Wednesday, September 26, 2018

புண்ணிய யாத்திரை -ஷீரடி

நிலாவுல சாய்பாபா முகம் தெரியுறதா வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர்ன்னு ரெண்டு நாளாய் ஒரே அல்லோகலப்படுது. ஷீரடி சாய்பாபா   இந்த பெயரை கேட்டதும் அவரது பக்தர்களுக்கு மெய் சிலிர்க்கும். ஏன்னா  இறைவன் ஒன்று. அவனே ஏகன் அனேகன்! அவனே பரம்பொருள், அந்த பரம்பொருளே, நபி குருமார்களால் அல்லாவாகவும், யூத குலத்தில் தோன்றிய ஜீசஸ் பரமபிதா எனவும், வள்ளலார் அந்த பரம்பொருளை ஜோதிவடிவானவன் என்றும், அவனே முத்தொழில் புரியும் ருத்திரன்,  நாராயணன்,  பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளுக்கு மேலானவனான ஆதிசிவன்  என உலகுக்கு கூறிய புண்ணியர் ஷீரடி சாய்பாபா. அவருடைய வாழ்க்கை வரலாறு இங்க அநேகருக்கு தெரியும். அதுபத்தி நிறைய பதிவுகளும் வந்துட்டுது. அதனால, நாம அதில் கவனம் செலுத்தாம ,முதன்முதலில் ஷிரிடி புண்ணிய யாத்திரை செல்பவர்களுக்கு இது ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்பதற்காக என்னுடைய பயண அனுபவங்களை இங்கே சொல்லப்போறேன் .
ஷீரடிக்கு போகலாம்ன்னு நாங்க முடிவு செஞ்சதும் எப்படி போகலாம்ன்னு முடிவு எடுக்க ஒரு கமிட்டி மாதிரி உக்காந்து பேசினோம். சிலர் ட்ரைன் நம்ம சாய்ஸ் என சொல்ல, ஒரு சிலர் பிளைட் என சொல்ல. எப்படி போனாலும் புனேவுக்கு போய்ட்டுதான் ஷீரடிக்கு போகமுடியும் ஏன்னா சென்னையிலிருந்து ஷீரடிக்கு வாரம் ஒருமுறை செல்லும் Shirdi Express (22601) புதன்கிழமை 10:10 காலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பி மறுநாள் வியாழக்கிழமை காலை 11:30 க்கு சென்னையிலிருந்து 1395 கிமீ தொலைவில் உள்ள ஷீரடியை சென்றடையும். புதன்கிழமை விட்டுட்டா அந்த ட்ரைனுக்காக அடுத்த புதன்கிழமைவரை காத்திருக்கனும். ஆனா,  தினசரி சென்னையிலிருந்து புனேவுக்கு நிறைய ட்ரெயின்கள் இருக்கு. அந்த பட்ஜெட் பார்க்கும் போது பிளைட்டில் செல்லலாம் என முடிவுவானது. பயண நேரமும் மிச்சமாகும் ஒருவழியா ஏர்இண்டிகோவில டிக்கெட் எடுத்தாச்சு. அனைவரும் பிளைட்க்காக வெயிட்டிங்.  பிளைட் வந்ததும் நாங்க எல்லோரும் ஏறி அவரவர் சீட்லஉட்கார்ந்தோம், மேக கூட்டங்களுக்கிடையில் பறந்து செல்வது ஒரு புது அனுபவத்தை கொடுத்தது. அப்படியே மேகக்கூட்டத்தை பார்த்து கனவு கண்டுக்கிட்டு இருக்கும் போதே, ஸ்பீக்கர்ல எல்லோரும் ரெடியாகுங்க புனே விமான நிலயம் வந்தாச்சு என இனிமையான குரல் ஒன்று எங்க கனவை கலைச்சு, பிளைட் விட்டு இறங்க  எங்களை ஆயத்தமாக்கியது. .
விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தால் அங்கு நிறைய டாக்சிகள் நம்மூர்ல இருக்கிறமாதிரி வந்து  எங்கே போகணும்ன்னு மொய்க்கிறாங்க. இந்தி தெரிந்திருந்தால் அவர்களிடம் பேசி விலையை குறைக்கலாம். அடிக்கடி ஷீரடிக்கு வரும் ஒருவர் எங்க குழுவில் வந்திருந்தார்.  புனேவிலிருந்து ஷீரடிக்கு சுமார் 190 கிமீ இருக்கும்ன்னு சொன்னார். ஆனா  அவங்க திரும்பி வருவதற்கும் சேர்த்தே கட்டணம் வசூலிக்கிறாங்க .இல்லன்னா OLA, UBER போன்ற கால்டாக்சி சென்டர்களும் இருக்கு.  அதிலும் புக் செய்துக்கலாம். நாங்க ஒரு டாக்ஸியை ஏற்பாடு செய்து ஷீரடியை நோக்கி பயணமானோம்.  நம்மூர் போலில்லாம புனேவுக்கும், ஷீரடிக்கும் இரண்டே இரண்டு டோல் கேட்கள் மட்டுமே இருக்கு. குடும்பத்தோடு செல்பவர்களுக்க் இரவு நேரப்பயணம் என்பது சில சாலைகளில் பாதுகாப்பு இல்லைன்னு எங்களை அழைத்து சென்ற டிரைவர் சொல்லிட்டு இருந்தார். நாங்கள் சென்றது பகல்வேளை என்பதால் அந்த பிரச்சனையை நாங்கள் சந்திக்கவில்லை. ஒருவேளை இரவுப்பயணம் நமக்கு ஆப்ஷனா இருந்தால் குறுக்குப்பாதைகளை தவிர்த்து, நேஷனல் ஹைவேயில் மட்டுமே செல்லவேண்டும். குறுக்கு பாதைகளில்  சுற்றுலாவுக்கு வர்றவங்கக்கிட்ட இருந்து வழிப்பறிலாம் செய்றாங்களாம். பகல் பயணம்ன்னா அதுபற்றி கவலைப்பட வேணாம்ன்னு அவர் சொல்லிட்டுவந்தார் .நமக்கு ஹிந்தி தெரியலைன்னாலும் அவர் சொல்லுவதைவைத்து நம்மால் புரிஞ்சுக்க முடியுது . 
