எனக்கு எம்ப்ராய்டரி செய்ய ரொம்ப பிடிக்கும். அதுல கமல்கடாய் தையல்ன்னா பிடிக்கும். கமலுக்கும், கடாய்க்கும் இந்த தையலுக்கும் என்ன சம்பந்தம்ன்னு தலைப்பிச்சுக்கிட்டிருந்த வேளையில் கீதாக்கா இதுக்கு அர்த்தம் சொன்னாங்க. கமல் கடாய் ஹிந்தி பெயர்...ஆந்திர மாநிலத்தின் தையல் இது. கமல் என்றால் தாமரை. கடாய் என்றால் சட்டி ன்னு சொன்னாலும் ஃப்ளவர் வாஸ் ன்னும் சொல்லலாமோ!! ஃப்ளவர் வாஸ் ஷேப்பின் மேல் அடுக்கடுக்காக தாமரை போன்ற இதழ்கள் விரிந்து இருக்கும் பூ வேலைப்பாடு மாதிரி இருக்குறதால இந்தப் பெயர் வந்திருக்கலாம்ன்னு சொன்னாங்க. என் பசங்களுக்கு இந்த வேலைப்பாட்டுல சுடிதார் தைச்சு கொடுத்தேன். ஆனா, எனக்கு இந்த வேலைப்பாடுல சேலை ஒன்னு வேணும்ன்னு ரொம்ப நாள் ஆசை. அதான் ஆரம்பிச்சு முடிச்சாச்சு.
சங்கிலி தையலும், கமல் தையலும் சேர்ந்த வேலைப்பாடு ... கிட்டத்தட்ட ஒரு மாசமாச்சு முடிக்க....
இந்த தையலுக்கு கோன் த்ரெட்ன்னு சொல்லுற இந்த நூல்தான் சரிப்பட்டு வரும். எல்லா நிறத்திலும் ஒரே கண்டுல நிறைய நிறங்கள் சேர்ந்தும் வருது.
இதான் தையல் பழக தேவையான கோடுகள்...
துணிக்கு அடியிலிருந்து ’ஒ’ புள்ளி வழியா நூலை மேல எடுக்கனும்...
அடுத்து ’ ஏ’ வழியா ஊசியை துணிக்குள் விட்டு, ’பி’ வழியா ஊசியை எடுக்கனும்.
’பி’ லிருந்து மறுபடியும் ’ஓ’ வழியா ஊசி நூலை துணிக்கடியில் எடுக்கனும்....
’ஓ’ புள்ளியிலேயே கொஞ்சம் தள்ளி மீண்டும் ’ஓ’விலேயே நூலை வெளில எடுத்து ’சி’ புள்ளியில் ஊசியை நுழைச்சு டி வழியா ஊசி நூலை எடுக்கனும்...
’டி’ புள்ளியிலிருந்து மறுபடியும் ’ஓ’ புள்ளியில் ஊசியை நுழைச்சு, கொஞ்சம் தள்ளி ’ஓ’ புள்ளியிலேயே ஊசிய துணிக்கு மேல எடுக்கனும். அப்படி எடுத்து ’ஈ’ புள்ளியிலிருது ’எஃப்’ புள்ளிக்கு போய் மீண்டும் ’ஓ’ புள்ளியில் ஊசியை நுழைச்சா மேல இருக்குற மாதிரி நூல் அமையும். இந்த நூல் நல்லா டைட்டா இருக்குற மாதிரி பார்த்துக்கனும்...
நான் சொன்ன மாதிரி செஞ்சா துணிக்கு பின்னாடி இப்படி வரும். எம்ப்ராய்டரி டிசைன் எப்படி அழகா இருக்குமோ அதே மாதிரி துணிக்கு பின்பக்கமும் நீட்டா முண்டும் முடிச்சுமா இல்லாம சுத்தமா அழகா இருக்கும்... இருக்கனும்.
ஊசியை துணிக்கடியிலிருந்து மேல எடுத்து ’ஈ’ புள்ளி மேல ஊசி, ’சி’ புள்ளி நூலுக்கு கீழ நூலு, ஏ புள்ளிக்கு கீழ நூலுன்னு மாத்தி மாத்தி ஆறு நூலிலும் நூலை கோர்த்துக்கிட்டே போகனும். பாய் பின்னுற மாதிரி...ஆறு நூல் முடிஞ்சதும் அடுத்து நாலு நூல்லயும் இதேமாதிரி மாத்தி மாத்தி நூலை கோர்த்துக்கிட்டே வரனும்...
நாலு நூல் முடிஞ்சதும் ரெண்டு நூல் வழியா மாத்தி மாத்தி கோர்த்துக்கிட்டு வரனும்...
முடிந்த நிலையில் இப்படிதான் இருக்கும் கமல் கடாய் தையல்...
பல நிறத்தாலான கோன் த்ரெட்ல கமல் கடாய் எம்ப்ராய்டரி....
