வெள்ளி, டிசம்பர் 30, 2011

பழமுதிர்சோலை-ஆறாம்படைவீடு

                                            
அழகிய சோலை நடுவே அமைந்த ஆலயம். வள்ளி தெய்வானையுடன் அண்ணல் அருள் வழங்கிக் கொண்டிருக்கும் ஆலயம். இங்கு மாமன் பெருமாள்  கீழேயும், மருமகன் மேலேயும் அமர்ந்து அருள் புரியும் அழகு திருத்தலம் இது..., அழகு மிளிர்ந்ததால் அழகர்மலை எனவும், பழங்கள் காய்க்கும் மரங்கள் நிறைந்ததால் பழமுதிர்சோலை எனவும் பெயர் கொண்டு விளங்குகிறதா என தெரியவில்லை.அறுபடைவீடுகளில் ஆறாவது படைவீடான ”பழமுதிர்சோலை” தளத்தை பற்றி இன்று பார்க்கலாம்.
 
தல விவரம்:


மூலவர்:தம்பதியருடன்முருகன்
தல விருட்சம்: நாவல்
தீர்த்தம்:நூபுர கங்கை
ஊர்:சோலைமலை (அழகர்கோயில்
 மாவட்டம்மதுரை. பாடியவர்கள்:
                   அருணகிர்நாதர்
                                            
                                    
தல வரலாறு:                              தமிழ்பாட்டி அவ்வையார் முருகனிடம் மிகவும் அன்பு கொண்டவர். முருகன் அவ்வைக்கு அருள் புரிந்து, இந்த உலகிற்கு பல நீதிகளை உணர்த்த நினைத்தார்.ஒரு முறை அவ்வை கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரது நிலையறிந்த முருகன் மாட்டுக்கார சிறுவனாக வேடமணிந்து, அவ்வை செல்லும் வழியிலிருந்த நாவல் மரக்கிளையில் அமர்ந்து கொண்டார். களைப்புடன் வந்த பாட்டி இந்த மரத்தின் கீழ் அமர்ந்து சற்று இளைப்பாறினார். இதனை மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுவன் பார்த்து, ""என்ன பாட்டி! மிகவும் களைப்புடன் இருக்கிறீர்களே? தங்களது களைப்பை போக்க நாவல் பழங்கள் வேண்டுமா?'' என்றான். சந்ததோஷப்பட்ட பாட்டி ""வேண்டும்''என்றார்.உடனே முருகன்,""பாட்டி! தங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?''என்றான்.
 
   இதனைக்கேட்டு திகைப்படைந்த பாட்டி ஏதும் புரியாமல்,""சுட்ட பழத்தையே கொடேன்''என்றார்.சிறுவன் கிளையை உலுக்கினான். நாவல் பழங்கள் உதிர்ந்தன. கீழே விழுந்ததால் மணல் அதில் ஒட்டிக்கொண்டது. அவ்வை அதை எடுத்து மணலை அகற்றுவதற்காக வாயால் ஊதினார். இதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சிறுவன்,""பாட்டி! பழம் மிகவும் சுடுகின்றதோ?, ஆறியவுடன் சாப்பிடுங்கள்''என்று கூறி சிரித்தான்.

          சிறுவனின் மதிநுட்பத்தை அறிந்த பாட்டி, மரத்தில் இருப்பவன் சாதாரண மானிடச் சிறுவனல்ல என்பதைப் புரிந்து கொண்டார். பின்னர் முருகன் தன் சுயவடிவில் அவருக்கு அருள்பாலித்து முக்தி தந்தார். முருகன் இந்த திருவிளையாடலால் உலகிற்கு ஒரு தத்துவத்தை உணர்த்தினார். அதாவது, "உயிர்களின் மீது "உலகப்பற்று' என்னும் மணல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதைப் போக்க வெறும் கல்வியறிவு மட்டும் போதாது. இறைவனை அறியும் மெய்யறிவும் தேவை. பற்றை அகற்றினால் இறைவனை உணரலாம்' என்பதே அது.