ஷீரடி பயணத்தில் முதலில் வருவது ரஞ்சன்கோண் என்னும் இடம். அங்க புகழ்பெற்ற மஹாகணபதி கோவில் இருக்கு. இவர் அஷ்ட விநாயகர்களில் ஒருவர் கணபதி தரிசனத்துக்காக வரிசையில் நிக்கும்போது . இந்த கோவில் கிபி 9 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கலாம்ன்னு சொல்றாங்க. ஆனா, கோவிலின் முன்மண்டபத்தை பார்க்கும்போது  மஹாராஷ்டிரா பேஷ்வாக்களால் உருவாக்கப்பட்டதுன்னு ஒருசாராரும்,  இன்னும் ஒருசிலர் மஹாராஷ்ட்ரா பேஷ்வாக்கள் காலத்தில் பராமரிக்கப்பட்டு அழகான நுழைவாயிலாக கட்டப்பட்டதுன்னும் ஒருசாரார் சொல்லுறாங்க. எது எப்படி இருந்தாலும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கு நுழைவாயிலுக்கு  மேலே நாகராஜர் உருவங்கள் அழகாக பொறிக்கப்பட்டிருக்கு.  பிரதான நுழைவாயிலில் இரண்டு கருப்பு யானைகள் சிகப்பு அங்கி போட்டு கலைநயத்துடன் பார்பதற்கே கொள்ளை அழகு.  அதைத்தாண்டி உள்ள நுழைந்தால் நீண்ட வரிசையில் நம்மூர் கோவில்களில் மாதிரி மக்கள் வரிசை. அந்த வரிசையில் நின்னபடியே அங்கே எழுதப்பட்டிருந்த மஹாராஷ்டிரா பேஷ்வாக்கள் கதையினை உள்ளூர்க்காரர் சொல்ல கேட்டுக்கிட்டே வந்தோம். .
பேஷ்வான்னா தலைமை அமைச்சர்ன்னு அர்த்தம்.சத்ரபதி சிவாஜிதான் முதன்முதலில் தனது  தலைமை அமைச்சருக்கு "பேஷ்வா"ன்னு பட்டம் சூட்டினார். அதாவது இப்ப இருக்கிற பிரதம மந்திரி பதவிபோல இந்த பேஷ்வாக்கள் மராட்டிய இராணுவத்தைக் வழிநடத்தினாங்க.படைகளின் முழு செயல்பாட்டையும் இவங்கதான் கண்காணிப்பாங்க.போர் சமயத்தில் இவர்கள் மராட்டியப் படைக்களுக்கு தலைமை தாங்கி நடத்தினாங்க. முகலாயப் பேரரசின் பெரும் பகுதிகளை பேஷ்வாக்களின் காலத்தில் மராத்தியப் பேரரசு வெற்றி கொண்டது. பொதுவாக  பேஷ்வாக்கள்லாம்  மராத்தி மொழியை தாய்மொழிகளாக கொண்ட தேசஸ்த் பிராமணர்கள் ஆவர். இதை பற்றிய ஆராய்ச்சிக்குள் சென்றால் நமது பதிவு நீண்டுடும். அதனால் இதோடு நிறுத்தி பதிவுக்குள் போகலாம். 
பேஷ்வாக்கள் கதையோடு கோவிலின் கதையையும் சிறிது தெரிஞ்சுக்கலாம். நாமெல்லோருக்கும் ஆதிசக்தி திரிபுரம் எரித்த கதை தெரியும்.அப்பொழுது திரிபுரம் எரிக்க உதவியாக இருந்தது  இந்த அஷ்டவிநாயகர்கள். அதை சித்தரிக்கும் வண்ணம் இங்கே அஷ்ட விநாயகர்கள் கோவில்கள் இருக்கின்றன. முதல்கோவில்  மோர்கவோன் கணேசர் ஆலயம்.   புனே நகரிலிருந்து 80 கிமீ (50 மைல்கள்) தொலைவில் உள்ள மோர்கவோன் என்னும் இடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் போல் இங்கே, அஷ்டவிநாயக பாதயாத்திரை இவ்வாலயத்தில் இருந்து ஆரம்பித்து இவ்வாலயத்திலேயே நிறைவடைகின்றது. இரண்டாவது சித்திவிநாயகர் கோயில் மகாராட்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தின், கர்ஜட் தாலுகாவில், பீமா ஆற்றின் கரையிலுள்ள சித்தாடெக் கிராமத்தில் இருக்கு. கி பி பதினெட்டாம் நூற்றாண்டில் குவாலியர் ராணி அகல்யாபாய் என்பரால் இக்கோயில் சீரமைக்கப்பட்டது.
