Tuesday, June 19, 2018

தேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்


நாஞ்சில் நாட்டில் குடியானவங்க வீட்டில்கூட வேளைக்கு ஒண்ணுன்னு ஒரு நாளைக்கு மூணு தேங்காய் சமையலில் பயன்படுத்துவாங்கன்னு சொல்வாங்க. ஆனா, வறட்சி மாவட்டமான எங்க ஊர்லலாம் மூணு நாளுக்கு ஒரு தேங்காய் பயன்படுத்தினாலே அதிகம். காரணம் தேங்காயோட விலை உச்சத்துல இருக்கு. அதனால, எங்க ஊர்பக்கம் தேங்காயை அதிகம் சமையலில் சேர்த்துக்கிட்டா நல்லதில்ல. கொழுப்பு சேரும்ன்னு சொல்லி பயமுறுத்தி வச்சிருக்காங்க. ஆனா, எல்லா உணவுப்பொருட்களையும்போலதான் தேங்காய்லயும் நல்லதும் கெட்டதும் இருக்கு.  அதனால,  அவங்கவங்க உடல்நிலை, உடலுழைப்புக்கேற்ப தேங்காயை அளவோடு பயன்படுத்தலாம். 
மாங்கனீசு குறைபாட்டினால் நமக்கு  நீரிழிவு நோய் வரும்.  தேங்காய் பாலில் நிறைய அளவில் மாங்கனீசு இருக்கு. தேங்காய் பாலில் பாஸ்பரஸ் நிறைய இருக்கு. இது எலும்புகளை உறுதியாக்குவதற்கு உதவும்.  பாஸ்பரசோடு சேர்த்து கால்சியத்தை சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது உடலில் பாஸ்பேட் கலந்து எலும்பு உருக்குதலை தடுக்கும்.  இரும்பு சத்து குறைபாடு இருக்குறவங்க தேங்காய் பாலை சேர்த்துக்கலாம்.   ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்து விடும்.   தசை பிடிப்பு மற்றும் தசை வலினால் அவதிப்படும்போது  உணவோடு சேர்த்து  கொஞ்சம் தேங்காய் பாலை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் இதில் அதிக அளவு மக்னீசியம் இருப்பதால், தசை வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்கும்.  



 உடல் எடையை குறைக்க முயற்சிப்பபவர்கள், தேங்காய் பாலை சேர்த்துக்கலாம்.  தேங்காய் பால் சீக்கிரத்துலயே பசியை அடங்கச் செய்யும். அதற்கு காரணம் தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து தான்.   செலினியம்ன்றது ஒரு முக்கியமான ஆக்சிஜனேற்றத் தடுப்பான். இத்தகைய செலினியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது. ஆகவே கீல்வாதம் இருப்பவர்கள் இதனை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். குறைந்த அளவு செலினியம் இருப்பவர்களுக்கு முடக்கு வாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ரத்த கொதிப்பு இருக்குறவங்க,  பொட்டாசியம் கலந்த உணவை சாப்பிட்டா, இந்த பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். ஏனெனில் பொட்டாசியம் உடம்பில் உள்ள இரத்தக் கொதிப்பின் அளவை குறைக்க உதவும். இத்தகைய பொட்டாசியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது.  தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க உதவி புரியும். மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வளப்படுத்தும்.  உடம்பில் உள்ள புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது. இது புற்றுநோய் அணுக்களின் செயல்பாடுகளை குறைக்கும். 

தேங்காய் எண்ணெய் சரும பிரச்சனைக்கு சிறந்த நிவாரணி. தலைமுடிக்கும் நல்லதுன்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்ல.  தேங்காய் எண்ணெயில் சமைக்கும்போது கொலஸ்ட்ரால் அளவு மட்டுப்படுத்தப்படுது. இளநீர் குடிப்பதால் உடல் உஷ்ணம் குறையும். குடல் புழுக்களை அழிக்கும். இதன் உப்பு மற்றும் வழுவழுப்பு தன்மை காலரா நோயாளிகளுக்கு நல்லது, இதில் ஆற்றல் வாய்ந்த கரிம பொருட்கள் நிறைய இருப்பதால், ஆரம்பக்கட்ட நோயாளிகளுக்கு இளநீரை நரம்பு வழியாகக்கூட செலுத்தலாம். இளநீரிலிருக்கும் புரதம் தாய்ப்பாலில் இருக்கும் புரதத்துக்கு ஈடானது. 