தல பெருமை: 
                            ஆரம்ப காலத்தில் இங்கு வேல் மட்டுமே இருந்தது. பிற்காலத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஞான தியான ஆதி வேலுடன் ஒரே பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சிலை அமைக்கப்பட்டது.முருகனுக்கு வலப்புறம் வித்தக விநாயகர் வீற்றிருக்கிறார். ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டும் தான் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
                                
   இங்குள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் நீராடி காவல் தெய்வமான ராக்காயி அம்மனை தரிசிக்கலாம். இத்தீர்த்தம் சுவையானது.எந்த மலையில் எங்கே உற்பத்தியாகி எவ்வழியே ஓடி வந்து இங்கு வழிகிறது என்பதை இன்றளவும் கண்டுபிடிக்க முடியா பேரசதியம்.
            சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம். மலையடிவாரத்தில் கள்ளழகர் திருக்கோயிலும், மலைமீது சோலைமலை முருகன் கோயிலும் அமைந்துள்ளன.
தல சிறப்பு:    
                    சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம்.

 தரிசிக்க வேண்டிய அருகில் உள்ள கோவில்கள்:
அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் - மதுரை

 அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்-மதுரை தெப்பக்குளம்
அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவில்- இரும்பாடி, சோழவந்தான்
அருள்மிகு காளமேகப்பெருமாள் கோவில்- திருமோகூர்
அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்- மதுரை
நன்றி: படங்களுக்கு கூகுளுக்கும்,  தகவலுக்கு தினமலர் ஆன்மீக மலருக்கும் .
முதலாம் படைவீட்டை பற்றி  அறிய...,
இரண்டாம் படைவீட்டை பற்றி  அறிய...,
மூன்றாம் படைவீட்டை பற்றி அறிய...,
நான்காம் படை வீடை பற்றி அறிய... 
ஐந்தாம் படைவீட்டை பற்றி அறிய...,
 

     
 17 கருத்துகள்:

 1. நல்ல பதிவு.
  மனங் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. ஔவையார் படம் சின்னபிள்ளையில் பார்த்ததை நினைவு படுத்திட்டியே தங்கச்சி அருமை...!!!

  பதிலளிநீக்கு
 3. மதுரைக்காரனாகிய நான் எத்தனையோ முறை பார்த்து ரசித்த ஸ்தலம். விரிவான தகவல்களுட்ன் எழுதி மீண்டும் ஒருமுறை அங்க போன ஃபீலிங்கை உண்டாக்கிட்டியேம்மா தங்கையே... பிரமாதம்! வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. நேற்றுதான் அங்கு குடும்பத்துடன் போய் வந்தேன்
  ஆறு படை வீடுகளில் சோலைவனம் சூழந்த படைவீடு
  பழ்முதிர்சோலைதான்
  படங்களுடன் பதிவு மிக மிக அருமை
  அறு படை வீடுகள் குறித்தும் மிக அருமையான பதிவுகளை
  விருந்தாகக் கொடுத்து மகிழ்வித்தமைக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள் த.ம 5

  பதிலளிநீக்கு
 5. அழகில் ஆதவன்
  தீந்தமிழின் காவலன்
  தம்பதி சமேதராய்
  குடிகொண்ட சோலை
  மயில் விளையாடும்
  பழமுதிர்ச் சோலையின்
  பெருமை பாடும் அழகிய பதிவு சகோதரி.

  பதிலளிநீக்கு
 6. ஆறாம் படையை அழகாக எடுத்துக் காட்டிவிட்டீர்கள்..

  பதிலளிநீக்கு
 7. வெள்ளிக்கிழமையும் அதுவுமா மறந்திருந்த முருகனை நினைக்க வைக்கிறீங்க ராஜி.ஒளயார் படமும் ஞாபகத்துக்கு வருது !

  பதிலளிநீக்கு
 8. அருமையான பதிவு., அழகான படங்கள்..!

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

  பதிலளிநீக்கு
 9. இந்த பதிவுக்கு நா கருத்து சொல்லாம இருக்றதுதான் அக்கா உசிதம்.. உங்களோட தொடர் பதிவு இன்னைக்குதான் படிச்சேன்...அங்க நம்ம கருத்த எழுதியிருக்கேன்..

  பதிலளிநீக்கு
 10. அப்படியே இந்த கொடுமைய வந்து வாசிச்சுட்டு போங்கக்கா..கேரளத்து மண்ணில் ஐந்து அப்பாவி தமிழர்கள்..

  பதிலளிநீக்கு
 11. உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. முருகனுக்கு அரோகரா..!! இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.!! :)

  பதிலளிநீக்கு