மூன்றாவது பல்லாலேஷ்வர் மகாராட்டிராவில் உள்ள ராய்கட் மாவட்டத்தின் கர்ஜட் நகரத்திலிருந்து 58 கி.மீ தொலைவிலுள்ள பலி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. நான்காவது வரதவிநாயகர் இந்த கோயில், மகாராஷ்ட்ரா, ராய்கட் மாவட்டத்தின் மகாத் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலை 1725 ஆம் ஆண்டில் மராத்திய பேஷ்வா படைத்தலைவர் சுபேதார் இராம்ஜி மகாதேவ பிவால்கர் என்பவர் புனரமைத்திருக்கார். ஐந்தாவது சிந்தாமணி விநாயகர் கோயில், இது மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில், பீமா ஆறும், மூலமூதா ஆறும் கலக்குமிடத்தின் அருகில் அமைந்திருக்கு. 
ஆறாவது லெண்யாத்திரி. இந்த கோவில் மகாராட்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள ஜூன்னார் நகரத்தின் அருகே சக்யத்திரி மலையடிவாரத்தில் அமைந்த 30 பௌத்த குடைவரைக் கோயில்கள் மற்றும் விநாயகர் கோயில் அமைந்த இடமாகும். அதில் குகை எண் 7ல் லெண்யாத்திரி விநாயகர் கோயில் அமைந்திருக்கு. இக்குடைவரைக் கோயில்கள் தெற்கு நோக்கி அமைந்திருக்கும். குகை எண் 6 மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களாகவும், மற்றவைகள் விகாரைகளாக (பிக்குகள் தங்குமிடங்கள்) அமைந்துள்ளது. ஏழாவது விக்னேஸ்வரர் கோயில்  எனப்படும் தடை நீக்கும் கணபதி கோயில். இந்திய மாநிலமான மகாராட்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள ஒசார் கிராமத்தில் அமைந்துள்ளது. எட்டாவது நம் பதிவில் நாம பார்த்துக்கிட்டிருக்கும் இந்த ரஞ்சன்கோண் கணபதி ஆலயம். இந்த அஷ்ட கணபதி ஆலயங்களை பற்றிய விரிவான பதிவுகளை நமது தொடர்பதிவுகளில்  தனித்தனியா பார்க்கலாம். 
உள்ளே பெரிய பெரிய உண்டியல்கள்  மற்றும் அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய வெள்ளியானைகள் இருபுறமும் நிற்கவைக்கப்பட்டிருக்கும்.   கொஞ்ச நேரமெடுத்து வரிசையில் நின்றாலும் மத்த கோவில்களை மாதிரி துரத்தாம  நாம நின்று நிதானமாக கும்பிட வழிவிடுறாங்க. அதேப்போல் வெங்கலத்திலான யானை சிலைகளும் பார்ப்பதற்கு கொள்ளை அழகு. இந்த விநாயகர் சிறிது மறுபட்டவராக உடல்முழுவதும் செந்தூரம் பூசிய வடிவில் காணப்படுகிறார். இங்க இருப்பது சுயம்பு விநாயகர்ன்னு சொல்லுறாங்க.ஒருவழியா தரிசனத்தை முடிச்சு வெளியே வந்தா ,எங்களை கூட்டி சென்ற டிரைவர் சொன்னார் ,நாம போற வழியில இங்கிருந்து சுமார் 110 கிமீ தொலைவில் , சாய்பாபாவால் வணங்கப்பட்டதாய் சொல்லப்படும் சனி சிங்கனாப்பூர், சனிமகராஜ் கோவில் இருக்கு. செல்லலாமான்னு  கேட்டார் சனிபகவான்னு சொன்னதும் பாதிப்பேர் ஜெர்க்காகி டூ ஸ்டெப் பேக் அடிக்க, சனியை போல கொடுப்பாருமில்லை. அவனைப்போல கெடுப்பாருமில்லைன்னு சொல்வாங்களே! சாமி நமக்கு கெட்டதா பண்ணும்ன்னு அவனை நம்பி உடனே ரெடி ஜுட்ன்னு சொன்னேன். என்னோடு வந்தவங்கலாம் என்னை  முறைக்க நான் அங்கிருந்து ஜுட்விட்டு வண்டிக்குள் செட்டிலாகிவிட்டேன். வழிநெடுக கரும்பு தோட்டங்களையும், விவசாய நிலங்களையும் பார்க்க கண்ணுக்கும் மனசுக்கும் சந்தோஷமா இருந்தது. விவசாய பூமிகள் செழித்து இருந்தன. மக்கள் எல்லோரும் இயற்கையோடு ஒன்றி வாழ்றாங்க. இதைப்பார்த்துக்கிட்டே வந்ததுல கோவில் வந்ததை கவனிக்கல. டிரைவர் வண்டியை நிறுத்திட்டு கோவில்வந்தாச்சு எல்லோரும் இறங்குங்கன்னு சொன்னார் .இங்குதான் வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள், யாத்திரிகர்கள் சுற்றுலாவாசிகள் முக்கியமாக கவனிக்கவேண்டிய கவனமான விஷயம் இருக்கு அது என்னன்னு   அடுத்தப்பதிவில் பார்க்கலாம் .
வட இந்திய பயணம் தொடரும் ..
நட்புடன்
ராஜி 