இத்தனை நன்மை வாய்ந்த தேங்காயில் சாதம் செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள்..
உப்பு போட்டு வடித்து ஆற வைத்த சாதம்
தேங்காய் துருவல்
காய்ந்த மிளகாய்
ப.மிளகாய்
கடலை பருப்பு
உளுத்தம்பருப்பு
முந்திரிப்பருப்பு
கடுகு
உப்பு
பெருங்காயம்
இஞ்சி
கறிவேப்பிலை, கொத்தமல்லி
தேங்காய் எண்ணெய்

உப்பு போட்டு சாதத்தை உதிர் உதிரா வடிச்சு ஆற விட்டுக்கனும், தேங்காயை துருவிக்கனும்.   பமிளகாய கீறிக்கனும், காய்ந்த மிளகாயை கிள்ளி வச்சுக்கனும், இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி வச்சுக்கனும்.
 
வாணலி சூடானதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொறிக்க விடனும். தேங்காய் எண்ணெய் மத்த எண்ணெய் மாதிரி இல்லாம  நுரைச்சு பொங்கும். 
கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, முந்திரிப்பருப்பு போட்டு சிவக்க விடனும்...

காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி போட்டுக்கனும்,,,

தேங்காய் துருவலை சேர்த்து, தேவையான அளவு தூள் உப்பை சேர்த்து வதக்கிக்கனும்.  கடைசியா பெருங்காய் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடனும்.
தேங்காய் வதக்கல் ஆறியதும் சாதம் சேர்த்து கிளறிக்கனும். லேசா நல்ல எண்ணெய் சேர்த்துக்கிட்டா இன்னும் நல்லா ருசியா இருக்கும். 
தேங்காய் சாதம் ரெடி. தேங்காய் சாதம் ரொம்ப நேரம் தாங்காம சீக்கிரத்துலயே கெட்டு போயிடும். அதனால ,ரொம்ப தூரத்துக்கு பள்ளி, அலுவலகம் போறவங்களுக்கு கட்டிக்கொடுக்க முடியாது. கவுண்டமணி, செந்தில் காமெடி போல, தேங்காயை காட்டி தேங்காய்க்கு அப்புறம் என்னன்னு யாராவது கேட்டா தேங்காயே பழம்தான்னு சொல்லுங்க. 

நன்றியுடன்,
ராஜி.

22 comments:

  1. அருமையான பதிவு.....தென்னை நம் மரபில் ஊறிய ஒன்று..தேங்காயின் பயன்களை விபரித்த விதம் அருமை...தேங்காய் சாதம் செய்யும் முறையும் அருமை.///இப்போதெல்லாம் இள நீரின் மருத்துவக் குணங்கள் மேல் நாட்டவர்களுக்கும் தெரிந்திருக்கிறது.....ஆஃபிரிக்காவிலிருந்து இள நீர் டின்/பாட்டில்/அட்டைப் பாக்கெட் என்று அடைத்து வருகிறது.... நன்றி பதிவுக்கு........

    ReplyDelete
    Replies
    1. தென்னை மரத்தின் அனைத்து பகுதியுமே நமக்கு உபயோகப்படுதுண்ணே.

      Delete
  2. குடும்பத்துடன் எங்காவது பிக்னிக் போகும்போது தேங்காய் சாதம் எடுத்துப்போவது வழக்கம் முகநூலில் மும்முரமாய் இருப்பதால் பதிவில் வருகை குறைந்ததோ

    ReplyDelete
    Replies
    1. இல்லப்பா. முகநூலில் அதிகம் வருவதில்லை. என்னமோ ஒரு சலிப்பு. அதை போக்கி எழுதலாம்ன்னு நினைக்கும்போது கூகுள் அக்கவுண்டில் உள்நுழைவதில் சிக்கல். அது ஒரு வாரம். அதுக்கடுத்து, லாப்டாப் ரிப்பேர். இப்பதான் எல்லாம் கைகூடி வந்து பதிவு வர ஆரம்பிக்குது.

