
பதிவுலக நண்பர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
*******************************************************************
எல்லார் வீட்டுலயும் "பல்ப்"ங்க இருக்கும். ஆனால், அதெல்லாம் கடையில போய் வாங்குனதா இருக்கும் நான் மட்டும் எங்க வீட்டுலையே, வயசு வித்தியாசம் பார்க்காம.., கலர் கலரா, விதம் விதமா எங்க வீட்டுலையே ""பல்ப்" வாங்குவேன்...,

அம்மாவிடம் வாங்கிய "பல்ப்"...,
ஒரு நாள்..,
அப்பா: ஏய் ராஜி இங்க வா உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா உனக்கு? இடையில் புகுந்த அம்மா: அதுவா , மொத்த மூளையும் உங்களுக்கு வச்சுட்டதால அவங்களுக்கு ஸ்டாக் இல்லாம போச்சு.
நான்:??!!
************************************
மூத்த மகளிடம் வாங்கிய "பல்ப்"...,
சரியாக கணக்கைப் போட்ட மகளிடம் அவளைப் பாராட்டும்விதமாக...,
நான்: அதெப்பெடிமா உன்னால மட்டும் அல்ஜீப்ரா போடமுடியுது. நான் படிக்கும்போது எனக்கு சுட்டு போட்டாலும் அல்ஜீப்ரா போட வராது. உனக்கு மட்டும் மூளை எப்படி வந்துச்சு?
என் மூத்த மகள்; அதுவா எனக்கு வேணுமிங்கறதால உங்களுக்கு கடவுள் மூளை வக்கலை.
நான்: ??!!
********************************
இளைய மகளிடம் வாங்கிய "பல்ப்"...,
நான் அவளுக்கு படம் வரைந்து தர அவள் நன்றியுணர்ச்சியுடன்..,
அவள்: நீங்க எனக்கு படம் வரைஞ்சு தந்ததுக்கு பதிலா உங்களுக்கு நான் எதாவது செய்யனுமே
நான்: எனக்கு வயசானப் பின் சோறு போடு போதும்.
அவள்: சோறு மட்டும் போதுமா? சாம்பார் அக்காகிட்டயும், பொறியல் தம்பிக்கிட்டயும் வாங்கிக்கிறியா? நான்:??!!!
*******************************************
மகனிடம் வாங்கிய "பல்ப்"...,
இந்த வருடம் சபரிமலைக்கு போவதற்கு என்னிடம் அடம்பிடித்து மாலைப்
போட்டு சென்று வந்தான். அவனிடம்...,
நான்: இவ்வளவு அடம் பிடிச்சு மாலை போட்டு மலைக்கு அவசியம் போய் வரனுமா செல்லம். அவ்வளவு பக்தியா கடவுள்மேல?
அவன்:
இல்லியே
நான்:
எல்லாரும் உடல் ஆரோக்கியட்துடன் இருக்கனுமினு வேண்டிக்கிட்டு போனியா?
அவன்:
ம்ஹும்நான்: நல்ல படிக்கனும்னு போனியா?
அவன்:
நான்:
சனியனே சொல்லித்தொலையேன் .
ஏண்டா மலைக்குப் போனே?
அவன்:
ம்ம்ம்ம் அதுவா நான் மாலைப் போட்டுக்கிட்டு..,
மலைக்குப் போய் வந்து..,
மாலைக் கழட்டும் வரை என்னை அடிக்க மாட்டே,
என் காலில் விழுவீங்க இல்ல அதுக்குதான்
நான்: ??!!
*************************************
பெட்டர் ஹாப்பிடம் வாங்கிய "
பல்ப்"....,
நான் வங்கிக்கு சென்ற போது, அக்கவுண்ட் நம்பர் மறந்து போச்சு. உடனே பெ,ஹா க்கு போன் செஞ்சு
நான் :
உன் அக்கவுன்ட் நம்பர் கொஞ்சம் சொல்லு.
நம்பரைஅப்படியே சொல்லாத.
யாராவது கேட்ட்டுட்டு misue
பண்ணாப் போறாங்க...,
சின்ன சின்ன குறிப்பா சொல்லு.
பெ.
ஹா:
சரி.
நம்ம வீட்டு போன் நம்பர்நான்: 698701
பெ.
ஹா:
நம்ம வீட்டு நம்பர்:
நான்: 468 "
'"
"
"
"
" நம்பர்லாம் சொல்லிட்டு கடைசியில மீண்டும் சொல்றேன் சரியா இருக்கா பாரு.
நான்: சரி, 698701 .., னு சொல்ல
பெ.ஹா: நான் ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டியே
நான்:
ம்ஹூம்
பெ.
ஹா:
இதுக்கு நான் அப்படியே நம்பரை சொல்லி இருக்கலாம்.
வீணா குறிப்புலாம் குடுத்துட்டு இருந்தேன்.
லூஸ் லூஸ்
நான்: ??!!
**********************************************************************