38 comments:

  1. நல்ல சுவாரஸ்யமாக செல்கிறது தொடர்...

    தொடர்ந்து வருகிறேன் சகோ மனிதப்பிறவியான சாய்பாபாவை ஓசியில் காண...

    ReplyDelete
    Replies
    1. சாய்பாபாவும் சக மனிதப்பிறவின்னு சொன்னா எவன் நம்புறான். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு....

      நானே ஓசிலதான் சுத்தி பார்க்க போறேன். நீங்களும் அப்படியே வாங்க! அவங்கலாம் பக்தில சுத்தட்டும். நாம பகுத்தறிவுக்கொண்டு கேள்வி கேட்டுக்கிட்டே சுத்துவோம்.

      Delete
    2. மனிதராக பிறந்தாலும் ,மதநல்லிணக்கமும் ,அன்பும் ,இறைத்தொண்டையும் மக்கள் சேவையையும் உலகிற்கு உணர்த்தியவர் .உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ ....

      Delete
    3. கேள்விகளை தாராளமாக கேளுங்கள் .ஏன் என்ற கேள்வி அதைக்கேட்காமல் வாழ்க்கை இல்லை. நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை...இதுதான் பகுத்தறிவு பெரியவர் சொன்னது ..

      Delete
    4. இவரைப் போன்றவர்கள் இதுவரை யாருக்காகவாவது துரும்பை எடுத்துப் போட்டு உழைத்ததுண்டா ?

      வாழ்நாள் முழுவதும் வாழைப்பழ சோம்பேறிகள்.

      இப்படித்தான் காஞ்சிபுரத்தையும் நம்பினார்கள்.

      பிரேமானந்தா, நித்தியானந்தாவையும் நம்பினோம் என்னவாயிற்று ?

      உலகில் இறைவன் உண்டு என்று நம்புபவர்கள் இப்படிப்பட்ட மனிதர்களை கடவுள் என்று சொல்வதற்காக நிச்சயம் தண்டிப்பான்.

      உலகிற்கே ஒரே கடவுள்தான் இருக்க முடியும்.

      Delete
    5. //இவரைப் போன்றவர்கள் இதுவரை யாருக்காகவாவது துரும்பை எடுத்துப் போட்டு உழைத்ததுண்டா // அவரது சுயசரிதத்தை படித்துப்பாருங்கள் சகோ ..

      இதே கேள்வியை நாம் எல்லோரும் ஏன் அரசியல் வியாதிகளை பார்த்து கேட்ட்க தயங்குகிறோம் .அப்படி கேட்டு இருந்தால் நாம் என்றோ வல்லரசாட்சியின் கீழ் இருந்திருப்போம் அல்லவா ...அவரை புண்ணிய ஆத்மா என்றுதான் சொல்கிறார்களே தவிர கடவுள் என்று சொல்லவில்லை ,ஜீவசமாதி என்று தான் சொல்கிறார்களே தவிர திருக்கோவில் என்று சொல்லவில்லை .இதே கதைதான் ,கடவுளை பற்றி சொல்லிய புண்ணிய ஆத்மா ஜீசஸ்க்கும் நடந்தது .அவர் இறைவனை நம்பி வழிநடங்கள் என்று சொன்னார் .கடைசியில் அவரையே கடவுளாக்கி விட்டார்கள் .பிரேமானந்தா ,நித்தியானந்தா எல்லோரும் கிரிமினல்கள் .அவர்களை ஏன் இந்த அட்டவணையில் சேர்க்கிறீர்கள் .ஜீசஸ் ,வள்ளலார் போன்றவர்கள் இருக்கும் இடத்தில ,நித்தியானந்தா ,பிரேமானந்தாவை வைத்து பேசுவார்களா ...காமராஜரையும் ,கக்கனையும் ,ஜீவாவையும் போய் ,இன்றைய அரசியல் வியாதிகளோடு ஒப்பிடமுடியுமா நாட்டுக்காக மட்டும் வாழ்ந்து சொந்தவாழ்க்கையை தொலைத்தவர்கள் முன்னவர்கள் .இப்ப இருக்கிறவர் சொந்த நாட்டை விற்று தன வாழ்க்கையை செழுமை ஆக்கிக்கொண்டவர்கள் . ...முதலில் ஓப்பீடுகளை பாருங்கள் ..தவறுகள் இருக்கும் பட்சத்தில் ,அதைப்பற்றி விவாதம் செய்வது நலம் ... அதைவிட்டு எது பகுத்தறிவு என்று தெரியாமல் விவாதம் வேண்டாம் .

      Delete
    6. புள்ளையார் பால்குடிப்பாரா என்று கேட்ட பகுத்தறிவிலிகள் .கடவுளுக்கு ஏன் பூஜை புனஷ்காரங்கள் என்று கேட்ட தகரமுத்து போன்றவர்கள் .கடைசியில் ஒரு சமாதிக்கு போய் பாலூற்றினேன் ,தயிர்வடை வைத்தேன் என்று சொல்கிறார்கள் .சமாதியானவர் என்ன அதையெல்லாம் சாப்பிடவா போகிறார் .இவர்கள் சொல்லுவதில் தெரியவில்லையா இவர்களது பகுத்தறிவு வேடம் .அதையெல்லாம் நீங்கள் சுட்டிக்காட்டி இருந்தால் இன்று பலரின் வேடம் கலந்திருக்கும் .கடவுள் இல்லை,அதற்கு ஏன் உருவ வழிபாடு என்கிறார் ஒரு வயதில் மட்டும் பெரியவர் ..கடைசியில் ,அந்த தள்ளாத வயதில் தன்வயதில் பாதிவயதுடைய பெண்ணை மணந்தவரின் ,சிலைகளை பொதுமக்கள் வழிபடும் வழியில் வைத்து இடைஞ்சல் செய்ததுதான் அவர்களது பகுத்தறிவு .இந்த பகுத்தறிவு போராளிகள் சொல்வது ஒன்று ,ஆனால் நடப்பது அதற்கு நேர் எதிர்மறை .அதையும் சுட்டிக்காட்டுங்கள் .அதைவிட்டு கேவலமான பிறவிகளான நித்தியானந்தா போன்றவரோடு ஷிரிடி மகானை ஒப்பிட்டு பேசாதீர்கள் .

