என் அம்மா சில நாட்களுக்கு முன் ராஜ் டிவியில் ”அகட விகடம்” நிகழ்ச்சியை பார்த்திருக்காங்க. நிகழ்ச்சியின் கடைசி சில நிமிடங்களை மட்டுமே அம்மா பார்த்திருக்காங்க.
ஒரு கிளார்க்(கிளார்க்கான்னும் சரியா தெரியலை. ஆனால், அரசாங்க ஊழியர்) ஒருத்தர் சில வருடங்களுக்கு முன் அலுவலகத்துக்கு செல்லும் வழியில் மனநலம் சரியில்லாத ஒரு பெண் மலத்தை தின்னும் காட்சியை கண்டு மனம் பதறி, அவளை தன்னோடு அழைத்து சென்று மனநல காப்பகத்தில் சேர்த்துவிட்டு வந்திருக்கிறார்.
வீட்டிற்கு வந்து யோசிக்கையில், இதுப்போல் மனநலம் பாதிக்கப்பட்டு.., ஏதோ காரணங்களுக்காக தெருவில் விடப்பட்ட பெண்களின் நிலையை யோசித்து பார்த்திருக்கிறார். அப்படிப்பட்ட பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகி, அதனால் சில பெண்கள் கர்ப்பிணியாய் அலையும் அவலங்கள்தானே அப்பெண்களுக்கு நேர்கிறது.
நாமே ஏன் அப்பெண்களுக்கு பாதுகாப்பாய் இருக்கக்கூடாது என்று எண்ணி, தன் அரசாங்க பணியிலிருந்து விலகி, மனநலம் பாதிக்கப்பட்டு வீதியில் விடப்பட்ட பெண்களுக்கான காப்பகத்தை தொடங்கியுள்ளார். சிறிய அளவில் தொடங்கப்பட்ட காப்பகம் இப்போது கிட்டத்தட்ட 300 பெண்களை அவர் பாதுகாத்து வருகிறாராம்.
இப்போது அப்பெண்கள் தங்க புதுசா கட்டிடம் கட்டி கொண்டிருக்கிறாராம். அதற்கு பொருளுதவி வேண்டி அகடவிகடத்தில் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
அவருக்கு பொருளுதவி செய்யனும்ன்னு அம்மா ரொம்ப ஆவலா இருக்காங்க. ஆனால், அவர் பெயரோ அவர் நடத்தும் காப்பகத்தின் பெயரோ, மற்ற எந்த விவரமும் எங்களுக்கு தெரியாது. எனவே, இதை படிக்கு மதுரை வாழ் பதிவர்களுக்கு தெரிந்தாலோ அல்லது தங்கள் நண்பர்களிடத்தில் விசாரித்தோ முகவரியை அளித்தால் பேருதவியாய் இருக்கும்.
உதவுவீர்களா நண்பர்களே?




