதம் வெறும் சாதமல்ல! அதில் எத்தனை பேர் உழைப்பு இருக்கு தெரியுமா?! அதை தெரிஞ்சுக்க இந்த விடியோவை பாரு, இனி உணவை வீணாக்க மாட்டே!
நான் எப்ப சாப்பாட்டை வீணாக்கி இருக்கேன்?! நீங்க சொல்லும் அத்தனையும் இப்பயும் நான் செஞ்சுக்கிட்டுதான் இருக்கேன். நேத்து நீட் எக்சாம் எழுத எர்ணாக்குளம் போன கஸ்தூரி மகாலிங்கம்ன்ற பையனோட அப்பா கிருஷ்ணமூர்த்தி அலைச்சல் காரணமா மாரடைப்புல இறந்துட்டார். அந்த பையன் முகமும், அப்பா எங்கேன்னு அவன் கேட்ட கேள்வியும் எல்லார் மனசுலயும் சோகத்தை உண்டாக்கிடுச்சு. அதேமாதிரி, எக்சாம் கஷ்டமா இருந்துச்சுப்பான்னு பரிட்சை எழுதிட்டு வந்து சொன்ன இன்னொரு பொண்ணோட அப்பா இப்ப ஆஸ்பத்திரில இருக்கார், அப்பா எங்கேன்னு கஸ்தூரி மகாலிங்கத்தின் கேள்விக்கு விதம் விதமா இணையவாசிகள் பதில் சொல்லிட்டிருந்ததுல இந்த பதில் நெகிழ வச்சது..
இந்தமாதிரிலாம் உன் அப்பாக்கு கஷ்டத்தை கொடுக்கக்கூடாதுன்னுதான் நீ பெயிலாகிட்டே! அப்படிதானே?!’
அப்படி இல்ல மாமா! உன்கிட்டலாம் மாட்டிக்கிட்டு லோல்படனும்ல்ல! அதான்..
நன்றியுடன்,
ராஜி
அழகான குளிர்/ஏ.சி. பதிவு......ஃப்ராண்ட்லாம் வேற,பொருள் ஒண்ணே தான்........கரெக்டா சொன்னீங்க..//// நீட் தேர்வு...அலைச்சல்...மன உளைச்சல்...இறப்பு.....என்னத்தச் சொல்ல....... நன்றி தங்கச்சி,பதிவுக்கு....
ReplyDeleteஇப்படி கருத்து சொல்லிட்டு புலம்பிட்டு போக வேண்டியதுதான்ண்ணே
Delete
ReplyDelete//அப்பா எங்கேன்னு அவன் கேட்ட கேள்வியும் எல்லார் மனசுலயும் சோகத்தை உண்டாக்கிடுச்சு////
தப்பு தப்பு எல்லார் மனத்திலேயும் இல்லை சில மனித நேயம் உள்ளவர்கள் மனத்தில்தான் இரக்கம் சோகம் எல்லாம் வந்துச்சு..... ஆனால் ஒரு குரூப் சாவு யாருக்குதான் வரலை அது போலத்தான் இதுவும் என்று சொல்லி சில ஜென்மங்கள் திரியுதுங்க
யாருக்குதான் சாவு வரல/// இதை கேட்டவங்களைலாம் நான் மனுசனாவே மதிக்கலயே சகோ. பத்தோடு பதினொண்ணா கடந்து போனவங்களைக்கூட மனுசங்களா ஏத்துக்கலாம். அதைவிட்டு எள்ளி நகையாடுனவங்களாம் என்ன ஜென்மங்களோ!!!
Deleteஅப்பா எங்கே...? நெஞ்சம் பதறுகிறது...
ReplyDeleteஅதும் போலீஸ் ஜீப்பில் உக்காந்து பார்க்கும் மருண்ட அந்த விழிகள்.... கொடுமை
Deleteபதிவு ஏஸிக்கா ?அல்லது நீட் தேர்வுக்கா.அக்கா?
ReplyDeleteஅக்காவா?! சரி இருந்துட்டு போறேன்.
Deleteஇந்த பதிவு ரெண்டுத்துக்கும்...
ஏசி குறித்தான விரிவான விளக்கத்துக்கு நன்றி சகோதரி. ஆமா.. இருபதாயிரத்துக்கான வழியையும் எப்போது தெரிவிப்பீர்கள்?
ReplyDeleteஎனக்கு தெரிஞ்சதுலாம் அப்பா இல்ல மாமாக்கிட்ட ஆட்டைய போடுறதுதான்.
Deletenice
ReplyDeleteநன்றி சகோ
Deleteஏசி பற்றிய சில உபயோகமான குறிப்புகள் பாராட்டுகள்
ReplyDeleteசீசன் பதிவுப்பா
Deleteஏசி பற்றிய பயனுள்ள குறிப்பு. அப்பா எங்கே...பலர் பலவிதமாக தம் ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். இதற்காக நாம் வேதனைப்படவேண்டியுள்ளது.
ReplyDeleteஅந்த பையனின் பார்வை எந்த கல்மனதையும் அசைச்சு பார்க்குமேப்பா!
Deleteஏ.சி. வாங்குவோருக்கு தேவையான தகவல் விளக்கம். சிறப்பு. நீட் தேர்வு: ஒரு தகப்பனின் மரணம் மகனின் ஆராத துயரம். நெஞ்சை நெகிழச் செய்துள்ளது.
ReplyDeleteநீட் தேர்வினால் இதுவரை இரண்டு தகப்பனாரும் ஒரு மாணவியும் இறந்திருக்காங்க. நீட் தேர்வு குஜராத்தில் எழுத இடம் ஒதுக்கியதால் துணைக்கு வர ஆள் இல்லாததால் எழுத போகாம புத்தி பேதலிச்சு இருக்காம். தோழி ஒருத்தங்க முகநூல் பதிவில் தெரிய வந்தது சகோ
DeleteThank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ReplyDeleteVertical Water Bath | Two Set Point Temperature Controller | humidity chamber