      Delete
    7. இந்த பதிவில் எங்குமே இதன் ஆசிரியர் ஷிரிடி ஜீவ சமாதி பற்றி ஒருவார்த்தை கூட சொல்லவில்லை.அதற்கே இவ்வுளவு பொங்கல் ,தயிர்சாதம் .சாம்பார்சாதமா ..

      Delete
    8. இந்து சமயத்தில் செய், செய்யாதே என்ற கட்டுப்பாடுகள் என்றுமே கிடையாது. எதையும் செய்யலாம். ஆனால் எதைச் செய்கிறாயோ அதற்குரிய பலனையே நீ அடைவாய்! என்று அது எச்சரிக்கின்றது.அவரவர் வாயிலிருந்து விழும் வார்த்தைகளுக்கு அவரவர்களே பொறுப்பு .

      Delete
    9. பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன.எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன்.மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளையெல்லாம் தங்களுடன் வாழ்பவர்கள் மீதோ, அல்லது அது தவறினால் தெய்வத்தின் மீதோ சுமத்துகிறார்கள்.காற்று வீசியபடி இருக்கிறது. பாய்மரங்களை விரித்துக் காற்றை பயன்படுத்திக்கொண்டு கப்பல்கள் தங்கள் வழியே முன்னேறிச் செல்கின்றன. ஆனால் பாய்களை சுருட்டி வைத்துள்ள கப்பல்கள் காற்றை ஏற்றுப் பயன் பெறுவதில்லை. இது காற்றினுடைய குற்றமாகுமா?

      Delete
    10. கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள் .அதேசமயம் விவாதங்கள் ஆரோக்யமானவையே ஆனால் வினையாக மாறவேண்டாம்.என்பதே என்னுடைய வேண்டுகோள்

      Delete
    11. உணவருந்தி மலம் கழித்த மனிதன் கடவுளுக்கு இணையாகவே முடியாது.

      இறைவனுக்கு பசியும் இல்லை, உறக்கமும் இல்லை, மரணமும் இல்லை.

      நான் பெரியார் தொண்டன் என்று நினைத்து விடாதீர்கள் ப்ளீஸ்.

      தகரமுத்து மட்டுமா சந்தர்ப்பவாதி ? 99% அரசியல் வியாதிகளும் இப்படித்தான்.

      இந்த உலகிற்கு மின்சாரம் தந்து விட்டு போன தாமஸ் ஆல்வா எடிசனைக்கூட கடவுள் என்றால் தவறுதான்.

      இறைசக்கி உலகில் நிச்சயம் உண்டு.

      Delete
    12. கில்லர்ஜி... குரு/ஆசான் என்பவர் நமக்குக் கடவுளுக்கும் மேல் என்றுதான் இறைநூல்கள் போதிக்கின்றன (எனக்குத் தெரிந்த அளவில்). இறைவன், அவனைக் குற்றம் சொல்லும்போதும் பொறுத்துக்கொள்கிறான் ஆனால் அவனுடைய அடியார்களைக் குறை சொல்லும்போது மிகுந்த கோபம் அடைகிறான்.

      யார் குரு என்பதில்தான் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். குரு என்பவர் பகட்டானவர் அல்லர். எளியவர். தன்னை நம்பி வந்தவர்களுக்கு நல் வழி காட்டுபவர்.

      இந்தப் புரிதல் இருந்தால் போதும்.

      //துரும்பை எடுத்துப் போட்டு உழைத்ததுண்டா ?// - உழைப்பு என்பதில் அர்த்தபேதம் உண்டு. எது உழைப்பு? மற்றவர்களுக்கு சேவை செய்வதுதான். அதற்கான கூலி பெற்றுக்கொள்ளும்போது அது 'வேலை' என்றாகிறது. 'சேவை' என்ற வழியில் அது வராது.

      ஷீரடி மட்டுமல்ல பல பெரிய மகான்கள் நம் பாரத பூமியில் அவதரித்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்நாளில் பல்லாயிரம் பேரைக் கடைத்தேற்றி இருக்கிறார்கள். இல்லாவிட்டால் இத்தனை அடியார்கள் குழாம் அவர்களுக்கு இருக்குமா? சரியான குரு, நம்மால் ஏற்றுக்கொள்ளும் அளவு (நம்ம பாத்திரம் பெரிய ஓட்டைப் பாத்திரமா இருந்தால் அவர் என்ன செய்யமுடியும்? நம் தகுதிக்கேற்ப) நமக்கு நன்மைகள் வழங்குகிறார். இதில் எனக்குச் சிறிதளவும் சந்தேகம் இல்லை.