சேலையின் முந்தி, பார்டர்லாம் ஒரே படத்தில்...
முழுக்க முழுக்க சங்கிலி தையலால் சின்ன மகளுக்கு செஞ்சு தந்த பாவாடை தாவணி..
முழுக்க முழுக்க சங்கிலி தையலால் சின்ன மகளுக்கு செஞ்சு தந்த பாவாடை தாவணி..
அதுக்கு மேட்சிங்கான காதணி..
முழுக்க முழுக்க காம்பு தையலால் உருவான பெரிய மகளுக்கான பாவாடை தாவணி..
அவளுக்கு ஒரு காதணி.. இப்படியாக பொழுது போகின்றது
நன்றியுடன்,
ராஜி.
எப்படியோ குழம்பு செலவுக்கு ஆகிப்போச்சு.
ReplyDeleteஒரு பைசா தேறலை
Deleteஉங்கள் கைவண்ணம் வாழ்க...
ReplyDeleteஅட்டகாசம்...
நன்றிண்ணே
Deletewow nice supper
ReplyDeleteநன்றி சகோ
Deleteகனவுகள் தொலையவில்லை வாழ்கிறது ..வாழ்த்துக்கள் சகோதரி !!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ
Deleteஎல்லாமே அழகா இருக்கு ராஜி க்கா...
ReplyDeleteபாப்பா உடைகளும்...உங்க புடவையும் ஆஹா..சூப்பர்
நானும் கமல் காதி தையலில் ஒரு சல்வார் டிசைன் பண்ணி இருக்கேன்..
வாழ்த்துக்கள் அக்கா...அருமையான படைப்பிற்கு...
நீங்க செஞ்ச சல்வாரை பதிவா போடுங்க அனு
Deleteஅருமை
ReplyDeleteநன்றி சகோ
Deleteவீட்டோடு இருக்கும் பெண்களுக்கு இம்மாதிரிப் பதிவுகள் ரொம்பவே பயன்படும்.
ReplyDeleteஇன்னும் எழுதலாம் ராஜி.
எழுதுறேன்ப்பா. செய்யனும்ன்னு நினைச்சிருக்கும் கிராஃப்ட் நிறைய இருக்கு, ஆனா சோம்பேறித்தனமா இருக்கு.
Deleteகைவண்ணம் அருமை
ReplyDeleteவாழ்த்துகள்
வாழ்த்துகளுக்கு நன்றிண்ணே
Deleteஅசத்தறீங்க ராஜி!!! நானும் கமல் கடாய் ஒரு சாரியில் போட்டு (எனக்கில்லை) அப்படியே இருக்கு!! ஹிஹிஹி...நீங்க இந்தத் தையலை ஒரு மாசத்துல முடிச்சுட்டீங்க்ளே செம !! பாராட்டரேன்..ஓ முன்னாடி நீங்க போட்டிருந்தப்பா நான் சொன்னது இல்லியா...நன்றிபா !!
ReplyDeleteஎல்லா வொர்க்குமே அழகா இருக்கு...நான் ரிப்பன் எம்ப்ராய்டறி கூட சுரிதார்ல செஞ்சுருக்கேன். அது போல ஸ்மாக்கிங்க் கூட செஞ்சுருக்கேன் கையாலேயே..ஒரு ஃப்ராக்ல...இப்பல்லாம் செய்யறதே இல்லை...
உங்களுக்கு ஹேட்ஸ் ஆஃப்....ப்ளாக் எழுதறீங்க, சமைக்கறீங்க...வீட்டு வேலை.ஃபேஸ்புக்...நடுல எம்ப்ராய்டரி...சூப்பர் பா...அத்தனைக்கும் நேரம் ஒதுக்கி செய்யறீங்க..நான் வியக்கிறேன். எனக்கு ப்ளாக் மட்டும் ஹேண்டில் பண்ணவே கஷ்டமா இருக்கு..
பாராட்டுகள் வாழ்த்துகள் ராஜி
கீதா
எல்லாருமே காலையில் கிளம்பிடுவாங்க. பத்து மணிக்குலாம் வேலை ஆகிடும். கொஞ்ச நேரம் தூக்கம், அப்புறம் லாப்டாப், போன் தான். சீரியல் பார்க்கும் பழக்கம் இல்லாதது பல வேலைகளுக்கு உதவுது.
Deleteமல்டி கலர் கமல் கடாய் நல்லாருக்கு கோல்டன்ஆரஞ்ச் ப்ளூ காம்பினேஷனும் நல்லா இருக்கு ராஜி...ஜெவெல்லரி மேக்கிங்கும் சூப்பர்...
ReplyDeleteகீதா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதாக்கா. இன்னிக்கு வளையல் செய்யலாம்ன்னு இருக்கேன்
Deleteromba superra irukku pa
ReplyDeleteநன்றி மேனகாக்கா
Delete