Thursday, June 28, 2018

டிஸ்போசபிள் டம்ப்ளரை இப்படியும் மாத்தலாமா?! - கைவண்ணம்

எங்க வீட்டில் பிளாஸ்டிக் கப், டம்ப்ளர்களை வாங்காம  பேப்பர்ல செஞ்ச கப், டம்ப்ளர்தான் பயன்படுத்துறது.  பக்கத்து வீட்டில் புதுசா குடிவந்தவங்க,  பிளாஸ்டிக்  டிஸ்போசபிள் டம்பளர்ல  ஸ்வீட் போட்டு கொடுத்தாங்க. ஸ்வீட்டை  எடுத்துக்கிட்டு, டம்ப்ளரை என்ன செய்யலாம்ன்னு யோசிக்கும்போது, சமையலறை மேடைல கத்தி, ஸ்பூன்லாம் போட்டு வைக்க  ஒரு ஆர்கனைசரை இந்த கப்ல செஞ்சதை யூட்யூப்ல பார்த்த நினைவு. உடனே நானும் செஞ்சாச்சு. 


தேவையான பொருட்கள்...
பிளாஸ்டிக் டிஸ்போசபிள்  டம்ப்ளர்
வுல்லன் நூல்  மூணு கலர்
காட்போர்ட் அட்டை
ஃபேப்ரிக் க்ளூ
கத்திரிக்கோல்
மணிகள்

மூணு கலர் நூலுல ரெண்டு கலர் நூலை எடுத்துக்கிட்டு ஒவ்வொரு கலர்லயும் ரெண்டு இழைகளை கொண்டு  முடி போட்டுக்கிட்டு..
 தலைமுடிய பின்னுறது மாதிரி பின்னிகனும்....
முழுசா பின்னிக்கிட்ட வுல்லன் நூல்......
டிஸ்போசபிள் டம்ப்ளர்ல பின்னி வச்ச நூலை  க்ளூ போட்டு ஒட்டிக்கனும். 
பசை காய்ஞ்சு நூலு, டம்ப்ளர்ல நல்லா ஒட்டிக்கிட்டதும், டம்ப்ளர் முழுக்க பின்னி வச்ச நூலை சுத்திக்கிட்டு வரனும். 
 ரொம்ப டைட்டா நூலை சுத்திக்கிட்டு வந்தால் டம்ப்ளர் உருவம் மாறிடும். நூல் சுத்தி நல்லா காய விடுங்க. 
 நூல் சுத்திய டம்ப்ளர் விளிம்புல முத்து இல்லன்னா கற்களால் ஆன செயினை க்ளூ வச்சு ஒட்டி, காய விடுங்க. 
 காட்போர்ட்ல வட்ட வடிவமா கட் பண்ணிக்கிட்டு நல்லா க்ளூ தடவி...

 நூல் சுத்திய டம்ப்ளரை ஒட்டிக்கனும்... டம்ப்ளரை நல்லா காய விடனும்..
ஒவ்வொரு கலர் நூலிலும் இரண்டு இழை எடுத்துக்கிட்டு தலைமுடி பின்னுற மாதிரி  பின்னிக்கனும்.
 கார்ட்போர்ட்ல டம்ப்ளர் இருக்கும் இடம் போக மிச்ச இடத்துல இந்த பின்னி வச்ச நூலை கம் கொண்டு ஒட்டிக்கனும். 
 கடைசில முத்து, இல்லன்னா கற்களை ஒட்டிக்கனும்...

 அழகான பிளவர் வாஷ் இல்லன்னா ஸ்பூன், கத்தி, சீப்பு, பேனா பென்சில் ஆர்கனைசர் ரெடி. 
எங்க வீட்டு ஃப்ரிட்ஜ் மேல ஸ்பூன், கத்திலாம் சுமந்துக்கிட்டு ஜோரா உக்காந்திருக்கு. 

நன்றியுடன்,
ராஜி

8 comments:

  1. அழகா இருக்கு கா..

    ReplyDelete
  2. அடடே... என்ன ஒரு கலைநயம்.. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. யூட்யூப்ல பார்த்து செஞ்சேன் சகோ

      Delete
  3. அழகஃ இருக்கே.... பாராட்டுகள்.

    ReplyDelete