      Delete
    13. சரியான விளக்கம் நண்பரே ..விவேகானந்தர் சொல்லிய கருத்துக்களை பார்த்தால் கடவுள் இருக்கிறார் என்று சொல்கிறாரா இல்லை கடவுளை கும்பிடாதேன்னு சொல்கிறாரா என்று தோன்றும் ,ஆனால் அவரை கடவுளை பற்றி சொல்லும் விதம் அலாதியானது .நீ செய்யும் வினைகளை வைத்து தான் கடவுள் உண்டா இல்லையா என்பது ,அடுத்த உயிருக்கு எவ்வுளவு சேவை செய்கிறாயோ ,அது செடியாக இருந்தால் தண்ணீர் ஊற்று ,பயிராக இருந்தால் வேலியிட்டு பாதுகாத்து வா ..விலங்குளாக இருகால் உணவளி,மனிதனாக இருந்தால் வாழ வழிகாட்டு அங்கே இறைவன் இருக்கிறார் என்பார் .பிரபஞ்சம் ,மனிதர்கள் ஏன் மதம் பிடித்து திரிகிறார்கள் ,ஜாதி கொடுமை ,இனப்பாகுபாடு ,நாடு பிடித்தால் இது எல்லாமே ,இறை நம்பிக்கையும் அன்பும் ,இல்லாமையால்தான் வந்தது என அழகாக குறிப்பிடுவார் .அதை ஒருவன் முழுமையாக படித்து பார்த்தான் என்றால் ,பகுத்தறிவு பட்டாம்பூச்சியறிவு பற்றிப்பேசவே மாட்டான்.

      Delete
    14. ஷிரிடி சாய்பாபா மக்களுக்காக நிறைய செய்து இருக்கிறார் .அவருக்கு ஆஸ்ரமம் கிடையாது வெட்ட வெளிகளில் தான் படுத்து தூங்கினார் .நல்ல ஆடை கிடையாது .//அவர் துரும்பை எடுத்து போட்டது // எல்லாமே மக்களுக்காத்தான்.அவர் இறந்தபிறகு கூட ஒரு சிறிய சமாதியாக தான் இருந்தது .காலப்போக்கில் அங்கே வந்து வழிபடுவர்களுக்கு நன்மை நடைபெற அவர்கள் எழுப்பிய சமாதி அது .ஷிரிடி சாய்பாபா அதை கட்டவில்லை.இதேபோல் விவேகாந்தரின் தேஜஸிலும் உயரம் அழகு இவற்றில் ,ஒரு துளி கூட இல்லாதவன் நித்தி,பெண்களை தாயாக மதித்தவர் .வெளிநாட்டு பெண்மணிகள் மோகம் கொண்டபோது கூட ,எங்கள் இந்தியாவில் ஒருவன் ஒரு பெண்ணுடன் இருப்பது என்றால் மனைவியாகமட்டுமே இருப்பாள் .மீதி எல்லோரும் தாய் ஸ்தானத்தில் தான் பாப்போம் என்று கூறியவர் .தனிமனித ஒழுக்கத்திற்கு அவ்வுளவு முக்கியத்துவம் கொடுத்தவர் .அந்தவரிசையில் நித்தி போன்ற ஏமாற்று காரனையும் இணைத்துவிடீர்களே ..பகுத்தறிவு என்றால் .கடவுள் இல்லை என்று சொல்வது இல்லை .பகுத்து அறிவது ...இங்கே நீங்கள் பகுத்து பார்க்காமல் சொல்லிவிட்டீர்கள் .

      Delete
    15. //உணவருந்தி மலம் கழித்த மனிதன் கடவுளுக்கு இணையாகவே முடியாது.// இது இடையில் சுகி சிவம் பேச்சு வாட்ஸ் அப்பில் வந்தது நல்ல விஷயம் .உயிரோடு இருக்கும்வரை அதாவது அவர் உணவருந்தி மலம் கழித்து கொண்டு இருக்கும் போது அவரை எவரும் வணங்கவில்லை .மாறாக தொல்லை கொடுத்து .இருக்கிற இடத்தை பிடுங்கிவிவான் என்று விரட்டித்தான் அடித்தார்கள் .வள்ளலார் உயிரோடு இருந்தவரை அவர் அனுபவிக்காத தொல்லைகள் இல்லை எனலாம் ,ஆதிக்க ஜாதியினரின் அடக்குமுறை ,மற்றோருபுரம் ஆளுபவர்களின் தொல்லை என்று நீங்கள் சொன்ன //உணவருந்தி // கோட்பாட்டில் இருக்கிறவரை அவரை யாருமே வணக்கவில்லையே .இப்பொழுது உணவருந்தாமல் ,ஒளிதேகம் பெற்று ,தீமை ,எதிர்மறை ,குறைகாணுதல் போன்ற மலங்களை கழிக்காமல் இருப்பதினால் தான் ,ஷிரிடி மகானையும்,வள்ளலாரையும் கும்பிடுகிறார்கள் .தவிர வேறொன்றுமில்லை .

      Delete
    16. //உணவருந்தி மலம் கழித்த மனிதன் கடவுளுக்கு இணையாகவே முடியாது.// இது இடையில் சுகி சிவம் பேச்சு வாட்ஸ் அப்பில் வந்தது.

      நான் இந்த வார்த்தையை எனது தளத்தில் பல ஆண்டுகளாக உபயோகப்படுத்தி இருக்கிறேன்.

      சுகி சிவம் பேச்சு கேட்டு இருக்கிறேன் ஆனால் இந்த வார்த்தையை கேட்டதில்லை ஒரே சிந்தனை பலருக்கும் வருவதுண்டு.

      நான் விதண்டவாதி இல்லை. இறைசக்திக்கு நிகராக மனிதனை ஒப்பிடுவது பாவச்செயலே.