      Delete
  3. அருமை... எனக்கு மிகவும் பிடிக்கும்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  4. தே.காய் விலை கூடுதல்னு சொல்லிட்டு அடுப்படி முழுவதும் தே.காய் இரைஞ்சு கிடக்கிறதே...

    ரொம்ப நேரமாக தளம் கருத்துப்பெட்டி மட்டும் இல்லாமல் திறக்கிறது சகோ.

    ReplyDelete
    Replies
    1. தேங்காய் கொட்டி கிடக்குறது எங்க வீட்டில் இல்லண்ணே. நெட்ல சுட்டது இதுலாம்...

      Delete
  5. தேங்காய் சாதம் - தலைநகரில் எப்போதாவது செய்து சாப்பிடுவதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. இங்கயும் அதே கதைதான்ண்ணே. இங்க ஒரு தேங்காயின் விலை 20ரூபாயிலிருந்து ஆரம்பம்.

      Delete
  6. தேங்காயின் உபயோகம் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது ... இப்படி போனால் வருங்காலத்தில் நீங்கள் தங்கம் கூட வாங்கிடலாம் தேங்காய் வாங்க முடியாத சூழ்னிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம். தேங்காய் எண்ணெய் உடலுக்கு நல்லது இல்லை என்று மேலை நாடுகள் இந்தியா பொன்ற நாடுகளிடம் சொல்லி கண்ட கண்ட எண்ணெய்களுக்கு அவர்களை பழக்கப்படுத்திவிட்டு இப்போ தேங்காய் உபயோகம் உடலுக்கு நல்லது என்று சொல்லி எல்லோரும் இங்கே பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. இது எல்லாத்துக்குமே பொருந்தும்ண்ணே. இக்கரைக்கு அக்கரை பச்சை போல!

      Delete
  7. இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட ங்கள் வீட்டில் இதுதான். இதில் உளுந்து அப்பளத்தைப் பொரித்து உடைத்து சேர்த்து விடுவோம். அது கூடுதல் சுவையாக இருக்கும்.

    தேங்காய்ப்பால் எடுத்து செய்யும் தேங்காய் சாதம் சமீபத்து பதினைந்து வருடங்களில் கற்றுக் கொண்டது. அதையும் அவ்வப்போது செய்வோம்.

    ReplyDelete
    Replies
    1. தேங்காய்பால்ல செய்யும் சாதத்தை இதுவரை செஞ்சதில்லை. அதேப்போல அப்பளமும் இதுவரை சேர்த்ததில்லை.

      Delete
    2. https://engalblog.blogspot.com/2015/10/150912.html

      Delete
  8. அருமை
    எனக்கு மிகவும் பிடித்தமான உணவு

    ReplyDelete
    Replies
    1. என் மகனுக்கு ரொம்ப பிடித்தமான உணவு. தொட்டுக்க தேங்காய் சட்னி வைக்கனும் அவனுக்கு..

      Delete
  9. ருசித்தேன். புளி சாதத்திற்குப் பின் நான் அதிகம் ரசிப்பது இதுவே.

    ReplyDelete
    Replies
    1. இங்கயும்தான்ப்பா

      Delete
  10. நல்லா இருக்கு கா..

    நான் அதிகம் செய்ய மாட்டேன் கா...அது என்னமோ எனக்கு இந்த சாதத்தின் மேல் இஷ்டம் குறைவு...

    ReplyDelete
    Replies
    1. இங்க எல்லாருக்குமே பிடிக்கும். ஆனா, தேங்காய் விலை அதிமன்றதால அடிக்கடி செய்யமாட்டோம் அனு.

      Delete
  11. தேங்காய்ச்சாதம் நு சொல்லிட்டு தேங்காயே காணலை சாதத்துல ஹா ஹா ஹா ஹா....சும்மா....நல்லாருக்கு ராஜி...

    கீதா

    ReplyDelete