      அவரவர்க்கு ஒரு கொள்கை இருக்கலாம் ???

      Delete
  2. புது தகவல்களும் , இடங்களும் ராஜிகா...

    தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. தகவல்களும் ,விவாதங்களும் புதியதாகவே இருக்கின்றன. . .பயணம் தொடரும் தொடர்கின்றமைக்கு நன்றி ...

      Delete
  3. Replies
    1. வாழ்க நலம் ..வளர்க இவ்வையகம் ...மலர்க மனித நேயம் ..

      Delete
  4. நான் இதுவரை ஷீர்டி சென்றதில்லை.

    ReplyDelete
    Replies
    1. நானும் ஷிரிடி பற்றி எழுதவில்லை சகோ ...ஒரு வடஇந்திய பயணம் ...இப்பொழுது கேரளா பயணம் என்றால் ,சோட்டாணிக்கரையும் இருக்கும் ,ஆலப்புழாவும் இருக்கும் .ஷிரிடி பற்றி எழுதலாம் .ஆனால் ஏற்கனவே நிறைய பேர் பக்கம் பக்கமாக எழுதிவிட்டார்கள் நான் எழுத புதியதாக ஒன்னுமில்லை சகோ ...

      Delete
  5. நாங்கள் என்மகன் புனேவில் இருந்தபோது காரில் ஷிரடி சனி சிங்கனாப்பூர் போன்ற இடங்களுக்குச்சென்றிருக்கிறோம் ஷீரடிபுனிததலமோ இல்லையோ ஒரு வியாபாரத்தலமாக மாறிவிட்டது

    ReplyDelete
    Replies
    1. ஜி.எம்.பி சார்... எல்லா இடங்களும் இப்போ வியாபாரத் தலமாக ஆகிவிட்டது. இதை இரண்டு விதமாகப் புரிந்துகொள்ளலாம்.

      ஒன்று அதை நிர்வகிக்க, வரும் பக்தர்களுக்கு வசதி செய்துகொடுக்க போன்ற பலவிதமான சேவைகளுக்குத் தேவைப்படும் பணத்தைத் திரட்டியாகவேண்டிய கட்டாயம் உண்டு. அந்த அந்த வழிபாட்டுத் தலத்தில் வேலைக்கு இருக்கும் பல நூறு பேர்களுக்கு (இடத்தைச் சுத்தம் செய்பவர், ஒழுங்குபடுத்துபவர் முதற்கொண்டு அனைவருக்கும்) அந்த இடம் 'வேலை' கொடுத்திருக்கிறது. அவர்களுக்கு எங்கிருந்து சம்பளம் கிடைக்கும்?

      இன்னொன்று, அந்த இடத்தைப் பயன்படுத்தி முழுவதும் வியாபாரிகள் குமிந்துவிடுவது. இதைத் தவிர்ப்பது கடினம். ஓரளவு ஒழுங்குபடுத்தலாம். அந்த வியாபாரிகள், மக்களின் 'பக்தி' என்பதை 'பணம்' பண்ணுவார்கள். ஆனால் மக்கள் விருப்பம் இல்லைனா, அந்த வியாபாரம் நடக்காதே (உதாரணமா திருப்பதில விளையாட்டுச் சாமான் முதற்கொண்டு, கடவுள் படங்கள், பூஜைப் பொருட்கள், உணவகங்கள், சிறிய சிறிய பஜ்ஜிக்கடை, தேநீர்க்கடை, பழக்கடை, பூக்கடை என்று ஏகப்பட்டது உண்டு. விருப்பமிருந்தால் பக்தர்கள் வாங்கலாம், இல்லைனா வாங்கவேண்டாம்)

      இந்த இரண்டுபேரும் கூட்டுச் சேர்ந்துகொண்டும் பணம் பண்ணலாம். அப்படியும் அனேகமா எல்லா இடங்களிலும் நடக்கிறது.

      இதற்கும் பக்திக்கும் சம்பந்தமில்லை.

      Delete
    2. பக்தி என்பது அவரவர் மனநிலையை பொறுத்தது .ஐயா .இவர்கள் எல்லாம் இருக்கும் வரை நாடோடிகளாகத்தான் திரிந்தார்கள் .ஆலமரங்களின் கீழ் படுத்து உறங்கினார்கள் .கையை மட்டும் தலையணையாய் வைத்து இருந்தார்கள் .இப்பொழுது அவருடைய சமாதியில் கூட்டுகொள்ளைகள் அடிக்கலாம் ,பொருளீட்டலாம் .ஆனால் வாழ்வின் முடிவிலிருந்து எந்த வைத்தியத்தினாலும், வைத்தியராலும் காப்பாற்றமுடியாது. நீ பாடுபட்டு சேர்த்த பொருளில் ஓர் குன்றின்மணி அளவுகூட எடுத்துச் செல்ல முடியாது. இதற்க்கு உதாரணம் ,ஊரில் இருக்கும் கோடிக்கணக்கான நிலங்களை வளைத்து போட்டு ,மாடமாளிகை ,அடுக்கு மாளிகை ,சொகுசு பங்களா என்று நியாயமில்லாம சம்பாதிச்சாலும் கடைசியில் ஆறடி நிலத்திற்கு கெஞ்சி கூத்தாடி பெரும் நிலையை பார்க்கும் பொழுதான் .இந்த மாகான்களெல்லாம் எவ்வுளவு பெரிய துரும்பை ,இந்தமக்களுக்காக எடுத்து போட்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது நீ பூவுலகிற்கு வரும்போது எதையும் கொண்டுவரவில்லை. பூவுலகை விட்டுப்போகும்போது ஏதும் கொண்டு செல்லப் போவதுமில்லை. இது சத்தியமான யதார்த்தமான நிஜம்.எப்பதற்கு எடுத்துக்காட்டு இவர்கள் .ஆனால் சில கபடதாரிகளுடன் ஒப்பிட்டு அவரையும் விமர்சனம் செய்யும் போது மனிதமானங்கள் இன்னும் மாறவில்லையோ என்றுதான் தோன்றுகிறது .

      Delete
  6. ஓ... நான் ஷீரடி யாத்திரை பற்றி எழுதியிருப்பீர்கள் என்று நினைத்துவந்தேன். தொடரா? காத்திருந்து படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நானும் எழுதலாம் என்றுதான் நினைத்து வந்தேன் சகோ ..ஆனா நான் எழுதிய பதிவிலே இரத்தின சுருக்கமாக எழுதியது இந்த பதிவுதான் .ஆனால் பதிவை விட விவாதம் அவ்வுளவு நீளமாக செல்கிறது .'விலகினாலும் விடாது கறுப்பு' என்பது போல நானாக சுருக்கமாக எழுதினாலும் விரிவான பதிவுக்கு சொந்தக்காரி இந்த ராஜி என்று ஆகிவிட்டது போல ...இப்பொழுதே ரணகளமாக இருக்கிறதே .ராவணா இன்றுபோய் நாளைவரலாமா என்று யோசிக்கிறேன் .

      Delete
    2. இதெல்லாம் வெறும் கருத்துப் பறிமாற்றம்தானே. அதுக்காக ரொம்ப நாள் எடுக்காதீங்க அடுத்த பகுதி எழுத.

      Delete
  7. நல்ல தகவல்கள் சகோ/ ராஜி

    ReplyDelete
    Replies
    1. நன்றிண்ணே ...தொடர்ந்து பதிவை படியுங்கள் ....குறைகள் இருப்பின் செல்லுங்கள் .நீங்கள் பலமுறை சென்று வந்திருப்பீர்கள் .

      Delete
    2. துளசி: நான் சென்றதில்லை...சகோ

      கீதா: ராஜி நான் சென்றிருக்கிறேன். உறவினர் அங்கு புனேவில் இருப்பதால். நான் சென்றது பல வருடங்கள் முன்பு. இப்போதெல்லாம் நிறைய மாற்றங்கள் வந்திருப்பதாக அறிகிறேன். தொடர்கிறோம் ராஜி

      Delete
  8. தொடரைவிட கருத்து மோதல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன

    ReplyDelete
    Replies
    1. மோதல்கள் இல்லாத கருத்துக்கள் நல்லது ..

      Delete
  9. எனக்கும் ஷீரடி என்றாலே அலர்ஜி தான். கடவுளுக்கு தூதர் எதற்கு? ஆனால் கருத்துக்கள் அருமை. ஆரோக்கியமான விவாதங்கள் நம்மை வலு/வழி படுத்தும்.

    ReplyDelete
    Replies
    1. பாரதி அவர் தூதராக வரவில்லை ..இன்று தூதரக வேறுஒரு நாட்டில் பிறந்து இந்தியா வராமலே வாழ்ந்து முடித்த ஒருவரை தூதரக இந்தபகுத்தறிவுகள் ஏற்றுக்கொண்டுவிட்டனர் அவரின் பெயரை சொல்லி பெரும்பான்மையான மக்களை சீண்டுகின்ற்னர் .அவர்களை சாத்தான் என்கின்றனர் .உண்மையில் இங்கிருப்பவர்கள் மரத்தை வழிபடுவார்கள் ,மண்ணை வழிபடுவார்கள் ,நீரை வழிபடுவார்கள் .மலையைக்கூட வழிபடுவார்கள். அது அவர்களுடைய சொந்த நாட்டில் நடப்பது .ஆனால் இறைத்தூதர் என்று சொல்லி வேறு ஒரு நாட்டில் பிறந்தவருடைய கருத்துக்கள் .அந்த நாட்டிற்கு சரி இங்கே இருக்கும் மண்ணின் மனிதர்களிடம் அதை திணிப்பதற்கு ஒரேகாரணம் ,அதற்காக கொடுக்கப்படும் விலை கோடிகள் .அதனால் ஏற்படுவது சமூகத்தில் ஒற்றுமையின்மை கலவரம் அது எல்லாம் ஏன் இந்த பகுத்தறிவாளர்கள் கண்ணில் படவில்லை .ஆனால் இந்த ஷிரிடி மகான் இந்தியாவில் பிறந்து மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார் .அதைத்தவிர அவர் வேறு எந்த அயல் நாட்டிலிருந்து கோடிகளை வாங்கி உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவில்லை ...அது தவறு என சொல்கிறீர்களா ..

      Delete
  10. ஷீரடி பதிவு எழுதினாலும் எழுதினேன் ..சத்ரபதி சிவாஜி பிறந்த மண் ஒரே போர்க்களமாக இருக்கிறது .

    ReplyDelete
  11. நீங்கள் தான் சென்று வந்தீர்களோ என நினைத்தேன்....

    நல்ல ஆரம்பம்! கருத்துப் பரிமாற்றங்கள் சிறப்பு.

    நானும் இங்கே சென்றதில்லை.

    ReplyDelete